பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 03, 2013

கலைஞர் - 90 !


இன்று 90வது பிறந்த நாள் காணும் கலைஞரை இட்லிவடை வாழ்த்துகிறது. 50+ ஆண்டு அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் கொஞ்சமல்ல. ஆனால் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ராமதாஸ் தற்போது அவர் குடும்பம் என்று இன்று வரை போராட்டம் தொடர்கிறது.

இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ஒடுக்குமுறைகளை சந்தித்திருக்கிறார். ஆனாலும் இன்று வரை திமுக என்ற இயக்கம் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு இவரே காரணம்.

"ராமானுஜருக்கு உள்ள வைராக்கியம், தமிழ்நாட்டில் இன்றைக்கு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் இடம்பெயராமல், இதயம் மாறாமல், கொள்கை கோணாமல், அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், இந்த நாடு என்றைக்கோ இன்னும் அதிகமான முன்னேற்றத்தை பெற்றிருக்கும்" என்று கலைஞர் சொன்னாலும் மத்தியில் காவி ஆட்சியானாலும், காங்கிரஸ் ஆட்சியானாலும் நல்ல உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது அரசியல் சாணக்கியத்தை ஜெயலலிதா போன்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உலகத் தமிழர்களிடையே தமிழின் அடையாளமாக கலைஞரின் பெயரே நிலை பெற்றிருக்கிறது. இலங்கை பிரச்சனையில் இந்த பெயர் முழுவதும் போனது வேற விஷயம். செம்மொழி, குமரியில் வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம் என்று எதை சொன்னாலும் கலைஞர் நினைவு வருவது தவிற்க முடியாத ஒன்று. அரசியல்வாதியாக மட்டுமல்ல ஒரு எழுத்தாளராகவும் அவர் தன்னை தொடர்ந்து அடையளப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அவருடைய திருக்குறள் உரை திருக்குறளுக்கு எழுதப்பட்ட மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நேற்றுவரை உரைநடை கவிதை எழுதி தன் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்த தவறியதில்லை. அதே போல் கேள்வி பதில் இலக்கியம். யாரும் கேள்வி கேட்க வில்லை என்றால் தானே கேள்வியும் கேட்டு பதிலும் எழுதிவிடுவார். இவர் இல்லாமல் பத்திரிக்கை உலகமும் ( இட்லிவடையும் தான் ) என்ன செய்திருக்கும் என்று யோசித்துக் கூட பார்க்கமுடியவில்லை.

மிக நெருக்கடியான சந்தர்பங்களிலும் காலகட்டங்களிலும் தனது வாக்கு சாதுரியத்தை வெகு நேர்த்தியாக பயன்படுத்தி வந்ததிருக்கிறார். ஜெயலலிதா அரசினால் அவர் கைது செய்யப்பட்ட காட்சி தமிழர்களை மனம் அதிரச் செய்தது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் தொடர்ந்து அரசியலை தனது உயிர் மூச்சாக கொண்டதன் அடையாளமே இந்த 50+ ஆண்டு அரசியல் பயணம்.

இந்த 50+ ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் தொடர்ந்து இந்து மதத்தையும், இந்துக்களையும் துவேஷித்து வந்துள்ளார்.(உத: ராமர் என்ன எஞ்சினியாரா ? ஹிந்து என்றால் திருடன் ) சகிப்புத்தன்மை பொறுமை ஆகியவற்றை போதிக்கும் இந்திய மக்க்ளின் மதமாகிய இந்து மதம் இதை எல்லாம் தாங்கிக்கொண்டிருக்கிறது. கலைஞரால் இந்து மதம் இது நாள் வரை பெருமையே அடைந்திருக்கிறது.


ராமராஸ், ராமர் குடிகாரன், ராமர்சேது(அ)சேதுராம் என்று தொடந்து ராம நாமத்தை ஜபித்துக்கொண்டிருப்பதால் தான் கலைஞர் இந்த வயதிலும் ஒரு வருட குழந்தை போல் உற்சாகமாக இருக்கிறார். கலைஞரின் பயணம் தொடர்ந்து அதனால் இந்து மதத்தின் பெருமையும் தொடர இட்லிவடையின் வாழ்த்துக்கள்!

புதிய தமிழ் புத்தாண்டு முறையில் கலைஞருக்கு இப்ப தான் ஐந்து வயது.. அடுத்து ஸ்கூலில் அட்மிஷன் வாங்க வேண்டும் :-)

29 Comments:

PARITHI MUTHURASAN said...

