பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 05, 2013

சன்டேனா இரண்டு (5-5-13) செய்திவிமர்சனம்

இந்த வாரம்...இரண்டு ஹிரோக்கள்.


செய்தி # 1


இதுவரை 50 படங்களுக்கு மேல் முடித்துவிட்டார்கள் அஜித்தும்,விஜய்யும்.

இவர்களின் முக்கிய வெற்றிப்படங்களை கவனித்தால் புரியும். அவற்றை இயக்கி இருப்பது ஒரு புதிய இயக்குனர் என்பது.

அஜித்தை பொருத்தவரையில் காதல் கோட்டை, இயக்குனர் அகத்தியனுக்கு அது இரண்டாவது படம்தான். காதல் மன்னன் - சரண், வாலி - எஸ்.ஜெ.சூர்யா, சிட்டிசன் - சரவண சுப்பையா, தீனா - ஏ;ஆர்.முருகதாஸ் என பலரை தொடர்ந்து அறிமுகபடுத்தினார் அஜித்.விஜய்யை எடுத்துக்கொண்டால்,அவரது மெகா ஹிட் படமான துள்ளாத மனமும் துள்ளும்,இயக்குனர் எழிலுக்கு முதல் படமே. மசாலா ஹிட்டான திருப்பாச்சி, பேரரசுக்கு முதல் படம். சச்சின் - ஜான் மகேந்திரன், வேட்டைக்காரன் - பரமசிவன் என்று மட்டும் இல்லாமல், தனது 50வது படமான சுறாவை அறிமுக இயக்குனர் ஒருவரை நம்பி ஒப்படைத்தார் விஜய். 50 படங்களுக்கு மேல்தான் நண்பன் என்று ஷங்கரிடம் போனார் விஜய்.

புதிய இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு அளித்து ரிஸ்க் எடுக்க, விஜய்-அஜித் இருவருமே தயக்கம் காட்டியதில்லை.

ஆனால், நடிகர் சூர்யா விதிவிலக்காக இருக்கிறார். மாறி மாறி குறிப்பிட்ட இயக்குனர்களாக ஹரி,கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் என பயணம் செய்துவருகிறார்.

தற்சமயம் ஹரி இயக்கத்தில் "சிங்கம் 2" செய்துவரும் சூர்யா, அடுத்து மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் "துருவ நட்சத்திரம்" என்ற புதிய படம் நடிக்க இருக்கிறார்.

பெரிய பேனர்கள், குறிப்பிட்ட இயக்குனர்கள் என தனக்கென்று பாதுகாப்பான ஒரு வட்டம் போட்டுகொண்டு இருக்கிறார் இவர்.

ஒரு சமூக சேவகராக அடையாளம் கொண்ட சூர்யா, தான் நடிக்கும் சினிமாக்களில் மட்டும் ஏன் இதுவரை திறமையான இளம் இயக்குனர்களுடன் இணைய தயக்கம் காட்டிவருகிறார்??செய்தி # 2சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று விருப்புகிற இளம் இயக்குனர் யாராக இருந்தாலும் அவர்களின் முதல் சாயஸ் என்று ரெடியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.

குறும்பட இயக்குனர்கள் திரைப்பட இயக்குனராக தேர்தெடுக்கும் ஏணி...விஜய் சேதுபதி.

இவரே குறும்படங்களில் நடித்துதான் முன்னேறியவர் என்பதும் குறிப்பிடதக்கது. சீனு ராமசாமியின் "தென்மேற்கு பருவகாற்று" இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்த படம் என்று சொல்லாம். அந்த படத்தின் வெற்றிக்கும் பின்னும் சசிகுமாருடன் சிறிய வேடத்தில் தலைகாட்டினார் சேதுபதி.

தன்னை வைத்து குறும்படம் இயக்கிய கார்த்திக் சுப்புராஜுடன் இவர் இணைந்த "பீட்சா" படத்தின் வெற்றி பல இளம் இயக்குனர்களுக்கு, குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு புதிய பாதையை, நம்பிக்கையை விதைத்தது.

