பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 02, 2013

சரப்ஜித் சிங்


சரப்ஜித் உடல் வந்து ஒரு மணி நேரம் முன்பு வந்து சேர்ந்தது. சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று செய்தி வந்ததும் இது பொய் என்று உள் மனம் சொன்னது. பாகிஸ்தான் ஒரு நாடு கிடையாது, அது ஒரு கசாப்பு கடை. சரப்ஜித் கொலை நிச்சயம் கசாப், அப்சல் குரு தூக்குக்கு பழி வாங்கும் செயல்.


மோதி நீங்க எப்ப வருவீங்க ?

25 Comments:

Anonymous said...

why you are inviting modi?
to kill people

janan said...

Yes i am also thinking from the morning after heard this news,it may be a absolute murder.

jaisankar jaganathan said...

பாரின்ல படிச்ச இம்ரான்கானே கேவலமாத்தான் பேசுறார். என்ன கொடுமை இது?

Anonymous said...

பாகிஸ்தான் ஒரு கசாப்புக்கடை...

மோதி நீங்க எப்ப வருவீங்க ?... மொத்த இந்தியாவையும் சுடுகாடாக்க

ஜெ. said...

சரப்ஜித் கோமாவில் இருந்ததும், மூளை சாவு ஏற்பட்டதும் தெரிந்த சன்கதிகள், அதனால் மரண செய்தி எதிர்பார்க்கப் பட்டதுதான்.

இது இனி அரசியல் வாதிகள் கையில் சிக்கி சின்னாபின்னமாக்கப் படும். காங்கிரஸ் அரசு ஒரு கோடி ரூபாய் அவர் குடும்பத்துக்குக் கொடுக்கிரது. இந்த 22 வருஷமாக அந்த குடும்பம் என்ன பாடு பட்டிருக்கும் என்று யாராவது ஏதாவது செய்தார்களா?

பா ஜ க இதை ஊதி விளையாடும். பிணம் தின்னிக் கழுகுகள் தான் ஞாபகம் வருகிறது. மோடி இந்த மரணத்தின் உண்மையை / பின்னணியை மத்திய அரசிடம் கேட்கிறார். பா ஜ க என்ன செய்திருக்கும்? மந்திரி பெண்ணுக்காக வன்முறை கைதிகளை விடுவித்தவர்கள் தானே இவர்கள்?

-ஜெ.

கொடும்பாவி-Kodumpavi said...

அவருக்கு நிறைய பேர் கிட்ட மோதறத்துக்கே நேரம் சரியா இருக்கு.

-கொடும்பாவி

Anonymous said...
கசாப்பு கடை மோதி, நீங்க எப்ப வருவீங்க ? பழி வாங்க


murali

dr_senthil said...

முதுகெலும்பு இல்லாத சிங்., தன மகனின் எதிர்காலத்தை மட்டுமே கணக்கில் கொள்ளும் சோன்னம்மா இவர்கள் நாட்டை ஏற்கனவே சுடுகாடாக்கி விட்டாச்சு.. இலங்கை , மாலைதீவு போன்ற நம்மிடம் உதவி வாங்கிய துக்கடா நாடுகூட நம்மை மதிப்பதில்லை.. ஒரு அகோரி தான் இனி நாட்டை ஆளவேண்டும் (மோட்சம், தண்டனை கொடுக்க தெரிந்த..)

ConverZ stupidity said...

// Anonymous said...
why you are inviting modi?
to kill people//

To Save India and get rid-off the pseudo-sickularists from the country

jaisankar jaganathan said...

என் வன் தொண்டன் ஆராவமுதன் இருந்திருந்தால் சரப்ஜித் பிழைத்திருப்பார்.
தொண்டரே எங்க போனீர்கள்? வாருங்கள். வருங்காலத்தை கொளுத்தலாம்

Anonymous said...

