
மோதி - அத்வானி மோதல் குறித்து பத்ரி எழுதியுள்ள கட்டுரை
நேற்று தந்தி டிவி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் கலந்துகொண்ட பாஜக நண்பர், அத்வானி ராஜினாமாவை எப்படிக் கையாள்வது என்பதில் சற்று சஞ்சலம் கொண்டிருந்தார்.
அதனால்தான் விரிசல், மோதல் போன்ற வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு, அத்வானிக்கு மனத்தில் ஏதோ சஞ்சலம்; ஆனால் அவை ஓரிரு நாள்களில் சரியாகிவிடும் என்று பதில் சொன்னார்.
அத்வானி இப்படி திடுதிப்பென்று ராஜினாமா செய்துவிடுவார் என்று பாஜக உண்மையில் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லவேண்டும். கட்டுக்கோப்பான கட்சி, சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி என்பதற்கு மாற்று அந்தக் கட்சியில் பல இடங்களில் உள்ளன. எனவே அதைப் பற்றி நாம் அதிகம் விவாதிக்கவேண்டியதில்லை.
கோவாவில், பாஜக பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோதி தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு நிகழ்வு. மோதியை எனக்குப் பிடிக்கும் என்பதனால் அல்ல நான் சொல்வது. இந்தியாவின் முதன்மைக் கட்சி ஒன்றில் உள்கட்சி ஜனநாயகம் மிகத் தெளிவாக நடைமுறைக்கு வந்த ஒரு நிகழ்வு இது. கிட்டத்தட்ட அமெரிக்க பிரைமரி மாதிரி.
இதைப்போன்ற ஒரு நிகழ்வு நடக்கும்போது விரும்பத்தகாதமுறையில் அத்வானி நடந்துகொண்டதுதான் மன்னிக்க முடியாத ஒன்று.
ஏன் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பார்ப்போம்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் மிகப் பூர்விகமான ஒன்று. பொதுவாகப் பல நேரங்களிலும் அதன் தலைவராக இருப்பவர்களே நாட்டின் பிரதமராகவும் இருந்திருக்கிறார்கள். கட்சிமீதான அதிகாரம், ஆட்சிமீதான அதிகாரம் இரண்டும் இவர்கள் கையில் குவிந்திருந்தது. சில சமயங்களில் இருவரும் வெவ்வேறு ஆட்களாக இருந்திருப்பார்கள். ஆனால் அப்போது இரண்டுவிதமான நிகழ்வுகள் நடந்தேறியிருக்கும். ஒருவர் வலுவானவராக இருப்பார், மற்றவரை அழுத்தி, வெறும் கைப்பாவையாக வைத்திருப்பார். அல்லது இருவருக்கும் இடையில் கடும் மோதல் வெடிக்கும், விளைவாகக் கட்சி பிளவாகும்.
நேருவுக்கு ஆரம்பத்தில் ராஜேந்திர பிரசாத்திடமிருந்தும் படேலிடமிருந்தும் எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் நாளடைவில் அந்த எதிர்ப்புகளையெல்லாம் நேரு புறந்தள்ளிவிட்டார். படேல் வெகு காலம் உயிருடன் இல்லை. பிரசாத் டம்மியாக்கப்பட்டார். ராஜாஜிக்குக் கட்சியின் அடிமட்டத்தில் எதிர்ப்பு இருந்தது. முக்கியமாக சுதந்தரப் போராட்ட காலகட்டத்தில் காங்கிரஸின் அதிகாரபூர்வக் கருத்துகளுக்கு எதிரானதாக அவருடைய நிலைப்பாடு இருந்தது என்று காங்கிரஸ் அடிப்படைவாதிகள் பலரும் கருதினர். விளைவாக 1950-களிலிருந்து அவர் இறக்கும் வரையில் காங்கிரஸ் கட்சி, இந்திய ஆட்சி இரண்டும் நேரு கையில் இருந்தது. இந்த அதிகாரத்தை அவர் அடிம்ட்டத்திலிருந்து பெற்றிருந்தாரா என்றால் இல்லை. கட்சியை உருவாக்கி, பிரம்மாண்டமான ஓர் அமைப்பாக மாற்றிய பெருமை காந்திக்கு மட்டுமே. அவருடைய சமகாலத்தவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தாரா நேரு என்றால், கட்டாயமாகப் பெற்றிருந்தார்.
ஆனால் அதே நேரம், பட்டேல், பிரசாத், ராஜாஜி மூவருமே முக்கியமான இடங்களிலில் நேருவிடமிருந்து விலகி, அவரை மறுக்கவும் செய்தனர். ஆனால் காந்தியின் கடைக்கண் பார்வை நேருவிடமேதான் இருந்தது.

