பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 17, 2013

தொடரும் பிஜேபியின் சொதப்பல் - எ.அ.பாலா

யுபிஏ அரசின் பல சறுக்கல்களை முன்னிறுத்தி, பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் செய்ததைத் தவிர்த்து, 2014 தேர்தலுக்கு முன்பாக, அரசியல் சூழலை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள பிஜேபி எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தோன்றவில்லை. ”பளபளக்கும் இந்தியா” என்ற முழக்கத்துடன், வாஜ்பாயி தலைமையில் 2004 தேர்தலிலும், பின்னர் 2009-ல் அத்வானி தலைமையில் (யுபிஏ அரசின் பிரும்மாண்ட ஊழல்களினால் இருந்த சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்த இயலாமல்!) பிஜேபி மண்ணைக் கவ்வியது.

தற்போது மீண்டும், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசின் ஊழல்கள் மற்றும் திடமற்ற பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றினால் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் மேல் ஏற்பட்டிருக்கும் பெரிய அதிருப்தி நிலவும் நிலைமையிலும், நரேந்திர மோதியை தேர்தல் பிரச்சாரத் தலைவராக (அதாவது, 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரியாக மோதியை அறிவிப்பதற்கு அச்சாரமாக) பிஜேபி (RSS அதன் கையை முறுக்கியதன் விளைவாக்) அறிவித்துள்ளதை சொதப்பலின் உச்சம் என்று தான் கூற வேண்டும். பிஜேபியை பின்னாலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசியல் யதார்த்தம் குறித்த அறிவு குறைவு என்பது தெரிந்தது தான்.

அகண்ட பாரதம், ஹிந்துத்வா போன்றவைகளை வைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ்/பிஜேபி இன்னும் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது. குஜராத்தில் மோதி சிறந்த நிர்வாகத்தை அளித்து வருவது உண்மை தான் என்றாலும், மோதியை பெரும்பான்மையான இந்திய மக்களால் மதிக்கப்படும் “தேசிய”த்தலைவராக எண்ணுவதில் பெரிய அர்த்தமில்லை. யுபிஏ அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதை மட்டுமே முக்கியக் குறிக்கோளாக பிஜேபி கொண்டிருந்தால், இன்று ஐக்கிய ஜனநாயக முன்னணியிலிருந்து அதன் முக்கியக் கூட்டாளி JD(U) விலகும் நிலை ஏற்பட்டிருக்காது. 2014-ல் ஆட்சியைப் பிடிக்க பிஜேபி அதன் கூட்டணியில் இன்னும் சில பிராந்தியக் கட்சிகளைச் சேர்க்க முனைய வேண்டுமே அன்றி, கூட்டணியில் இருக்கும் கட்சிகளை துரத்தி விடக் கூடாது!

பிஜேபியின் இந்த நிலைமைக்கு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே காரணமில்லை, பிரதமர் பதவி ஆசை கொண்ட அதன் சில மூத்த தலைவர்களும் தான். 2014-ல் கூட்டணி துணை கொண்டு மட்டுமே ஆட்சிக்கு யாருமே வர இயலும் என்ற சூழலில், பொதுவாக அனைவருக்கும் ஏற்புடைய அத்வானியை பிஜேபி முன்னிறுத்தி இருப்பதே, சமயோஜிதமான முடிவாக இருந்திருக்கும். அத்வானிக்கு வயதாகி விட்டதாலேயே அவர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்ற வாதத்தில் அர்த்தமில்லை! அவர் ஒருவர் தான் இந்தியாவில் கிழ அரசியல்வாதியா என்ன? மேலும் அவரை விட வயதில் குறைந்தவர்களைக் காட்டிலும் அவர் மன அளவில், உடலளவில் திடமாகவே இருக்கிறார். நாடு முழுதும் நன்கு அறியப்பட்ட, பல கட்சிகளின் தலைமையுடன் நல்லுறவு வைத்துள்ள ஒரு தேசியத் தலைவர் அவர் என்பது தான் யதார்த்தம்.

