பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 16, 2013

நீங்களும் என்னை கட்டிபிடிக்கலாம் நிகழ்ச்சி

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சிறப்பு நிகழ்ச்சியில் 'கமல்-கவுதமி' சகிதம் வந்திருந்தார். கமல் 50 கோடியும், அவரை சுற்றி வட்டமாக வயசான டிவி அறிவிப்பு செய்யும் பெண்கள் கமலை கட்டிப்பிடித்து சிலர் முத்தம் கூட கேட்டு வாங்கிக்கொண்டு போனார்கள்.

சிக்னலில் ஒருவன் வண்டி ஆஃப் ஆகும் போது பல நூறு எதிரிகளை சம்பாதிக்க நேரிடுவது மாதிரி கமல் செய்த இந்த கட்டிப்பிடி டிவி பார்த்த பல ஆண்கள் பலருக்கு எரிச்சலை தந்தது. பெண்கள் பொறாமைப்பட்டார்கள்.

இட்லிவடைக்கு இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு சில டவுட்டுகள் வந்தது.

* கமலுக்கு பதில் விடிவேலு அல்லது விஜயகாந்த வந்திருந்தால் இதே மாதிரி அலை மோதி கட்டிப்பிடுத்திருப்பார்களா ?

* கமலுக்கு பதில் அங்கே ஒரு பெண் பிரபலம் வந்திருந்தால் ஆண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கேட்டால் சமுகம் என்ன சொல்லும் ?

* ஜெ பதில் என்ன ? ( ஜெயமோகன் இல்லைப்பா ஜெயஸ்ரீ )

* * * 

தினமணியில் வரும் மதியின் கார்டூன் நாளுக்கு நாள் ஒரு படமும் கீழே ஒரு முழத்துக்கு கட்டுரையும் வருகிறது. இதை கார்டூன் என்பதற்கு பதில் கட்டுரைடூன் என்று சொல்லலாம். சமீபத்தில் தமிழக மின்சார வாரியம் பற்றி ஒரு கார்டூன் கண்ணில் பட்டது கார்டூனுக்கு இதுவே சிறந்த உதாரணம்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் PB ஸ்ரீநிவாஸ் அஞ்சலியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நடுவர் புகழ் ஸ்ரீநிவாஸ் பற்றி எழுதியது காமெடி. விடுவார்களா ஃபேஸ் புக், டிவிட்டர் மக்கள் ? போட்டு தாளித்து எடுத்துவிட்டார்கள். மாண்டலின் ஸ்ரீநிவாஸ் எல்லாம் இவர்களுக்கு தெரியாமல் போனது விந்தை. சரி கடைசியாக அவர்களும் மன்னிப்பு கேட்டு விட்டார்கள். விட்டுவிடலாம்.

* * *


நேற்று சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் துவங்கிய புத்தக கண்காட்சியின் முதல் நாள் மிகக் குறைந்த தொகைக்கான விற்பனையில் உயிர்மை சாதனை படைத்தது. நேற்றைய விற்பனை 700 ரூபாய் என்று கவிஞர், எழுத்தாளர், டிவி விவாகஸ்தர், பதிப்பாளர், ஃபேஸ்புக் ஸ்டேடஸ் புகழ் மனுஷ்யபுத்திரன் சோகமாக தன் ஃபேஸ் புக்கில் ஸ்டேடஸ் போட்டிருக்கிறார். போன வார குமுதம் இதழில் வாசகர் கடிதத்திலும் இவர் பெயர் வந்திருந்தது. இங்கேயும் வந்துவிட்டாரா என்று குமுதம் ஆபிஸுக்கு போன் செய்த போது அவர்கள் அது மனுஷ்யபுத்திரன் இல்லை கடிதம் எழுதியவர் அமானுஷ்ய புத்திரன் என்றார்கள். நான் தான் 'அ' பார்க்கவில்லை

அ என்றவுடன் அஞ்சலி தான் நினைவுக்கு வருகிறார். கண்ணீர் அஞ்சலி சரி, ஆனால் அஞ்சலியே கண்ணீராக ... இப்ப தான் பார்க்கிறோம். 

