பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 25, 2013

இருடீஇருக்குஉனக்கு !


நீங்களும் என்னை கட்டிபிடிக்கலாம் நிகழ்ச்சி என்ற பதிவில் கமலுக்கு 50 கோடி என்று தவறாக எழுதியதை பலர் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கமல், மற்றும் தொகுப்பாளினிகள் செய்த கூத்தை பற்றி பலர் ஒன்றும் சொல்லவில்லை.

இந்த மாதிரி பெரிய இடத்து பஞ்சாயத்துக்கு சரியான நபர் ஜெயஸ்ரீ தான் அதனால் அவருடைய கருத்தை இட்லிவடை கேட்டது. சில நாட்களுக்கு முன் புதிதாக இன்னொரு ஜெயஸ்ரீ முளைத்திருக்கிறார் - பெயர் ஜெயஸ்ரீ சாரநாதன்!. அவருடைய கருத்து கீழே..

நீங்கள் எந்த ஜெயஸ்ரீயைக் கேட்டீர்களோ தெரியாது, நானும் ஜெயஸ்ரீதான், அதனால் சொல்கிறேன். தொகுப்பாளினிகள் செய்தது பயங்கர வழிசல். (நான் DD செய்ததை மட்டும்தான் பார்த்தேன்.). அதற்கு மேல் பார்க்கப் பொறுமை இல்லை. என் கட்டுரைகளே தேவலாம், கமலஹாசன் பேச்சைக் கேட்டால் கண்டிப்பாகத் தூக்கம் வந்து விடும். காதல் இளவரசன்னு ஒரு பட்டம் வேறு இருக்கே, அதற்கு ஒப்பேத்த அப்படி சீன் போட்டுருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆர்ட்டிபிஷியலா இருந்தது.

இப்படிச் சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீபத்தில் சென்னை டைம்ஸில் சுருதி ஹாசன் பேட்டி அளித்திருந்தார். அதில் கமலது ரசிகர்கள் டிக்னிடியுடன் நடந்து கொள்பவர்கள் என்று சொல்லியிருந்தார். அதாவது கமலுடன் வெளியில் செல்லும் போது, அவரைப் பார்க்கும் ரசிகர்கள், ஏதோ காணாததைக் கணட மாதிரி நடந்து கொள்ளாமல், இயல்பாக முகமன் கூறிச செல்வார்கள் என்றிருக்கிறார். உண்மையான ரசிகர்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். டிவியில் கண்டது ஒரு ஷோ. உண்மையில் கமலுக்குப் பெண் ரசிகர்கள் குறைவு என்பது என் கருத்து - probably except Gauthami. மூன்று முடிச்சு காலத்தில் இருந்திருக்கலாம், இப்பொழுது இல்லை என்று நினைக்கிறேன்.


வழக்கம் போல ஜெயஸ்ரீ மாமி அவர்கள் சொன்ன பதிலை கீழே தந்துள்ளேன். ( நன்றி ஃபேஸ் புக் )

இடையில் ஒரு காட்சியில் இந்தப் "பழங்காலத்து"ப் ப்ரியா கண்ணீர் விட்டபோதே இந்த எழவைப் பார்க்கக்கூடாதென்றிருந்தேன். இருந்தாலும் பதிவு செய்திருந்ததை அழிக்காமல் விட்டது என் தவறு. கமல் அறத்தை முன்னெடுக்கிறார், பாரு பாரு என்று என்னைத் தொணப்பிப் பார்க்கவைத்த Priya Sivashankaran னிலிருந்து ஆரம்பிக்கிறது என் கடுப்பு. :) :இருடீஇருக்குஉனக்கு:

சேர்ந்து வாழ்கிறேன் என்று கௌதமி சொல்லியிருந்தால் சேர்த்துக்கொண்டுவிடுவதா?

ஒளிவெள்ளத்தில் 500 பேர் பார்த்துக்கொண்டிருக்க, கோடிக்கணக்கானவர் வீட்டில் டிவியில் பார்க்கப்போகிறார்கள் என்பது தெரிந்தும்...

