பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 08, 2013

கர்நாடகா - பிஜேபி தோல்வி - காங்கிரஸ் வெற்றி - ஏன் ?

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி என்ற செய்தி வந்துவிட்டது. இது எதிர்பார்க்கபட்டது தான் என்றாலும் இதற்கு முழு காரணம் எடியூரப்பா தான்.


கடந்த வருடங்களில் பிஜேபியில் நடந்த குத்து சண்டை இன்று அதை மூன்றாவது இடத்தில் நிறுத்திவிட்டது. இதில் எனக்கு சந்தோஷமே!

கர்நாடக மக்கள் பிஜேபிக்கு கொடுத்த நல்ல வாய்ப்பை கெடுத்துக்கொண்டார்கள்.

எடியூரப்பா ஊழல் வழக்கில் சிக்கிய பிறகு பிஜேபி தலைமை வழ வழ கொழ கொழ என்று இருந்தது தான் இதற்கு முக்கிய காரணம். சதானந்த கவுடா முதல்வர் பதவியில் உட்கார்ந்த பிறகு அதை விட்டு எழுந்துகொள்ள மாட்டேன் என்று வீம்பு செய்ய பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரிந்தது. தலமை உடனே ஒரு முடிவு எடுத்திருந்தால் இந்த நிலமை வந்திருக்காது. சமீபத்தில் பிஜேபி தலமைக்கு நடந்த ஒரே நல்லது நிதின் கட்கரி வெளியே சென்றது தான். பிஜேபிக்கு கடவுள் அருள் இருக்கிறது என்று நம்புகிறேன்.

எடியூரப்பா சோனியாவை இன்னொரு முறை புகழ்ந்து பேசி காங்கிரஸ் பக்கம் செல்வாரா அல்லது உமா பாரதி பேச்சை கேட்டு பிஜேபி பக்கம் வருவாரா என்று தெரியவில்லை. யாருக்கு கெட்ட காலம் என்று போக போக தான் தெரியும்.

மோதி வந்து பிரச்சாரம் செய்த பிறகும் இந்த நிலமையா ? என்று மீடியா ஆரம்பித்திருக்கிறது. கர்நாடகாவில் நடந்தது சட்ட மன்ற தேர்ந்தல், பாராளுமன்ற தேர்தல் வரும் போது பார்க்க வேண்டும்.

மோதி வந்தால் தான் இந்தியா உருப்படும் என்று தற்போது எல்லா இந்தியர்களும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.

32 Comments:

Anonymous said...

marana adi. modi masthaan velai palikala

Anonymous said...

///கர்நாடகாவில் நடந்தது சட்ட மன்ற தேர்ந்தல், பாராளுமன்ற தேர்தல் வரும் போது பார்க்க வேண்டும்////. Why ???

சிந்திப்பவன் said...

//மோதி வந்தால் தான் இந்தியா உருப்படும் என்று தற்போது எல்லா இந்தியர்களும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது. //

மன்னிக்கவும் 'இட்லி வடை'..

யார் வந்தாலும் இந்தியா உருப்படாது.
(ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் இருக்கும் வரை.)

Anonymous said...

மோடி பிரதமரா வரமுடியாதுன்னு உன் திருவாயைத் திறந்து மூனு தடவை சொல்லு தலை.

ஆராவமுதன்

Anonymous said...

Idly vadai what is your obsevation on AIADMK vote bank in Karnataka polls?

IdlyVadai said...

//Idly vadai what is your obsevation on AIADMK vote bank in Karnataka polls?//

May be Alex Pandian can throw more light on this.

jaisankar jaganathan said...

3 தடவை என்ன ஆராவமுதா? முப்பது தடவை சொல்லுறேன். மோடி பிரதமராக வரமுடியாது

jaisankar jaganathan said...

தொண்டர் ஆராவமுதன் அவர்களே,

ஏன் பறக்கும் படையை காணோம். ஏன் தனியாக வந்தீர்.

குரோம்பேட்டை குறும்பன் said...

என்னைக் கேட்டால், இந்த சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றதற்கு முக்கிய காரணம் கவர்னர் பரத்வாஜ்தான். அவர்தான் எடியூரப்பாவை கவிழ்த்து, தனிக் கட்சி தொடங்கும் அளவுக்குக் கொண்டு சென்று, பி ஜே பி கட்சிக்குக் கிடைக்கும் ஓட்டுகளை பிரித்து, காங்கிரசை வெல்ல வைத்தவர். காங்கிரஸ் பரத்வாஜ் அவர்களை முதல்வராக்கி விட்டால், கர்நாடகாவில் காங்கிரசை வீழ்த்த யாராலும் முடியாது.

