பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 14, 2013

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 14-5-2013

100 கோடியில் அமெரிக்காவில் சுதந்திரதேவி இருப்பது போன்ற ஒரு சிலையை தமிழ்த் தாய்க்கு அமைக்கப் போகிறார் முதல்வர். இதனால் பல நல்லது நடக்கப் போகிறது. அமெரிக்காவில் இந்த சிலை இருப்பதால் தான் அங்கே மின் வெட்டு கிடையாது. அதனால் இந்த சிலை வந்த பிறகு குறிப்பாக மதுரையில் மின்வெட்டு என்ன எந்த வெட்டும் இருக்காது என்று நம்புகிறோம்.


அடுத்த நம்ப முடியாத நியூஸ் ஒன்று போன வாரம் ஊழல் செய்திகளுக்கு நடுவே வந்தது. அது 3D பிரிண்டிங் பற்றியது. ஆராய்ச்சியாளர்கள் 3D பிரிண்டிங் முறையில் துப்பாக்கி தயாரித்து அதை சோதித்தும் உள்ளார்கள்.இது என்னடா சோதனை என்று நாம் நினைக்க இதைவிட பெரிய சோதனையை மன்மோகன்சிங் சந்தித்துள்ளார். அடுத்த முறை அவர் பிரதமராக இருக்க போகிறாரா என்று தெரியாத நிலையில் மோடி அடித்து விளையாட ஆரம்பித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இன்று India Shining போல ஒரு வீடியோ தொகுப்பைப் போட ஆரம்பித்துள்ளார்கள். பார்க்கலாம்.
( இடை குறிப்பு: இதற்கு செலவு ரூ180 கோடி )

படம் பார்த்தோமா, அதை பற்றி விமர்சனம் எழுதினோமா என்று இல்லாமல் நம் மக்கள் திடீர் திடீர் என்று இளையராஜா, ரஹ்மான் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். "இளையராஜா திமிர்பிடித்தவர் என என்னிடம் சொல்லும் எல்லாருக்கும் ஒரே பதில்: 'கரெக்டுங்க. இனிமே நீங்க அவர் மூஞ்சிலயே முழிக்காதீங்க…" என்று போன வாரம் ஒரு ஸ்டேடஸ் பார்த்தேன். இளையராஜா திமிர் பிடித்தவர் கிடையாது என்று அவர் குமுதத்தில் வரும் கேள்வி பதிலைப் படிப்பவர்களுக்கு தெரியும். இதற்கு எதற்கு வீண் விவாதம் ?

விவாதம் என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது கவிஞர் மனுஷ். இவர் வீட்டில் பூனைகுட்டி, டிவி, இண்டர்நெட், ஃபோன் என்று எல்லாம் இருக்கிறது. ஆனால் கரண்ட் மட்டும் இருப்பதில்லை. அதனால் அடிக்கடி ஏஸி ரூம் இருக்கும் டிவி ஸ்டுடியோவிற்கு விவாதத்திற்கு போய்விடுகிறார். அவர் போன வாரம் போட்ட ஸ்டேடஸ் ".இது என் நம்பர். நாளைக்கு கூப்பிடுங்க..இந்தக் கண்ணீர் கதையை சொல்கிறேன்..வயர் மேன்லாம் தெய்வம் சார்..டெய்லி 200 ரூபாய் கொடுக்கிறேன்". அப்படி என்றால் அவர் லஞ்சம் கொடுப்பவர் நல்லவர், அதை வாங்குபவர் தெய்வம்!. அதனால் தான் காங்கிரஸில் நிறைய தெய்வங்கள் இருக்கிறது.
( இடை குறிப்பு: அங்கெல்லாம் கடமைய மீறத்தான் லஞ்சம் அனா இங்க கடமை செய்யவே லஞ்சம்", இந்தியன் படத்தில் ஒரு வசனம். இதற்கு அர்த்தம் என்ன பாஸ் ? )

பசு நமக்கு தெய்வம். கர்நாடகா முதலவ்ர் வந்த முதல் நால் பசு வதை சட்டத்தை எடுத்துவிட்டார். பசு தோல் போர்த்திய புலி என்று நாம் பார்த்திருக்கிறோம். அதே போல வீட்டுல எலி வெளியில புலி என்பதையும் கேள்விப்படிருக்கிறோம். பாகிஸ்தான் நாடாளுமன்ற் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி வெற்றி பெற்றது. அவருடைய கட்சிச் சின்னம் புலி. தன்னுடைய பிரச்சாரத்துக்கு நிஜமான வெள்ளை புலி ஒன்றைப் பிரச்சாரத்துக்கு வைத்திருந்தார். பிரச்சாரத்தின் போது அது பாவம் இறந்து போனது. அதற்காக வருத்தப்படுவதா அல்லது பாகிஸ்தானைவிட நல்ல இடத்துக்கு போனது என்று சந்தோஷப்படுவதா?