பிராந்தியக் கட்சிகள் பல மாநிலங்களில் வலிமையுடன் இருக்கும் சூழ்நிலையில், நல்லதொரு கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்காமல், 2014 தேர்தலுக்குப் பின் பேரம் பேசி மோதி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்று பிஜேபி நினைப்பது, பகல் கனவாகி விடும் அபாயம் இருக்கிறது. மேலும், 2014 தேர்தலுக்குப் பின், தனிப்பெருங்கட்சியாக காங்கிரஸ் அமைவதிலும் / பிஜேபி அமைவதிலும் வித்தியாசம் இருக்கத் தானே செய்கிறது! இப்போது, மூன்றாவது அணி (இது நடைமுறை சாத்தியம் என்று நான் கருதவில்லை) குறித்த பேச்சு அடிபடுவதற்கும், பிஜேபியின் “மோதி முடிவே” காரணம்.

காங்கிரஸ் கட்சி இந்த குழப்பத்தில், மகிழ்ச்சியாக குளிர் காய்வது, தொலைக்காட்சியில் அதன் தலைவர்களின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. ராகுலை 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரி வேட்பாளாராக அறிவிப்பதை காங்கிரஸ் தள்ளிப் போடுவதை நல்லதொரு அரசியல் யுக்தியாகத் தான் நோக்க வேண்டும்! சரியான தருணத்தில் காங்கிரசின் பலம் கூடி விட்டது மக்களின் துர்பாக்கியம் தான். எதிர்காலத்தில் மோதி இந்தியப் பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மோதி தற்சமயம் சற்றே பொறுமை காத்திருக்கலாம்!

மதச்சார்பின்மையில் பிஜேபியை விட காங்கிரஸ் எந்த விதத்திலும் மேல் இல்லை (எ,கா: 1984 சீக்கியப் படுகொலை) என்றாலும், TMC, JD(U), SP, BSP, BJD, RJD, DMK, NC ... என்று பல பிராந்தியக் கட்சிகள் (இன்றைய லோக்சபாவில் இவைகளின் மொத்த பலம் 163 சீட்டுகள்) மோதியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், பிஜேபி சற்றாவது யோசிக்க வேண்டாமா! தனது பிரதம மந்திரி வேட்பாளர் யாரென்று தீர்மானிக்க பிஜேபிக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா என்பதல்ல பிரச்சினை. ”கூட்டணி அரசு” காலகட்டத்தில், தக்க ஆலோசனை செய்து, சரியான முடிவெடுப்பது தான் சமயோஜிதமாகும்.

மக்கள் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கையே, பல குழப்பங்களுக்கு நடுவில், 9 ஆண்டுகள் காங்கிரஸ், பிரதமராக வைத்திருக்கும்போது, அத்வானி போன்ற ஒரு Tall Leader-ஐ ஓரங்கட்டி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கோண்டிருக்கும் பிஜேபியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதை எழுதும்போது ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக, JD(U)வை குற்றம் சாட்டி, தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :) “இன்று பீகாருக்கு கறுப்பு தினம்” என்றும் முழங்கினார்! பாவம் பிஜேபிக்கு 2014 தேர்தலே கறுப்பாகி விடும் போலிருக்கிறதே!

- எ.அ.பாலா


ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக.. தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :)". இந்த பதிவை படிக்கும் நமக்கும் அதே உணர்வு தான் வருகிறது !

24 Comments:

kothandapani said...

ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக.. தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :)". இந்த பதிவை படிக்கும் நமக்கும் அதே உணர்வு தான் வருகிறது

இந்த மஞ்சள் கமெண்ட் படிக்கும் எனக்கும் அதே உணர்வுதான் வருகிறது

முரளி இராமச்சந்திரன் said...

பாலா கிரிகெட்டை பற்றி மட்டும்தான் சுமாமாமாராக எழுதுவார்னு நெனைச்சேன், பாவம் இவருக்கு அரசியலும் சுமாராகத்தான் தெரியும் போல இருக்கு.