ஆனால் சாஸ்திரி கூடாது என்று யாரும் நினைக்கவில்லை. காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் வலுவாக ஆரம்பித்தது இந்தக் கட்டத்தில்தான். சாஸ்திரியின் துரதிர்ஷ்டவசமான மரணத்துக்குப்பின் இந்திரா காந்தியை ஆட்சித் தலைமையில் கொண்டுவந்து நிறுத்தியது சிண்டிகேட்தான்.
அங்கிருந்து கட்சி/ஆட்சி தலைமை என்பது படுபாதாளத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
தட்டுத் தடுமாறி ஆட்சியைப் புரிந்துகொள்ள ஆரம்பித்த இந்திரா, கொஞ்சம் கொஞ்சமாகக் குடியாட்சி மாண்புகளைச் சிதைத்து, சிண்டிகேட்டைப் பலி வாங்கி, கட்சி என்பதைப் புடைவைத் தலைப்பாக்கி இடுப்பில் செருகிக்கொண்டார். அதன்பின் காங்கிரஸில் இடையில் சீதாராம் கேசரி - நரசிம்ம ராவ் என்ற இருவர் 1990-களில்தான் வர முடிந்தது. அவர்களுக்கும் கட்சியின் அடிமட்டத்தில் எந்தச் செல்வாக்கும் கிடையாது. கிழங்கள், சீக்கிரம் செத்துத் தொலைந்துவிடும், கட்சியைப் பார்த்துக்கொள்ள இப்போதைக்கு இவர்கள் போதும் என்பதாகத்தான் அவர்கள் கொண்டுவரப்பட்டார்கள்.
இப்போது சோனியா - மன்மோகன் சிங் கூட்டணி இப்படித்தான். மன்மோகன் சிங்குக்கு grassroots என்றால் என்னவென்றே தெரியாது. சொல்லப்போனால் சோனியாவுக்கும் தெரியாது. ஏற்கெனவே பாட்டனார் சேர்த்துவைத்திருக்கும் சொத்தை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் அவர்கள். அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, கட்சிக்கென கொள்கைகள் வகுத்து, செயல்திட்டம் உருவாக்கி, மாற்றங்களைக் கொண்டுவந்து, நாட்டை வழிநடத்தத் தெளிவான வழிமுறைகளை ஏற்படுத்தி, என்று எதுவும் கிடையாது.
பாஜக வேறு மாதிரி. ஆட்சியில் இருந்த காலம் குறைவு. ஜனசங்கம் என்ற கட்சியை விட்டுவிட்டு, பாஜக என்ற வடிவில் அது உருவானபிற்பாடு ஏற்பட்டதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். பாஜகவாக அது உருவெடுத்தபோது அந்தக் கட்சியைப் பொருத்தமட்டில் வாஜ்பாயியும் அத்வானியும் சந்தேகமே இல்லாமல் அதன் உச்சபட்சத் தலைவர்கள். கட்சியை ஜெயிக்கவைக்க, சோர்ந்துகிடக்கும் தொண்டர்களைத் துள்ளிக் குதிக்கவைக்க, ஆட்சியை நடத்த என்று இவர்கள் இருவரும்தான். இருவருக்கும் இடையில் பெரிய உரசல்கள் எதுவும் கண்ணில் தென்படவில்லை. சில பிரச்னைகள் கட்டாயம் இருந்திருக்கும். பாஜக ஆட்சியைப் பிடிப்பதில் அத்வானியின் பங்கு மிக அதிகம் என்றாலும் வாஜ்பாயியால்தான் ஒரு கூட்டணியைக் கட்டிக் காக்க முடியும் என்று அத்வானியே முடிவெடுத்தார். பாஜக ஆட்சியில் இருந்த 6.5 வருட காலத்துக்குப்பின் கடந்த 9 வருடங்களாகக் காத்திருப்பிலேயே காலம் கழிந்துவிட்டது.
பாஜகவிலும் காங்கிரஸிலும் பல தலைவர்கள் இடைப்பட்ட காலத்தில் உருவாகிக்கொண்டே இருந்தனர்.
காங்கிரஸில் அவர்கள் காந்தி குடும்பத்திடம் கையேந்தி நின்று பிச்சை வாங்கவேண்டும். போட்டதை எடுத்துக்கொண்டு போய்விடவேண்டும். மீறி துள்ளிக்குதித்தால் வால் ஒட்ட நறுக்கப்படும்.
பாஜகவில் வாஜ்பாயி காலத்துக்குப்பிறகு அத்வானி ஒருவிதத்தில் தனிப்பெரும் சக்தியாக இருந்தார். ஆனால் அவருடைய பலம் குறைந்துகொண்டே வருகிறது; வயது அதிகமாகிக்கொண்டே வருகிறது என்பதை அவர் உணரத் தயாராக இல்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தலைவர்கள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள். மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தில் பாஜகவில் சில பிரகாசமான தலைவர்கள் இருந்தார்கள். மத்தியில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெயிட்லி, பிரமோத் மஹாஜன் ஆகியோரைச் சொல்லலாம். மாநிலங்களில் சில பழைய தலைகள் வந்தன, போயின. பிரமோத் மஹாஜன் சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்யாண் சிங், உமா பாரதி முதலியோர் முதல்வர்களாக இருந்து, கட்சியை விட்டு வெளியேறி, மீண்டும் கட்சிக்கே வந்தனர்.
