பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 15, 2013

கடவுள் வந்திருந்தார் - நாடகம் - அறிவிப்பு

இட்லிவடை நண்பர்களே,

இதோ.....சென்னை அரங்கம் மேடையேற்றும் ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகத்தின் அழைப்பிதழ் உங்கள் கையில். மேள தாளத்தோடு, வெற்றிலை பாக்கு சகிதம் உங்களை அன்போடு அழைக்கிறேன். நாடக ஆர்வலர்கள் அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.

IPL கிரிக்கெட், குழந்தைகள் பரீட்சை, டி.வி.யின் ’விடுமுறை தினக்கொண்டாட்டங்கள்’ அனைத்தையும் மறந்து, வரும் 23, 24-ம் தேதி மாலை ம்யூசியம் தியேட்டரை நிரப்ப வாருங்கள். உங்கள் உன்னதமான மன மகிழ்ச்சிக்கு நாங்கள் ‘கேரன்டீ’! எண்பதுகளில் நான் தில்லியில் பலதடவை போட்ட எனக்குப்பிடித்த நாடகம். சுப்புடு ”60 Laughters a Minute!” என்று தலைப்பிட்டு தில்லி ஸ்டேட்ஸ்மனில் விமர்சனம் எழுதினார். முப்பது வருடத்திற்குப்பிறகும் அதே கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறேன்.

ஒரு நல்ல நாடகம் போடுவது ஒரு கல்யாணம் பண்ணிப்பார்ப்பதையும், வீடு கட்டுவதையும் விட சிரமமான காரியம்!

அனைவரும் வாருங்கள்!............ஊர் கூடி தேர் இழுப்போம்!

அன்புடன்,

பாரதி மணி
6 Comments:

BalajiS said...

Sir,
Please perform this once in bangalore.

Thanks in Advance.

Regards,
Balaji S

BalajiS said...

Sir,
Please perform this in Bangalore once.

Or
Webcast live ofcourse for some charge, so that people from all around world can watch it.

Regards,
Balaji

Anonymous said...

All The best

நல்லூரான் said...

திரு பாரதி மணி ,
இந்த அரிதான நிகழ்வை வார இறுதி நாளில் வைத்திருக்கலாமே.. என் போன்ற பெரும்பாலானோர் பயன் பெறுவரே ?

Adien Ramanuja Dasan said...

சீனி மாமா, ஜோ, மாமி. மூவரும் நன்றாக நடித்திருந்தார்கள். பாரதி மணி அனாயாசமாக நடித்து புத்தகத்தில் படித்த அதே சீனி மாமாவை கண்முன்னே கொண்டுவருகிறார். இந்த வயதில் இந்த மெனக்கேடு ஆச்சர்யம்தான். பிராமண தமிழ் நீங்கலாக சுந்தரிடம் ஒரு குறையுமில்லை. வசுமதி பல இடங்களில் அதிதான் அதினாலதான் என்கிறார் (முறையே அதுதான் அதனால). பிராமண தமிழோ சுத்தம்!... இந்த பெண் தொடர்ந்து நாடகங்களில் நடித்தால் சோபிப்பார். மற்றபடி வேறெந்த குறையுமில்லாத நிறைவான நாடகம். நேரமோ 15 நிமிடங்களுக்குமேல் தாமதிக்காமல் 6.30க்கே தொடங்கிவிட்டார்கள். இன்று பார்க்கவிருப்பவர்கள் 6.15க்கே போவது நலம்.