When Mumbai Blasts of 92' are spoke abt all thse super-intellectuals will quote babri masjid demolition(where not even a single muslim life was lost) and say it is the root cause of riots. But when it comes to Gujarat riots, they will conveniently forget the godhra carnage in which 70 Hindus were burnt alive mercilessly including women and children.
Hail pseudo secularis! Hail Antonio Maino!

poovannan said...

கொல்லப்பட்ட உடலை காட்டி வோட்டு சேர்க்கும் வேலை துவங்கி விட்டது

சரப்ஜித் சிங்கின் உடல் இந்தியா வந்து விட்டது.25 ஆண்டுகளை சிறையில் கழித்து அதன் முடிவாக அடித்து கொல்லப்பட்ட வீரனுக்காக அனைவரும் வருந்தும் நிலை ,அவர்களை பற்றி அறியும் நிலை உருவானது ஒன்று தான் இந்த நிகழ்வில் நடந்த ஒரே நல்ல விஷயம்

எல்லா நாடுகளின் அடிப்படை கோட்பாடே "செவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் "என்ற தத்துவத்தில் அடங்கியிருக்கும் வரை இவைகளுக்கு முடிவு இருக்காது

நாட்டு பற்றினால் அல்லது ஏழ்மையில் இருந்து தப்பிக்க பணத்திற்காக உளவு பார்க்க செல்லும் அனைவரும் யோசித்து பார்க்க வேண்டிய தருணம் இது.எத்தனை ஆண்டுகள் சிறையில் வாடினாலும் ,மாட்டி கொண்டவனை கை கழுவி விடுவதற்கு,யார் என்றே தெரியாது என்று சொல்லாத அரசுகள் ஒன்று கூட தேறாது

எங்கள் நாட்டு உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று முடிவு செய்து மரணதண்டனை கொடுத்தால் அது நியாயத்தின் தீர்ப்பு,அதை நிறைவேற்றாதே என்பவர்கள் அந்நிய கைகூலிகள்,போலி மனித உரிமை வாதிகள்,தவறாக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறுபவர்களையும் சேர்த்து தண்டிக்க வேண்டும் என்று கூக்குரல் இடுபவர்கள் அண்டை நாட்டு உச்ச நீதிமன்றம் தீவிரவாத செயல்களை புரிந்ததற்காக மரண தண்டனை வழங்கிய குற்றவாளியை நிரபராதி,தவறாக வழங்கப்பட்ட தீர்ப்பு,தண்டனையை நிறைவேற்ற கூடாது என்று கூச்சல் இடுவார்கள்.செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்,தவறா தீர்ப்பு வழங்க மாட்டான் எனபது தானே கடவுளின் வார்த்தை

இங்கு தீவிரவாத செயல்களுக்காக தண்டனை அளிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்ற படாமல் இருக்கும் கைதிகளுக்காக அரசை குறை கூறும்,தூற்றும்,மரண தண்டனை வேண்டாம் என்பவர்களின் மீது புழுதி வாரி வீசும் கோச்வாமிகள் ,சு ஸ்வாமிகள் அண்டை நாட்டில் இதே குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்க முயற்சிகள் எடுக்கவில்லை என்று அரசை ஏசுவார்கள்.

நாட்டிற்காக பணி செய்ய சென்றவர்களை எப்படி காப்பாற்றுவது,இங்கு இருக்கும் குற்றவாளிகளை துருப்பு சீட்டாக வைத்து எப்படி அங்கு இருப்பவர்களை விடுவிப்பது என்று செயல்பட வேண்டிய அரசுகள் ,அவர்களின் உயிரை துச்சமென மதித்து ,இங்கு வெறி ஏற்றுபவர்களின் நோக்கத்தால் தேர்தலில் வோட்டுக்கள் குறையும் என்பதால் இங்குள்ள தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கில் போட்டு விட்டு பெரிய சாதனை செய்தது போல சிரித்து கொண்டு பேட்டி கொடுத்து அங்கு இருக்கும் கைதிகளை கை கழுவி விட்டது.இந்த அரசின் உச்சபட்ச கேவலம் இந்த செயல்
பலரை கொன்ற எதிர் நாட்டு வீரர்களை போருக்கு பிறகு இரு நாடுகளும் பரஸ்பரம் விடுவிப்பார்கள்.இரு நாடுகளின் சிறையிலும் பல நூறு கைதிகள் இப்படி பல ஆண்டுகளாக அடைபட்டு கிடக்கும் அவலத்தை,
அவர்களை எப்படி விடுவிப்பது எனபது பற்றி எந்த கோஸ்வாமியும் சிந்திப்பது கிடையாது.