அடுத்த தலைமுறை மாநிலரீதியிலான தலைவர்கள் என்றால், குஜராத்தின் நரேந்திர மோதி, ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், சத்தீஸ்கரின் ரமன் சிங், கோவாவின் மனோஹர் பரிக்கர், கர்நாடகத்தின் ஏடியூரப்பா ஆகியோரைச் சொல்லலாம். ஏடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டு, கட்சியை விட்டு விலகல் என்று தவறான திசையில் சென்றுவிட்டார். ஜார்க்கண்ட், உத்தராகண்ட், ஹிமாசலப் பிரதேசம் ஆட்களை விட்டுவிடுவோம். அங்கு பாஜக இந்தியாவையே திரும்பிப் பார்க்கும்படி யாரையும் உருவாக்கவில்லை. ஒன்று அவர்களிடம் வலுவான ஆட்கள் இருந்ததில்லை அல்லது வலுவான ஆட்சி இருந்ததில்லை. தில்லியில் கடந்த மூன்று முறையாகத் தோல்வி மட்டுமே.
எனவே பாஜகவை வழிநடத்த, கீழிருந்து உருவான தலைவர்கள் என்றால் அது இப்போதைக்கு சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெயிட்லி, நரேந்திர மோதி, ஷிவ்ராஜ் சிங் சௌஹான், ரமன் சிங், மனோஹர் பரிக்கர், வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் மட்டுமே. கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோர் தத்தம் மாநிலங்களிலேயே கட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள் இல்லை. இங்கே கட்டுப்பாடு என்றால் மற்றவர்கள் மனம் விரும்பித் தங்களை அந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அது எப்போது நடக்கும் என்றால் சம்பந்தப்பட்ட தலைவரால் தம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பைக் கொண்டுவர முடியும் என்று தொண்டர்களும் பிற தலைவர்களும் நம்பும்போதுதான்.
அருண் ஜெயிட்லி, ராஜ்யசபா ரகம். பின்னால் இருந்துகொண்டு கட்சியை வழிநடத்துவதுதான் அவருடைய ஸ்டைல். சுஷ்மா ஸ்வராஜ் நீண்ட காலமாக அரசியல் இருந்துவந்தாலும் ஹரியானா/தில்லி வட்டாரத்தில் அவர் பாஜகவுக்காகச் சாதித்தது குறைவுதான். அந்த மாநிலங்களில் பாஜக அடைந்த பின்னடைவுக்கு அவர் பெரும் பொறுப்பு ஏற்கத்தான் வேண்டும். ஆக, வயதான அத்வானியை விட்டுவிட்டுப் பார்த்தால், மீதமுள்ள நபர்களிடமிருந்துதான் கட்சியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
இதைத்தான் கோவா பாஜக மாநாடு செயல்படுத்தியது. மேலே நாம் சொல்லியுள்ள ஒவ்வொரு மாநில முதல்வரும் முன்னால் முதல்வரான சிந்தியாவும் ஒருமனதாக நரேந்திர மோதியை ஆதரித்தனர்.
அருண் ஜெயிட்லிக்கு மோதியிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. மனத்தாங்கல் அடைந்தது என்று பார்த்தால் இருவரை மட்டுமே சொல்லமுடியும். அத்வானி. ஸ்வராஜ். சுஷ்மா ஸ்வராஜ் அதனை வெளியே காட்டவில்லை. அத்வானி காட்டிவிட்டார்.
ஆனால் grassroots-ல் தொடங்கி, அடிமட்டத் தொண்டர்களின் மதிப்பைப் பெற்று, வலுவான போட்டியாளர்கள் இருந்தும் அவர்களிடமிருந்தே endorsements பெற்று, தன் அனைத்து peer-களின் மதிப்பையும் பெற்று, உட்கட்சித் தேர்தலில் அனைவரையும்விடத் தானே சிறந்தவன் என்பதைக் காட்டி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக மோதி உருவாகியிருப்பது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வுதானே? நேரு காந்தியால் முடி சூட்டப்பட்டார்.
சாஸ்திரி இருந்தது சொற்ப காலம். அவர் நீடித்திருந்தால் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கலாம். ஒருவேளை காங்கிரஸிலும் நல்லதொரு உட்கட்சி ஜனநாயகம் உருவாகியிருந்திருக்கலாம். இந்திரா, ஆட்டிவைப்பதற்கு எளிதான பொம்மை என்று நினைத்துக் கொண்டுவரப்பட்டார்; தான் பொம்மையல்ல என்று பின்னர் நிரூபித்தார். அத்வானி/வாஜ்பாயிக்குப் போட்டி என்பதே இருக்கவில்லை. ராஜிவையோ, சோனியாவை காலில் விழுந்து கூப்பிட்டுக்கொண்டுவந்தனர். அவர்களுக்குப் போட்டியில்லை. போட்டியை அவர்கள் விரும்பவும் இல்லை. இதோ, இப்போது, ராகுல் காந்தி கதையும் அப்படியே.