என் கணவரை போகச் சொல்லிவிட்டு கமலுடன் வாழ்ந்துகொள்வேன் என்பேன் என்று ப்ரியா சொல்லக்கூட முடியாமல் வார்த்தை அடைக்க ஓடோடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டால் தானும் ஹாட்சீட்டிலிருந்து இறங்கிவராமல், ஒரு நல்ல தமிழனாக, இதெல்லாம் தமிழ்க் கலாசாரமில்லை என்று அறிவுறுத்தித் திருத்தி அனுப்பாமல்,

DD என்கிற கலாசாரக் காவல் தேவதை, கட்டிப்பிடித்தலோடு எனக்கு முத்தமும் போனஸாக வேண்டும் என்று கேட்டால், இது தவறு, இங்கு பணம்வெல்லவே வந்திருக்கிறேன், இவை எல்லாம் தவறு என்ற புரிதலை அவருக்கு வழங்காமல்...

இப்படி அயோக்யத்தனங்கள் செய்த கமலைக் கடுமையாகக் கண்டித்து, அந்தப் பெண் தெய்வங்களுக்கு ஏற்பட்ட இழுக்கைப் போக்க வேண்டிய பொறுப்பை அவருக்கு நினைவூட்டுவதோடு...

இதுபோன்ற பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்திருத்தம் வரவேண்டும் என்றும் சொல்லி அமைகிறேன். :சோடா:

பிகு: அறத்தை கடைசியில் ஒருவழியாக முன்னெடுத்ததையும், நல்நோக்கத்திற்காக் 50 லட்சம் வெற்றிபெற்றதையும் தவிர இந்த விஜய் டிவி நிகழ்ச்சி மஹா செயற்கையானதும் கேவலமானதும்..

ஒரு ஜெயஸ்ரீக்கே இந்த உலகம் தாங்காது, இரண்டு டூமச். தேவுடா

25 Comments:

kg gouthaman said...

விஜய் டி வி, 'கலாச்சார சீரழிவு' பாடங்களை ஒவ்வொன்றாக அரங்கேற்றம் செய்து வருகிறது. 'நீயா நானா' முதல். இப்போ நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.

VISWANATHAN S said...

கட்டி அணைப்பதும் முத்தம் கொடுப்பதும் காமத்தின் பாற்பட்ட செயல்களாகவே பார்க்கப் பட வேண்டாம். அன்பாலும் இவை நிகழலாம். கட்டிப்புடி வைத்தியம் உதாரணம்.
சினிமாவில் கமல் 18 வயது கதானாயகியை அணைத்துக் காதல் புரியும் போது போகாத பண்பாடும் கலாசாரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போய்விடும் என்பது கொஞ்சம் அதிகமாகவே சார்புடைய வாதம். இதுவும் கலாசார காவல் (cultural policing) தான்.

சிவ.சரவணக்குமார் said...

விஸ்வனாதன் சார்......உங்க ''கலாச்சாரப்புரட்சி'' யின் அடுத்த கட்டம் என்ன? உலகத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக விஜய் டிவி வழங்கும் '' லைவ் ஷோ'' வா?

அதுவும் ''அன்பால் '' நிகழ்வதுதானே?

[ பத்து வருடங்களுக்கு முன்பாகவே விஜய் டிவி பிரைம் டைமில் '' காமசூத்ரா '' படத்தை ஒளிபரப்பியது........]

Anonymous said...

அவள்கள் எல்லாம் பத்தும் தெரிந்த பத்தினிகளும் இல்லை ..இவர் முற்றும் துறந்த முனிவரும் இல்லை .......... எல்லாம் ஒரு ஷோதான் .... சூரியா வைத்தே ஒப்பேத்த முடியவில்லை . இப்படீல்லாம் பண்ணியாவது எதனை நாள் வருது என்று பார்போம் .

Anonymous said...

கட்டி அணைப்பதும் முத்தம் கொடுப்பதும் காமத்தின் பாற்பட்ட செயல்களாகவே பார்க்கப் பட வேண்டாம். அன்பாலும் இவை நிகழலாம்
சூபரு அண்ணே நாளை உங்கள் தமைக்கையோ , மனைவியோ இதை செய்தால் ஏற்ற்று கொள்வீர்களா . கமலை விட தங்களை போன்றோர் தான் கலாச்சார சீரழிவிற்கு
உரம் போடுகின்றவர்கள் .