வெறி ஏற்றும் ஊடகங்கள் ஒரு நாட்டிற்கு மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன.நன்றி இல்லாத அரசோடு வெறி ஊட்டும் இட்லிவடைகளும் சேர்ந்தால் அவர்களுக்கு தீனியாக கொல்லப்பட்ட உடல்களுக்காக அலையும் நிலை தான் உருவாகும்.

Ram said...

http://tamil.oneindia.in/news/2013/05/03/india-pak-prisoner-attacked-jammu-jail-condition-serious-174601.html

Ethukku enna solrathu

poovannan said...

குற்றவாளி என்ற சந்தேகத்தில் 19 வயது பெண்ணை போலி என்குன்டரில் கொலை செய்த வழக்கில் இன்னுமொரு உயர் அதிகாரி கைது ஆகிறார்.உள்துறை மந்திரி,பல உயரதிகாரிகள் கைதாகும் மாநிலத்தின் முதலவர் தான் நம் மீட்பர் ,நியாயவான் என்றால் எங்கே போய் அடித்து கொள்வது


http://www.indianexpress.com/news/ishrat-jahan-encounter-court-clears-way-for-gujarat-top-cops-arrest/1110528/

போலி என்சௌண்டேர் புகழ் மோடி குஜராத்தில் சிறைகளில் உள்ள பாகிஸ்தானிய மீனவர்களை கொன்று (அவருக்கு புதிதா என்ன )பழிதீர்த்து அவர் ஆதரவாளர்களுக்கு பெறு மகிழ்ச்சி அளிக்கலாம்.
இன்று ஜம்முவில் சிறையில் இருந்த பாகிஸ்தான் தீவிரவாதி அடித்து தாக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார். மோடியின் ஆதரவாளர்கள் இந்தியா முழுவதும் பெருகி வருவதற்கு நல்ல எடுத்துகாட்டு இது.

Vishweshwaran R said...

சரப்ஜீத் சிங் நல்லவரா கெட்டவரா? இதுவரை எனக்கு புரியவில்லை. ஆத்திரம் மட்டுமெ வருகிறது.

நல்லவர் என்று வைத்துக் கொள்வொம்:

பஞ்சாப் அரசாங்கம் அவருக்கு 1 கோடி கொடுக்குது. மாநிலம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கிறாங்க. தியாகி பட்டம் வெற கொடுக்கறாங்க.

ஏன் இப்படி செய்யணும்?

இந்திய அரசுக்கு உளவு வேலை பார்த்ததால் தானெ இவ்வளவும்?

அப்படியென்றால், அரசு அவரை இவ்வளவு நாள் (23 வருடம்) சிறையில் வாட வைத்தது என்ன நியாயம்? அவரின் விடுதலைக்காக என்ன செய்து கிழித்தார்கள்? அவர் குடும்பத்துக்கு என்ன செய்தார்கள்?

சவுகரியமாக அவரைக் கை கழுவிவிட்டனர்! அவ்வளவெ!

இப்பொது அவர் இறந்த பின், அரசு முழித்துக் கொனண்டு கொண்டாடுவது அசிங்கமாக இல்லை?

கெட்டவர் என்று வைத்துக் கொள்வொம்:

அரசுக்காக உளவு பார்க்க எல்லை தாண்டி சென்ற உளவாளி என்ற குற்றச்சாட்டை மறுத்து தான் குடி பொதையில் எல்லை கடந்து மாட்டிக் கொண்ட ஒரு அப்பாவி என்ற நிலை உண்மை என்றால், அதற்கு ஏன் இத்தனை ஆரவாரம்?