ஆனால் அப்படியல்ல மோதியின் கதை. போட்டி இருந்தது. இப்போதும் உள்ளது. போட்டியில் இருப்பவர்கள் அனைவரும் சப்பைகள் அல்லர். ஆனாலும் தங்களைவிட மோதி சிறந்தவர் என்பதை ஒப்புக்கொண்டனர், perhaps grudgingly. இதுதானே healthy போட்டி என்பது.

மோதியின் முதல் குறிக்கோள், டிசம்பர் 2013-ல் வரவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, சத்தீஸ்கர் தேர்தல்கள். அனைத்துமே வெல்லக்கூடியவை. அதற்கடுத்து மே 2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். மிகக் கடினமான தேர்தல் இது. பாஜகவின் கூட்டாளிகள் எல்லாம் பெரும்பாலும் சப்பைகள்தான். சிவ சேனை வலு இழந்துகொண்டே வருகிறது. அகாலி தளத்தின் பலம் மிகச் சிறிய ஒரு மாநிலத்தில் மட்டுமே. பிகாரில் இருக்கும் நிதீஷ் குமார் நண்பனா, பகைவனா என்றே தெரியாது. எனவே பாஜக தன் சொந்தக் காலில் நின்றாகவேண்டும். வேறு யாரும் தேர்தலுக்குமுன் கூட்டணி சேரப் போவதில்லை. அஇஅதிமுக சேர்த்து. இவற்றையெல்லாம் தாண்டி பாஜக சொந்தமாக 200 இடங்களை நோக்கித் திட்டமிடவேண்டும். இது மிக மிகக் கடினம். இதை மோதி செய்துகாட்டினால், அவரைத் தேர்ந்தெடுத்தது சரிதான் என்று பாஜக தொடர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் அப்படி பாஜக தலைமையில் ஏற்படும் ஆட்சி லொடலொட என்றுதான் இருக்கும்.
மீண்டும் மற்றுமொரு தேர்தல் ஓரிரு ஆண்டுக்குள் வரும். அதற்குள் மகாராஷ்டிரம், ஹரியானா, ஆந்திரம் தேர்தல்கள் வரும். அங்கு பெரிய மாற்றத்தை பாஜக கொண்டுவரவேண்டியிருக்கும். பிறகு ஆட்சியைக் கலைத்துவிட்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 225 இடங்களை பாஜக வென்றுவிட்டால், பிரச்னை இல்லை.
இதைத்தான் தன்னுடைய இலக்காக வைத்து மோதி செயல்படவேண்டும்.
செய்தும் காட்டுவார்.
அத்வானி எல்லாம் ஒரு பிரச்னையே அல்ல.
ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
22 Comments:
sooperooo sooper.. rightly said
Namo Namo!! :)
Well the odds are all in favor of Modi.
Congress should go.
In that case, the only alternative is BJP (Modi).
நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டுரையை எழுத நினைத்த அத்தனை விதயங்களையும் தொட்டு எழுதியிருக்கும் பத்ரிக்கு வாழ்த்துக்கள்...
பத்ரி, இதை உங்கள் தளத்திலும் பகிருங்கள்..
கடைசி மஞ்சள் வரி கமெண்ட் பத்ரியினுடையதா அல்லது இட்லி வடையினுடையதா?
ஆர்எஸ்எஸ் காரர்கள் படித்துத் தெளியவேண்டியது எதுவும் இல்லை;ஆர்எஸ்எஸ் மோடியின் தேர்வில் தெளிவாகவே இருக்கிறது; அத்வானியைச் சமாதானப் படுத்த வேண்டிய மட்டும் முயற்சி செய்வார்கள்,ஆனால் கோவா முடிவில் மறு பரிசீலனை இருக்காது..அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்..
அத்வானி கடைசிக் காலத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டதோடு, தனிமைப் படுத்தப் பட்டு விட்டார் என்றே தெரிகிறது..
கிட்டத்தட்ட என் மனதில் இருப்பதை அப்படியே படித்த மாதிரி இருக்கிறது....... நன்றி....திரு. பத்ரி அவர்களே....
கிட்டத்தட்ட என் மனதில் இருப்பதை அப்படியே படித்த மாதிரி இருக்கிறது....... நன்றி....திரு. பத்ரி அவர்களே....
Well said.
