பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 09, 2013

அம்மா உணவகம்


இன்று மோடி வந்துவிட்டார் என்று செய்திக்கு பிறகு படித்த நல்ல பதிவு. மோடி ராசியாக கூட இருக்கலாம் :-)


ரொம்ப நாள் திட்டம்.. இன்றுதான் செயலுக்கு வாய்த்தது! கே.கே.நகர் அம்மா உணவகத்தைக் க்ராஸ் செய்யும்போது, கேஷ் கவுண்ட்டரில் கூட்டம் குறைவாக இருந்தது கண்ணில் பட்டதும்.. பிரேக்க்!

’சில்லறையா கொடுங்க’ என சொன்னார் உள்ளே இருந்த பெண்மணி. பத்து ரூபாய் நோட்டை தேடி எடுத்து எழுத்து நீட்டினேன்.

‘சாம்பார் சாதம், தயிர் சாதம் தான் இருக்கு.. அஞ்சும் மூணும் எட்டு ரூபா.. சில்லறையா கொடுங்க..’ என்றார்.

“இல்லையே..” என நான் தலை சொரிய.. ’அப்ப ரெண்டு சாம்பார்சாதமா வாங்கிக்கங்க’ என்றபடியே என் பதிலுக்குக் காத்திராமல் இரண்டு டோக்கன்களை எடுத்து நீட்டினார்.


“வேண்டாம்மா.. நானெல்லாம் ருசிக்கு சாப்பிடறவன், ஒண்ணு போதும். யாராச்சும் பசிக்கு சாப்பிடறவங்களுக்கு என் சார்பா இதைக் கொடுத்துடுங்க” என்றேன். இரண்டாவது டோக்கனைப் பிரித்தெடுத்து, அந்தப்பெண்மணி கையிலேயே கொடுத்தேன்.

அழகாகப் புன்னகைத்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. ஒரு ஐந்து ரூபாய் காசைத் தேடி எடுத்து என்னிடமே கொடுத்துவிட்டார்.

உள்ளே சாப்பாட்டுக்கு ஒரு வரிசை.. சேர்ந்து கொண்டேன்.

எனக்கு முன்னே நான்கைந்து பேருக்கும் முன்னே.. ஒரு அழுக்கு உடை இளைஞன் வரிசைக்கு வெளியே நின்று, வரிசையில் நின்றிருந்தவர்களிடம் ஏதோ கேட்டான். எட்டிப் பார்த்துக் காது கொடுத்தேன்.

‘இங்கதான் விஜயராகவபுரத்துல இருக்கேன்.. இப்ப காசில்ல.. ஒரு அஞ்சு ரூபா தர்றிங்களா.. நாளைக்கு தந்திடுறேன்’ என்று சன்னமான குரலில் கேட்டுக்கொண்டிருந்தான் அந்தப் பையன்.

என்னிடம் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் காசை எடுத்துக் கொடுக்கலாமே என நினைத்து, நான் பாக்கெட்டுக்குள் கை விடும் நேரத்துக்குள்.. எனக்கு முன்னே வரிசையில் நின்றிருந்த இன்னொரு இளைஞன் தன் கையில் இருந்த இரண்டு டோக்கன்களில் ஒன்றைக் கிழித்துக் கொடுத்தே விட்டான்!

கடவுளைப் பார்ப்பது போல அந்த டோக்கனைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே பின்புறம் நீண்டிருந்த வரிசையில் போய் நின்று கொண்டான் அந்த அழுக்கு உடை இளைஞன்.

டோக்கனை சாப்பாட்டுக் கவுண்ட்டரில் நீட்டினேன்.. “ஒரே ஒரு சாம்பார் சாதம்”.

சாம்பார் சாதத்தைத் தயாராகத் தட்டில் போட்டு வைத்திருந்த அந்தத் தாய் என் முகத்தை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தார். ‘ஒரே ஒரு’ என நான் உதிர்த்த வார்த்தையும், நான்கைந்து நாட்களாக ஷேவ் செய்யப்படாமல் இருந்த என் முகமும், இரண்டு மணி நேரம் ஊர்சுற்றியிருந்ததால் என் முகத்தில் தெரிந்த அலுப்பும் அவருக்கு ஏதோ சொல்லியிருக்க வேண்டும்!

என் கைக்கு வந்துவிட்ட தட்டைத் திரும்ப வாங்கி, இன்னும் ஒரு கரண்டி சாதத்தைப் போட்டார்!

மேன்மக்கள் மேன்மக்களே!!