அதை தொடர்ந்து வந்த "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" அந்த நம்பிக்கையை உறுதி செய்து இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது வெளிவந்து இருக்கும் "சூது கவ்வும்" வரவேற்ப்பை பெற்று, குறும்பட உலகில் இருந்து நலன் என்னும் மற்றொரு திறமையான இயக்குனரை அடையாளப்படுத்தி இருக்கிறது.

விஜய் சேதுபதியின் அடுத்த படமான "பத்மினியும்,பண்ணையாரும்" படத்தின் இயக்குனரும் புதியவர்தான்.

குறும்பட உலகத்தில் இருந்துவரும் ஒரு புதிய இயக்குனர் என்றாலே ரசிகர்களிடம், படம் பற்றிய எதிர்பார்ப்பு வந்துவிட்ட ஒரு ஆரோக்கிய சூழல் உருவாக காரணமாக நிற்கும் விஜய் சேதுபதிக்கு ஹாட்ஸ் ஹாப்.(நன்றி, இனி, அடுத்தவாரம்)

-இன்பா

23 Comments:

jaisankar jaganathan said...

ஏன்பா சினிமாவை விட்டா வேற ஒன்னும் நியூஸ் கிடையாதா?

ராமதாஸைப்பற்றி எழுதி அடிச்சு தூள் கிளப்ப வேண்டாமா?

jaisankar jaganathan said...

ஆராவமுதா,
என்ன பண்ணிக்கிட்டு இருக்க. முதல்ல வந்து கமெண்ட் போடு. தூங்கி தூங்கி ஏன் டயத்த வீணாக்குற

Anonymous said...

OK. Surya. Inbaa sollitaaru. Neenga inimey pudhu directorkitta padam pannunga. Inbaa produce pannuvaaru.

Yov Inbaa, Neeyum un Mokkai padhivum. Karumam.

Poiyaa. poi pulla kuteengala padikka vai.

IvaN...Jaishankar Jaganathan Parakkum Padai.

Anonymous said...

தலைவா,அரசியலில் ஜொலிக்க நீ ஏன் சினிமா ரூட் எடுக்க கூடாது.

புதுமுக டைரக்டர்-இன்பா, சூப்பர் ஹீரோ ஜெ.ஜெ. -காம்பினேஷனை நினைத்தாலே அதிருதே !!

ஆராவமுதன்
ராக்போர்ட் ஸ்டார் ஜெ.ஜெ. ரசிகர் மன்றம்.

Anonymous said...

தங்க்லீஸ் நம்மது இல்லை.
பறக்கும் படையிலும் போலியா?

jaisankar jaganathan said...

ஆராவமுதா

ஏன் இந்த கொலைவெறி? நாம மக்களூக்கு நன்மை செய்து ஆட்சியை பிடிப்போம்

Anonymous said...

//தங்க்லீஸ் நம்மது இல்லை.
பறக்கும் படையிலும் போலியா?//

Idhu parakkum padayin America kilai.

Anonymous said...

//தங்க்லீஸ் நம்மது இல்லை.
பறக்கும் படையிலும் போலியா?//

Idhu parakkum padayin America kilai.

Kalamegam said...

Mr. Inba,
For the least 2 weeks your article seems to be simply absurd.
Please stop writing such nonsense.

Thanks
Kalamegam.

R. J. said...

//ராக்போர்ட் ஸ்டார் ஜெ.ஜெ. ரசிகர் மன்றம்// பவர் ஸ்டார் படத் தயாரிப்பாளர்கள் எல்லாம் இவருக்கு இப்போ சான்ஸ் தருவார்களோ?! - ஜெ.

Anonymous said...

why someone else can't bring new writers for idlyvadai?

sorry inba. we didn't expect this from you.

Nagaraj Venkatesan said...

Though I agree with Inba on surya, Surya introduced Ameer - Mounam pesiyadhe , Krishna - Jilendru Oru Kadhal

Anonymous said...