அரசாங்க கஜானாவை (1 கொடி ரூபாய் நிவாரணம் கொடுத்து) காலி செய்ய யார் உரிமை கொடுத்தது?

வயிற்றுப் பிழைப்பிற்கு எல்லை தாண்டி மீன் பிடித்து குண்டடி பட்ட இறந்த 400 க்கும் மெற்பட்ட மீனவருக்கு, யாரெனும் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனரா?

ஒரெ நாட்டில் தனது குடிமக்கள் மீது அரசாங்கம் ஏன் இத்தனை வித்தியாசம் காட்டுகிறது?

Anonymous said...

@poovannan
Encounter poliya irukalaam.
Aana antha israt jahan theeviravadhi nu ekachakama proof iruku. It's been discussed in media widely. Go through the complete case and comment completely. Don't 'miss' things conveniently!

jaisankar jaganathan said...

//அரசாங்க கஜானாவை (1 கொடி ரூபாய் நிவாரணம் கொடுத்து) காலி செய்ய யார் உரிமை கொடுத்தது?
/

கொடநாட்டுல கூத்தடிக்க அரசாஙக் பணம் செலவாகலையா? அந்த மாதிரி நினைச்சுக்குங்க

Anonymous said...

Sarabjit singh was cremated with state honors. All the media's are highlighting the incident. But what is happening in Tamil Nadu. There are so many tamil fishermen are being killed by srilanka.????

poovannan said...

மோடியை கொல்ல மாதாமாதம் வந்து கொண்டிருந்த தீவிரவாதிகள் அவர்களை என்குண்டேர்களில் சுட்டு வீழ்த்திய காவல்துறை உயர் அதிகாரிகள் போலி என்குண்டேர்கள் என்பதால் சிறைக்கு சென்று விட்டதால் மோடியை தாக்க வருவதை நிறுத்தி விட்டனர்.அப்படிப்பட்ட நியாயவான் தான் மோடி
டோசன் கணக்கில் காவல்துறை உயர் அதிகாரிகள் சிறைக்கு உள்ளிருக்கும் மாநிலம் எது தெரியுமா
?சிறந்த மாநிலமான குஜராத் தான்
டெல்லியில் டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்காகவும், அதே கொடுமைக்கு உள்ளான ஐந்து வயது குழந்தைக்காக கொந்தளிப்பவர்களே,சரப்ஜித் படுகொலைக்கு பழிவாங்க மோடி தான் சரி என்று வாதடுபவர்களே
மோடி சண்டை போட்டு பொது செயலாளர் பதவி வாங்கி கொடுத்த அவரது வலது கை அமித் ஷா யார் தெரியுமா
கௌசர் பி என்ற பெண்ணை அவர் கணவர் சொராபுத்தினோடு கடத்தி சென்று பாலியல் வன்முறை புரிந்து உடலை எரித்து கொன்ற குற்றத்தில் குற்றம் சாற்றப்பட்டுள்ள குற்றவாளி
மனைவி மட்டும் அல்ல கடத்தலுக்கு சாட்சியான பிரஜாபதி என்பவரை பக்கத்து மாநில சிறையில் இருந்து நீதிமன்றத்தில் என் உயிருக்கு ஆபத்து என்று கதறிய கதறல்களையும் கண்டு கொள்ளாமல் போட்டு தள்ளிய மாவீரர்
அவருக்கு போட்டியாக இருந்த ஆர் எஸ் எஸ் ஜோஷி சி டி வெளிவந்து அவர் அரசியல் வாழக்கைக்கு முற்றுபுள்ளி வைக்க நடந்த முயற்சியில் மோடிக்கு பெரும் பங்கு உண்டு.அவர் மறுபடியும் UP மாநில தேர்தலில் பொறுப்பு பெற்றதால் தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்த புண்ணியவான் மோடி
இந்திய பெண் குசர் பீக்கு மோடி என்ன ஞாயம் வழங்கினார் என்று அவரை பார்த்து கேட்கலாமே.அவரை பாலியல் வன்முறை புரிந்து,படுகொலை செய்து,எரித்து விட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு உயர் பதவி வாங்கி கொடுத்து விட்டு சரப்ஜீதுக்கு நீலி கண்ணீர் வடிக்கும் திறமை மோடிக்கு மட்டும் தான் உண்டு

Anonymous said...

antonio maino's uthamaputhiran raul vinci also shed neeli kaneer no? :P

Anony8 said...