அத்வானி பொறுப்பில்லாமல் பெரிய தவறிழைத்துவிட்டார் என்பதில் சந்தேகமே இல்லை காங்கிரஸ் கட்சியினர் பெரும் பூரிப்பில் இருக்கின்றனர் இந்த நடவடிக்கை பா ஜ க. வை பிளக்காது என்று பத்ரி எழுதினாலும் ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த்சின்ஹா போன்றோரும் அத்வானிக்கு ஆதரவு. அதனால் தலைமையில் பாதிப்பு உண்டு. தொண்டர்களிடம் எப்படி என்பது கேள்விக்குறி. இப்போது ராஜினாமாவை வாபஸ் செய்தாலும் பலன் இல்லை என்றே தோன்றுகிறது. ஏற்பட்ட பாதிப்பு ஏற்பட்டதுதான் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று! - ஜெ.
-// அவர் அழுகுணி ஆட்டம் ஆடுகிறார்//- gandhi-subhash- congress president election, Gandhi's fasting, subhash resignation.
/* பிறகு ஆட்சியைக் கலைத்துவிட்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 225 இடங்களை பாஜக வென்றுவிட்டால், பிரச்னை இல்லை */
Very Nice.. தேர்தல் செலவு எல்லாமும் "பத்ரி" பண்ணுவாராமா ?? ஏதோ சங்கத்த கலச்சிடலாம்னு சொல்ற மாதிரி இருக்கு...
Balu: எல்லா தேர்தல் செலவையும் நான் செய்ய முடியுமா என்ன? எதோ என்னால் இயன்ற பணத்தை நான் விரும்பும் கட்சிகளுக்கு நன்கொடையாகத் தர முடியும். கட்டாயம் பாஜகவுக்கு நன்கொடை தருவேன். பிற கட்சிகள் பற்றி இன்னமும் யோசிக்கவில்லை. அதேபோலத்தான் நீங்கள் அனைவரும் உங்களால் முடிந்த அளவு பணத்தை உங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தரவேண்டும். அதுதவிர அரசுப் பணம் செலவாகும் (தேர்தலை நடத்த). அதுவும் நம் பணம்தான். ஆனால் நல்ல ஆட்சியை விரும்பிப் பெற நாம் செய்யும் செலவு அது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.
பிஜெபி என்பது இன்னொரு காங்கிரஸ் . அவ்ளோதான் பதிரி சேஷாத்திரி
//Very Nice.. தேர்தல் செலவு எல்லாமும் "பத்ரி" பண்ணுவாராமா ?? ஏதோ சங்கத்த கலச்சிடலாம்னு சொல்ற மாதிரி இருக்கு...//
is it a big problem? adani is there. he will take care as long as modi continues to give him undue favours.
Advani does not want BJP to get more than 160-180 seats. Only then NDA government led by Advani is possible,coz NDA wont agree to Modi. If BJP gets even close to 200 seats nobody would listen Advani.
Advani's game plan is to blunt Modi and reduce BJP's tally. Thats the deal with Nitish Kumar. You can expect confusing/secular signals/speeches/statements from Advani to make the voters believe that Modi would never become PM praising chouhan/Nitish/Sushma etc more and more in future.
ஹா..ஹா...
என்னய்யா நீங்களும் உங்க அரசியலும்
அத்வானியும் மோதியும் மோதிக் கொண்ட காமெடி..... ஒரு ஆணியும் புடுங்கல.... இந்திய அரசியல்ல...
இது எப்படி இருக்குதுன்னா....
சிங்கமுத்து... போண்டா மணி..... வெண்ணிறாடை மூர்த்தி... மனோ பாலா.......
இவர்கள் கால்ஷீட்டை வாங்கி கொடுத்து.... இத வைச்சிக்கிட்டு....
தீ பிடிக்கிற.... பட்டைய கிளப்புற ஆக்ஷன் படம் எடுன்னா எப்படி.... அப்படியிருக்குதுய்யா பிஜேபி நிலைமை....
அத்வானி பிய்யூஸ் போய் மாமாங்கமாச்சு.... மோடி... மோடின்னு படபடத்த கொடி.... கிழிஞ்சு நாறு நாறா தொங்குது..... ராஜ் நாத்து..... சோழக்கொல்லை நாத்து..... கட்காரி... கட்டலேண்ணா சாரின்னு.... ஒரு ஆளு... ஒப்புக்கு இருக்கேன் நான் உமா பாரதி....... இப்படி இருக்கிறதே நாலு பேரு. அதுல ஒரு நாலைஞ்சு குரூப்பு...
இது பி ஜேப் பீய்ய்ய்யா....யாவ்...
போங்கய்யா... போய் பிள்ளை குட்டிய படிக்க வையுங்க... வந்துட்டாங்க அரசியல் பேஸ............
பேசாம நான் சொல்றத கேளுங்க.... இந்த புர்ச்சி தலைவிய பிரதமராக்கி டில்லிக்கு அனுப்பி வைச்சுருங்க... சென்னை தப்பிச்சிரும்....