Anonymous said...

For ADMK votebank check in ECI site:
http://eciresults.nic.in/ConstituencywiseS10146.htm

Some observations:
Rajajinagar: 1060 votes
KGF: 2030 votes

very less acc to me. If only amma wants to become national party and wants 2 show % votes like BSP and SP does, it will help.

kothandapani said...

பாராளுமன்ற தேர்தலுக்கு பின் IV இப்படி ஒரு blog போடாமல் இருந்தால் சரி....
இந்தியா - பிஜேபி தோல்வி - காங்கிரஸ் வெற்றி - ஏன் ?
தேர்தலில் காங்கிரஸ் வெற்றி என்ற செய்தி வந்துவிட்டது. இது எதிர்பார்க்கபட்டது தான் என்றாலும் இதற்கு முழு காரணம் நிதின் கத்காரி தான்.


கடந்த வருடங்களில் பிஜேபியில் நடந்த குத்து சண்டை இன்று அதை மூன்றாவது இடத்தில் நிறுத்திவிட்டது. இதில் எனக்கு சந்தோஷமே!

இந்திய மக்கள் பிஜேபிக்கு கொடுத்த நல்ல வாய்ப்பை கெடுத்துக்கொண்டார்கள்.

நிதின் கத்காரி ஊழல் வழக்கில் சிக்கிய பிறகு பிஜேபி தலைமை வழ வழ கொழ கொழ என்று இருந்தது தான் இதற்கு முக்கிய காரணம். கத்காரி தலைவர் பதவியில் உட்கார்ந்த பிறகு அதை விட்டு எழுந்துகொள்ள மாட்டேன் என்று வீம்பு செய்ய பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரிந்தது. தலமை உடனே ஒரு முடிவு எடுத்திருந்தால் இந்த நிலமை வந்திருக்காது. சமீபத்தில் பிஜேபி தலமைக்கு நடந்த ஒரே நல்லது நிதின் கட்கரி வெளியே சென்றது தான். பிஜேபிக்கு கடவுள் அருள் இருக்கிறது என்று நம்புகிறேன்.மோதி வந்து பிரச்சாரம் செய்த பிறகும் இந்த நிலமையா ? என்று மீடியா ஆரம்பித்திருக்கிறது.

மோதி வந்தால் தான் இந்தியா உருப்படும் என்று எல்லா இந்தியர்களும்(முக்கியமாக இட்லிவடை ) நம்பிக்கொண்டு இருந்தார்கள் . அந்த நம்பிக்கை வீண் போனது .

Venkat2000 said...

Dear IV,
Please do not irritate us by publishing the comments of Jayashankar J and Aaramudhan. Their comments are stupid.

Thanks You.
Venkat

IdlyVadai said...

//Please do not irritate us by publishing the comments of Jayashankar J and Aaramudhan. Their comments are stupid.//

pointed noted.

அசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் said...

ஊழல் செய்தால் மோடியே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்பது தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைமை ஏற்று கட்சியில் ச்வயம்சேவகர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். அது தான் ஒரே வழி.ரோட்லே போறவன், மணல் கொள்ளை அடிக்கிறவன், கரி கொள்ளைக்காரன் - இவங்களை வெளியில் தள்ளினாலே போதும்.

jaisankar jaganathan said...

ஆராவமுதன்
நமது விளையாட்டை நிறுத்த சொல்லுறார் இட்லிவடை.(அவர் யாரு நிறுத்த சொல்லுவது. நம் உரிமையில் கை வைக்கிறார்)

அதனால நாம் இத்துடன் ஓய்வு பெறுவோம். என்சாய்.(உங்க மெயில் ஐடியை எனக்கு அனுப்பவும். நாம தனியா பேசி கட்சியை வளத்துக்கலாம்)

jaisankarj@gmail.com

jaisankar jaganathan said...

//ஆர்.எஸ்.எஸ். தலைமை ஏற்று கட்சியில் ச்வயம்சேவகர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். //

கொய்யால ஒருத்தனுக்கு எழுந்திருக்கவே முடியலையாம். ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம்

Govindaraju Rajarethinam said...

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு காரணம் பி.ஜே பி.அரசில் கீழ் நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற ஊழல் எல்லை மீறியதுதான் காரணம். பொதுமக்கள் அரசின் அனைத்து சேவைகளுக்கும் கப்பம் கட்ட வேண்டிய நிலையில் இருந்ததால் அவர்களின் கையில் இருந்த வாக்கு சீட்டு என்னும் துருப்பு சீட்டினை பயன்படுத்திவிட்டார்கள் . தமிழக அரசுக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு எச்சரிக்கை மணி.