Poovannan Baai,
Sohrabuddin was a known Terrorist with 100s of cases against him and a huge cache of arms captured from his place
Kauser Bi was sent by LeT to kill Modi and this was subtly accepted by ISI/LeT too.

1000s of Encounters of even simple criminals in other States like Maha,UP are completely okay, but just 2 Encounters of Terrorists in Gujarat is not acceptable?

சான்றோன் சிவா said...

பூவண்ணன் ....

உங்களைப்போன்றவர்களின் மூக்கை உடைப்பதற்கேனும் மோடி பிரதம‌ராக வர வேண்டும்........

மோடியை கொலை செய்ய முயன்றால் மற்ற மாநிலங்களை போல பிரியாணி கிடைக்காது , என்கவுண்ட்டர் தான் என்று காட்டப்பட்டவுடன் கொலை முயற்சிகள் தானாக நின்றுவிட்டன......

சொராபுதீன் ஒன்றும் அப்பாவி கிடையாது........காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் ஆந்திர மாநிலங்களில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி........ அவன் எந்த மாநில போலீசிடம் சிக்கியிருந்தாலும் என்கவுன்ட்டர்தான்.....அதை குஜராத் போலீஸ் செய்ததால் உங்களைப்போன்றவர்கள் குதிக்கிறீர்கள்.....காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்.........

சீக்கியர்களை திட்டமிட்டு படுகொலை செய்த ஜெகதீஷ் டைட்லர் , சஜ்ஜன் குமார் போன்றவர்களுக்கு விளக்குப்பிடிப்பவர்கள் மோடியை குற்றம் சொல்வது இந்தியா எந்த நாளுமே உருப்படக்கூடாது என்ற உயர்ந்த[!] எண்ணத்தினால்தான்......

சரப்ஜித் சிங் எங்கள் நாட்டுக்குள் குற்றமிழைத்தார்......அவரை எங்கள் நாட்டு சட்டப்படி தூக்கிலிட்டோம் என்று அறிவிக்கும் நேர்மையில்லாமல், சிறைக்குள் வைத்து அடித்தே கொன்ற பாகிஸ்தானின் கோழைத்தனம்தான் விமர்சிக்கப்படுகிறது......

அஜ்மல் கசாப் , அஃப்சல் குருவுக்ககத்தான் சரப்ஜித் சிங் அடித்துக்கொல்லப்படார் என்ற உங்கள் லாஜிக் புல்ல்லரிக்க வைக்கிறது..........அப்படியென்றால் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கர‌வாதத்தால் இதுவரை கொல்லப்பட்ட இந்தியர்கள் எல்லாம் எதற்காக கொல்லப்பட்டார்களாம்?


உங்கள் திராவிடக்குஞ்சுகள் 46 வருடமாக மாற்றி மாற்றி ஆளும் தங்கத்தமிழகத்தில் 16 மணி நேரம் பவர்கட்........மாநிலத்தில் உள்ள சிறு தொழில் முனைவோர்கள் எல்லாம் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள்......குண்டி கழுவக்கூட தண்ணீர் கிடைப்பதில்லை........வெறும் 12 ஆடி ஆழத்தில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை.........சாராயம் ஆறாக ஓடுகிறது..........போலீஸ் ஸ்டேசனிலும் , நீதி மன்றங்களிலும் ரவுடிகள் அச்சமின்றி புகுந்து படுகொலை செய்கிறார்கள் .......... மலிவு விலை உண்வகத்தில் சாப்பிட்டால் மட்டும்தான் கட்டுபடியாகும் என்ற நிலைக்கு தமிழகத்தை கொண்டுவந்தாகிவிட்டது........இந்த லட்சணத்தில் மோடியை குறை சொல்ல வந்துவிட்டீர்கள்....


