பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 12, 2013

பாஜகவின் கூட்டாளிகள் - பத்ரி

இட்லிவடையில் நான் நேற்று எழுதிய பதிவு

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலைக் குறிவைத்து பாஜக நகரத்தொடங்கிவிட்டது. காங்கிரஸ் இதைப்பற்றி அவ்வளவு கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் பாஜகவுக்கு உண்மையிலேயே அவசரம். அதனை அவர்கள் பல வாரங்களாக உணராமல் இருந்தார்கள். அதன்பின் மூன்று முக்கியமான விஷயங்கள் நடந்தேறியுள்ளன.

(1) நிதின் கட்காரி கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். ராஜ்நாத் சிங் அந்த இடத்துக்கு வந்தார்.
(2) ஒருவர்பின் ஒருவராக நரேந்திர மோதிதான் கட்சியின் தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லச் சரியான நபர் என்று முடிவெடுத்தனர். கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் பதவி அவருக்குத் தரப்பட்டது. தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக இவர் ஆகியுள்ளார்.
(3) ராஜினாமா என்று அழிச்சாட்டியம் பண்ணிய கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அடக்கிவைக்கப்பட்டுள்ளார்.மோதி முதலில் பாஜக உட்கட்சிப் பிரச்னைகளைச் சமாளிக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள் பல நோக்கர்கள். உட்கட்சி விஷயம் பெரும்பாலும் முடிவாகிவிட்டது. அடுத்த சிக்கல் தேசிய ஜனநாயக முன்னணி என்ற நாமகரணம் சூட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டையைப் பற்றியது.

பாஜகவின் இன்றைய கூட்டாளிகள் யார் யார்?
பிகாரின் நிதிஷ் குமார், அவருடைய ஐக்கிய ஜனதா தளம்.
மகாராஷ்டிரத்தின் சிவ சேனை, இப்போது பால் டாக்ரேயின் மகன் உத்தவ் டாக்ரே கட்டுப்பாட்டில்.
பஞ்சாபின் ஷிரோமனி அகாலி தளம், பிரகாஷ் சிங் பாதல் தலைமையில்
இதுதவிர இங்கே ஒன்று, அங்கே ஒன்று என்று உருப்படியில்லாத கட்சிகள்.
முதல் மூவரிடமும் சேர்ந்து 35 எம்.பிக்கள் இருக்கின்றனர். பிற கூட்டாளிகள் சேர்ந்து 5 எம்.பிக்கள்.

இதுதவிர, பாஜக ஒரு மதவெறிக் கட்சி என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு சேராமல், அதே சமயம் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையிலும் இருக்கும் சில கட்சிகள் உள்ளன. சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவை. இதுதவிர, ஜெயலலிதாவின் அஇஅதிமுகவும் நேரடியாக தேசிய ஜனநாயக முன்னணியில் இல்லை. தெலுகு தேசமும் பிஜு ஜனதா தளமும் காங்கிரஸ் கூட்டணியில் ஒருபோதும் இருக்காது. ஆனால் அதே நேரம் பாஜகவை நேரடியாக ஆதரித்தால் முஸ்லிம் வாக்குகள் போய்விடுமோ என்ற தேவையற்ற பயமும் உண்டு. எனவே பாஜகவால் இவர்களை நம்ப முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் ஆதரவு தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு இருக்கும். அதேபோல உத்தரப் பிரதேசத்தின் சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜவாதிக் கட்சியும் தேர்தல் நேரத்தில் பாஜகவையும் ஆதரிக்க மாட்டார்கள்; காங்கிரஸையும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் தேர்தலுக்குப்பின், இப்போதைப்போல் காங்கிரஸுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவார்கள். பாஜகவுக்கு அதுவும் தர மாட்டார்கள்.

சரி, இருக்கும் கூட்டாளிகளைப் பார்ப்போம் என்றால், ஐக்கிய ஜனதா தளம் இன்றோ நாளையோ கூட்டணியிலிருந்து வெளியேறிவிடும் என்று தெரிகிறது. நிதிஷ் குமாருக்கு மோதியைப் பிடிக்கவில்லை. அதற்கு பாஜக ஒன்றும் செய்ய முடியாது. நிதிஷ் குமார் வெளியேறட்டும் என்று விட்டுவிடவேண்டியதுதான். பாஜக ஆட்சியிலிருந்து விலகினாலும் நிதிஷ் குமாரால் ஒரு மைனாரிட்டி ஆட்சியை பிகாரில் தரமுடியும். அங்கே உள்ள மொத்த இடங்கள் 243. ஐக்கிய ஜனதா தளத்தின் கையில் இருக்கும் இடங்கள் 115. பாஜக 91. ஐக்கிய ஜனதா தளத்தின் தேவை 122. எனவே மேற்கொண்டு தேவைப்படும் 7 இடங்களை காங்கிரஸ் (4), கம்யூனிஸ்ட் (1), மீதம் சுயேச்சைகள் என்று ஒப்பேற்றிவிடலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பிகாரில் பாஜகவின் வாய்ப்புகள் குறையும்.