பின்குறிப்புகள்: அந்தச் சாப்பாடே என் வயிற்றுக்குப் போதுமானதாக இருந்தது. என் பாக்கெட்டில் இருக்கும் அந்த ஐந்து ரூபாய் நாணயம் என்னைக் கேவலமாகப் பார்த்தபடியே இருக்கிறது. வயிறுகள் வாழ்த்தும் இந்தத் திட்டம் நிரந்தரமாகச் செயல்பட வேண்டுமே என இன்றுபூராவும் என் மனம் கவலைப்படவே செய்யும். அம்மா உணவகங்களில் ஒரு ஓரமாக உண்டியல் ஒன்றினை வைத்து, விரும்பியவர்கள் இத்திட்டத்துக்கு நிதி உதவி செய்ய வழி வகை செய்தால் நன்றாக இருக்கும்.

நன்றி: http://www.facebook.com/editorGGowtham/posts/10200990973887847


இந்த உணவகம் பற்றி எல்லாம் புதியதலைமுறை, தந்தி டிவி...போன்றவற்றில் விதாதிக்க மாட்டார்களா ?

19 Comments:

ரிஷபன்Meena said...

சாதாரன மக்கள் படுகிற கஷ்டம் சொல்லி மாளாது. இத் திட்டமாவது தங்கு தடை இல்லாமல் செயல்பட இறைவன் அருளட்டும்.

உண்டியல் நல்ல யோசனை.

Anonymous said...

wow its amesing. neengala enna paathinga. antha 5 roobaya koduththathu nanthan. apram media en itha pathi vivathikkalannu kettingala . makkalukkulla prechanaya solrathuthaan media athanala irukkum.
ithe mathiri ella nagarangalilum aaramichcha nallarukkum


aana ithulu ore oru demerit irukku elloraum somberiya maththiduthu athavathu itha kuri vache valkaylasomberiya thiriyaravangalum irukkangalla. aana athu oru vzha tharulaoru pzham mattum alugal antha kathathaan maththa padi ithu nalla thittam.

மொக்கச்சாமி said...

அம்மா, மலிவு விலை சாப்பாடு போடும் அம்மா உணவகம் மாதிரி, மலிவு விலை சரக்கும் சைடிஷ்ஷும் விக்கும் அம்மா டாஸ்மாக் பாரும் தொறந்தால் புண்ணியமாப் போகும்!

dr_senthil said...

காமராஜ் தந்த மதிய பள்ளிகூட உணவு போல இது ஒரு மிக நல்ல முயற்சி.. ஆட்சி மாறினாலும் இது நல்லமுறையில் தொடரவேண்டும்... பல ஹோட்டல் முதலைகள் இதனை சீர்கெட முயற்சிப்பார்கள்.. பல்லி கிடந்தது, கரப்பான் மிதந்தது என புரளி பரவ முயற்சிப்பார்கள்.. சுகாதாரமான முறையில் மலிவாகவும் சுவையாகவும் இது தொடரவேண்டும். கட்டுரையில் உள்ளது போல இந்த பணி தொடர நன்கொடை உண்டியலில் விழும் படியும் இந்த திட்டத்திற்கான நிதி நிலையும் விவாதிக்கப்பட வேண்டியவையே

dr_senthil said...

காமராஜ் தந்த மதிய பள்ளிகூட உணவு போல இது ஒரு மிக நல்ல முயற்சி.. ஆட்சி மாறினாலும் இது நல்லமுறையில் தொடரவேண்டும்... பல ஹோட்டல் முதலைகள் இதனை சீர்கெட முயற்சிப்பார்கள்.. பல்லி கிடந்தது, கரப்பான் மிதந்தது என புரளி பரவ முயற்சிப்பார்கள்.. சுகாதாரமான முறையில் மலிவாகவும் சுவையாகவும் இது தொடரவேண்டும். கட்டுரையில் உள்ளது போல இந்த பணி தொடர நன்கொடை உண்டியலில் விழும் படியும் இந்த திட்டத்திற்கான நிதி நிலையும் விவாதிக்கப்பட வேண்டியவையே

முரளி இராமச்சந்திரன் said...

அருமையான பதிவு. மிக மிக முக்கியமான ஒன்று ஒரு உண்டியல் வைக்கும் திட்டம் ஆனால் அதை பாதுகாக்க என்று கழகத்தின் ஒரு கூட்டம் அதை ஸ்வீகாரம் செய்ய கிளம்பிடும் அதைத் தவிர்க்க போலீஸுக்கு மேலும் தலைவலி என்று ஆரம்பிக்கும். அதை விட இந்தத் திட்டத்துக்கு என்று பொதுமக்கள் விரும்பினால் ஒரு பாங்க் அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி ஒரு வரி விலக்கும் பெற்றுக் கொள்ள ஒரு வழி செய்தால் கருப்பு வெள்ளை பணம் வைத்திருக்கும் ஒரு சில நல்லவர்களாவது பணம் அனுப்புவார்கள்.