Anonymous said...

Hi IV.. BJP with corruption charges has been thrown out in assembly election... Hence Congress govt in central with moooooooooooreeeeeee corruption charges Will also be thrown out in coming loksabha election....:-)
Srini.contact@mail.com

shiva said...

iyooo pavam Ammaa,Daily she make announcements under esction 110 in viewing of winning all the 40 seats in the forthcoming parliament election.But there wot be anyuse of it,b coz it look like congress is going to win again with majority to form the next parliament.Ammaa pavam CM dream waste???

Gopal said...

My sincere and taerful codolences to people of Karnataka for choosing conmen (congress) to rule them.The most corrupt party in the world , led by Italian queen will ruin Bangalore in particular and Karnataka in general beyond redemption.

Anonymous said...

//Please do not irritate us by publishing the comments of Jayashankar J and Aaramudhan. Their comments are stupid.//

pointed noted.

இட்லி அண்ணே Point Noted என்பது தானே சரி. அப்படி தான் சினிமா ஜட்ஸ்’ஸ் சொல்லிக் கேட்டிருக்கிறேன்

இட்லி வடை, சினிமா நடிகர்கள் எந்த பேட்டர்னில் இயக்குனர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அதி முக்கிய கட்டுரை போட்டால் படிப்பார்கள்.

சாலை சரி இல்லை கரெண்ட் இல்லை என்பதை வாயை மூடிக் கொண்டு கடந்து செல்வார்கள்.அப்ப இரிடேஷனோ அல்லது சின்ன முனங்கலோ கூட வந்துவிடாது.

புள்ளைப் பூச்சி ஒராமா ஊர்ந்து சென்றால் மட்டும் தாங்க முடியாத அறச் சிற்றம் வந்து விடும்.

இட்லிக்கு வரும் கமெண்ட்களில் அவர் கருத்துடன் ஒத்துப்போகிற கமெண்ட்களை விட அத்துடன் ஒத்துப்போகாத பூவன்னன், ஜெ.ஜெ. டைப் கமெண்ட்களே சுவாரஸ்யமானவை. ஜால்ரா சத்தம் உடலுக்கு கெடுதி சார்.

ஜெ.ஜெ. -வை கிண்டல் அடித்து நான் எழுதியவற்றை ஸ்போர்டிவா எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றினார்.

தனிப்பட்ட தாக்குதலோ,வக்கிரமோ இல்லாத (கிண்டல் உண்டு அது இல்லாத வாழ்க்கை கருமம் ஒரு வாழ்க்கையா) இந்தக் கமெண்ட்கள் உங்களை இரிடேட் பன்னினால், ரொம்ப பலகீனமான மன நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
பத்திரமா பார்த்துக்குங்க. இது தன்னைத் தானே ரொம்ப உயர்ந்தவராக நாகரீக நளினவானாக காட்டிக் கொள்கிற அல்ப முயற்சி.

ஏம்பா வெங்கிட்டு இரண்டாயிரம், பிடிக்கலைன்னா அடுத்த கமெண்ட்க்கு ஜம்ப் அடிக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு ஜெ.ஜெ. ஆராவமுதன்னு எங்க பேரை மனப்பாடம் செய்து கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்காய்.

தல நீ இனைய அஞ்சாநெஞ்சன்னு நினைத்திருந்தேன் இப்படி ஒரு சவுண்டுக்கே கட்சியை கலைக்க சொல்லிட்டேயே!!

கடைசியா ”வென்கட்” தம்பியை வெறுப்பேத்த சில:

சூப்பர் சிங்கருக்குப் போனா அழுகமால் திரும்ப முடியாது.
சூரியனுக்கு யாரலும் சட்டை போட முடியாது

தல, அடுத்த பிரதமர் மோடி தான் , ஏன்னா நீயே அவர் வரமாட்டார்னு திருவாய் மலர்ந்து விட்டாயே

ஆராவமுதனார்
ஜெ.ஜெ.ப.ப

jaisankar jaganathan said...

//தல நீ இனைய அஞ்சாநெஞ்சன்னு நினைத்திருந்தேன் இப்படி ஒரு சவுண்டுக்கே கட்சியை கலைக்க சொல்லிட்டேயே!!
//

அம்மா ஆட்சில அஞ்சா நெஞ்சனே ஆடிப்போயி இருக்காரு. இதுல நீ வேற ஆராவமுதா.

jaisankar jaganathan said...

