பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 26, 2013

ராட்சஸர்கள்

சமீபத்தில் மீடியா வெளிச்சம் போட்டு காண்பிக்கும் பாலியல் கொடுமை செய்திகள் எழுத்தாளர் சிவசங்கரிக்கு ராட்சஸர்கள் என்ற சிறுகதை எழுத தூண்டுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன். பிராமின சமுதாயத்தையே இவர் எழிவு செய்துவிட்டார் என்று ஒரு கோஷ்டி அலைந்துக்கொண்டு இருக்கிறது.

சரி என்ன தான் இருக்கிறது என்று அந்த கதையை படித்த போது ஒரே ஒரு பகுதி மட்டும் அட எப்படி இதை எழுதினார் எப்படி விகடன் பிரசுரம் செய்தது என்று நினைக்க தோன்றியது. சாருவே இதை எழுத பயப்படுவார் என்று நினைக்கிறேன்.

கதையில் ஒரு பகுதி

"சமையல் வேலைகளைக் கவனிக்க முருகன் என்று ஒருவன். வயசு முப்பது முப்பத்தைந்து இருக்கும். வெடவெடவென்று சிவப்பாக, எண்ணெய் தடவி வாரிய கறுப்புக் கிராப்புடன், சிரித்த முகமாக வளையவருவான். பிரமாதமாகச் சமைப்பவன் என்பதோடு, இதமாகப் பழகுபவன் என்றரீதியிலும், எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும்."


முருகன் கையில் எப்போது விகடன் டைம்பாஸ் இருக்கும் என்று சேர்ந்த்திருந்தால் அந்த கதாபாத்திரத்துக்கு பொறுத்தமாக இருந்திருக்கும்!

16 Comments:

Anonymous said...

இந்த பாராவில் என்ன ஆபாசம் இருக்கிறது.?

Anonymous said...

Mr/Ms IdlyVadai ,
Please don't advertise/publicity for that short story . By the way, how much payment did you get for that?

jaisankar jaganathan said...

//how much payment did you get for that?//

அருமையான கேள்வி. இட்லிவடை இது மாதிரி எத்தனை இடத்துல பணம் வாங்கீருக்கீங்க?

என் மட்டமான கமெண்டை பப்ளிஷ் பண்ண எவ்ளோ பணம் வேணும்? சொல்லிட்டீங்கன்னா உங்க பேருக்கு அனுப்பிடுவ்றேன்.

R. J. said...

Haven't read the story, but what is there in that paragraph that made you compare Sivasankari with Charu! Anyway, let me read the story and form my own opinion. - R. J.

ConverZ stupidity said...

இதுல எதுவும் உள்குத்து இருக்கா ?

அப்படி எதுவும் இல்லைனா ஊழல், குற்ற எண்ணிக்கை உயர்வு, 'அறிவு ஜீவி'-களோட கருத்து வாந்தி, சிறுபான்மை காவலர்கள், போலி சாமியார்கள், ஆன்மீகத்த அரைகுறையா புரிஞ்சிகிட்ட, சுத்தமாவே புரிஞ்சிக்காத, கடமைய சரியா செய்யாம உரிமைக்கு மட்டும் குரல் கொடுத்துகிட்டு இருக்குரவங்களால நொந்து போய் இருக்கிற சாதரணன நோகடிக்க இ.வ செஞ்ச வெட்டி வேலையா ?

Anonymous said...

விவஸ்தையே இல்லாம எழுதுங்கடே..! இதில் என்ன தான் அப்படி காமெடி ஒளிஞ்சிருக்கோ தெரியவில்லை.

இதையும் படிக்க நாங்க வாரமே அதைச் சொல்லனும்

suppamani said...

I, feel nothing wrong in the story;
I read the story in full and shocked and wonder how SIVASANKARY even at her this old age, write, so practically what happens everyday in the life in secret and in darknes;
Every working couple to read the story and would be care full, with nearby servants,helpers and especially with relatives
Hats of to Sivasnkar.

MANI

Anonymous said...

I read the story. Quite OK, in my opinion.

R. J. said...

படித்தேன். கதையின் நோக்கம் பெற்றோர்களை தங்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளச் செய்வது என்ற வரையில் பாராட்டத்தக்கது. ஆனாலும் அந்த 2, 3 விவரிப்புகள் இல்லாமலேயே அதை செய்திருக்கமுடியும் - சிவசங்கரி போன்ற தேர்ந்த எழுத்தாளரால். விகடனும் கதாசிரியரிடம் சொல்லி இதை தவிர்த்திருக்கவேண்டும். அதேபோல் இது எல்லா சமூகத்தினருக்குமான பொதுவான எச்சரிக்கை, அதனால் குறிப்பிட்ட ஜாதி அடையாளம் இல்லாதிருந்திருக்கலாம். சிவசங்கரி, ஜெயகாந்தன் இல்லை என்று தெளிவு படுத்திவிட்டார்! (நீங்கள் குறிப்பட்டதுபோல் சாருவுக்கு நெருக்கமான எழுத்துக்கள் தான்!) - ஜெ.

போய் வேலையை பாருங்கப்பா said...

இட்லிவடை கடையில் ஈ ஆடுகிறது என்று நினைக்கிறேன். ஒரு குப்பை கதையை இப்படி ஏதாவது பரபரப்பு செய்தாலாவது எவனாவது படிக்கமாட்டானா என்பதற்காகவே இப்படி எழுதுகிறீர்களா? அதுவும் பிராமண சமூகத்தை பற்றி எழுதிவிட்டால் வரிந்து கட்டி கொண்டு 10 பேர் ஆதரவாகவும் 100 பேர் எதிர்த்தும் கமெண்ட் போடுவார்கள். அதில் ஆறிப்போன இட்லிவடை கொஞ்சம் சூடாகும். ஆனந்த விகடன் போன்ற மஞ்சள் பத்திரிகைக்கும் கொஞ்சம் வியாபாரமாகும்.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

Vijayalakshmi Subramaniam said...

I have read the shortstory. there is nothing objectionable in the story.The story is about girl child abuse.Sivasankari is one of the best writers in Tamil.I request everyone to read the story and pass remarks

Vijayalakshmi Subramaniam said...

There is nothing objectinable in the shortstory.The story talks about child(GIRL)Abuse.It is happening in every community.I thinh v should take things in right spirit.Sivasankari is one of the very best writer in Tamil.Pl. read the shortstory and then pass ur comments.

shamimanvar said...

சிறு வயதில் பாலியல் தொந்தரவுகளால் பெண்ணின் உளவியலில் பாதிப்புகள் ஏற்பட்டு அந்தப் பெண் நடைப்பிணமாயிருப்பதை விவரிக்கும் ஒரு சிறந்த கதை. பிராமணர்கள் குடும்பத்தை கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தது எழுத்தாளரது சுதந்திரம். வக்கிர மனம் கொண்ட ஆண்கள் எல்லா ஜாதியிலும்தான் இருக்கிறார்கள்.

AnandG said...

வக்கிர மனம் கொண்டவர்கள் எல்லா ஜாதிகளிலும் இருக்கிறார்கள்தான். ஆனால், எல்லா ஜாதி வக்கிர புத்திக்காரர்களைப் பற்றிக் கதை எழுதிவிட முடியாது.

Sridharan said...

idhai vida mosamaana uraiyadalgalai Vasanthi ezhuthi k kondu varukirar kumudhaththil ..thodar kadhai yaaga

Anonymous said...

that story is really good.did u come across like that incident?i asked my friend to read that story,who has two pretty daughters.