ஸ்ரீராம். said...

நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி!

Anonymous said...

Kamala kaahasan ippalaam, naanu manushanaave pakkarathu kedaiyaathu...

Spoiling our priceless 'culture & Heritage'..

Anonymous said...

ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் மிகவும் புத்திசாலியான பெண்மணி.நான் அவர் எழுத்துக்களை blog காலத்திலிருந்தே படித்து ரசித்து வந்திருக்கிறேன்.இப்போ FB யிலும் தொடர்கிறேன்.FB யில்
மேற்கண்ட அவர் பதிவிற்கு நான் சற்றே குறும்பாக கேட்ட கேள்வியும்,
அவரின் brilliant பதிலும் கீழே..
==================================
நான் : JG! நிகழ்ச்சி பற்றிய உங்கள எழுத்தில் விஞ்சியிருப்பது கோபமா,பொறாமையா,அல்லது ஏக்கமா?

Jayashree Govindarajan நிகழ்ச்சி ஒரு சப்பை. எனக்கு ஒரு உணர்வுமே எஞ்சவில்லை. ஒரு ரசிகை என்பதையும்கூட ரசிப்புத்தன்மையோடு செய்கிறவள் நான். நீங்களாக நினைத்துக் கொள்பவைகளுக்கு நான் பொறுப்பில்லை.

நான் இங்கே சொல்லியிருப்பவை கமலை மட்டும் குற்றம் சொல்லிவிட்டு, காரணமானவர்களைக் கண்டுகொள்ளாததை மட்டுமே; அல்லது காரணம் கமல் மட்டுமே என்று சொல்வதை. உங்களுக்குப் புரியாவிட்டால், அது என் எழுத்தின் பிழை, என் எண்ணத்தினுடையது அல்ல.
==================================
--R.Ganesh

பெசொவி said...

//விஜய் டி வி, 'கலாச்சார சீரழிவு' பாடங்களை ஒவ்வொன்றாக அரங்கேற்றம் செய்து வருகிறது. 'நீயா நானா' முதல். இப்போ நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி//

I second it!

Anonymous said...

ஒரு பக்கம் AIDS விழிப்புணர்வு பிரச்சாரம். மறுபக்கம் இப்படி ஒரு அபச்சாரம். இதுதான் கமலின் பகுத்தறிவு

சிந்திப்பவன் said...

இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான பெண் ரசிகைகள்
MKT பாகவதர்,
ஜெமினிகணேசன்,
பாடகர் GNB,
கண்ணதாசன்,
எம்.ஜி ஆர்.
ஆகியோர்களுக்கும் இருந்துள்ளனர்.
என்ன ஒரே வித்தியாசம்..அப்போ டிவி கிடையாது.

Anonymous said...

would DD or Metro Priya done this kind of an ACT it Vaiyapuri or VADIVELU or VIVEK or VIJAYAKANT there in the show?

ConverZ stupidity said...//Anonymous said...
would DD or Metro Priya done this kind of an ACT it Vaiyapuri or VADIVELU or VIVEK or VIJAYAKANT there in the show?//

போங்க பாஸ் கமலோட அறிவுக்குதான் ஒரு பொண்ணு கமலோட வாழ்ந்துக்கிறேன்னு சொன்னுச்சு இன்னொரு பொண்ணு கமல்கிட்ட முத்தம் கேட்டுச்சு.

பி.கு: சிகப்பா அழகா இருக்கிறவங்கதான் அறிவுள்ளவன்/ புத்திசாலி/அறிவாளி.
பி.குவுக்கு ஒரு பி.கு: சிகப்பா இருக்கவரு பொய் சொல்ல மாட்டாரு.

ConverZ stupidity said...

முன்குறிப்பு: ஒரு தப்பை இன்னொரு தப்பு சரியாக்காது.

நம்ம ஊரு ஆம்பளைங்க அழகி போட்டிய வாயில போற ஈ தெரியாம ரசிச்சப்பவே கலாசார சீரழிவு ஆரம்பிச்சிருச்சு பாஸ்.

BTW, பெண்ணீயவாதி பெண்பித்தளை வாதிங்கல்லாம் எங்கப்பா ?