//பேசாம நான் சொல்றத கேளுங்க.... இந்த புர்ச்சி தலைவிய பிரதமராக்கி டில்லிக்கு அனுப்பி வைச்சுருங்க... சென்னை தப்பிச்சிரும்....
/
ஜெயலலிதா பிரதமர் ஆனா என்ன நடக்கும்?
இலங்கை ராஜ பக்ஷே ஜெயலலிதா கால்ல விழுவார்
பாகிஸ்தான் நாடு அமெரிக்காவுக்கு ஓடிப்போகும்
சீனா பணீந்து போகும்
அண்டார்ட்டிக்காவுல காடு விளையும்
ஆர்டிக் உறைஞ்சு போகும்
சகாரா விளைநிலமாகும்
what will be modi stand on minorities
கவுன்சிலர் தேர்தல்ல கூட போட்டி போடாம கூட இருந்தே குழி பறிச்சிட்டு நேரா முதல்வர் ஆன தலை நம்ம மோடி.அவர் ஜனநாயக முறைப்படி முன்னே வருகிறார் என்று எழுதவும் தைரியம் வேண்டும்
ஆரம்பத்தில் இருந்து அவர் கூடவே ஆர் எஸ் எஸ்,பா ஜ க கட்சியில் இருக்கறவங்க யாரையாவது காட்டுங்களேன்
வகேலாவை கவுத்தாறு,சுரேஷ் மேஹ்தாவை துரதிட்டாறு,கேசுபாய் காலை வாரி விட்டாரு,ஜோஷிக்கு சி டி ,ஹரேன் பாண்டியாவ மேலயே அனுபிசிட்டாறு.இன்னிக்கு கூட அவர் மனைவி மோடி தான் கொலைக்காரன்ன்னு கதரறாங்க
சொந்தமா ஒரு தொகுதியில செய்க்கறதுக்கு கூட வக்கில்லாம ,அதிக ஆதரவுள்ள எம் எல் ஏ க்களை கெஞ்சி தட்டு தடுமாறி எம் எல் ஏ ஆன காலத்திலேயே ,எதிர்ப்பு அதிகமாக இருந்தாலும் அவருக்கு மலை மாதிரி ஆதரவா இருந்தா அத்வானியை தூக்கிபோட்டு மெரிச்சாறு பாருங்க அடடா இப்ப அவரு கூட நட்பா இருக்கறவங்களுக்கு பயங்கரமா சிலிர்த்திருக்கும்
உதர்ப்ரதேச தேர்தல்போது தோற்க போகிறது என்பதால் பிரசாரத்திற்கு கூட செல்லாமல் ஒதுங்கிய வீரர்,பீகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு வர கூடாது என்று நிதிஷ் சொன்ன போது வாயை மூடி கொண்டு அங்கு செல்லாமல் இருந்த சிங்கம்,எங்கு ஜெய்க்கும் வாய்ப்பு இருக்கிறதோ என்று அலசி ஆராய்ந்து அங்கு மட்டும் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று கர்நாடகத்தில் தொகுதிகளை அலசி ஆராய்ந்து பிரசாரத்திற்கு எட்டி பார்த்த அசகாய சூரர் ஜனநாயக முறைப்படி முன் நிறுத்தப்படுகிறார் என்று சொல்வதை விட ஜனநாயகத்தை (உட்கட்சியோ ,பொது தேர்தலோ)அசிங்கபடுத்த முடியாது
உதர்ப்ரதேச தேர்தல்போது தோற்க போகிறது என்பதால் பிரசாரத்திற்கு கூட செல்லாமல் ஒதுங்கிய வீரர்,பீகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு வர கூடாது என்று நிதிஷ் சொன்ன போது வாயை மூடி கொண்டு அங்கு செல்லாமல் இருந்த சிங்கம்,எங்கு ஜெய்க்கும் வாய்ப்பு இருக்கிறதோ என்று அலசி ஆராய்ந்து அங்கு மட்டும் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் என்று கர்நாடகத்தில் தொகுதிகளை அலசி ஆராய்ந்து பிரசாரத்திற்கு எட்டி பார்த்த அசகாய சூரர் ஜனநாயக முறைப்படி முன் நிறுத்தப்படுகிறார் என்று சொல்வதை விட ஜனநாயகத்தை (உட்கட்சியோ ,பொது தேர்தலோ)அசிங்கபடுத்த முடியாது
நம்ம தலை மோடி குஜராத்தை சார்ந்தவர். அங்கு எப்படி ஜனநாயக முறைப்படி வளர்ந்தார் என்று கொஞ்சம் பார்க்கலாமா
பா ஜ க 14 மார்ச் 95இல் இருந்து ஆட்சியில் இருக்கிறது.கேஷுபாய் படேல்,வக்ஹெலா,சுரேஷ் மேஹ்தா என்று கட்சியில் பல ஆண்டு காலம் இருந்தவர்கள் எல்லாம் மோடி புண்ணியத்தில் அடித்து துரத்தப்பட்டார்கள்.