போங்க சார் ...போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க......அதுங்களாவது புத்தியோடு பொழைக்கட்டும்..........

poovannan said...

சான்றோன் ஐயா

கௌசர் பி சொராபுதிநீனின் மனைவி.அவர் மேல் எந்த வழக்கும் கிடையாது
என்குண்டேரில் மனைவி,சாட்சி என அனைவரையும் (மனைவியை கடத்தி சென்று பாலியல் வன்முறை புரிந்து IG யின் கெஸ்ட் ஹௌசில் எரித்து கொலை செய்ததற்காக சில ஆண்டுகளாக IG உள்ளே இருக்கிறார்) கொலை செய்வது,வேறு மாநிலத்தில் உள்ள சிறையில் இருந்து வரவழைத்து கொலை செய்வது என ஒரு மோடியின் பல சாதனைகளில் ஒரு மைல் இந்த என்சௌண்டேர். அதை குறைவாக பார்க்காதீர்கள்
இந்தியாவில் பல மாநிலங்களில் பணி புரிந்திருக்கிறேன்.இப்போதும் வெளியில் தான். தமிழகத்தில் மருத்துவம் பார்த்து கொள்ள,படிக்க,வேலை செய்ய விரும்பும் பலருக்கு மிகசிறு உதவிகள் புரிந்திருக்கிறேன்.குஜராத் சென்று வைத்தியம் பார்த்து கொள்ள போகிறேன்,படிக்க போகிறேன் ,வேலைக்கு போகிறேன் என்று தமிழகத்திற்கு வருபவர்களில் பத்தில் ஒரு பங்கையாவது குஜராத் மாநிலத்தை எட்ட சொல்லுங்கள்.
மின்சாரம் இந்த அழகில் இருக்கும் போதே மற்ற மாநிலங்களில் இருந்து இங்கு வேலைக்கு வரும் பணக்காரன் முதல் ஏழை வரை மிக அதிகம்.
சென்சுஸ் கணக்கு வந்து விட்டது.ஆன் பெண் சதவீதம் எல்லாம் எங்கள் தங்க குஜராத்தில் ,கடவுளின் அவதாரம் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பாருங்கள் என்று தூக்கி வீசுங்களேன்

poovannan said...

சான்றோன் ஐயா

கௌசர் பி சொராபுதிநீனின் மனைவி.அவர் மேல் எந்த வழக்கும் கிடையாது
என்குண்டேரில் மனைவி,சாட்சி என அனைவரையும் (மனைவியை கடத்தி சென்று பாலியல் வன்முறை புரிந்து IG யின் கெஸ்ட் ஹௌசில் எரித்து கொலை செய்ததற்காக சில ஆண்டுகளாக IG உள்ளே இருக்கிறார்) கொலை செய்வது,வேறு மாநிலத்தில் உள்ள சிறையில் இருந்து வரவழைத்து கொலை செய்வது என ஒரு மோடியின் பல சாதனைகளில் ஒரு மைல் இந்த என்சௌண்டேர். அதை குறைவாக பார்க்காதீர்கள்
இந்தியாவில் பல மாநிலங்களில் பணி புரிந்திருக்கிறேன்.இப்போதும் வெளியில் தான். தமிழகத்தில் மருத்துவம் பார்த்து கொள்ள,படிக்க,வேலை செய்ய விரும்பும் பலருக்கு மிகசிறு உதவிகள் புரிந்திருக்கிறேன்.குஜராத் சென்று வைத்தியம் பார்த்து கொள்ள போகிறேன்,படிக்க போகிறேன் ,வேலைக்கு போகிறேன் என்று தமிழகத்திற்கு வருபவர்களில் பத்தில் ஒரு பங்கையாவது குஜராத் மாநிலத்தை எட்ட சொல்லுங்கள்.
மின்சாரம் இந்த அழகில் இருக்கும் போதே மற்ற மாநிலங்களில் இருந்து இங்கு வேலைக்கு வரும் பணக்காரன் முதல் ஏழை வரை மிக அதிகம்.
சென்சுஸ் கணக்கு வந்து விட்டது.ஆன் பெண் சதவீதம் எல்லாம் எங்கள் தங்க குஜராத்தில் ,கடவுளின் அவதாரம் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பாருங்கள் என்று தூக்கி வீசுங்களேன்

சான்றோன் சிவா said...

