பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 25, 2013

(பவர்?)ஸ்டார் ஸ்ரீநிவாசன்

ஒரு ஹாலிவுட் கிரைம் த்ரில்லர் கதைக்கு இணையான அத்தனை அம்சங்களையும் கொண்டதாக இது உள்ளது. கிரிக்கெட் வீரர்கள், தரகர்கள், மாடல்கள், நடிகைகள், கார்ப்பரேட் பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் என்று பல பாத்திரங்களும் இதில் பங்கேற்றுள்ளனர். பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் செல்வாக்குடனும், பலத்துடனும் வலம் வந்த தற்போதைய தலைவர் அஞ்சாநெஞ்சர் ஸ்ரீனிவாசன் அவர்களையே இந்த விவகாரம் கதிகலக்கியிருக்கிறது. அவரை கீழே இறக்கிய பின் தான் மீடியாவில் இருப்பவர்கள் பாத்ரூம் கூட போவார்கள் என்று நினைக்கிறேன்.

அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் மேல் பெட்டிங் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், ஸ்ரீனிவாசன் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வட இந்திய ஆங்கில நியூஸ் டிவி சேனல்கள் (CNN-IBN, TimesNow, Headlines Today) அலறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. IPL-இல் நடந்துள்ள இந்த மகா பெரிய அசிங்கத்திற்கு பொறுப்பேற்று அதன் தலைவர், காங்கிரஸ்காரர் ராஜிவ் சுக்லா பதவி விலக வேண்டும் என்றும் அவை அலற வேண்டியது தானே!! அது போலவே, ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் என்று 3 கிரிக்கெட்டர்கள் முதலில் சிக்கியபோதும், ஸ்ரீசாந்த் வயிற்றெரிச்சலைத் தான் வட இந்திய ஆங்கில நியூஸ் சேனல்கள் அதிகம் கொட்டிக் கொண்டன.


துபாய்-தாவூத் பழக்கமுள்ள ஜாம்பவான் வகை பெட்டிங் தரகர்கள் உள்ள /பாலிவுட் ஒளிவீசும்/ ஏராளமாக பணம் புரளும் மும்பையைச் சேர்ந்த, ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் கையில் இருக்கும் மும்பை அணியின் நிர்வாகம் மற்றும் கிரிக்கெட் வீரர் எவர் மீதும், பெட்டிங் சம்பந்தமாக ஒரு லேசான குற்றச்சாட்டு கூட வெளியில் வராதது இந்த விசாரணையின் மேல் பெருத்த சந்தேகத்தை வரவழைப்பதாக உள்ளது!

மேலும், மக்கள் பணத்தை சுருட்டி, உலகமகா ஊழல் செய்து வரும் அரசியல்வாதிகளில் வெகு சிலரே, நிலைமை கட்டுக்கடங்காமல் போனபிறகே, பதவி விலகும் அவலச்சூழல் இருக்கும் இந்த நாட்டில், ஊழலோடு ஒப்பிட்டால் உப்புச்சப்பு இல்லாத சூதாட்டத்திற்காக ஒருவரை பதவி விலகச் சொல்வது உச்சக்கட்ட கேவலமாக இருக்கிறது. இந்த விவகாரம் வெட்ட வெளிச்சம் ஆனதற்குக் காரணமே, இந்த சூதாட்டப் பணத்தில் ஒரு சிலருக்கு பங்கு சரியாக போய்ச் சேராதது தான் என்று தாராளமாக எண்ணலாம்.

முன்னர் 2ஜி ஊழல் விவகாரத்தில் ராஜா தான் அத்தனை ஊழல் பணத்தையும் சுருட்டிக் கொண்டது போலவும், திமுக மட்டும் தான் ஊழலை மூடி மறைக்க முயற்சித்தது போலவும், மற்ற வட இந்திய சூத்ரதாரிகள் அப்பாவித்தனமாக நடந்து மாட்டிக்கொண்டது போலவும், வட இந்திய நியூஸ் சேனல்கள் ஷோ காட்டியதை கண்டு மகா கடுப்பாக இருந்தது. பெட்டிங் விவகாரத்தில் 2-3 வட இந்திய பெருந்தலைகள் சம்பந்தப்பட்டிருந்தால், இந்த நியூஸ் சேனல்கள் இதை அடக்கி வாசித்திருக்கும்.