ConverZ stupidity said...

தேவரின் வாழ்க்கையில்...

மீசை இல்லாத தேவர் போட்டோவ தான் நாம பார்த்திருக்கோம். அதுக்கு பின்னாடி ஒரு நிகழ்ச்சி. சுருக்கமா சொன்ன தேவரிடம் (அவர் குடும்பஸ்தனா ஆனபிறகு) ஒரு பொண்ணு விரும்புறதா சொல்லவும், எதுனாலன்னு கேக்க, உங்க மீசைல இருக்குற கம்பிரம்னு அந்த பொண்ணு பதில் சொல்ல, அவரு அடுத்தநாளே அந்த மீசையை மழிச்சிட்டாறு. இது ஆம்பளைதனம், பிற பொண்ணுங்க முத்தம் கேட்டா சொல்ல தொடைசிட்டு போய் குடுக்குறதில்ல.

தர்மரக்ஷனதுக்காக முஷ்டி மடக்குறது மட்டுமில்லை, தைரியமாருக்குறது மட்டுமில்லை இதுவும் ஆம்பிளைதனம்தான்.

பிரச்சனைலா தோத்தாலும் திரும்ப எழுந்து நிக்கிரதுதான் ஆம்பளைதனம்,
ஊரை விட்டே போறேன்னு அறிக்கை விடுறதில்லை.

பி.கு: உனக்கு பொறமைன்னு என்னை பார்த்து விரல் நீடுற அறிவுஜீவீஸ் please stay away

Anonymous said...

@Viswanathan S, - "கட்டி அணைப்பதும் முத்தம் கொடுப்பதும் காமத்தின் பாற்பட்ட செயல்களாகவே பார்க்கப் பட வேண்டாம். அன்பாலும் இவை நிகழலாம். கட்டிப்புடி வைத்தியம் உதாரணம்." - ஒரு பொது அறிவுப்போட்டியில் அறிவைத்தான் சோதிக்க வேண்டும், அன்பையோ, காமத்தையோ அல்ல!! அன்போ அல்லது காமமோ வேண்டுபவர் வேறு நிகழ்ச்சியை பார்ப்பார்கள் !! இது எப்படி இருக்கிறதென்றால் பரதநாட்டியம் என்று அறிவித்துவிட்டு காபரே ஆடுவது போல் !!
பி.கு. தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை (உங்களுக்கு புரிந்தால் சரி !!). அது உங்கள பிழையல்ல. என் அறிவின்மையின் பிழை !! பொருத்தருள்க !!!

கல்யாணராமன் S.

Anonymous said...

After watching the shows I feel that the entire show was scripted and directed. The price money also decided when the tv invited Kamal.
When Vijay TV promotes Arvindsamy show I thought the price money should be 25L.
If the tv viewers are smart enough they might watched the way Arvindsamy answers. I mean his display "helped" when he was unable to answer. Kamal may list of questions in advance and the questions were asked from the list. ( ofcourse, Kamal has done some homework to answer the questions inorder to feel the show as its "live" recording)

- SP

லெமூரியன்... said...

பொது நிகழ்ச்சியில் என்று எதை சொல்ல வருகிறீர்கள்?

அணில் அம்பானியின் பொண்டாட்டியை ஒரு விளையாட்டு வீரன் கட்டி பிடிச்சால் உங்களுக்கு குதர்க்கமாக எதுவும் தோனது....
ஏன்னா விளையாட்டு வீரன் இந்தியன் ஆகிட்டான்...கிரிக்கெட் வேற பிடிச்ச ஆட்டமா ஆகிபோச்சு..

அதே ஒரு பிராமணன் ஒரு பாப்பாத்திய முத்தமிட்ட கொதிக்கிறீங்க...

தனி தமிழகம் வேணும்னு கேட்டா மட்டும் கொதிக்கிறீங்க நாங்க இந்தியன்னு...அப்போ எல்லா இந்தியனுக்கும் கொதிங்கடா...
ஒக்காளி தமிழன்ன என்ன வேணும்னாலும் சொல்லலாம்னு நெனைப்பா...

