பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 17, 2013

பாஸ்டன் குண்டு வெடிப்புப் பாடங்கள்

சமீபத்தில் பாஸ்டன் மராத்தன் ஓட்டப்பந்தயத்தில் நடந்த குண்டு வெடிப்பிலிருந்து சில முக்கியப் பாடங்களை இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக் கொள்ளும் என்று நம்பிக்கை இல்லாவிட்டாலும் சிலவற்றை குறிப்பிடுகிறேன்,

1. பொதுமக்கள் நடந்து கொண்ட விதம்.

கூட்டம் கூடி, உதவி செய்ய வருபவருக்கு இடைஞ்சல் பண்ணாமல் இருந்தது. குண்டு வெடிப்பில் காயமடைந்தவருக்கு உதவி செய்தது, நிலைமை chaotic-ஆகாமல் பார்த்துக் கொண்டது என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

2. காவல் துறை, மருத்துவக்குழு நடந்து கொண்ட விதம்

மிக மிக துரிதமாக குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு வந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் நடந்து கொண்ட விதம் ஆச்சரித்தை அளித்தது. அவர்களின் பயிற்சியும், தங்கள் பணியின் மேல் அவர்களுக்கிருந்த மரியாதையுமே அதற்குக் காரணம்.

3. அரசியல்வாதிகள், அரசு முக்கியஸ்தர்கள் நடந்து கொண்ட விதம்

காங்கிரஸ், பிஜேபி இன்னபிற கட்சி சார் அரசியல்வாதிகள் போல, ஒருவரை ஒருவர் வசை பாடாமல், அரசியல் செய்யாமல், ஜனநாயக, குடியரசுக் கட்சித் தலைவர்கள் நடந்து கொண்ட விதம், நாம் ஏன் இப்படி இருக்கிறோம், அமெரிக்கா ஏன் அப்படி இருக்கிறது என்று புரிய வைத்தது. குடியரசுக் கட்சித் தலைவர்கள் யாரும் ஓபாமாவோ, ஜனநாயகக்கட்சியோ தான் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று ஓலமிடவில்லை. பொதுவாக, குண்டு வெடிப்பை வைத்து மலிவு அரசியல் செய்யாமல், அதற்குக் காரணமானவர்களை கண்டு பிடிப்பது, மீண்டும் நிகழாமல் தடுப்பது ஆகியவையே முக்கியம் என்று புரிந்து நடந்து கொண்டதற்குக் காரணம், பொது நன்மை மேல் அவர்களுக்கிருந்த அக்கறை. யாரும் குண்டு வெடித்த இடத்துக்கு வந்து photo op-க்கு முயற்சிக்கவில்லை. 26/11 தாக்குதல் போது நடந்த கூத்து வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

4. மீடியா நடந்து கொண்ட விதம்

இந்திய மீடியாவுக்கும் இதில் பாடமிருக்கிறது. நமது அரசியல்வாதிகள், இது போன்ற சமயங்களில், மலிவு அரசியல் செய்வதற்கு மீடியாவும் ஒரு காரணம். பேனல் டிஸ்கஷன் என்ற பெயரில், அவர்களை ஏற்றி விடுவது, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை ஒளிபரப்பி, தங்கள் டிவி சேனலின் TRP-யை ஏற்றிக் கொள்ள முயற்சிப்பது, எதையும் sensationalize செய்து வெளியிடுவது என்று அலம்பல் செய்யாமல் இந்திய டிவி நியூஸ் மீடியா நடந்து கொண்டால் புண்ணியமாகப் போகும்.

இதை எழுதும்போது, பெங்களூர் மல்லேஸ்வரத்தில், குண்டு வெடித்த செய்தி டிவியில் வந்து கொண்டிருந்தது. காங்கிரஸின் ஷகீல் அஹமதின் பிரச்சினைக்குரிய ஒரு டிவீட்டை வைத்துக் கொண்டு, சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். பிஜேபி காங்கிரசுக்கு 3 கேள்விகளை முன் வைத்து எதிர் தாக்குதலைத் தொடங்கி விட்டது. ஆங்கில நியூஸ் மீடியா சேனல்கள் அந்த ஒரு டிவீட்டை வைத்துக் கொண்டு, குளிர் காய்வதையும் பார்க்க முடிந்தது. இவர்கள் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கையில்லை !