14 Comments:

Unknown said...

//* கமலுக்கு பதில் அங்கே ஒரு பெண் பிரபலம் வந்திருந்தால் ஆண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கேட்டால் சமுகம் என்ன சொல்லும்?//

சொக்கா சொக்கா இந்த அறிவு எனக்கு இல்லாம போச்சே

Anonymous said...

இதையே சற்று மாற்றி எழுதி முனியாக பறிமாறியிருக்கலாமே?

Anonymous said...

அன்னிக்கு குஷ்பு சொன்னத ஏதோ மகா தப்பு செஞ்சுட்ட மாதிரி
சத்தம் போட்டவங்க எல்லாமே இப்ப என்ன சொல்வாக... எங்ஙன இருக்காக...

இங்க ஒரு குடும்பப்பொண்ணு யோவ் ..புருசா.. நீ கொஞ்சம் தூரப்போ..
ஜெலசி உனக்குன்னு வேற சொல்லிட்டு , டிமான்ட் பண்ணி
கமலுகிட்ட வாங்கிக்கிட்டு போவுதே... ஹக்...

யோவ்.. அத பாக்க குடுத்து வைக்கணும் அய்யா...

ஏழு வருட வாசகன்.. said...

இட்லி, டைட்டில் மாத்தி இருந்தா ஒரு முனி-இட்லி லெட்டர் ஆகிருக்கும்..

அப்படியே, கொஞ்சம் காரமா இன்னும் நியூஸ் கிடைச்சிருக்கும்..

பிரபு சங்கர் said...

ஆண் மக்களின் வயறு எரிவதை நல்லாவே புரிஞ்சிக்க முடியுது

Anonymous said...

it's not 50 crores, it's 50 lakhs bro...please change line 2

Anonymous said...

வெறுமனே கட்டித்தானே பிடிச்சோம். அதுக்கே இவ்ளோவா? கட்டிப் பிடிக்கக் கூடியவர் தான் அவர். வயதானவர். ஆனா அஜீத் வந்திருந்தா நாங்க நிறையவே யோசிச்சிருப்போம். புரியுதா?

Anonymous said...

தொகுப்பாளினி அலையலாம் ஆனா எங்க தங்கத் தலைவன் அலைதல் தகுமா.

ஆராவமுதன்
ஜெயசங்கரன்.ஜெ. பறக்கும் படை

Anonymous said...

HERE WAS HYPOCRICY AT ITS BEST.
THE MAN ,KAMAL WAS TELLING PEOPLE MUST FACE ALL DIFFICULTIES COURAGEOUSLY.
JUST FOR A TEMPORARY BAN OF HIS FILM, THAT TOO IN TAMILNADU, A SINGLE STATE HE CRIED BEFORE THE TV AND SWORE HE WILL SHIFT RESIDENCE TO A MORE TOLERANT STATE.
HERE WAS A MAN WHO WAS WILLING TO CHANGE COLOURS FOR MONEY.
HIS MOVIE WOULD HAVE BEEN A FLOP BUT FOR THE BAN.
EVERYONE SAW WITH A VENGEANCE AS IF HE HAS BEEN PERSONNALY HARMED.
HERE WAS A MAN TALKING OF INTELLUUCTUAL HONESTY. ALL HIS FILMS ARE DOWNRIGHT COPYING OF WESTERN MOVIES. ENOUGH MATERIAL IA ALREADY AVAILABBLE ON THIS MATTER. IDONT WANT TO COPY, PASTE.
IT WAS A CULTURAL BREAKDOWN OF THE FIRST ORDER.
IT IS A PITY NONE OF THE MEDIA COMMENTED ON IT.
THE DAY IS NOT FAR OFF WHEN VIJAY TV WILL SCREEN BLUE FILMS FOR TRP RATINGS.
MAY GOD SAVE ALL OF US.

Anonymous said...