ஒரு விஷயம் கொஞ்சம் சரியாத்தான் சொல்லியிருக்காரு. பி.ஜெ.பி இன்னும் ஹிந்துத்வா கொள்கையை வெச்சுகிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது. காங்கிரஸ் மாதிரி ஊழலை நல்லா கெட்டியா பிடிச்சாத்தான் ஜெயிக்க முடியும்.

சரி சரி பாலா சார் கிளம்புங்க காத்து வரட்டும்.

எ.அ.பாலா ரசிகர் said...

//ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக.. தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :)". இந்த பதிவை படிக்கும் நமக்கும் அதே உணர்வு தான் வருகிறது !
//
திரு.பத்ரி எழுதின மாதிரி மோதியை ஆதரிச்சு இட்லிவடைக்கு ஒத்துப் போற கருத்துகளை எ.அ.பாலா எழுதலை போல. அதான் இட்லிவடை மஞ்சள் கமெண்ட்ல காண்டு ஆயிட்டாரு :) அரசியலில் இதெல்லாம் சகஜம்பா.

Anonymous said...

Bala is level headed. He is an elite player.
What a shame! None of his readers understand his writing or like his writing.

Phew! I am also one of them.

Anonymous said...

JDU ALREADY DECIDED TO LEAVE NDA.
THEY WANTED ONE REASON. STILL BJP DID NOT DECLARE MODI AS THEIR PM CANDIDATE.
PAWAR, MULAYAM, NAIDU, NITISH, PATNAIK, JAYA, MAYA ALL ARE DREAMINNG FOR PM POST. EVERRBODY THINKS THAT THEY ARE ARE RIGHT CHOICE AND PM POST WILL FALL ON THEIR LAP LIKE A MANGO !

kg gouthaman said...

பத்ரியும் பாலாவும் லாவணி பாட ஆரம்பிச்சுட்டாங்க! இ வ ரசிகர்கள் கோரசாக "ஆமாமாம்" சொல்லி ஆரவாரம் செய்வார்கள். இந்தியாவை விடுங்க. தமிழ்நாட்டில் பி ஜே பி நிலை என்ன? அத்வானி ஆதரவை விட மோடி ஆதரவுதான் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது.

R. J. said...

இட்லி வடைக்கு எ.அ .பாலா மேல் தனி கரிசனம் தான், இல்லாவிட்டால் அவரின் புரியாத பதிவையும் இங்கு வெளியிடுவாரா! (அவருக்கு பல்பு வாங்கிக்கொடுப்பதில் இ.வ.வுக்கு ஏன் இத்தனை வெறி!)

என்னைப் பொருத்தவரை பாலாவின் பதிவின் தன்மைக்கு அவர் மட்டும் காரணமில்லை - பா.ஜ.க. வில் இருக்கும் குழப்பம் அவரை மேலும் குழப்பிவிட்டது! அவர் பதிவிலிருந்து -

//2009-ல் அத்வானி தலைமையில் (யுபிஏ அரசின் பிரும்மாண்ட ஊழல்களினால் இருந்த சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்த இயலாமல்!) பிஜேபி மண்ணைக் கவ்வியது.// & //பொதுவாக அனைவருக்கும் ஏற்புடைய அத்வானியை பிஜேபி முன்னிறுத்தி இருப்பதே, சமயோஜிதமான முடிவாக இருந்திருக்கும்.// அவ்வ்வ்வ்வ்!

பாலா எழுதியதில் எனக்கு ஒப்புதலான வாதம் - //மதச்சார்பின்மையில் பிஜேபியை விட காங்கிரஸ் எந்த விதத்திலும் மேல் இல்லை (எ,கா: 1984 சீக்கியப் படுகொலை)..//

சரி, மோடி வேண்டாம். ஆனாலும் பாலாவே எழுதியிருப்பதுபோல் "எதிர்காலத்தில் மோதி இந்தியப் பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.".

இங்கு எனக்கு ஒரு கேள்வி - இப்போதே மோடிக்கு அமெரிக்காவின் விசா கிடையாது. அவர் பதவிக்கு வந்தால் இந்திய - அமெரிக்க உறவு என்ன ஆகும்? இதற்கு பத்ரி, ஞாநி, இ.வ. ஆகியோரின் கருத்து என்ன என்று தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.

