பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 26, 2013

வியாபாராமாயணம்


4 Comments:

kg gouthaman said...

தட்டுல வடை இருக்கு; இட்லி எங்கே?

Anonymous said...

ஆச்சரியமா இருக்கு, சுந்தரம் ஃபைனான்ஸா ஸ்பான்சர் பண்றாங்க? அதுவும் நவீன நாடகத்துக்கு? நல்லது நடந்தாச் சரி...

பாரதி மணி said...

வியாபாரமாயணம் -- மு. ராமஸ்வாமி எழுதிய வீதி நாடகம்.

இன்று மாலை ஏழுமணிக்கு பெசண்ட் நகர் ஸ்பேஸில் மு. ராமஸ்வாமி எழுதி நடிக்கும் வியாபரமாயணம் என்ற ஒருமணிநேர வீதி நாடகம் இருக்கிறது. தயவு செய்து தவறவிடாதீர்கள். அருமை....அருமை!
...
24-ம் தேதி என் நாடகத்துக்குவந்து, மேடையில் பேசும்போது 76 வயதில் நான் ஓடியாடி நடித்தேன் என்று மு.ரா. சொன்னார்.

அவரது நாடகத்தைப்போய்ப்பாருங்கள். அதகளம் பண்ணியிருக்கிறார் மனுசன்!

என்ன லாவகம்....என்ன சுறுசுறுப்பு.....என்ன உடல்மொழி! அவருக்கு வயது பதினாறா அறுபதா என்ற சந்தேகம் வருகிறது மேடை மொத்தமும் அவர் ஆக்ரமிப்புத்தான்! கண்மூடித்திறப்பதற்குள் ஸ்டூல் மேல் ஏறி மறுகணம் துள்ளிக்குதிக்கிறார். தாளத்துக்கேற்ப உடலை அசைக்கிறார் பாருங்கள்....பார்த்துக்கொண்டே இருக்கலாம். நாடக ஆர்வலர்கள், மாணவர்கள் அவசியம் பார்க்கவேண்டும்.

நாடகப்பிரதியில் என்ன கிண்டல், நக்கல்? ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை! எனக்கு பாதல் சர்க்கார் வீதிநாடகம் பார்த்தது போலவும், பெரியாரே வேஷமிட்டு வந்து மக்களை நையாண்டி செய்வது போலவும் இருந்தது!

அவருடன் நடித்த ஆனந்த்சாமியும் இவருக்கு இணையாக நடித்திருக்கிறார். இயக்கம் ராஜீவ் கிருஷ்ணன். வெல் டன்!

தவற விடாதீர்கள்!

பாரதி மணி

Kadavul said...

Hi Idlyvadai,

It seems, vijay tv telecasted a program where Cho and Velukkudi discussed abt Ramayana (I think they telecasted this last sunday).

If you have any link related to that, can you please publish it here ? Thanks