அருமையான இணிப்பு படைப்பு

jaisankar jaganathan said...

கலைஞரை பாராட்டி வந்திருக்கும் கட்டுரை சூப்பர். பாராட்டுகிறேன். கலைஞர் இந்து மதத்தின் எதிரி அல்ல. தீண்டாமையின் எதிரி

Anonymous said...

"கலைஞர் இந்து மதத்தின் எதிரி அல்ல."

அதனால்தான் இந்துக்களை திருடர்கள் என்று வர்ணித்தாரோ ?!

Anonymous said...

idlyvadaiyaa idhu?
anyway happy birthday karuna and thanks to IV for doing something different.

dr_senthil said...

Necessary Evil.. Not anymore.

Madhavan Srinivasagopalan said...

jaisankar jaganathan said...

// கலைஞரை பாராட்டி (!!) வந்திருக்கும் கட்டுரை //

amar said...

vazhthukkal our Kalaingar.
we pray to God for his an family well being.
your write ups has both shottu and little kottu- but our kalaingar will like this and may have hearty smile

Anonymous said...

இட்லிவடை, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கீழே விழுந்து புரண்டதில் மேலெல்லாம் புழுதி அப்பி இருக்கிறது.. துடைத்துக் கொள்ளவும்.

ஸ்ரீனி

jaisankar jaganathan said...
This comment has been removed by a blog administrator.
kothandapani said...

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறதோ

வாழ்த்துக்கள்

Anonymous said...

"பெரும்பானமையான மக்களை சூத்திரன் என்பதும் அவர்களுக்கு ஞானமடைய சுதந்திரம் இல்லை என்பதும் திருடனின் வேலை தானே" - JJ அவர்களே அரைத்த மாவை இன்னும் எத்தனை நாட்கள் அரைப்பதென்று முடிவு செய்யுங்கள்! MK அவர்களாலும், உங்களாலும் பரிதாபப்பட்ட "சூத்திரன்" என்பவர்களும் ஹிந்துக்கள்தான் என்பதை உணர்வது, உளறாமல் இருக்க வழி வகுக்கும்!! MK அவர்களோ அல்லது அவரின் அடி வருடிகளான நீங்களோ, ஹிந்து மதம் தவிர மற்ற மதங்களில் நீங்கள் கண்ட குறைகள் இல்லையென்று சொல்லமுடியுமா ? MK அவர்களின் தொழில் நண்பர்கள் மற்றும் பங்குதாரர்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்தும் அதை மறைத்து பேசுவது, ஒன்று காழ்ப்புணர்ச்சியால் அல்லது ரத்தத்தில் ஊறிய ஏமாற்றும் குணத்தினால் !!!! MK உண்மையிலேயே தீண்டாமைக்கு எதிரானவர் என்றால், அதை எதிர்த்தல்லவா குரல் கொடுக்க வேண்டும்? மதம் இங்கு வரவேண்டிய காரணம் என்னவோ?
- கல்யாணராமன்

கொடும்பாவி said...

யார் எது சொன்னாலும்.. கலைஞர் வயதில் கிழவரானாலும் அவர் செயலில் இளைஞர்.
இந்த வயதில் இந்த ஞாபகம்.. இந்த எழுத்து.. இந்த சுறுசுறுப்பு..
ஊழல் என்று சிலர் சொல்லலாம்.. அதற்கும் மூளை வேண்டும்..!
அந்த மூளையும் வேலை செய்ய வேண்டும்.!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
dr_senthil said...

Necessary Evil..Not anymore.

Anonymous said...

However, Karunanidhi clarified that he had merely quoted from a Hindi Encyclopedia published from Varanasi. "It had defined a Hindu as cruel, servant and bandit. Nevertheless, I chose to ignore that definition and softened it to mean as thieves of hearts," he said. - See more at: http://www.indianexpress.com/news/antihindu-rhetoric-nothing-new-for-atheist-dmk-chief/219610/#sthash.dsGmIu9E.dpuf

Anonymous said...

However, Karunanidhi clarified that he had merely quoted from a Hindi Encyclopedia published from Varanasi. "It had defined a Hindu as cruel, servant and bandit. Nevertheless, I chose to ignore that definition and softened it to mean as thieves of hearts," he said. - See more at: http://www.indianexpress.com/news/antihindu-rhetoric-nothing-new-for-atheist-dmk-chief/219610/#sthash.dsGmIu9E.dpuf

Anonymous said...

