பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 16, 2013

IPL Match fixing - எ.அ.பாலா

இந்த வருடம் IPL பற்றி எதுவும் எழுதக்கூடாது என்ற எனது எண்ணத்தை இன்று மதியத்திலிருந்து ஆங்கிலச் செய்திச்சேனல்களில் அல்லோலகல்லோலப்படும் மேட்ச் ஃபிக்ஸிங் குறித்த செய்திகள் மாற்றி விட்டது. ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் தில்லி போலீஸ் கைது செய்துள்ளது. மூவரில் ஸ்ரீசாந்த் தான் சூத்ரதாரி என்று தெரிகிறது. அவர் மூலம் தான் துபாய் சூதாட்டக்கார கும்பல் மற்ற இருவரையும் வளைத்துப் போட்டுள்ளது. கேரளா என்பதால், துபாய் கனெக்‌ஷன் ஆச்சரியம் அளிக்கவில்லை.

இதில் தாவூத் இப்ராஹிம் ஆட்களின் பங்கிருப்பது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் மற்ற ஆட்டக்காரர்களுக்கோ, அணியை நிர்வகிப்பவர்களுக்கோ இதில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. டிராவிட் போன்ற ஒரு நேர்மையானவர் தலைமை வகிக்கும் அணியில் 3 பேர் இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தமான விஷயம். அது போல, மும்பை அணியில் யாரும் இது வரை மேட்ச் ஃபிக்ஸிங்கில் மாட்டிக் கொள்ளாதது சந்தேகத்தைத் தருகிறது.

இந்த IPL-இல் பல ஆட்டங்களில் பேட்டிங்கில் சொதப்பி வந்த மும்பையின் போலார்ட், ஒரு ஆட்டத்தில் ஹைதரபாத் அணியின் ஃபெரெரா மற்றும் அமித் மிஷ்ரா பந்து வீச்சை துவம்சம் செய்தபோது, மேட்ச் ஃபிக்ஸிங் மாதிரி எனக்குத் தோன்றியதை டிவிட்டரில் நேற்று பதிந்திருந்தேன். அவர்கள் இருவரும் போலார்டுக்கு அழகாக போட்டுக் கொடுத்த மாதிரி தான் இருந்தது.

தில்லி போலீஸ் 2-3 வாரங்களாகவே, ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் கண்காணித்து வந்துள்ளனர். சில ஆட்டங்களில், இத்தனையாவது ஓவரில் இத்தனை ரன்களுக்கு மேல் தாரை வார்க்க மேற்கூறிய மூவரும், பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. ஊழலில் உலகப் பிரசித்தி பெற்ற இந்தியாவில் கடந்த சில வருடங்களாக நடந்தேறியுள்ள ஊழல்கள், பகற்கொள்ளைகளை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு பெரிய விஷயமே இல்லை.

அதோடு, BCCI-இல் நடந்து வரும் உள் சண்டைகள், அதன் அரசியல்வாதி நிர்வாகிகளுக்கிடையே power struggle, இந்திய கிரிக்கெட்டை தங்கள் கையில் வைத்திருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தமான உல்லாச வாழ்க்கை, இதுவரை வெளிவந்த / வெளியே வராத ஊழல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அரசியல் / கார்ப்பரேட் தலையீடு இல்லாத, கிரிக்கெட் தெரிந்த நேர்மையான ஆட்கள் (கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர், கபில், சித்து, பேடி போன்றவர்கள்) அங்கம் வகிக்கும் ஒரு நிர்வாகம், BCCI-க்கு மிக அவசியம். மேட்ச் ஃபிக்ஸிங் இரண்டாம் பட்சம் தான்,

தங்கள் சமீபகால மோசமான செயல்களால் கெட்ட பெயரை வேண்டிய அளவு சம்பாதித்து வைத்திருக்கும் தில்லி போலீஸ், மேட்ச் ஃபிக்ஸிங்கில் செலுத்தும் அதிக கவனத்தையும், உளவுத் திறமையையும், தில்லியை பெண்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் செலுத்தினால், அவர்களுக்கு புண்ணியமாகப் போகும்.
:-)

22 Comments:

jaisankar jaganathan said...