-ஜெ .

Anonymous said...

The author should stick to writing articles on subjects that he is familiar with. Like marble games or Gilli thandi.

Anonymous said...

Old speech of Nitish praising Modi.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/BJP-s-parting-shot-Nitish-s-speech-praising-Modi/Article1-1077460.aspx


-Rudramurthy

Anonymous said...

என்னா சொல்ல வர்றாருன்னு புரிந்து கொள்ளாமலேயே அவரைத் தாக்கிப் பின்னூட்டங்கள்.

இந்த நாடு எப்படி உருப்படும்.... அதவானி மாதிரி நல்ல தலைவர்களுக்கு தான் என்ன மரியாதை கிடைக்கும். வெட்கம் வேதனை....

தமிழர்களுக்கு எதுவும் உடனேயே புரியாது அல்லாத்துக்கும் ஒரு பரிமேளழகர் வேண்டும் அவங்களுக்கு.

அதாவது அண்ணா என்னா சொல்ல வர்றாருன்னா ஆப்பிள் ஐபேடு அமோகமா விற்பனையாகும் போது அதை மார்கெட் பண்றதை நிறுத்திட்டு
அவங்க டைப் ரைட்டர் விற்க ஆரம்பிக்கனும் .. அதுதான் விற்பனைத் தந்திரம் விவேகம்....

பாலா பறக்கும் படை.

jaisankar jaganathan said...

//ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக.. தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :)". இந்த பதிவை படிக்கும் நமக்கும் அதே உணர்வு தான் வருகிறது ! //
பிஜெபி என்பது எங்கோ நார்த் இண்டியாவில் தேய்ந்து வரும் கட்சி. அதுக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம்? மொத்தத்துல யார் அந்த ராஜ்நாத்சிங். வட்டச்செயலாளரா?

Anonymous said...

//marble games or Gilli thandi//

ஏங்கண்ணு உனக்கு இந்தக் கெட்ட என்னம் ? இன்றும் கூட எங்க ஊர் பக்கம் அவற்றை பயலுவ விளையாடிட்டு கிடக்கிறானுங்க.

எ.அ.பா (எதுவுமே அறியாத பாவம்)அதைப்பத்தி எழுதினால் அவ்வளவு தான் அந்த விளையாட்டுக்கும் ஆப்பு ஆயிடாப்ப்போகிறது.

கில்லியப்பன்

jaisankar jaganathan said...

// தமிழ்நாட்டில் பி ஜே பி நிலை என்ன? அத்வானி ஆதரவை விட மோடி ஆதரவுதான் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது.//

கௌதமன்

தமிழ்நாட்டுல பிஜேபிக்கு 2 ஓட்டுதான் இருக்கு.
1. இட்லிவடை
2. கௌதமன்

இதுல இட்லிவடை ஓட்டு போட மாட்டார்.

Anonymous said...

ஜெ.ஜெ. அவர்களே
பி.ஜே.பி தேய்றது இருக்கட்டும் நீர் எப்ப கட்சி ஆரம்பிச்சு உருப்படப் போறீங்க...பின்னூட்டத்தில் பறக்கும் படை ஆரம்பிக்கிறதை எப்போ நிறுத்தப் போறீங்க

R. J. said...

IV, en kelvikkenna pathil? - R. J.

Anonymous said...

//marble games or Gilli thandi//
அனானி பையா, உனக்கு ஆங்கிலத்துல ஸ்பெல்லிங் சரியா வரலை... அது என்ன Gilli thandi ? கில்லிதாண்டு-னு தமிழ்லயே எழுதலாமே. marble games-னா கோலி விளையாட்டா... கருமம்டா சாமி :-) விரல் சூப்புற நீ அரசியல் பதிவுக்கு ஏன் வரணும் ?
பாலா பறக்கும் படை.

Anonymous said...