However, Karunanidhi clarified that he had merely quoted from a Hindi Encyclopedia published from Varanasi. "It had defined a Hindu as cruel, servant and bandit. Nevertheless, I chose to ignore that definition and softened it to mean as thieves of hearts," he said. - See more at: http://www.indianexpress.com/news/antihindu-rhetoric-nothing-new-for-atheist-dmk-chief/219610/#sthash.dsGmIu9E.dpuf

jaisankar jaganathan said...
This comment has been removed by a blog administrator.
jaisankar jaganathan said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

எந்த பாப்பானாவது முஸ்லீம், பிரிட்டிஷ் படைக்கு எதிராக சண்டை போட்டு இறந்திருக்கிறானா? முதல்ல இந்து மதம் என்பதே பாப்பான் பொழைக்க கெடுக்கப்ப்ட்ட மதம். அதை சரி பண்ணனும் மு
i am not in the habit of responding to individuals.but since this comment will give wrong information to idly- vadai readers
I HAVE CHOSEN TO RESPOND.
GEN. SUNDERJI ONE OF INDIA'S CELEBRATED ARMY CHIEF WAS A TAMILIAN BRAHMIN


SHIVAJI'S ALL COMMANDERS WERE BRAHMINS. A CASUAL READING OF MOGHUL HISTORY WILL REVEAL THIS.
VANCHINATHAN WHO KILLED COLLECTOR ASH IS A TAMILIAN BRAHMIN.
TWO OF INDIA'S NAVY CHIEFS ARE TAMIL BRAHMINS
GOING NORTH, INDRA GANDHI, THE MODERN DURGA, WHO LIBERARATED BANGLADESH FROM PAKISTAN IS A BRAHMIN.
ONE CAN GO ON GIVING EXAMPLES.
HINDU IS A NAME GIEN BY WESTERNERS FOR ALL PEOPLE LIVING BEYOND RIVER SIND NOW IN PAKISTAN.
WHY CASTEIST REMARKS FOR THIS ARTICLE WHICH BASICALLY WISHES A POLITICAL LEADER OF TAMILNADU ON HIS BIRTH DAY.
IDLY VADAI MUST FILTER SUCH COMMENTS FULL OF HATERED.

Anonymous said...

//IDLY VADAI MUST FILTER SUCH COMMENTS FULL OF HATERED.//

The best.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
jaisankar jaganathan said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Hope and wish the Lord will make good and wise the mean time.

Anonymous said...

Dear IV Readers,

There has been a lot of commotion going around these days concerning the comments posted by Mr. Jaisankar Jaganathan.

Although the comments appear to be funny and comical, there is no doubt that it crosses limits on many occasions.

Mr. Jaisankar has written some strong words in his comments that possibly could hurt the feelings of many readers. For instance, his rude comments about Muslims, Bramins are highly condemnable.

IV has also blocked some of his comments but this malady still continues.

As an avid reader of IV since the time IV started, I strongly protest, and request Mr. Jaisankar to keep his silly comments away from sensitive subjects.

IdlyVadai said...

//Although the comments appear to be funny and comical, there is no doubt that it crosses limits on many occasions.//

Removed the comments.I dont usually moderate comments as I feel that everyone has the right to express. But as you rightly said, Mr.JJ has to review his comments before posting and I am planning to block all comments if this continues.

கானகம் said...

ஜெயலலிதா ஒழிந்தால் போதும் என்ற அளவில் ஜெயலலிதா ஆண்ட போது கருணாநிதி வந்து தொலைந்தால் கூட பரவாயில்லை என எண்ணியிருக்கிறேன். மற்றபடி வார்த்தை ஜாலத்தால் இரு தலைமுறையை ஏமாற்றி சுரண்டியவராகத்தான் அவரைப் பார்க்கிறேன். மொழியின் பெயரால் வறட்டுக் கூச்சல்களும், வேறு யாருமே தமிழ் மொழிக்கு பங்களிக்காததைப்போல பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்டதும்தான் அவரது தமிழ் சாதனைகள்.. இது எனது கருத்து.. அவரது அடிப்பொடிகள் வந்து திட்டிவிட்டுப் போகலாம்..

Anonymous said...

Dear IV, Thank you for your kind and fast response. Much appreciated.

Anonymous said...

//அதனால்தான் இந்துக்களை திருடர்கள் என்று வர்ணித்தாரோ //

he didnt say it. it was already said and he jsut quoted it..!