முரளி.

sidtharth said...

/*என் கைக்கு வந்துவிட்ட தட்டைத் திரும்ப வாங்கி, இன்னும் ஒரு கரண்டி சாதத்தைப் போட்டார்! மேன்மக்கள் மேன்மக்களே!!*/

இந்தியால மட்டும் தான் இப்படி எதிர் பார்க்கலாம்.. மேன்மக்கள் உள்ள நாடு !

லெமூரியன்... said...

எழுத்தின் வழியாக உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது ...

மனிதம் எல்லாரிடத்திலும் இருக்கிறது ....

ஜாதி மதம் என்று வரும்போது மட்டும் மரத்து போகின்றது ....

இந்த திட்டம் தொடர்ந்தாள் நன்றே இப்பதிவில் சொன்னது போல் ...

Anonymous said...

On Kalaingar's Birthday - somebody offered free food through AMMA'S MESS but no one liked it.. how they will accept HUNDI...

Murali

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

சூப்பர்.........

பாரதியின் வரியை நினைவு கூர்ந்தால்..

1. வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்....

2. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இவ் ஜகத்தினை அழித்திடுவோம்...

ஆம்....... இந்த உலகில் மிக கொடுமையானது... பசி... பசி.. பசி... (ப சிதம்பரத்தை சொல்லவில்லையப்பா.... வயிற்று பசியை சொன்னேன்....)

அதை போக்கும் எந்த திட்டமும் மனித குலத்துக்கு மிக மிக அவசியமானது....

என்னைக் கேட்டால் இன்னும் சில ஆலோசனைகள் சொல்லுவேன்...

1. இங்கு பலவகை அவசியமில்லை... ஒன்று அல்லது இரண்டு வகை உணவுகள் போதுமானது... ஏனெனில் இது பசிக்கு உணவிடும் இடம்... ருசிக்கு உணவிட இங்கு அவசியமில்லை... எனவோ மெனுவை கூட்டுகிறேன் எனும் பெயரில் லிஸ்ட் பெரிசாக அவசியமில்லை...

2. ஆரோக்கியமான கேப்பை, கம்பு, இவைகள் சேர்க்கப்படலாம்...

3. உணவு வகையான பானங்கள்... அல்லது சூப் சேர்க்கப்படலாம்.... (சில நேரம் பசியில் சோறு சாப்பிட கஷ்டம் இருக்கும்.... ஒரு லெமன் ஜூஸ் குடித்து விட்டு... தலை சுற்றுவதை நிறுத்தி விட்டு பின்னர் சாப்பிட துவங்கலாம்)

இந்த திட்டம் அரசியல், இன்ன பிற சாத்தான்களிடம் சிக்காமல்....... பொது நல பார்வையோடு முன்னோக்கி நகர்தல் வேண்டும்...

Anonymous said...

Nevertheless, this scheme is a welcoming one. Let's pray, this should continue with no compromise on taste and quality.

//அம்மா, மலிவு விலை சாப்பாடு போடும் அம்மா உணவகம் மாதிரி, மலிவு விலை சரக்கும் சைடிஷ்ஷும் விக்கும் அம்மா டாஸ்மாக் பாரும் தொறந்தால் புண்ணியமாப் போகும்!//

IV, Please don't publish these kind of cheap comments in the posts where some serious discussions are happening.

R. J. said...

This indeed is a noble scheme. But as the author of the article faced, there is also a scheme of not giving back the change as the bus drivers used to do. I also read elsewhere that many well-to-do people also throng these places and the people who have no desire to work occupy the line before the opening hours; the limited quantity of food prepared gets exhausted before the really deserving, hard working people come for lunch.

Yes, there can be a scheme to collect donations towards this scheme - Like in Saibaba temple, people donate on the occasion of their / their relatives' birthday / remembrance day etc.

-R. J.

Anonymous said...

பொதுவாகவே இந்த திட்டத்தை பற்றி விமரிசனம் செய்வதை யாரும் ரசிப்பதில்லை என அறியும் போது மனக்கவலை ஏற்படுகிறது.
முதலில் இந்த திட்டம் ஏழை எளிய மக்கள் பயன் பெற என்றால்,
ஏழை என்பவர் யார் என மட்டறுக்கப்படவில்லை.

உணவுப்பொருள் விநியோகம் (PDS),மின்சாரம்,கல்வி,சுகாதாரம்,
சட்டம் ஒழுங்கு,சாலை,குடிநீர்,
கழிவுநீர் நிர்வாகம்,அரசு இயந்திரம், இவை அனைத்து சீர் குலைந்து வருகையில்,எந்த ஒரு முகாந்திரமோ அடிப்படையோ இன்றி நம் வரிப்பணத்தில் மிகுந்த நஷ்டத்திற்கு இப்படி உணவு வழங்குதல் எவ்வளவு தவறானது என காலம் நமக்கு உணர்த்தும்.