- எ.அ.பாலா

கடைசி பாடம்: எ.அ.பாலா ஐபிஎல் பற்றி எழுதினால் பின்னூட்டதில் அடுத்த குண்டு வெடிக்கும் :-)

12 Comments:

Anonymous said...

முக்கியமான பாடம் - வெறும் கண் துடைப்புக்காக குண்டு வெடிப்பு நடைபெற்ற உடனே நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவிகளை அதுவும் குறிப்பிட்ட மதத்தினரை கைது செய்து சித்தரவதை செய்யவில்லை

காத்தவராயன் said...

மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு - அனைவருக்கும் தெரியும் இது யாருடைய வேலை என்று! இதெல்லாம் பழைய ஸ்டைல் என்று பி.ஜே.பி காதில் சொல்லுங்கப்பா.......
குண்டு வச்சாலும் தேர்தலில் அவர்கள் பருப்பு வேகப்போவதில்லை.

Anonymous said...

All this will happen if and when India becomes a first world country.
Hmmm... we deserve our leaders

kothandapani said...

5.. பிலாகுகளும் பின்னுட்டங்களும்
ஒரு சில ப்ளாகுகள் உணர்ச்சியை தூண்டும் பின்னுட்டங்க்கல் வெளியிட்டு அலப்பரை செய்வதை அங்கு காண முடியாது.

Anonymous said...

The yellow comment is simply superb.
What a timing!!!

India and most of the Indians who live in India at at least 100 years away from standards of a developed country.

I am an Indian residing in a foreign country. The best hospitals here are the govt. hospitals. (just for an example).

We pray to the almighty Aranganathar for 1. Indian to develop. 2. Bala not to write IPL commentary.

Anonymous said...

Hilarious manjaL comment! Please post a blog on manjaL thuNdarin manaivi appearing as CBI witness!

Anonymous said...

காத்தவராயா பேருக்கேத்த உருவம் சில பேருக்குத் தான் தம்பி வாய்க்கும். நீ கொடுத்து வச்சவன்.

குறிப்பிட்ட மதத்தின் ஒட்டிற்காக அவர்களைக் கையும் களவும் பிடித்தால் கூட கட்டி பிடி வைத்தியம் செய்யாமலிருப்பது அமெரிக்காவின் ஸ்டைல். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உப்பு தின்னா தண்ணீ குடிக்கனும் அமெரிக்காவிலே.

இதையெல்லாம் இந்தியாவில கொண்டுவரனும்னா நல்லவங்க அரசியலுக்கு வரனும். நாதாரிங்களை ஒதுக்கி இந்தியாவை காக்க ஜெ.ஜெ அண்ணா நீங்க அரசியலுக்கு வாங்க....

தொண்டர் கூட்டம் ரெடி நீங்க ரெடியா

ஆராவமுதன்
ஜெயசங்கரன் ஜெ பறக்கும் படை

jaisankar jaganathan said...

ஆறாவது அமுதா,
நான் அரசியல்ல ஏற்கனவே இருக்கேன். 3 தடவை ஓட்டு போட்டிருக்கேன்

Anonymous said...

intha paadam mattum vaendam.. Mr.karuthu vadai

http://www.kpopstarz.com/articles/25223/20130416/boston-looting-after-marathon-bombing-no-shame.htm

Anonymous said...

//ஆறாவது அமுதா//

அரசியல் தலைவர்கள் தொண்டர்களை நடத்துவது போலவே என் பெயரை இவ்வளவு மட்டமா எழுதியிருக்கியே , நீ கண்டிப்பா அரசியலில் தான் இருக்கே தலைவா...

நீரடித்து நீர் விலகாது.. நீதான் என் தலைவன் .....புறப்படு எடு தார் சட்டியை.

ஜெய் செயசங்கரா...

ஆராவமுதன்
தலைவர்
ஜெயசங்கரன் ஜெ பறக்கும்படை

jaisankar jaganathan said...

ஆராவமுதன்
உங்க தொண்டு என்னை புல்லரிக்க வச்சுடுச்சு. கண் கலங்கிட்டேன். அடுத்த ஆட்சி நம்ம்மோடதுதான்

jaisankar jaganathan said...

//புறப்படு எடு தார் சட்டியை./

தார் சட்டியை எடுத்துட்டு போய் என்ன பண்ணுறது. பிச்சை எடுக்கக்கூட உதவாது. அதுக்கு பதிலா மண் சட்டி எடுத்துட்டு போய் பிச்சை எடுக்கலாம்