இத்தனை பேர் அடிச்சப்ப உங்களுக்கு வலிக்கவே இல்லையா பாஸ்-னு இன்பாவை யாராவது கேட்டா

அதில ஒரே ஒருத்தர் மட்டும் (Nagaraj Venkatesan ) என்னை ரொம்...ப்ப்ப்ப நல்லவன்னு சொல்லிட்டார்ம்மா என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆராவமுதன்
இன்பா இணைய பாசறை

ConverZ stupidity said...

facebook, twitter-ல மட்டும் இல்ல இட்லி வடைல கூட சீனாவோட ஆக்கிரமிப்ப கண்டிச்சு சீன பொருட்களை வாங்குவதை தவிர்ப்போமுன்னு யாரும், commentors உட்பட ஒரு எதிர்ப்பை கூட பதிவு பண்ணலையே. இந்த லட்சணத்துல மண்ணு மோகன் ஜிங்கு பன்னல, அந்தோணி ஆணி புடுங்கலைன்னு நாம எப்படி பொங்க முடியும். யதா ராஜா ததா ப்ரஜா

jaisankar jaganathan said...

//ஆராவமுதன்
இன்பா இணைய பாசறை/

ஆராவமுதா,
கட்சி மாறுற மாதிரி தெரியுது. வாக்கிங் வந்தா திரும்பி போக மாட்ட

Anonymous said...

//வாக்கிங் வந்தா திரும்பி போக மாட்ட//

Engal annan 6amudhanai miratinaal paar! Jaishankar Jaganatharey mariyadhaiyai nadandukol.

Anonymous said...

அய்யோ தலைவா அது நான் இல்லை.

தலப்பாகட்டி பிரியானி, முனியாண்டி விலாஸ் மாதிரி என் பேரு ஆகிவிட்டது. யார் யாரோ என் பேரில் கமெண்ட் ரிலீஸ் பண்ணிடறாங்க.

அனானியா இருந்தா இது தான் தொல்லை.... நம்ம படைக்கு சொந்தமா ஐ.டி வாங்க ஒரு 5C நிதி உதவி பண்ணு தல.

ஆராவமுதன்
ஜெ.ஜெ.ப.ப

jaisankar jaganathan said...

ஆராவமுதா
யார் அந்த அனானி,
உன் அடிபொடிய ஒழுங்க இருக்க சொல்லு. இல்லைன்னா நடக்குறதே வேற

Anonymous said...

Dai Mickey Mouse payya. Un vaalai aruthuruven. Jaakaradhai.

jaisankar jaganathan said...

ஆராவமுதா
நீ சொன்ன மாதிரி நீர் அடித்து நீர் விலகாது. நாம என்றைக்கும் நண்பர்கள். தப்பா நினைச்சதுக்கு சாரி.

என்சாய்.

jaisankar jaganathan said...

//Dai Mickey Mouse payya. Un vaalai aruthuruven. Jaakaradhai.
//

அனானி தில் இருந்தா வா. மோதிப்பாத்துடலாம்

ஜெய்க்குமார் said...

இன்பா நல்லவராய்ட்டாரு., கமெண்ட்டுகளை படித்த பிறகு. நாலாந்தர பிளாக்கின் கமென்ட்பாக்ஸ் ஆக்கிவிட்டார்கள்,இ.வ.தளத்தை

Anonymous said...

//ஜெய்க்குமார் said...
இன்பா நல்லவராய்ட்டாரு., கமெண்ட்டுகளை படித்த பிறகு. நாலாந்தர பிளாக்கின் கமென்ட்பாக்ஸ் ஆக்கிவிட்டார்கள்,இ.வ.தளத்தை//

என்ன இருக்கிறதோ இல்லையோ தமிழ் நாட்டில் அதிமேதாவித் தனத்துக்கு குறைவே கிடையாது. இன்பா எழுதிய சினிமா பதிவைப் பார்த்தாலே தெரிகிறது ஒரு முதல் தர ப்ளாக் எப்படி பதிவு போடவேண்டும் என்று.

பதிவுப் பொறுத்து பின்னூட்டம் வாய்க்கிறது அப்பனே.

டோண்ட் வெரி பீ ஹேப்பீ

ஈராக் மோகன்