பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 07, 2013

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 7-5-2013

டேய் இட்லி,
நல்லா இருக்காயா?

வேளுக்குடி கிருஷ்ணன் 'ராமன் சென்ற பாதை' என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பித்த உடன் சேது சமுத்திரம் பற்றி மறந்து போன கலைஞர் திடீர் என்று அதைப் பற்றி அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார் "அறிவியல்ஆய்வு ஆதாரங்கள் எங்களிடம் (திமுகவிடம்) உள்ளன. தில்லியில் இந்து மத சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களைக் காட்டினோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்" என்கிறார். எனக்கு தெரிந்து இந்த மாதிரி எதை சொன்னாலும் ஒத்துக்கொள்ள ஒரே ஆள் தான் இருக்கிறார் அவர் தான் இந்த நாட்டில் பிரதமர்.
அடிக்கடி பெரியார் அண்ணா எல்லாம் என் கனவில் வருவார் என்று சொல்லும் போது நாம் நம்பவில்லையா? அதே போல இதையும் நம்பிவிட்டு போக வேண்டும். ஆனால் ராமர் இருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியாது.


ஆனால் நம்ப முடியாத ஒன்றை சாரு தன்னுடைய சமீபத்திய பதிவில் சொல்லியுள்ளார் "தமிழில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களின் புத்தகம்தான் இரண்டு லட்சம் விற்கிறது என்றால் இது என்ன மாதிரியான சமூகம்? இப்படிப்பட்ட சமூகத்துக்காக ஒரு எழுத்தாளன் எழுதலாமா?". இவர் புத்தகம் வெறும் 200 காப்பி தான் விற்பனை ஆகிறதாம். சாருவிற்கு ஒரு சின்ன அட்வைஸ். பேசாம நீங்க நியூஸ் பேப்பரில் எழுதினால் ஒரே நாளில் பல லட்சம் காப்பி விற்கும் தமிழ்ச் சமுதாயம் பற்றி அடிக்கடி கவலைப்பட்டு சாரு சொல்வதைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. சாருவிற்கு ஒரு சின்ன அட்வைஸ். மயில்கண் வேஷ்டியோ. நண்டு மார்க் லுங்கியோ. எதா இருந்தாலும் பேசாம ஒரு பெக் அடித்துவிட்டுத் தூங்குங்க சார். ( இடை குறிப்பு: Charu படம் எடுக்க நான் பட்ட பாடு அதிகம். 'Charu' என்று கூகிள் இமேஜில் தேடினால் கிடைப்பது.. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், என்ன சமுகம் இது ! )

பெக், புகை இலை, சிகரேட், ஜாதி வெறு என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது அய்யா தான். மக்கள் தொலைக்காட்சியில் அய்யா, அய்யாவோட பையன் இரண்டு பேரும் சிறையில் இருக்க அவர்கள் போடும் விளம்பரங்கள் செம கலக்கல்.
"மதுவை ஒழித்தார் அதனால் அவரை சிறைக்கு அனுப்பலாமா?"
"ஐ.நா இவரை பாராட்டியது அதனால் இவரை சிறைக்கு அனுப்பலாமா?"

இதே மாதிரி பல வாசகங்கள்...

தினமும் ஆறு மணிக்கு 'தமிழ்' 'தமிழ்நாடு' என்று போற்றி பாடல் போடும் மக்கள் தொலைக்காட்சி, மாமல்லபுரத்தில் தங்கள் சித்திரை நிலவு கூட்டத்தின் போது அவர்கள் தொண்டர்கள் எல்லாம் அந்த பல்லவ கோயில் கோபுரம் மீது ஏறி தங்கள் கொடியை ஏற்றினார்கள். இதை எல்லாம் படம் எடுத்து அந்த ஆறு மணி தமிழ் பாட்டில் போடலாம் நல்லா இருக்கும். சித்திரை முழு நிலவுப் பெருவிழா என்ற கூத்தில் ஐந்து பேருந்துகளை எரித்து, 11 குடிசைகளைக் கொளுத்தி, சில இளைஞர்களின் உயிர்ப் பலிகளோடு முடிந்திருக்கிறது. இதை எல்லாம் மக்கள் தொலைக்கட்சியில் போடாமல், பத்து பேர் மொட்டை அடித்தார்கள், வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டார்கள் என்று முக்கியமான செய்திகளாக போடுகிறார்கள். இவர்கள் பேசிய பேச்சு வீடியோவை பார்த்தால் ... "அதுவும் குரு காடுவெட்டி குரு... தொழிலின் அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாத அசிங்க வார்த்தைகள்" என்கிறது ஆனந்த விகடன்.

