பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 18, 2013

’அம்மா’வின் மூவ் என்னவாக இருக்கும்?

மாலன் தன்னுடைய ஃபேஸ் புக் பக்கத்தில் எழுதியது.

மாநிலங்களவைத் தேர்தல்: சுவாரஸ்யமான சதுரங்கம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமுறை மாநிலங்களவைத் தேர்தல் சுவையான திருப்பங்களைக் கண்டிருக்கிறது. இந்த அரசியல் விளையாட்டில், ஜெயலலிதா ஒரு சாதுர்யமான சதுரங்க ஆட்டக்காரரைப் போல காய் நகர்த்தி வந்திருக்கிறார்.I will decide என்ற அவரது கம்பீரம் அல்லது அகங்காரம் இந்த ஆட்டத்தில் மீண்டுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது.

அவரது கெட்டிக்காரத்தனமான நடவடிக்கைகள் மூலம் தனது கட்சி, தனது கூட்டணிக் கட்சி ஆகியோரின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொண்டதோடுமட்டுமல்லாமல், தனது எதிரிகளான தேமுதிகவையும் திமுகவையும் நேருக்கு நேர் மோதிக் கொள்கிற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் யார் ஜெயிக்க வேண்டும் என்பதையும் அவர்தான் தீர்மானிக்கப் போகிறார் என்பதுதான் சுவாரஸ்யம். (அது எப்படி என்பது கீழே)

அது மட்டுமல்ல, காங்கிரசையும் ஒரு இக்கட்டான கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் இப்போது திமுகவை ஆதரிக்கும் என்றால் காங்-திமுகவிடையே ஓர் ரகசிய உறவு தொடர்கிறது என்ற பிரசாரத்தை முன்னெடுக்க அது உதவும். தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிற காங்கிரசோடு அது குடும்ப உறுப்பினர் பதவி பெறுவதற்காக உறவு கொள்கிறது என்ற பிரச்சாரத்தை திமுக எதிர் கொள்ள நேரும். ஒருவேளை காங்கிரஸ் திமுகவை ஆதரிக்கவில்லை என்றால் திமுக தோற்கும் என்பது மட்டுமல்ல, தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதான தோற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.

இதன் இன்னொரு கோணம்தான் தேமுதிகவும். காங் ஆதரிக்காவிட்டால் தனிமைப்படுத்தப்படும். ஆதரித்தால் துரோக முத்திரை விழும்

அதிமுக வசம் 4x34=136 போக மீதம் உள்ள 15 கம்யூனிஸ்ட் வேட்பாளருக்குப் போகும். அவர்கள் வசம் (10+8+1) 19 இருக்கிறது எனவே அவர்களது வெற்றியும் உறுதி.

தனது அணியின் வெற்றியை மட்டுமல்லாமல் தன் எதிரிகளில் யார் ஜெயிக்கவேண்டும் என்பதையும் அதிமுகவே தீர்மானிக்க வாய்ப்பு இருக்கிறது

தேமுதிக தலைமையோடு முரண்பட்ட 7 ச.ம.உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சியில் உள்ள மற்ற கட்சிகளின் ச.ம.உறுப்பினர்கள் (2+2=4) அதிமுகவின் வழிகாட்டுதலின்படி வாக்களிப்பார்கள் என்றால் அந்த வாக்குகள் தேமுதிக, திமுக இருவரில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.

இந்த queer logicன் அடிப்படையில் எழும் கேள்வி: அதிமுக இந்த வாக்குகளை கனிமொழிக்கு அளிக்கச் சொல்லுமா?

சொல்லாது என்பது வெளிப்படையான ரகசியம். கனிமொழியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் இளங்கோவனுக்கே தேமுதிக அதிருப்தி உறுப்பினர்களை தங்களது இரண்டாவது preference வாக்குகளை அளிக்கச் சொல்லலாம்.. ஆனால் தேமுதிகதான் தன் முதல் எதிரி என்பதைப் போலச் செயல்பட்டுவரும் அதிமுக தலைமை அப்படி ஒரு முடிவை எடுக்குமா? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

இரண்டு தரப்புக்குமே வேண்டாம் எல்லோரும் எங்கள் அணிக்கே வாக்களியுங்கள் என்று அது முடிவு எடுக்குமானால் கனிமொழி வென்றுவிடலாம். ஏனெனில் 34 வாக்குகள் இல்லையென்றாலும் கடைநிலையில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் யார் என்பதன் அடிப்படையில் ஆறாவது வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார். அப்போது தேமுதிகவைவிட திமுக ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்றிருக்கும்

’அம்மா’வின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?

இரண்டாவது preference வாக்குகளை யாருக்கும் போடாமல் இருந்தால் என்ன ஆகும் மாலன் சார் ?

5 Comments:

jaisankar jaganathan said...

//"’அம்மா’வின் மூவ் என்னவாக இருக்கும்?"//

யாருக்கு தெரியும்? ஜெயலலிதாவுக்கே தெரியுமோ தெரியாதோ

R. J. said...

IV has raised a pertinent question I too have been thinking of. Is it essential that all MLA's shall indicate their second preferential vote while polling? Or, will they be called again to vote for some one other than the winners?

Another question: Was it necessary for ADMK to withdraw the candidacy of their fifth person? Could they have not played with the second preferential votes and still got their 5th MP as well as the CPI MP?

-R. J.

dr_senthil said...

Today's Dinamalar article has answer for IV's Question.

kothandapani said...

'தனது அணியின் வெற்றியை மட்டுமல்லாமல் தன் எதிரிகளில் யார் ஜெயிக்கவேண்டும் என்பதையும் அதிமுகவே தீர்மானிக்க வாய்ப்பு இருக்கிறது'
option 1 ; கனிமொழி வெற்றி .....MGR காலத்தில் இருந்து கட்டிகாத்த anti கருணா நிலைக்கு
மரண அடி. 2G ஊழலை சொல்லியே ஆட்சிக்கு வந்து விட்டு கனிமொழியை ஜெயிக்க அதிமுக
உதவினால் 2G ஊழலே வீண் பிரச்சாரம் என்று திமுகாவின் நிலைப்பாடு உறுதியாகிவிடும்
option 2 தேமுதிக வெற்றி. இதுவரை அந்த கட்சியை உடைத்து MLA க்களை வளைத்து எல்லாம்
வேஸ்ட்டு தானா
ஆக அதிமுக இடியாப்ப சிக்கலில் அல்லவா உள்ளது .

Anonymous said...

அம்மா முதலில் தடங்கல் யில்லா மின்சாரத்தையும், அசுரமாக ஏறியுள்ள விலைவாசியையும் கட்டுபடுத்தவேண்டும். வெட்டி வேலை எங்களுக்கு பயன் இல்லை . இலவச இட்லி,கத்தரிக்காய் வேண்டாம் அவைகளின் விலையை கட்டுபடுத்துங்கள்.இது தான் மக்களின் தேவை.