ஸ்ரீனிவாசன், ராஜா, ஸ்ரீசாந்த்.... எந்த தவறும் செய்யவில்லை என்று நாம் சொல்லவில்லை..ஆனால் தென் இந்தியர்கள் ஒரு விவகாரத்தில் சிக்கிக் கொண்டால், இந்த நியூஸ் சேனல்கள் எப்படி அநியாயமாக ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றன, அதை பயங்கரமாக ஊதிப் பெரிதாக்குகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

டைம்ஸ் நவ் சேனல், விண்டு தாராசிங் (பாலிவுட் தரகர்) மற்றும் குரு மெய்யப்பன் செல்ஃபோனில் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரிந்து கொள்ள இந்திய மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று அறைகூவல் விடுவதை பார்த்தபோது, 2ஜி விவகாரத்தில் ராடியா, ரத்தன் டாட்டா, பர்கா தத் சம்பந்தப்பட்ட டேப்பில் இருக்கும் மேட்டர் குறித்து தெரிந்து கொள்ளவும் அதே மக்களுக்கு ஆர்வமும் உரிமையும் உள்ளதை புரிந்து கொள்ளாத, ஒருதலைபட்சமாக நடக்கும் அந்த சேனனில் லட்சணம் தெரிந்தது. விண்டு சில பாலிவுட் நடிகர்கள்/நடிகைகளுடனும் பேசினாராம் ஆனால் அதை எல்லாம் இவர்கள் அவ்வளவாக இன்னும் கண்டுகொள்ளவில்லை. இன்னொரு உதாரணம் இதற்கு முன் அபிஷேக் மனு சிங்வி செய்த காரியத்துக்கு இவரை தினமும் டிவியில் கூப்பிட்டு இதே மீடியா பேச வைக்கிறார்கள். ஏன் போலீஸுக்கு பயந்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிபோன லலித் மோடியை தினமும் டிவியில் கூப்பிட்டு கருத்து கேட்கிறார்கள்.

கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் சஹாரா குரூப்பில் முதலீடு செய்த 24000 கோடி ரூபாயை திருப்பித் தராதது குறித்து SEBI-ஆல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சுப்ரதா ராய், ஸ்ரீனிவாசன் பதவி விலகி, ஷரத் பவார் மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக வர வேண்டும் என்று கூறுவது இன்னொரு தமாஷ். ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை - ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது! இன்னொரு விஷயம், குரு மெய்யப்பனை சம்மன் அனுப்பி வரவழைத்து மும்பை போலீஸ் கைது செய்தது போல, தவறு செய்ததாக கருதப்படும் பாலிவுட்/கார்ப்பரேட் மும்பை பெருந்தலை ஒருவரை, சென்னை போலீஸ் கைது செய்து சென்னையில் வைத்து விசாரண செய்வது என்பது அத்தனை எளிதான விஷயமாக தோன்றவில்லை. திரை மறைவு அரசியல் வழியாக அவரை தப்ப வைப்பதற்கு எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அது தான் மும்பை spirit. Some are more equal than others.

இறுதியாக, இந்திய கிரிக்கெட் உய்யவேண்டும் என்றால், BCCI-இல் இருக்கும் அத்தனை கார்ப்பரேட் மற்றும் அரசியல்வாதிகளும் பதவி விலகி, அதன் நிர்வாகம் கிரிக்கெட்டின் மேல் உண்மையான அக்கறை உள்ள, மக்களால் நேசிக்கப்படுகிற, முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் தரப்பட வேண்டும். அது நடக்கும் என்று தோன்றவில்லை. இதுவும் கடந்து போம் !

எனக்கு என்னவோ கோசாமி மீது இருக்கு கடுப்பில் குருவை மீடியா வாட்டி எடுக்கிறது என்று நினைக்கிறேன். பார்ப்பதற்கு இரண்டு பேரும் ஒரே ஜாடை :-)

11 Comments:

jaisankar jaganathan said...

//வரும் தேர்தலில் ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க பாடுபடுவேன் - சரத்குமார்...//

இதப்பத்தி ஒரு வரியாவது எழுதினியா இட்லிவடை. இதே கலைஞர்ன்னா பத்து பதிவாது எழுதியிருக்க மாட்டீங்க. நடுநிலையா நடந்துக்குங்க இட்லி. இல்லைன்னா நான் காலையில இட்லிவடை சாப்பிடாம எஸ்.வி. சேகர் வழில நடப்பேன்.

ஆராவமுதா இதை கவனிக்கவே இல்லையா நீ. நம்ம கட்சிக்கு புதுசா ஒருத்தர் சேந்திருக்காராமே. வெங்கட்னு. அவர் உன் பினாமி போல தெரியுது. யார் அவர்?

Anonymous said...

உண்மைதான் இட்லி வடை. சமீபத்தில் சீனிவாசனின் முழுமையான பேட்டியை படித்தேன். அசந்துபோனேன்.

http://writersamas.blogspot.in/2012/05/blog-post.html

Anonymous said...