அருமை பாலா. (இதுக்கு அனானியோ லலிதாவோ என்னை மட்டம் தட்டி கமெண்ட் போட முடியாது)

Dagil Batcha said...

Hello Bala

How did you forget to mention Yusuf Pathan getting out in a strange way in the last match when they were about to taste victory. Something really fishy

R. J. said...

It's ok now for Bala to write on IPL - rather about the scandal of certain players playing this IPL!

First, for me, the Delhi police is wasting time and money on such investigations where the public or the government is not affected. If there had been a complaint to the police by any one, it may be in order to act. This is not Olympics to worry about.

Second, each bowler was supposed to have been bribed to bowl to give 14 runs minimum in a particular over. There are many overs where bowlers have give 20 and more runs. What about such players? When Gayle made 175 in a match, did all the bowlers act together for money? I see many a time bowlers bowling wides repeatedly and giving runs.

In case of Sreesanth, he himself could not have been sure if he will be in the playing eleven any given day and if he will be given all 4 overs to bowl!

What I van definitely say about these players - who are involved in the scandal - are great actors as if they are innocent!

-R. J.

R. J. said...

Tell me - if only players get the money! With so many wrong decisions by the umpires in this IPL, is it not logical to wonder if they are really above suspect? Take the case of Dravid being given out caught behnd yesterday when he didn't touch the ball! - R. J.

Anonymous said...

இப்பவே ஸ்ரீசாந்த் இருக்க இடம் தெரியாமல் தான் இருக்கிறார். இனிமேல் பெட்ரோமாக்ஸ் வைத்து தேடினாலும் கிடைக்க மாட்டார். மானஸ்தன்!

வென்கட் இரண்டாயிரம்.

enRenRum-anbudan.BALA said...

//Dagil Batcha said...

Hello Bala

How did you forget to mention Yusuf Pathan getting out in a strange way in the last match when they were about to taste victory. Something really fishy
//
Yes Sir, You have a valid point here :)

Anonymous said...

*******Take the case of Dravid being given out caught behnd yesterday when he didn't touch the ball!
**********

பார்க்க: https://twitter.com/anbudan_BALA/status/334712864352915456

டகிள் பாட்சா said...

R.J

I agree with you. The Delhi Police are interested always in sensational cases or sensationalizing trivial cases. தில்லியில் தினமும் கற்பழிப்புகள் நடக்கிறது. அதை தடுக்க ஒரு முயற்சியும் காணோம்.

Anonymous said...

//(இதுக்கு அனானியோ லலிதாவோ என்னை மட்டம் தட்டி கமெண்ட் போட முடியாது)//
அதெப்படி? ஆனால் பறக்கும் படை ஆராவமுதனை நினைத்தால் பயமாக இருக்கிறது!!

Anonymous said...

/*இதுக்கு அனானியோ லலிதாவோ என்னை மட்டம் தட்டி கமெண்ட் போட முடியாது)*/

IV sir,
do you have "tortoise mosquito coil" ?

சிந்திப்பவன் said...

இரத்த அழுத்தம் 200/110 வைத்துக்கொண்டு மருந்து எதுவும் சாபிடாமல் நாட்களை கடத்தும் ஒருவன்,"எனக்கு காலை எழுந்தவுடன் தலை சுற்றுகிறது" என்று வருத்தப்படுவது போல உள்ளது,இந்தியாவே ஊழல் ஊழலே இந்தியா என ஆன பிறகு இந்த ஜூஜூபி ஊழலுக்கு வருந்துவது.
யதா ராஜா ததா பிரஜா.

Anonymous said...

jaisankar jaganathan said...

அருமை பாலா.

அருமையான கமெண்ட் . உங்கள் கமெண்ட் இல்லை என்றால் IV ருசிக்கவே இல்லை

kg gouthaman said...

I think it is not match fixing. It is only spot fixing.
Match fixing influences the final result. Spot fixing influences only a part of the contest, for bookies and players to earn money on betting on a particular over.

Apart from these, Lalith Modi says that the present arrests are just 'tip of the iceberg'.

Anonymous said...

மக்கா, நீங்க ஐபிஎல்லை மொக்கை போடுறது இருக்கட்டும். உங்க மோடி டவுசரை அவுத்துவுட்டு இருக்காங்ய காலச்சுவடுக்காரங்ய. மொதல்ல அதுக்கு பதில் சொல்லு மக்கா.

http://writersamas.blogspot.in/2013/05/blog-post_8042.html

Anonymous said...