மகாராஷ்டிரத்தில் சிவ சேனை, பால் டாக்ரே மறைவுக்குப்பின் வலு குறைந்துபோயுள்ளது. உத்தவ் - ராஜ் டாக்ரே குடும்பச் சண்டையும் காரணம். மகாராஷ்டிரத்தில் பாஜக கட்சி வளர்ச்சிக்கென்று ஒன்றும் பெரிதாகச் செய்யவும் இல்லை.

பஞ்சாப் கூட்டாளி தேவலாம். ஏதோ மோதியின் தேர்வைப் பெரிய பிரச்னையாக ஆக்கவில்லை என்பதால். ஆனால் பஞ்சாபில் உள்ள இடங்கள் மிகவும் குறைவு.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காங்கிரஸ் தன் ஆட்சியைத் தக்கவைக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. ஆனால் மாற்றத்தைக் கொண்டுவர நரேந்திர மோதி மிகக் கடுமையாக உழைக்கவேண்டும். சொந்தமாகவே 200-210 இடங்கள் வருமாறு வேலை பார்க்கவேண்டும். இது மிக மிகக் கடினமான வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மார்ஜினல் தொகுதிகள் அனைத்தையும் பாஜக வசம் சாய்க்கவேண்டும். அதற்கு இன்றிலிருந்தே ‘தீயாக’ வேலை செய்யவேண்டும்.

நரேந்திர மோதி இதனை எப்படிச் செய்யப்போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்கள் முக்கியமாக அமையும். இங்குதான் பாஜகவுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர, சில போனஸ் மாநிலங்களாக ஆந்திரம், ஒரிஸா, மேற்கு வங்கம் ஆகியவை இருக்கலாம். 3-4 இடங்கள் இந்த ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கிடைத்தால் ஒரு பத்து தேறலாம். நிதிஷ் குமாரை எப்படியும் இழக்கப்போவதால் பிகாரில் பின்னடைவு ஏற்படும். ஆனால் மோதியை முன்னிறுத்தி அதிகபட்சமாக எவ்வளவு இடங்களை அங்கே கைப்பற்ற முடியும் என்பதைப் பார்க்கவேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நான் கேள்விப்படுவதுவரை பாஜகவின் கட்டமைப்பு மிக வலுவற்றதாக உள்ளதாம். எப்படி அதனைக் கொண்டு அந்த மாநிலத்தில் பெரும் மாற்றத்தை மோதியால் ஏற்படுத்த முடியும் என்பதையும் பார்க்கவேண்டும்.

நன்றி: பத்ரி
http://www.badriseshadri.in/2013/06/blog-post_12.html

சாதா குழந்தை 2 சூப்பர் குழந்தை நாளை வரும்... இப்போதைக்கு குழந்தை அத்வானி தான் !

3 Comments:

Unknown said...

//(3) ராஜினாமா என்று அழிச்சாட்டியம் பண்ணிய கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அடக்கிவைக்கப்பட்டுள்ளார்.
/

ராமர் பேரைச்சொல்லி நாட்டில் கட்சியை வளர்த்தவருப்பா அவரு. ரதயாத்திரை எல்லாம் போயிருக்காரு. அட்லீஸ்ட் ஒரு 6 மாசமாவது பிரதமரா இருந்துட்டு போகட்டும் விடுங்க

Anonymous said...

/// Modi, according to some experts, comes across as a crude politician who does not have any political "sanskars" and does not have an open mind and the charisma for running a country like India. The way Modi sent his supporters to demonstrate outside Advani's home in Delhi; the way he treated a whistle blower (senior IPS officer Kuldip Sharma) who exposed some of his controversial actions, and the way he allegedly shunned his wife are some clear indications that he can use any means to achieve what he thinks is right. Deep down he is an authoritarian man ill at ease with dissent. Even his wife has alleged that she is afraid of losing her job and livelihood if she says something against her politically powerful husband. ///

Ravi Khanna in Sify.com

I totally agree.

Saravanan

R. J. said...

Do we really have hope? Do we have any leader / party who can govern this country to prosperity, peace and respect? Readers may just try to name a few and see for themselves objectively. The media news now is that there are efforts to moot the third front! Imagine Jaya, Mamata, Sharad Yadav, Nayudu and the communists joining hands! Where will this lead to in case of an improbable formation of the government by this team! Anna Hazare and the like are just character actors and cannot lead the show all through. NaMo definitely is not a saint or a messiah but he may be the only choice at this juncture. Tagodia is threatening him not to give up Hindutva. But once NaMo comes to power, he will not be able to do anything for Hindutva at the cost of communal harmony. His priorities will be entirely different. I am pinning my hope on NaMo only on the belief that he is not corrupt and will not be corrupted and will not forgive corruption. That is enough for me. The country, then will have some hope.