கோஷ்டி வளர்த்த மோடியால் தான் மக்கள் ஆதரவு பெற்ற வகேலா கட்சியை உடைத்தார்,கேஷுபாய் தூக்கப்பட்டார் என்பதால் குஜராத் பக்கமே எட்டி பார்க்க கூடாது என்று மோடியை பா ஜ க தலைமை வேறு மாநிலத்துக்கு பொறுப்பாளராக துரத்தியதும் உண்டு.
எப்படா காலை வாரலாம் என்று நம்ம EVKS மாதிரி காத்திருந்தவர் பூஹம்பம் வந்ததால் மக்களுக்கு கேஷுபாய் மீது இருந்த அதிருப்தியை தலைமையிடம் ஊதி பெரிதாக்கி திடீரென்று தலைமையின் காலை (கவுண்டமணி படத்தில் சரி என்று சொல்லும் வரை காலை விட மாட்டாரே ,அது போல)பிடித்து,காக்கா பிடித்து நேரடியாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.அவ்வளவு தான். ஒரு தேர்தலில் கூட நிற்காதவர் என்றாலும் போட்டியாளர்களை அழிப்பதில் தலை மோடிக்கு நிகராக வேறு யாரும் அருகில் கூட வர முடியாது
முதல்வராக தொடர வேண்டுமானால் 6 மாதத்திற்குள் எம் எல் ஏ ஆக வேண்டும்.ஜனநாயக முறைப்படி தேர்தல் அரசியலில் இருந்திருந்து வந்திருந்தால் அவர் செல்வாக்கு உள்ள தொகுதி,பகுதிகள் இருந்திருக்கும்.ஆனால் காலை வாரி விட்டு நேரடியாக முதல்வர் ஆனவர் ஆயிற்றே .அதனால் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொண்டிருந்த பாண்ட்யாவின் தொகுதிக்கு குறி வைத்தார்.
உடன்பட மறுத்தார் பாண்ட்யா.
நடந்தது குஜராத் கலவரம்.தலை ஆனார் ஹிந்து சாமராட்.
இன்றைய கைப்புள்ளையும் அன்றைய இரும்பு மனிதரும் ஆன அத்வானி மோடியின் வெறி ஏற்றும் பேச்சு,ஆட்சியினால் கவரப்பட்டு மோடிக்கு கிருஷ்ணா பரமாத்மா போலானார்.அனைத்து எதிர்ப்புகளையும் தவிடு பொடியாக்கினார்.
ஆனால் அத்வானி ஆசைப்பட்டாலும் அப்போதே ,அடுத்த தேர்தலில் தொகுதியில் மிகுந்த செல்வாக்கோடு இருந்த பாண்ட்யாவிர்க்கு இடம் மறுத்தார்.பா ஜ க தலைமை வற்புறுத்தியும் ,அவர்களை மிரட்ட.மருத்துவமனை சென்று புகுந்து கொண்ட ஜனநாயகவாதி நம்ம மோடி.
உட்கட்சி ஜனநாயகத்தை காக்க எப்படி எல்லாம் உழைத்து இருக்கிறார் பாருங்க நம்ம மோடி
பாதிரியார் பூவண்ணன் அவர்களே!!!
உம்ம சுவிசேசத்தை ,ஆட்டு மந்தை கூட்டமான "அல்லேலூயா"வகையறாக்களிடம் வைத்து கொண்டால் நலம்.அதை விட்டுவிட்டு இங்கே வந்து ஊளையிடவேண்டாம்.மொட்டை தலைக்கும்,முழங்காலுக்கும் முடுச்சு போடும் வேலையை நீர் வேலை பார்க்கும் கிருஸ்த்தவ மத பிரசார கூட்டத்தில் வைத்துகொள்ளும்.
உம்ம தலை "இயேசு"மக்களிடம் ஓட்டு வாங்கியா "யூதருக்கு ராஜா"வானார்?ஜனநாயகத்தை பற்றி பேச உம்மைபோன்ற "பாவாடை" கும்பல்களுக்கு அருகதையில்லை.
மோடி வெ(ற்)றி
மோடியின் சாதனைகள் கடவுளையும் தாண்டி போகும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
அனைவரிலும் சிறந்த கடவுள் மோடி தான் என்று ஒத்து கொள்ளாத கடவுள்களுக்கு மோடிபக்தர்களிடம் கிடைக்கும் நிலை அத்வானியின் நிலை தான்
மோடியின் சாதனைகள் பயங்கொள்ள வைக்கின்றன.கடனில் இருந்த குஜராத் மாநிலத்தை அவர் ஆட்சியின் கீழ் லட்சம் கோடி உபரி பணத்தை உலக வங்கியில் போட்டிருக்கும் மாநிலமாக மாற்றி உள்ளார் என்று அறிவுஜீவிகள்,பத்திர்க்கை ஆசிரியர்கள் உட்பட பலர் சில ஆண்டுகளாக அனைத்து தொலை தொடர்பு சாதனங்கள் மூலமாக பரப்பி வருகிறார்கள்
உண்மை நிலை என்ன என்பதை பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது.கடவுள் பக்தியை விட மோசமாக இருக்கிறது மோடி பக்தி
http://www.indiatvnews.com/business/india/modi-s-gujarat-bears-the-third-highest-debt-burden-after-bengal--5216.html
Chief Minister Narendra Modi's Gujarat government bears the third highest burden after West Bengal and Uttar Pradesh, says a media report.