//அருமை பாலா.

அருமையான கமெண்ட் . உங்கள் கமெண்ட் இல்லை என்றால் IV ருசிக்கவே இல்லை//

தல உன் ஒரு வார்த்தைக்கு இருக்கிற மதிப்பைப் பாரு தல.

வென்கட் இரண்டாயிரம்
ஜெ.ப.ப.(எல்)

kothandapani said...

அன்னைக்கே அந்த ஹர்பஜன் இன்னும் நாலு அறை சேர்த்து விட்டு இருக்கலாம் ,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

with SPOT FIXING surfacing out...

one can easily say this is a TIP.... of the ice berg.... and there could many other nasty things....

all truth which we are all supposed to know............ may not come out...

But...

can the below popular myth's be true..

1. IPL is not true cricket
2. IPL is a business
3. Most... if not all .... matches are well scripted
4. winning team is pre decided
5. player auction is a big..big... joke.......

hence my dear fellow cricket fans...
beware... think twice in a below situation from now on...

4 balls... 9 runs..... 1 wicket...

nail biting... praying...crying... shouting...... increasing BP... risking heart....

stop all this ... and protect you.. live long happily...... not for some one else Greed........

Anonymous said...

Also think of the three easy catches that Pollard dropped off Hussey !

And, the No-Ball from RP Singh in the last over to Jadeja ...

And, the easy meat-of-the-balls bowled to Hussey always !!

Fixing. Fixing

Anonymous said...

ஒரு விளையாட்டு என்ற நிலையை மீறி, கேளிக்கை, உல்லாசம், ஸ்ருங்கார ரசம் இல்லாத ஆபாசமான உடல் அசைவுகள் கொண்ட ஒரு கணிகைக்கூட்டத்த்ன் உடல் வியாபாரம் - இவை அனைத்தும் ஒருங்கே பெற்று வீரர்களை விலைக்கு வாங்கி, ஏலம் எடுக்கும் ஒரு அவல, அபத்த வியாபாரத்தில் இல்லாத நேர்மை ஏலம் வாங்கப்பட்ட ஒரு அட்டக்காரனிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சுய சிந்தனை குறைந்து வரும் ஒரு சமுதாயத்தின் எண்ண வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இந்த ஊழலில் வியப்படைய ஒன்றும் இல்லை.

ஆ பக்ககங்கள் said...

ஒரு விளையாட்டு என்ற நிலையை மீறி, கேளிக்கை, உல்லாசம், ஸ்ருங்கார ரசம் இல்லாத ஆபாசமான உடல் அசைவுகள் கொண்ட ஒரு கணிகைக்கூட்டத்த்ன் உடல் வியாபாரம் - இவை அனைத்தும் ஒருங்கே பெற்று வீரர்களை விலைக்கு வாங்கி, ஏலம் எடுக்கும் ஒரு அவல, அபத்த வியாபாரத்தில் இல்லாத நேர்மை ஏலம் வாங்கப்பட்ட ஒரு அட்டக்காரனிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சுய சிந்தனை குறைந்து வரும் ஒரு சமுதாயத்தின் எண்ண வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இந்த ஊழலில் வியப்படைய ஒன்றும் இல்லை.

Anonymous said...

Cricket is no more a game .It is a gamble.

Anonymous said...

IPL is nothing but joke on the game cricket loved by so many .
why suddently spot fix frommatch fixing- last year winner was also got the prize by fixing themselves as team- it has been decided by IPl management who should win the title every year
most of the matches this eason one can see team will stuggle at 86/5 orso & finall end up at 160-175 adn win the match.
why Delhi police now- Delhi police commissioner was receiving end in law and order/ rape cases/release of a heavy weight in 1984 riot Against Sikhs case- he wanted a face saving- he took the threads from the officer who got murdered- again suspicion circumstances with his girl friend in a room- all this are politically manipulated so that IPL spot fixing will be in lime light and other major issues viz Chinese invasion/political corruption/railway post for money scam will go back burner- people memory is short- as usual people went to stadium / in front of TV to watch another fixed match next day.