பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 13, 2013

தந்தி செய்திகள்

செய்தி 1 - தகவல் பெறும் உரிமை சட்டம்

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

நில பேர ஊழல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்றதாக ‘ஆம் ஆத்மி‘ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, நுதன் தாக்குர் என்ற தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் ரிட்மனு தாக்கல் செய்தார்.

அதற்கு பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை, வதந்தி அடிப்படையிலானவை‘ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், ‘இந்த மனு, பத்திரிகை செய்திகள் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை உண்மையாக கருத முடியாது‘ என்று கூறினார். இதையடுத்து, நுதன் தாக்குரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தகவல் கோரி மனு

இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை தனக்கு தருமாறு நுதன் தாக்குர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார்.

அம்மனு, மத்திய தகவல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால், ஆவணங்களை தர முடியாது‘ என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

அதற்கு நுதன் தாக்குர், ‘ஆவணங்களை தரக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டால்தான், அவற்றை முடக்கி வைக்க முடியும்‘ என்று வாதிட்டார்.

ரகசியம்

இதையடுத்து, பிரதமர் அலுவலகம் மற்றொரு வாதத்தை முன்வைத்தது.

‘இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு விலக்கு அளித்திருப்பதால், இந்த ஆவணங்களை பகிர்ந்து கொள்ள முடியாது‘ என்று கூறி, ஆவணங்களை அளிக்க மறுத்து விட்டது.


செய்தி 2: தந்தியில் இனி தகவல் அனுப்ப முடியாது !

தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இரண்டு செய்திக்கும் உள்ள தொடர்பு - தகவல் !

5 Comments:

jaisankar jaganathan said...

காலத்தின் கோலம். இத்தாலி வாழ்க

kg gouthaman said...

vADEra deivamu manasA !!
Raagam : Kamavardhini!
Lyric: Thyagaraja.

R. J. said...

1. How long Robert Vadhera can be protected? May be till the next government is formed, which will not be by Congress. He has to either escape to Italy or be prepared.

2. Stop press * Stop * Telegraph services stopped * Stop * What will happen to Morse code operators * Stop * !

Dhas said...

Is POST OFFICE administered by BSNL? I think only BSNL is stopping Electronic method of Telegram. Post offices cannot STOP this telegram.

According to Law: Whatever file is in ORDINARY label will have to be given an URGENT treatment when there is a TELEGRAM. First that Law should be revoked, in order for POST office to close this.

Anybody correct me if I am wrong!

Anonymous said...

Telegrm service is one part of service from then DOT now BSNL. for public convenience it is operated from post offices through EKBC electronic telegraming machine. After the spread of internet BSNL closed the telegraph offices and equipments and convert the system in to web based telegraph system (WTMS) uses the email concept. even in big cities only 4 to 5 telegrams booked per day.