While Gujarat's actual debt was Rs 1,38,978 cr as on March 2012 and is projected to touch Rs 1.76 lakh crore in 2013-14, it is preceded by only two other states: West Bengal (Rs 1.92 lakh crore) and Uttar Pradesh (Rs 1.58 lakh crore), says the report.
மோடி வந்தார் ,15000 குஜராத்திகளை மீட்டு அழைத்து சென்றார் எனபது இன்றைய செய்தி.
CNN IBN தொலைக்காட்சியில் பாதிக்கபட்ட்ட மக்களில் ஒருவர் மோடி அனுப்பிய 25 ஹெலிகாப்டர்களை ஒன்றுக்கும் உதவாத உத்தர்கண்ட் அரசாங்கம் ஏற்று கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டது என்று குமுறுகிறார்.வெளி உலகத்தோடு எல்லா தொடர்பும் அறுந்த நிலையில் இருந்து மீட்கப்படும் போது ஒருவரின் கூற்று அது .இவை நடைமுறையில் சாத்தியமா என்று யாரும் ஆராய்வது கிடையாது.கடவுளை ஆராய முடியுமா
http://timesofindia.indiatimes.com/india/Narendra-Modi-lands-in-Uttarakhand-flies-out-with-15000-Gujaratis/articleshow/20721118.cms
What cannot be dismissed, though, is Modi's now trademark style of micro-management, something his supporters say is the need of the hour for India. "It's amazing what he has done here," said Anil Baluni, a BJP leader. "If someone doesn't like it, what can we do?'
Modi's men have not only para-dropped a complete medical team in Hardwar,
ரயில்,சாலைபோக்குவரத்து பாதிக்கபடாத ஹரித்வாரில் ஏன் ஐயா பாரசூட் மூலம் மருத்துவ அணிகளை இறக்க வேண்டும் என்றால் டேய் பாதிரி உன் அல்லேலுயா வேலைகள் இங்கு செல்லுபடியாகாது என்று அன்பான புத்திமதி தான் பதில்
குஜராத்தை முன்னணி மாநிலம் ஆக்கி விட்டார் என்ற கூற்று பல லட்சம் முறை ஓதப்படும் போது என்ன ஆதாரம் என்று கேட்பவனுக்கு இன்று வரை விடை கிடையாது. நேரில் சென்று பார் எனபது தான் ஆதாரம் ,கடவுள் இல்லை என்று நீ நிரூபி என்பதை போல
கல்வியில்,மருத்துவத்தில் 11வது இடம்,14வது இடம் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன என்றால் அதற்க்கு பதில்கள் ஏச்சுக்கள் தான் .
http://www.dnaindia.com/india/1850819/report-narendra-modi-faking-figures-to-claim-gujarat-development-congress
ஆண் பெண் சதவீதம் அவரது 12 ஆண்டு ஆட்சியில் 1000-883 இல் இருந்து 1000-886 ஆகியிருக்கிறது என்றால் பாதிரியார் தானே நீ என்று தான் பெரும்பான்மையான பதில்கள்
மோடியின் மேல் உள்ள பக்தியினால்
குசர் பி என்ற பெயர் கொண்ட சொரபுத்தீன் மனைவியை (அவள்மேல் எந்த குற்ற பின்னணியும் கிடையாது.அவளை கடத்தி பாலியல் வன்புணர்ச்சி செய்து கொன்று விட்டு )/19 வயது கல்லூரி மாணவி இஸ்ராட் ஜெஹன் என்ற எந்த வித குற்றசாட்டுகளுக்கும் ஆளாகாத பெண்ணை (அவள் சில நாட்களில் மூளைசலவை செய்யப்பட்டு மனித வெடிகுண்டாக மாற இருந்தால் என்ற புனைகதை உண்மையாக இருந்தால் கூட எந்த குற்றமும் செய்யாத 19 வயது பெண்ணை மூளை சலவை செய்ய்பட்டதால் வாழ தகுதி இல்லாதவள் என்று கொலை செய்வது
எல்லாம் சாதாரணம்/கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று என்று வாதிடும் பெரும்பான்மையான மோடி ஆதரவாளர்களை
நினைத்தால் வேதனை தான் மிஞ்சுகிறது
Post a Comment