Anonymous said...

//உணவுப்பொருள் விநியோகம் (PDS),மின்சாரம்,கல்வி,சுகாதாரம்,
சட்டம் ஒழுங்கு,சாலை,குடிநீர்,
கழிவுநீர் நிர்வாகம்,அரசு இயந்திரம், இவை அனைத்து சீர் குலைந்து வருகையில்,எந்த ஒரு முகாந்திரமோ அடிப்படையோ இன்றி நம் வரிப்பணத்தில் மிகுந்த நஷ்டத்திற்கு இப்படி உணவு வழங்குதல் எவ்வளவு தவறானது என காலம் நமக்கு உணர்த்தும்.//

at last one sensible comment. -KR

jaisankar jaganathan said...

//கழிவுநீர் நிர்வாகம்,அரசு இயந்திரம், இவை அனைத்து சீர் குலைந்து வருகையில்,எந்த ஒரு முகாந்திரமோ அடிப்படையோ இன்றி நம் வரிப்பணத்தில் மிகுந்த நஷ்டத்திற்கு இப்படி உணவு வழங்குதல் எவ்வளவு தவறானது என காலம் நமக்கு உணர்த்தும்.//

பசித்தவருக்கு உணவிடுதல் தவறா? அப்படியென்றால் கர்னாடகாவில் உள்ள கோயில்களுக்கு சென்றேன். வரும் எல்லோருக்கும் சுவையான உணவை குடுத்தார்கள். வயிறு நிறைய. இது போன்ற தொண்டுகள் மனிதனைன் மனிதாபிமானத்தை உணர்த்தும்

Anonymous said...

I also read elsewhere that many well-to-do people also throng these places and the people who have no desire to work occupy the line before the opening hours; the limited quantity of food prepared gets exhausted before the really deserving, hard working people come for lunch.
THIS OBSERVATION IS VERY VERY CORRECT.
PEOPLE FROM NEIGH BOURING OFFICES COOME IN TWO WHEELERS AND EAT.
PEOPLE DONT HAVE A CONSCIENCE.
THIS MUST GO THE POOR.
EVEN IN YOUR PICTURE ONE CAN SEE WELL TO DO PEPOLE.
THERE MUST BE ABOARD TELLING IT IS FOR POOR AND BY EATING THE AFFORDABLE PEOPLE ARE DENYING A POOR MAN HIS FOOD.
IT IS ALMOST STEALING FROM A POOR MAN.

Anonymous said...

//உணவுப்பொருள் விநியோகம் (PDS),மின்சாரம்,கல்வி,சுகாதாரம்,
சட்டம் ஒழுங்கு,சாலை,குடிநீர்,
கழிவுநீர் நிர்வாகம்,அரசு இயந்திரம், இவை அனைத்து சீர் குலைந்து வருகையில்,எந்த ஒரு முகாந்திரமோ அடிப்படையோ இன்றி நம் வரிப்பணத்தில் மிகுந்த நஷ்டத்திற்கு இப்படி உணவு வழங்குதல் எவ்வளவு தவறானது என காலம் நமக்கு உணர்த்தும்./// correct. People must get food at cheap rate is correct but all the people must get it at home by purchasing commodities through reasonable prices at shops not not by free or cheap food alone. The amount spent is from the TAX PAYERS POCKET and not from AMMA's pocket. The tax payers want Govt to spent money for them also by developping infrastructure like road, electricity,schools, public transport etc and hate to waste money.

Anonymous said...

//உணவுப்பொருள் விநியோகம் (PDS),மின்சாரம்,கல்வி,சுகாதாரம்,
சட்டம் ஒழுங்கு,சாலை,குடிநீர்,
கழிவுநீர் நிர்வாகம்,அரசு இயந்திரம், இவை அனைத்து சீர் குலைந்து வருகையில்,எந்த ஒரு முகாந்திரமோ அடிப்படையோ இன்றி நம் வரிப்பணத்தில் மிகுந்த நஷ்டத்திற்கு இப்படி உணவு வழங்குதல் எவ்வளவு தவறானது என காலம் நமக்கு உணர்த்தும்./// correct. People must get food at cheap rate is correct but all the people must get it at home by purchasing commodities through reasonable prices at shops not not by free or cheap food alone. The amount spent is from the TAX PAYERS POCKET and not from AMMA's pocket. The tax payers want Govt to spent money for them also by developping infrastructure like road, electricity,schools, public transport etc and hate to waste money.

gnana sekhar said...

s.e.gnanasekhar, nalla dhittam.nall yosanai bank account numberil panam kattuvadhudhan