ஒடனே அறிவாளித்தனமா கேக்குறத நெனைச்சி ஒரு கேள்வி...
உன் தங்கை இப்டி செஞ்சா சும்மா இருப்பியான்னு...

டேய் இங்க பேசுற விஷயமே வேற..
பொதுவிடத்தில் முத்தமிட்டதை பத்தி பேசுறது வேற ..
பொதுவில் முத்தமிடல் பற்றி பேசுறது வேற....

கமெண்ட் போட்ட எவனையும் உங்க ஆத்தா உச்சி முகர்ந்ததில்லயாடா...
இல்லைன்னு எவனாச்சும் சொல்லுங்கடா பாப்போம்...

அதுவும் முத்தம்தாண்டா....

பொதுவில் முத்தம் பற்றி கருத்திட்ட ஒருத்தனோட தங்கையை பற்றி பேசுற முட்டா பயல்களா..... நீங்கலாம் என்னத்தடா கலாசாரம் பத்தி பொரிஞ்சி தள்ள போறீங்க.....

அசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் said...

இவை அனைத்தும் நாடகமே.எப்படியாவது TRP உயர வேண்டும்.அதற்காக மேலாடை இல்லாமல் வா என்றாலும் இவர்கள் தயார்.கேட்டால் கலை என்பார்கள்.முற்போக்கு என்பார்கள்.
எதிர்த்தால் பழைய பஞ்சாங்கம் என்பார்கள்.அது தான் பகுத்தறிவு.

Anonymous said...

நல்ல வேளை ஜெயஸ்ரீ யை எழுதச் சொல்லிக் கேட்டீர்கள். சுபத்ராக்களை எழுதச் சொல்லை, கவிதையால் கமல் டி.டி என்று எல்லோரையும் போட்டுத்தள்ளியிருப்பார்கள்.

சிந்திப்பவன் said...

தேவரின் வாழ்க்கையில்...
படித்து மெய் சிலிர்த்தேன்.அன்னாரின் மேல் நான் வைத்திருக்கும் மதிப்பு இப்பொழுது பக்தியாக மாறிவிட்டது.
பதர்களைப்பற்றி பேசி நேரத்தை வீணாக்குவதை விட இதைப்போல உயர்ந்த தானியங்களைப்பற்றி பேசி பல விஷயங்களையாவது தெரிந்து கொள்ளலாம்.
மிக்க நன்றி நண்பர்,ConverZ stupidity அவர்களே.

ConverZ stupidity said...

// சிந்திப்பவன் said...
தேவரின் வாழ்க்கையில்...
படித்து மெய் சிலிர்த்தேன்.அன்னாரின் மேல் நான் வைத்திருக்கும் மதிப்பு இப்பொழுது பக்தியாக மாறிவிட்டது.
பதர்களைப்பற்றி பேசி நேரத்தை வீணாக்குவதை விட இதைப்போல உயர்ந்த தானியங்களைப்பற்றி பேசி பல விஷயங்களையாவது தெரிந்து கொள்ளலாம்.
மிக்க நன்றி நண்பர்,ConverZ stupidity அவர்களே.//

நான் சொன்னது சாண்டோ சின்னப்ப தேவரை பற்றியது. முத்து ராமலிங்க தேவர் கடைசி வரை பிரம்மச்சாரியாக இருந்தவர்.

Anonymous said...

//ConverZ stupidity said.../
இரண்டு ஜெயஸ்ரீ, இரண்டு சுபத்ரா எல்லாம் போததென்று இரண்டு ஜெ.ஜெயசங்கரா.... தங்காது சாமி....... முடியலை.......அவ்...வ்..வ்..வ்.வ்..வ்.வ்.

Sundar said...

//கமலுக்கு 50 கோடி என்று தவறாக எழுதியதை பலர் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கமல், மற்றும் தொகுப்பாளினிகள் செய்த கூத்தை பற்றி பலர் ஒன்றும் சொல்லவில்லை. //

நீங்க மட்டும் என்ன காரணத்திற்கு வெற்றி பெற்ற பணம் போகிறது என சொல்லாமல் கட்டி புடிச்சத மட்டும் சொல்லி இருக்கீங்களே ?

சிந்திப்பவன் said...

நன்றி ConverZ stupidity ..
பிழைக்கு வருந்துகிறேன்.