இப்ப மன்மோகன்சிங் பாகிஸ்தான் போவாரா என்று தெரியாது. ஆனால் அவர் டில்லியில் இருப்பதை காட்டிலும் அங்கே போனால் நிம்மதியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

பாராளுமன்றத்தில் பிஎஸ்பி எம்பி ஒருவர் வந்தே மாதரம் பாடும் போது எழுந்து வெளியே போனது ஒரு சின்ன சர்ச்சையை உண்டு செய்தது. சிரித்துக்கொண்டே 'பைடிஹே' என்று சொல்லும் மீரா குமார் கூட உணர்ச்சிவசப்பட்டு இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று கண்டித்தார். அவர் கண்டிக்கும் முன் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம். அந்த எம்.பி பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியா அல்லது முஸ்லீம் பிரதிநிதியா ? அவர் முஸ்லீம் பிரதிநிதி என்றால் பிரச்சனை. அடுத்த முறை மக்கள் தேர்ந்தெடுக்க கூடாது. Program எழுதும் போது Bug வருவதில்லையா? அதே போல இந்த எம்.பி பாராளுமன்றத்தில் ஒரு Bug.. சரி செய்ய வேண்டியது மக்கள் தான்.

Bug பற்றி ஒரு செய்தி. பூச்சிகளை சாப்பிட்டால் நல்லது என்கிறது செய்தி ஒன்று. இனி சிக்கன், மட்டன் என்று சாப்பிடாமல், பூச்சிகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லுகிறார்கள். சாப்பிட்டவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்லலாம்.

பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு ரூபாய் போட்ட காலம் எல்லாம் போயே போச்சு. ஆனால் ஒரு ரூபாய்க்கு இப்ப நிறைய கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஏர்டெல் வீடியோ பார்க்கலாம் என்கிறது விளம்பரம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ஏன் ஒரு இட்லிகூட கிடைக்கிறது. ஆனால் அதே ஒரு ரூபாயைப் பிச்சைக்காரர்கள் கூட வாங்க மாட்டார்கள் என்பது தான் முரண்!

அடுத்த முரண் - போன வார உச்ச நீதிமன்றம் சிபிஐ கூடுக்குள் அடைக்கப்பட்ட கிளி என்று கண்டனம் செய்தது. அதனால் இந்தவாரம் கிளி பற்றி ஒரு சின்ன ஜோக்.

பாலியல் தொழில் செய்யும் பெண், பாதிரியாரை பார்க்க செல்கிறாள்!

அய்யா, நான் இரண்டு கிளிகள் வளர்க்கிறேன்! அவை எப்போதும் ஒரே வார்த்தையை தான் சொல்கின்றன என்றாள்!

என்ன என்றார் பாதிரியார்!

"நான் ஒரு விபச்சாரி, உனக்கு சுகம் தரட்டுமா?" என்பதே அது என்கிறாள்!

என்னிடம் இரு கிளிகள் இருக்கின்றன, அவைகள் எப்போதும் ஜெபித்து கொண்டே இருக்கும், அவைகளிடயே விட்டால் அவைகள் உன் கிளிகளை திருத்திவிடும் என்றார்! பாதிரியார்.

கிளிகள் பாதிரியாரின் கூண்டுக்குள் விடப்பட்டன! விபச்சாரியின் கிளிகள் வழக்கம் போல் "நாங்கள் விபச்சாரிகள், உங்களுக்கு சுகம் தரட்டுமா?" என்றது!

உடனே பாதரியாரின் கிளி ஒன்று சொன்னது "சொன்னேன் பார்த்தியா நமது ஜெபத்துக்கு கடவுள் செவி மடுத்துவிட்டார் என்றது!"
( இடை குறிப்பு: நன்றி வால் பையன் )

நாமக்கல் மாணவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லி மார்க் வாங்கிவிட்டாகள் என்று இணைய கிழட்டு இளைஞர்கள் டிவிட்டர் ஃபேஸ் புக்கில் அதைப் பற்றி விவாதித்தார்கள். அவர்கள் செய்தது குறுக்கு வழி. அப்படி எல்லாம் படிக்கக் கூடாது என்று. உலகைச் சுற்றி வந்தவர்களுக்கு மாம்பழம் என்று சொன்ன போது பிள்ளையார் அம்மா அப்பாவைச் சுற்றி வந்து மாம்பழத்தைப் பெற்றார். அது குறுக்கு வழி இல்லையா?

மாம்பழம் என்றதும் நம் நினைவுக்கு வருவது அய்யா தான். அவரை பற்றி ஒரு சின்ன டிவிட்டர் செய்தி.


சிறையில் காந்திய சிந்தனைகள் படிக்கிறார் ராமதாஸ்.
இத சின்ன வயசில் படிச்சிருந்தா இப்ப படிக்க வேண்டி வந்திருக்காது!

13 Comments:

Anonymous said...

நீண்ட இடை வெளிக்கு பிறகு ரசிக்க தகுந்த முனி கடிதம்.