ராமதாஸ் என்ற பெயரால் ராமருக்கே பெரிய இழுக்கு, இந்த மாதிரி நோய் பரப்பும் டாக்டர்கள் இருக்கும் வரை. தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும், இதை சொன்ன அவர் ரசிகர்களாலும் காப்பாத்த முடியாது.

அரசை காப்பாத்தறேன் பேர்வழி என்று சிபிஐ தாக்கல் செய்யும் மனுவை ரெவ்யூ செய்கிறேன் என்று சில விஷயங்களை டெலீட் செய்து அனுப்பியிருக்கிறார் சட்ட துறை அமைச்சர். இதுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு ? சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்யும் மனுவை முதலில் அரசுக்குக் காண்பித்துவிட்டுதான் தாக்கல் செய்யும். இட்லிவடை எல்லாப் பதிவுகளையும் சரக்கு மாஸ்டருக்குக் காண்பித்து விட்டு தான் போஸ்ட் செய்யும். அது போல தான் இதுவும். தப்பில்லை.

டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சரப்ஜித் உயிரை காப்பாத்த முடியாமல் போனது. அரசு மரியாதையுடன் அவரை பெரிய ஹீரோவாக ஆக்கி சகல கட்சிகளிலுமிருந்து ஓட்டுப் பொறுக்க வந்தார்கள். கடைசியில் அவரை தியாகி என்று அறிவித்துவிட்டு ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டு மறந்து போனார்கள். எனக்கு ஒரு டவுட். சில மாதங்கள் முன்பு பாகிஸ்தான் இராணுவம் நம் வீரர்களின் தலையை சீவி அனுப்பியவர்களுக்கு ஏன் இதே போல அரசு மரியாதை செய்யவில்லை? அவர்கள் தியாகி இல்லையா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா ?

தியாகி என்றவுடன் ஞாபகத்துக்கு வரும் இரண்டு பேர் - ராசா, தயாநிதி. தங்கள் தாத்தாவுக்காக மந்திரி பதவியை ராஜிநாமா செய்தார்கள். சிறை சென்றது பெரிய தியாகம் என்று சொல்ல முடியாது அது பெரிய விஷயம் இல்லை, இப்ப எல்லாம் பவர் ஸ்டார் கூட சிறைக்கு போகிறார். பவர் உள்ளே போனதால்தான், வெளியே பவரே இல்லாமல் போச்சு என்று வரலாறு சொன்னாலும் சொல்லும்.

எது எப்டியோ. இப்போதைய பவர் ஸ்டார் தோனி தான், இவர் மகா விஷ்ணுவாக விஸ்வரூப தரிசனம் கொடுக்க உடனே ஹிந்து காப்பாளர்கள் இவர் மீது கேஸ் போட்டுவிட்டார்கள். விஸ்வரூபம் என்றாலே கோர்ட் கேஸ் என்று தானே அர்த்தம்!

எவ்வளவு கோர்ட் கேஸ் என்று போட்டாலும் கோர்ட்டில் பெயில் கிடைத்தாலும் ராமதாஸ் வெளியே வர விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன். ராமதாஸுக்கு திருச்சி சிறையில் சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அவர் நலமுடன் இருக்கிறார் என்று இன்று அவரைச் சந்தித்த அவரது சம்பந்தியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கடைசியாக, இலங்கைப் பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன், எப்படி சொல்லுகிறேன் என்றால் அவ்வளவாக யாரும் FB, twitter இல் இதைப் பற்றிப் இப்போது பேசுவதில்லை.

இந்த வார துக்ளகில் வந்த ஒரு கேள்வி பதில்:

கேள்வி : இலங்கையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் கிடையாது, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அங்கு சென்று செய்தி சேகரிக்க முடியாது என்று இங்கு பல கட்சித் தலைவர்கள் பேசி வரும்போது, தங்களுக்கு (துக்ளக்) மட்டும் அங்கே சென்று செய்தி சேகரிப்பதற்கும், அந்நாட்டு அரசின் உதவி கிடைத்துள்ளதைப் பற்றியும் தங்களது விளக்கத்தை வாசகர்களுக்குத் தெரிவிப்பீர்களா?