உண்மைதான் இட்லி வடை. சமீபத்தில் சீனிவாசனின் முழுமையான பேட்டியை படித்தேன். அசந்துபோனேன்.

http://writersamas.blogspot.in/2012/05/blog-post.html

Anonymous said...

உண்மைதான் இட்லி வடை. சமீபத்தில் சீனிவாசனின் முழுமையான பேட்டியை படித்தேன். அசந்துபோனேன்.

http://writersamas.blogspot.in/2012/05/blog-post.html

MeenaArun said...

i am going to put this as my fb status

k.rahman said...

good article. you are right in some parts.
but i cant resist myself asking this - you are defending srinivasan only you all are one sect right? had it been a non brahmin you(idly vadai) would have sided with this north indian channels only isnt it?

//அவரை கீழே இறக்கிய பின் தான் மீடியாவில் இருப்பவர்கள் பாத்ரூம் கூட போவார்கள் என்று நினைக்கிறேன்.//

//ஸ்ரீனிவாசன், ராஜா, ஸ்ரீசாந்த்.... எந்த தவறும் செய்யவில்லை என்று நாம் சொல்லவில்லை..ஆனால் தென் இந்தியர்கள் ஒரு விவகாரத்தில் சிக்கிக் கொண்டால், இந்த நியூஸ் சேனல்கள் எப்படி அநியாயமாக ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றன, அதை பயங்கரமாக ஊதிப் பெரிதாக்குகின்றன என்பதை கவனிக்க வேண்டும். //

not once do i remember you wrote a comment like this when a.raja was mob lynched by the north indian media. infact you also teamed up with them?
but now it hurts??

k.rahman said...

//அதன் நிர்வாகம் கிரிக்கெட்டின் மேல் உண்மையான அக்கறை உள்ள, மக்களால் நேசிக்கப்படுகிற, முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் தரப்பட வேண்டும்//

good players may or may not turn out to be good administrators. infact world's best batsman is not even a average captain. how do you expect him to be a good/efficient administrator

Anonymous said...

How come it is always/ mostly Jaishankar Jaganathan who is the first in posting comments???

Is he the man behind idly vadai???? or is he sitting 24X7 in front of the IV blogsite.

டகிள் பாட்சா said...

இ.வ

ஆமா. நீங்க எழுதினவர் பேரை போடலைன்னா எங்களுக்கு தெரியாமலா போயிடும். எழுத்து நடையை பாத்தா ’அன்புடன் பாலா’ எழுதினது போலத்தான் தெரியுது.

பொ(மெ)ய்யப்பனை IPL லிருந்து ban பண்ண மாதிரி இந்த ஜெய்சங்கர் ஜெகன்னாதனையும், ஆராவமுதனையும் பின்னூட்டத்திலிருந்து ban பண்ணா தேவலை. இந்த கொசுக்களோட தொல்ல தாங்க முடியல!

jaisankar jaganathan said...

//he sitting 24X7 in front of the IV blogsite.//

அனானி
என்னா ஒரு மூளைப்பா உனக்கு

Anonymous said...

உண்மைதான் இட்லி வடை. சமீபத்தில் சீனிவாசனின் முழுமையான பேட்டியை படித்தேன். அசந்துபோனேன்.
THAT INTERVIEW WAS ON 2012MUCH BEFORE TODAYS SCANDAL AND HAD NO REFERENCE TO TODAYS BETTING AND MEYAPPANS ARREST.
THE NORTH INDIAN MEDIA IS ANTI SOYTH IS NOT CORRECT ATLEAST IN THIS CASE.
THE HINDU IS MORE VEHEMENT IN THIS CASE.
INFACT THEY ARE THE FIRST TO SAY CHENNAI SUPER KINGS MUST BE BANNED FROM NEXT IPL.
WHEN ALL NORTH INDIANS INCLUDING MAMTA AND MULAYAM SINGH WANTED ABDUL KALAM AS THE PRESIDENT IT WAS OUR GREAT TAMIL LEADER KARUNANIDI AND CHIDAMBARAM WHO OPPOSED IT.
EVEN TODAY THERE ARE MORE SOUTH INDIAN MINISTERS IN THE CENTAL CABINET.THEY HOLD POWERFUL PORTFOLIOS ALSO. WHAT THEY HAVE DONE TO SOUTH. NOTHING.
ALL OTHER STATE MINISTERS ARE EASILY AVAILABLE TO ALL AND THAT TOO TO THEIR OWN PEOPLE.
ONE CANT MEET A TAMIL MINISTER THAT EASILY. BAYANGARA "BANDHA'
let us not wash AWAY / DIMINISH CRIMES IN THE NAME OF REGION.
IDLY VADAI OF SUCH HIGH STANDARDS SHOULD NOT GIVE ROOM TO SUCH IDEAS.