வென்கட் இரண்டாயிரம்

rk said...

Very important to have a statue bigger than the one in America. Forget about water, electricity, health problems in TN. They are not important. Amma, what a visionary!!

குரோம்பேட்டை குறும்பன் said...

தமிழ்த் தாய் சிலைக்கு மாடல் யாரு? காஜல் அகர்வால்?

Anonymous said...

சுதந்தர தேவி சிலைக்கு சேலை உடுத்திவிட எவ்வளவு நேரம் எடுத்தது?

Anonymous said...

Tagore's Jana Gana Mana was chosen as the National Anthem of the 1947 Republic of India. Vande Mataram was rejected[citation needed] on the grounds that Muslims, Christians, Parsis, Sikhs and others who opposed idol worship felt offended by its depiction of the nation as "Mother Durga", a Hindu goddess. Muslims also felt that its origin as part of Anandamatha, a novel they felt had an anti-Muslim message.
The designation as "national song" predates independence, dating to 1937. At this date, the Indian National Congress discussed at length the status of the song. It was pointed out then that though the first two stanzas began with an unexceptionable evocation of the beauty of the motherland, in later stanzas there are references where the motherland is likened to the Hindu goddess Durga. Therefore, INC decided to adopt only the first two stanzas as the national song.

Anonymous said...

The controversy becomes more complex in the light of Rabindranath Tagore's rejection of the song as one that would unite all communities in India. In his letter to Subhas Chandra Bose (1937), Tagore wrote:
"The core of Vande Mataram is a hymn to goddess Durga: this is so plain that there can be no debate about it. Of course Bankimchandra does show Durga to be inseparably united with Bengal in the end, but no Mussulman [Muslim] can be expected patriotically to worship the ten-handed deity as 'Swadesh' [the nation]. This year many of the special [Durga] Puja numbers of our magazines have quoted verses from Vande Mataram—proof that the editors take the song to be a hymn to Durga. The novel Anandamath is a work of literature, and so the song is appropriate in it. But Parliament is a place of union for all religious groups, and there the song cannot be appropriate. When Bengali Mussulmans show signs of stubborn fanaticism, we regard these as intolerable. When we too copy them and make unreasonable demands, it will be self-defeating."

jaisankar jaganathan said...

வால் பையன் ஜோக் சூப்பர்/
இதுவும் ஆபீஸ் கம்ப்யூட்டர்ல இருந்து(லலிதாவுக்காக)

Anonymous said...

//Amma,what a visionary!!//

ஆம் உண்மையிலேயே விஷநரிதான்!

கௌண்டமணி said...

// jaisankar jaganathan said...
வால் பையன் ஜோக் சூப்பர்/
இதுவும் ஆபீஸ் கம்ப்யூட்டர்ல இருந்து(லலிதாவுக்காக)//

நாராயணா, இந்த கொசு தொல்லை தாங்க முடியலை.

kothandapani said...

இடை குறிப்பு: அங்கெல்லாம் கடமைய மீறத்தான் லஞ்சம் அனா இங்க கடமை செய்யவே லஞ்சம்", இந்தியன் படத்தில் ஒரு வசனம். இதற்கு அர்த்தம் என்ன பாஸ் ? )
ரொம்ப சிம்பிள் ......
பக்கத்துக்கு வீட்டுக்காரன் பிளாட்டுக்கு , லஞ்சம் வாங்கிகொண்டு எனக்கு பட்டா கொடுத்தால்
அது முதல் ரகம்
என் பிளாட்டுக்கு லஞ்சம் வாங்கிகொண்டு எனக்கு பட்டா கொடுத்தல் இரண்டாவது ரகம் .
......பாஸ் .........

Anonymous said...

ஒரு ருபாய்க்கு ேவற என்ன கிைடக்கிறது

Anonymous said...

// கௌண்டமணி said...
// jaisankar jaganathan said...
வால் பையன் ஜோக் சூப்பர்/
இதுவும் ஆபீஸ் கம்ப்யூட்டர்ல இருந்து(லலிதாவுக்காக)//

நாராயணா, இந்த கொசு தொல்லை தாங்க முடியலை.//

ஜெ.ஜெ.எது சொன்னாலும் மட்டம் தட்ட என்று ஒரு கூட்டம் அலைகிறது.

உயர்வா நினைச்சுண்டு இருக்கிறது தப்பில்லை ஆனா வெறிகொண்டு நடப்பது வெ.கேடு.

வென்கட் இரண்டாயிரம்.
ஜெ.ஜெ.ப.ப (L)
(புதிய உறுப்பினர்)

R Gopu said...

3D ப்ரிண்டிங் தொழில்நுட்பத்தில் பல பொருட்கள் செய்ய படுகின்றன. 3D ப்ரிண்டிங் என்பதே ஒரு பெரிய விந்தை, அதில் துப்பாக்கி செய்தது சின்ன விஷயம் தான்.

www.ted.com/talks/lisa_harouni_a_primer_on_3d_printing.html‎