பதில் : இந்தியாவிலிருந்து பத்திரிகையாளர்கள் வந்து இலங்கையில் உள்ள நிலையை நேரில் காண வேண்டும் என்று இலங்கை அரசு அவ்வப்போது அழைத்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், அதை யாரும் ஸீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நமது நிருபர்கள், இலங்கைத் தூதரகத்திடம் விஸா பெற்று ‘துக்ளக்’ செலவில் அங்கு சென்று வந்தார்கள். அவர்கள் மக்களையும், மற்ற பலரையும் சந்தித்தபோது, அதில் இலங்கை அரசினர் யாரும் குறுக்கிடவும் இல்லை. பெண்கள் ராணுவ முகாம், மற்றும் முன்னாள் புலிகள் மறுவாழ்வு மையம் ஆகிய இடங்களுக்கு நமது நிருபர்கள் சென்றபோதுதான், அனுமதி பெற்றுச் சென்றனர். அங்கும் பேட்டிகளின்போது ராணுவத்தினர் அருகில் இல்லை.

போகிற எடங்களுக்கு எல்லாம் தூக்கி செல்லுவது எது என்றால் உடனே நாம் நம்முடைய செல்போனை சொல்லுவோம். ஆனால் நமிதா சாக்லெட்டை தூக்கி செல்கிறார். சாக்லெட் அவரின் நாயின் பெயர்.

‘‘போகிற இடங்களுக்கு எல்லாம் தூக்கி செல்கிற மாதிரி ஒரு நாய்க்குட்டி வாங்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது, இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. இந்த நாய்க்குட்டி, ½ அடி உயரத்துக்கு மேல் வளராது. கூடையில் வைத்தோ அல்லது பையில் வைத்தோ சுலபமாக தூக்கி செல்ல முடியும். அதன் பெயர் ‘சாக்லெட்'. கொஞ்சம் பெரிதாக ஆகிவிட்டால் அதை சாக்லெட் மச்சான் என்று கூப்பிடுவார். நாய்க்கு அடித்த அதிர்ஷ்டம்.

எச்சகல நாயே என்று திட்டுவதை பார்க்கலாம். சில சமயம் பின்னூட்டத்திலும் இது போல வரும். இந்த நியூஸை பார்த்தால் அப்படி தான் இருக்கிறது.
வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கொல்கத்தா நகரின் பிரசித்தி பெற்ற ஹௌரா பாலத்திற்கு தற்போது ஒரு ஆபத்து வந்துள்ளது. வெள்ளத்தாலோ பூகம்பத்தாலோ இந்த ஆபத்து வரவில்லை. வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு எல்லாவற்றையும் வாயிலே போட்டு நன்றாகக் குதப்பி மக்கள் துப்பும் எச்சிலால்தான் இந்த ஆபத்து. எச்சில் தாக்குதலில் இருந்து இதை காப்பாற்ற தற்போது ஃபைபர் கண்ணாடி கவசம் போட போகிறார்களாம். கூடவே 'சாமி' படங்கள் வேற. 


"மூன்று வருட காலத்திலே மூன்று மில்லி மீட்டர் அளவுக்கு இந்த மூட்டுகள் அரிக்கப்பட்டு நாசமாகியுள்ளன. பாலத்தை தாங்கி நிற்கிற 78 தூண்களிலும் இதே வேகத்தில் அரிப்பு நடந்துகொண்டு போனால் மொத்த பாலமுமே வலுவிழந்துபோய்விடும்." என்கிறார்கள் இதை ஆராய்ச்சி(?) செய்தவர்கள்!

நாம் ஏன் அணுஆயுதம் எல்லாம் தயாரிக்க வேண்டும் சும்மா எச்சிலை வைத்தே பெரிய பெரிய நாசவேலைகள் செய்யலாம் போல இருக்கே!

