பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 23, 2013

லால்குடி ஜெயராமன் - அஞ்சலிஅஞ்சலி

4 Comments:

R. J. said...

ஒரு ஜாம்பவான் இறைவனடி சேர்ந்தார். இந்த தமிழ் புது வருஷம் கலைஞர்களையும், பிரமுகர்களையும் காவு வாங்க ஆரம்பித்துவிட்டதே - PBS , ராமமூர்த்தி, லால்குடி, சிவந்தி ஆதித்தன் ... - ஜெ.

ராஜசுப்ரமணியன் said...

லால்குடி ஜயராமன் மறைவு நமக்கு ஓர் பேரிழப்பு. அவருக்கு நம் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

பாரதி மணி said...

நாடக மும்மரத்தில் என் மதிப்புக்குரிய லால்குடி காலமான செய்தி வந்தது. 1952-ல் குடுமி வைத்த லால்குடி ஜி.என்.பி.க்கு பக்கவாத்தியம் வாசிக்க நாகர்கோவில் வந்தார். அப்போதிலிருந்து 60 வருடப்பழக்கம்.

ஒரு தடவை தில்லி வந்தபோது, தன் மனைவியிடம், ‘நான் குடுமி வெச்சு நீ பாத்ததில்லே....மணி பாத்திருக்கான்!’ என்றார். சந்தோஷமாக இருந்தது. அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லை. ஆனாலும், நேரில் பார்த்தால், அப்படி ஒரு இணக்கம்.

கர்நாடக சங்கீத உலகில் ஓர் ஆலமரம் விழுந்துவிட்டது! ஆனாலும் ஆயிரம் ஆயிரம் விழுதுகள் சங்கீத உலகைத்தாங்கும்.

அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்.

kg gouthaman said...

//
கர்நாடக சங்கீத உலகில் ஓர் ஆலமரம் விழுந்துவிட்டது! ஆனாலும் ஆயிரம் ஆயிரம் விழுதுகள் சங்கீத உலகைத்தாங்கும்.//

Well said Bharathi Mani.