பூவண்ணன் அவர்களே.........

தற்போது வெளிமாநிலத்தில் வசிப்பதாக கூறிவிட்டீர்கள்.......பிறகு தமிழக நிலவரம் விரல் நுணியில் என்பதுபோல் அடித்துவிடுகிறீர்களே ,அது எப்படி?

திருப்பூரை சேர்ந்த பல தொழில‌திபர்கள் குஜராத்தில் தொழில் தொடங்கியுள்ள விபரம் உங்களுக்குத்தெரியுமா?தற்போதுள்ள நிலை நீடித்தால் மிக விரைவில் இன்னும் பலர் குஜராத்துக்கு செல்வர்........

ஆண் - பெண் விகிதத்துக்கெல்லாம் ஒரு அரசு எந்த அளவுக்கு பங்களிக்க முடியும்? பெண் குழந்தைகளின் கல்விக்காக குஜராத் அரசு மேற்கொண்டுவரும் நலத்திட்டங்களை இணையத்தின் மூலமே தெரிந்துகொள்ள முடியும்....... இயல்பிலேயே வியாபாரத்தில் நாட்டம் அதிகம் கொண்ட குஜராத்திகள் உயர் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.....[பெரும்பாலான இஸ்லாமியர்களும் அப்படித்தான் ] அதில் என்ன தவறு இருக்கமுடியும் ?ஏதாவது தொழில் செய்து பிழைப்பது நல்லதா அல்லது எம் .எஸ். சி கெமிஸ்ட்ரி படித்துவிட்டு டாஸ்மாக்கில் சேல்ஸ்மேன் வேலை பார்ப்பது நல்லதா?

சொராபுதீன் மனைவி பற்றி குறிப்பிட்டீர்கள்...........வீரப்பன் மனைவி கூடத்தான் நேரடியாக குற்ற செயல்களில் ஈடுபடவில்லை.....அவர் மீது ஏன் வழக்குத்தொடரப்பட்டது? இன்றும் பெரும்பாலான மனிதர்கள் குற்ற செயலகளில் ஈடுபட தயங்குவதன் காரணம் தன் குடும்பத்தை உத்தேசித்துத்தான்........தன்னால் தன் குடும்பமும் சீரழிய நேரிடும் என்பதால்தான்..........கணவன் தீய வழிகளில் சம்பாதிக்கும்போது அதை ஊக்குவித்தால் கஷ்டம் வரும்போது தாங்கித்தான் ஆகவேண்டும்.........

தியோபந்த் உலேமா கவுன்ஸிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்ப‌ட்ட [ பின்னர் மிரட்டலால் பதவி விலகிய ] குலாம் முகமது வஸ்தான்வி,குஜராத் முஸ்லீம்களின் வாழ்க்கைத்தரம் , இதர மாநிலங்களில் [ குறிப்பாக இஸ்லாமியர் நலனுக்காக உருகி வழியும் இடதுசாரிகள் ஆண்ட மேற்குவங்கத்தைவிட ] வசிக்கும் முஸ்லீம்களை விட மேம்பட்டது என்று ஒப்புக்கொண்டார்........சமீபத்தில் கூட மற்றொரு முஸ்லீம் தலைவரான மதானி என்பவரும் இதையே குறிப்பிட்டார்..........

அங்கு வசிப்பவர்கள் சொல்வதைவிட உங்களை போன்றவர்களின் துர்பிரச்சாரத்தை நாங்கள் நம்ப வேண்டுமா?