இது கல்கியில் வந்த தலையங்கத்தின் ஒரு பகுதி. இதுவும் எச்சில் சம்பந்தமானது தான். சாலையில் எச்சில் துப்பியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மஜும் தார், பொது இடங்களில் எச்சில் துப்புவது இந்தியர்களின் இயல்பாகிவிட்டது," என்று வருந்தினார். நகரைச் சுத்தமாக வைத்திருக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை," என்றார். மத்திய காங்கிரஸ் அரசின் அவலமான ஆட்சியைக் கண்டு வெறுத்துப்போன மக்கள், கடந்த சில ஆண்டுகளில் கூடுதலாக உமிழ்நீரை செல வழித்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது! ( இடை குறிப்பு: கல்கிக்கு கூட கோபம் வந்த இப்ப தான் பார்க்கிறேன் )

மாம்பழம் என்றால் வாயில் எச்சில் ஊறும். அதுவும் இப்ப மாம்பழ சீசன்.
அதனால் கடைசியாக மாம்பழம் சம்பந்தமான ஒரு கேள்வி பதில்:

''இன்னமும் விடாமல் '2016-ல் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும்’ என்கிறாரே அன்புமணி ராமதாஸ்?''

'' 'மாம்பழத்துக்கு சீஸன் கிடையாது’ என்று ஒரு விளம்பரம் வருமே... அதைப் பார்த்ததில்லையா நீங்கள்?''

தற்போது சந்திப்பு சீசன். விஜயகாந்த் கருணாநிதியை போன மாதம் சந்தித்தார். இப்ப அகிலேஷ் யாதவ் ஜெயலலிதா சந்தித்தது பெரிய விஷயமாகச் சொல்லுகிறார்கள்.


கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சந்தித்து, தேசிய அளவில் மூன்றாவது அணி அமையப் பாடுபடுவேன்’ என்கிறார் எடியூரப்பா. இது எப்படி இருக்கு! யார் யாரை வேண்டும் என்றாலும் சந்தித்துக்கொள்ளட்டும் காய்கறி விலை கம்மியானால் போதும் !


அன்புடன்
முனி
கடைசி குறிப்பு
இரா.மு யாரை பார்த்தாலும் வணக்கம் என்று சொல்லுவதில்லை பதிலுக்கு ஒரு கேள்வி கேட்கிறார் "நீங்கள் பார்த்த முதல் படம் எது என்று சொல்லுங்கள்?" பல பிரபலங்கள் பதில் அளித்துள்ளார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பெண்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. நான் 10 வயசில் மதிரை வீரன் பார்த்தேன் என்றால் அவர்கள் வயசை நாம் ஈசியா கண்டுபிடித்திவிடுவோம் இல்லையா ?

6 Comments:

jaisankar jaganathan said...

முனி

இட்லிவடை கலைஞரப்பத்தி எழுதாம இருந்தா உனக்கு கெடா வெட்டுறேன்.

ஆராவமுதனை தீக்குளிக்க சொல்லுறேன். கூடவே இம்சை பண்ணுற அனானிய நரபலி தரேன்

Anonymous said...

அந்த சாரு கூகிள் சர்ச் சமாசாரம் தான் ரொம்ப hot ஆன மேட்டர் .. ஹி ஹி ..

Anonymous said...

Charu (google search) photo very good.

குரோம்பேட்டை குறும்பன் said...

சாரு என்று கூகிள் இமேஜ் செர்ச் செய்தால், சாரு யாரோரா? என்று தெலுங்கில் கேட்கிறது. ஆனா இந்த சாரு அழகா இருக்கார், எல்லா படத்துலயும்.

Anonymous said...

ஆராவமுதா, தலைவர் அழைக்கிறார், எங்கிருந்தாலும் உடனே பறந்து வா! அனானி தொல்லையிலிருந்து தலைவரை விடுதலை செய்! தலைவர் உனக்கு என்றே மந்திரோபதேசம் (கடவு சொல்) செய்ய தயாராக இருக்கிறார்!

ஆ பக்ககங்கள் said...

வயசு கொஞ்சம் அதிகம் ஆனாலே பாவம் தான். எது பேசுறோம், எதுக்குப் பேசுறோம்னு தெரியறதில்லே.
அதுலேயும் தயாளு அம்மா விசாரணை வேறே.கை கால் எல்லாம் ஒதறுது. என்ன சொல்லப் போறாங்களோ என்னவோ.அதாலே ஒரு தைரியத்துக்கு தாயத்து மாதிரி ராமர திட்றது, சேது பாலம் பத்தி பேசுறது எல்லாமே ஒரு பகுத்தறிவு தாயத்து. அது தெரியாமே அண்ணா, பெரியார்னு இது இன்னாபா பட பேஜாரா பேசுறியே !!