//சூப்பர் சிங்கருக்குப் போனா அழுகமால் திரும்ப முடியாது.
சூரியனுக்கு யாரலும் சட்டை போட முடியாது //


என்னா ஒரு தத்துவம்!.ஆராவமுதா நீ ஒரு சிந்த்தனை சிற்பி

Anonymous said...

ஆராவமுதனார்
ஜெ.ஜெ.ப. ஜால்ரா சத்தம் உடலுக்கு கெடுதி சார்.
சூபரு அண்ணே ... ஆமா வெங்கட்டு அப்படி என்ன சொல்லி விட்டார் என்று பொங்கி எழுந்து விட்டீர்கள் ... உங்க இம்சை தாங்க முடியவில்லை என்று சொன்னார் . அதை sportive ஆக
உங்களால் ஏன் எடுத்து கொள்ள முடியவில்லை. உங்க கூத்து எல்லாம் கன ஜோர் என்று
ஜால்ரா தட்ட வேண்டுமா ...
ஐயா IV ... நல்ல படங்களில் கூட படம் ஓடாதோ என்று பலான காட்சிகளை திணிப்பதை போல் .
இந்த இம்சைகளால் இட்லிவடை மேலும் சுவையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்
இந்த இம்சைகளின் கமெண்டை மாஸ்க் பண்ணிவிட்டு , வேண்டும் என்பவர்கள் படிப்பதுபோல்
சாப்ட்வேர் பண்ண முடியுமா .

dr_senthil said...

கர்நாடகாவில் ஜெயித்தபிறகு மத்தியில் ஆட்சி இழப்பது தான் வரலாறு.. காங்கிரஸ் கர்நாடகாவில் ஜெய்தது மகிழ்ச்சியே.. மேலும் கர்நாடக தேர்தல் முடிவு ஊழலுக்கு எதிரான வாக்கே...அதை யார் செய்தாலும்... காங்கிரஸ் சிரித்து கொண்டே அழுகின்றனர் என்பது தான் உண்மை

dr_senthil said...

கர்நாடக மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஊழலுக்கு எதிரான மக்களின் நிலைப்பாட்டின் மூலம் தெரிகிறது.. தீவீரவாத எதிர்ப்பு நிலை, அண்டை நாடுகளிடம் கொண்டுள்ள தெளிவில்லாத வெளிஉறவு கொள்கை, தலைநகரின் பெண்கள் பாதுகாப்பின்மை , சந்தை மற்றும் தொழில் வர்த்தக தேக்க நிலைக்கு காங்கிரஸ் கட்சின் இரட்டை தலைமை தான் காரணம் என்பதை மக்கள் அறிவார்கள்..இந்த தேர்தல் முடிவு பிஜேபி மற்றும் காங்கிரஸ் காட்சிகளுக்கு ஒரு பாடம்

Anonymous said...

//கமெண்டை மாஸ்க் பண்ணிவிட்டு , வேண்டும் என்பவர்கள் படிப்பதுபோல்
சாப்ட்வேர் பண்ண முடியுமா .//

My dear Pinnutta police,

There exists a simple solution for every complex problem. Sometimes the solution is so obvious that people ignore to take it as a solution

// Anonymous said...//
Click the name label to hide the comments.

Don't Cry/worry be happy....

Aaramudhan

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

ha...haa....

1. in her infinite wisdom, there is no single FACE to relate to cong....

So, failure or sucess does not matter....there are multi faces...

1. manmohan - bad face now...
2. sonia - no body knows what to say
3. rahul - he is not the leader, we know, he knows..... but no one will object calling him leader....
4. chidambaram, antony etc., --- faces like this....

BUT beware none of it is the real congress face.........

on the other hand ... where is BJP

no face, no leader, no policy, and hence.......... no future

Modi............ is proved failure.

and is not a TRUMP card as people project or believe.............

so....... looks like election is headed for another predicted result..

விவேகானந்தன் said...

Thanks for your Yellow Comment and I support Modi...

விவேகானந்தன் said...

Thanks for your Yellow Comment and I support Modi...

சிந்திப்பவன் said...

அதாவது மாநில அளவில் BJP ஊழல் கட்சி என்று காங்.கட்சியை தேர்ந்தெடுப்பர்.மத்திய அளவில்
அதே காங்.கட்சி.ஊழல் என்று அதே BJPயை தேர்ந்தெடுப்பர்.

ஆஹா கேட்கவே புல்லரிக்கிறது.
நம் 66 ஆண்டு சுதந்திரம் முதிர்ச்சி அடைந்து விட்டது.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே..

dr_senthil said...

மாநில சுய ஆட்சி மத்தியில் கூட்டு ஆட்சி என்று மக்கள் வாக்களிக்கும் போது புல்லரிகவில்லையா?