HERE WAS HYPOCRICY AT ITS BEST.
THE MAN ,KAMAL WAS TELLING PEOPLE MUST FACE ALL DIFFICULTIES COURAGEOUSLY.
JUST FOR A TEMPORARY BAN OF HIS FILM, THAT TOO IN TAMILNADU, A SINGLE STATE HE CRIED BEFORE THE TV AND SWORE HE WILL SHIFT RESIDENCE TO A MORE TOLERANT STATE.
HERE WAS A MAN WHO WAS WILLING TO CHANGE COLOURS FOR MONEY.
HIS MOVIE WOULD HAVE BEEN A FLOP BUT FOR THE BAN.
EVERYONE SAW WITH A VENGEANCE AS IF HE HAS BEEN PERSONNALY HARMED.
HERE WAS A MAN TALKING OF INTELLUUCTUAL HONESTY. ALL HIS FILMS ARE DOWNRIGHT COPYING OF WESTERN MOVIES. ENOUGH MATERIAL IA ALREADY AVAILABBLE ON THIS MATTER. IDONT WANT TO COPY, PASTE.
IT WAS A CULTURAL BREAKDOWN OF THE FIRST ORDER.
IT IS A PITY NONE OF THE MEDIA COMMENTED ON IT.
THE DAY IS NOT FAR OFF WHEN VIJAY TV WILL SCREEN BLUE FILMS FOR TRP RATINGS.
MAY GOD SAVE ALL OF US.

vsankar said...

Permissiveness showing its ugly head

ஜெயஸ்ரீ சாரநாதன் said...

நீங்கள் எந்த ஜெயஸ்ரீயைக் கேட்டீர்களோ தெரியாது, நானும் ஜெயஸ்ரீதான், அதனால் சொல்கிறேன். தொகுப்பாளினிகள் செய்தது பயங்கர வழிசல். (நான் DD செய்ததை மட்டும்தான் பார்த்தேன்.). அதற்கு மேல் பார்க்கப் பொறுமை இல்லை. என் கட்டுரைகளே தேவலாம், கமலஹாசன் பேச்சைக் கேட்டால் கண்டிப்பாகத் தூக்கம் வந்து விடும். காதல் இளவரசன்னு ஒரு பட்டம் வேறு இருக்கே, அதற்கு ஒப்பேத்த அப்படி சீன் போட்டுருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆர்ட்டிபிஷியலா இருந்தது.

இப்படிச் சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீபத்தில் சென்னை டைம்ஸில் சுருதி ஹாசன் பேட்டி அளித்திருந்தார். அதில் கமலது ரசிகர்கள் டிக்னிடியுடன் நடந்து கொள்பவர்கள் என்று சொல்லியிருந்தார். அதாவது கமலுடன் வெளியில் செல்லும் போது, அவரைப் பார்க்கும் ரசிகர்கள், ஏதோ காணாததைக் கணட மாதிரி நடந்து கொள்ளாமல், இயல்பாக முகமன் கூறிச செல்வார்கள் என்றிருக்கிறார். உண்மையான ரசிகர்கள் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். டிவியில் கண்டது ஒரு ஷோ. உண்மையில் கமலுக்குப் பெண் ரசிகர்கள் குறைவு என்பது என் கருத்து - probably except Gauthami. மூன்று முடிச்சு காலத்தில் இருந்திருக்கலாம், இப்பொழுது இல்லை என்று நினைக்கிறேன்.

dearlux said...

Patha vechutiye Parattai !
http://tamil.oneindia.in/movies/television/2013/04/complaint-against-vijay-tv-kamal-gouthami-prakashraj-174070.html

Anonymous said...

@ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கு, ஸ்ருதி ஹாசன் சொன்னது ரசிகர்களை பற்றி மட்டும் இருக்குமோ ? ரசிகைகளை அவர் சேர்த்திருக்க மாட்டார் ! ஏனென்றால், அவருக்கு விஷயம் தெரியும் !!!!
- கல்யாணராமன் S.