இட்லிவடையின் ரெகுலர் உயர்சாதி, குறிப்பாக பார்ப்பன வாசகப் பெருமக்களுக்கு நரேந்திர மோதி பிற்படுத்தப்பட்டவர் என்பது தெரியுமா? அவர்கள் சிந்திக்காரரான அத்வானியை ஆதரிப்பது தானே ஆசாரமான முடிவாக இருக்கும்!?!?!?

Anonymous said...

Bala, Thanks for writing a sensible article. Contents of this kind of post will not be understood by people who are doing mindless hero worship of modi.
this media is projecting modi as if he will cure all of india's ills. the same way they did to chandrababu naidu. now naidu is nowhere to be seen.
there is not much difference between the commenters here and the north indian media who wanted to behead srinivasan without trying to understand anything.

Anonymous said...

எ.அ. பாலா ன்னு பேர் வச்சிகிட்டதனால பின்னூட்டத்துல அவனவன் பின்னறான்யா. எ.அ.க்கு எவ்வளவு அர்த்தம் குடுக்கறாங்க மக்கள்.

எதுவும் அறியாத
எதுக்கும் அவசரப்படும்
எழவும் அறியாத
எப்பவும் அசிங்கப்படும்
எங்கேயும் அவலப்படும்
எவனுமே அங்கீரிக்காத

பாவம்யா ரொம்ப நல்லவன்யா. எவ்வளவு குடுத்தாலும் தாங்கறான்யா.

ConverZ stupidity said...

//R. J. Said
இங்கு எனக்கு ஒரு கேள்வி - இப்போதே மோடிக்கு அமெரிக்காவின் விசா கிடையாது. அவர் பதவிக்கு வந்தால் இந்திய - அமெரிக்க உறவு என்ன ஆகும்?//

அமெரிக்காவ பொறுத்தவரை அதோட வெளிநாட்டு கொள்கை தன்னலத்தை முவைத்துதான் (நம்மூருல முஸ்லிம் ஓட்டு போய்டுமுன்னு இஸ்ரேல் கூட சரியான உறவு வச்சிகவே பயபடுறோம்) , ஓட்டுக்களை முன்வைத்தல்ல. உதாரணம் ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது சதாம் ஹுசைன்க்கு அதிகமா ஆயுதம் விற்பனை செய்தது அமெரிக்காதான். அதே அமெரிக்காதான் தனக்கு எதிரா சதாம் ஹுசைன் தொடை தட்டினப்போ பேரழிவு ஆய்தம் வச்சிருக்கான்னு சொல்லி அந்த நாட்டையே குட்டிச்சுவராக்கினது. ஈராக்கவிட மோசமான பாகிஸ்தான கண்டுக்காம இருக்குற சுயநலமும் அந்த வெளியுறவு கொள்கைள அடக்கம்.

இன்னும் குறிப்பா சொல்லபோனா ஒரு நாட்டோட வெளியுறவு கொள்கை அதோட சுயநலத்தின் அடிப்படைல தான் இருக்க முடியும்


read the last two paras at the below link

http://www.dailypioneer.com/top-stories/congressional-committee-fiercely-debate-modi-visa-issue.html

for those who have not enough time below are those two paragraphs

"Defending the decision of the US government to deny visa to Modi, Thomas Farr, director, Religious Freedom Project, Berkley Center for Religion, Peace and World Affairs, Georgetown University, said that if he is going to be the Prime Minister of India, that's something the US would have to pay very close attention to.

"And you mentioned the economic interests in Gujarat. So we have to weigh these," he said.

Anonymous said...

I agree fully with Bala.

k.rahman said...

RIP - B.RAMAN - KR

R. J. said...

Thank you, ConverZ s. Read the Pioneer article connected by the link you have provided. I do understand that USA and India cannot ignore each other and business interests will take precedence.

In any case, if Modi becomes the PM (hypothetical for now), my strong opinion is that he should never visit / nor try to visit USA and should not send any invite to U.S.President to visit us. Let the officials of the government handle the business with guidance of our politicians. - R. J.

Anonymous said...

''இந்த மஞ்சள் கமெண்ட் படிக்கும் எனக்கும் அதே உணர்வுதான் வருகிறது ''

எனக்கும் அதே உணர்வுதான்

Tamilan ,
Qatar