பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 13, 2013

விஜய வருஷம் ஜெகத் உலக பலன்கள்

வெற்றிகளைக் குவித்து நினைத்தது நடந்து இனிக்கும் விஜய வருஷம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறக்கிறது. பிறக்கப் போகும் புத்தாண்டில் செல்வங்கள் சேரவும், சிறப்புடன் வாழ்ந்து மகிழ்ச்சியான தருணங்களை எதிர்கொள்ளவும், இயற்கை அன்னை சீற்றம் எதுவும் கொள்ளாமல் இருக்கவும், நலமும், வளமும் நாட்டில் மேலோங்கவும், புத்தாண்டின் தொடக்க நாளில் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டை மேற்கொள்வது அவசியமாகும்.


விஜய வருஷம் ஜெகத் உலக பலன்கள்


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/02.html


பொது ராசி பலன்கள்:


மேஷம்:

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ இராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள்.

மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/03.html
விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 03 - மேஷ ராசி பலன்கள்
ரிஷபம்:
சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! நீங்கள் இராப்பகல் பாராமல் உழைப்பதில் வல்லவர். காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்பவர். தன்னை விட தங்கள் குழந்தைகள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புபவர்கள்.


மேலும்:விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 04 - ரிஷப ராசி பலன்கள்
http://kuppuastro.blogspot.in/2013/04/04.html

மிதுனம்:

எதிலும் நிதானத்தைக் கடைபிடித்து காரியங்களை கரை சேர்க்கும் மிதுன ராசி வாசகளே நீங்கள் எதிலும் உங்கள் அறிவை வெளிக்காட்டுபவர். உங்களுடைய சாதுர்யத்தால் காரியங்களை சாத்த்துக் கொள்வீர்கள். இன்முகம் காட்டாது அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள்.

மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/05.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 05 - மிதுன ராசி பலன்கள்


கடகம்:
எதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடும் கடக ராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கி விரோதமான காரியத்தை செய்யமாட்டீர்கள் நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்குமுன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள்


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/06.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 06 - கடக ராசி பலன்கள்
சிம்மம்:
எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/07.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 07 - சிம்ம ராசி பலன்கள்கன்னி:

எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/06_9.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 08 - கன்னி ராசி பலன்கள்

துலாம்:

எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அதிகம் சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் சின்ன சின்ன பிரச்சனைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/09.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 09 - துலாம் ராசி பலன்கள்விருச்சிகம்:

எதிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெற்றிகளைக் குவிக்கும் விருச்சிக ராசி வாசகர்ளே நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள தயங்குவீர்கள். உங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்வீர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/10.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 10 - விருச்சிகம் ராசி பலன்கள்தனுசு:

எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும் உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/11.html
விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 11 - தனுசு ராசி பலன்கள்

மகரம்:

எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின் மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள்.மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/12.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 12 - மகரம் ராசி பலன்கள்

கும்பம்:

கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கும் கும்ப ராசி வாசகர்களே நீங்கள் புது தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/13.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 13 - கும்பம் ராசி பலன்கள்மீனம்:

கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.


மேலும்: http://kuppuastro.blogspot.in/2013/04/14.html


விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 14 - மீனம் ராசி பலன்கள்


பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

எல்லோருக்கும் 'தமிழ்' புத்தாண்டு வாழ்த்துகள்

6 Comments:

jaisankar jaganathan said...

நன்றி,
ஜோசியர பகைச்சுக்க முடியுமா?

R. J. said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அவ்வளவாகப் பலனளிக்கவில்லை. இந்த தமிழ் புத்தாண்டாவது எல்லோருக்கும் நன்மை பயக்கட்டும். ஊர் அறிந்த குற்றவாளிகள் உடனடி தண்டனை பெற்றாலே எல்லோருக்கும் நன்மை! - ஜெ.

s suresh said...

இனிய தமிழ் புத்தாண்டுவாழ்த்துக்கள்! நன்றி!

Anonymous said...

/// ரவி said...
காம்பஸ் இன்டர்வியு , வேலைவாய்ப்பு , கல்லுரி அட்மிஷன் இது போல உருப்படியான கட்டுரைகளை தந்தாள் பயனாக இருக்கும். ///
.
.
அந்த விஷயங்களை எல்லாம் சிறிது நேரமாவது மறக்கத்தான் இங்க வர்றோம்..இங்கயும் அதையே எழுதினால் வெளங்கிடும்...அதற்குதான் ஒவ்வொரு நாளிதழும் கல்வி மலர் என்னும் இணைய தளம் நடத்துகிறதே?அங்கு செல்லலாமே?இட்லி வடை நண்பரே தயவு செய்து அரசியலை தொடர்ந்து எழுதவும்.

April 11, 2013 4:06 PM///

இந்த இட்லி வடை ரசிகர்களுக்கு பிடித்த அரசியலில் சில கேள்விகள் . இதையாவது பொறுமையாக படித்து விமர்சிக்கவும்.

///jaisankar jaganathan said...
அஞ்சலிய காணமாம். 2 படம் போட்டு எங்க வயிற்றை குளிர வைங்க இட்லிவடை///(அஞ்சலி வந்துவிட்டார்)

இந்த இட்லி வடை ரசிகர்களுக்கு பிடித்த அரசியலில் சில கேள்விகள். இதையாவது பொறுமையாக படித்து விமர்சிக்கவும்.
நான் அரசியல் சார்பில்லாத பொது மக்களில் ஒருவன். எதை எடுத்தாலும் பழைய அரசை குறை சொல்லி திருப்தி அடைவதை விட்டு விட்டு சற்று சிந்தித்து பாருங்கள் . இந்த அரசு மூன்று வருடங்களை முழுங்கி விட்டது

பத்திரிகைகள் கிளப்பிய / மறந்த விஷயங்கள் :
புது பாடத்திட்டம் , ( பழைய பாடத்திட்ட புது புத்தகம்- பணம் யார் கொடுத்தது?)
புது மருத்துவமனை(தலைமை செயலக கட்டிடத்தில் - டாக்டர் நியமனம்,உபகரண கருவிகள், மருந்துகள்,சோதனை சாலைகள், வாங்கியாச்சா?
உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக(நிஜமாக) எப்போது செயல் பட ஆரம்பிக்கும்?
புது நூலகம்(அண்ணா நூலகத்துக்கு பதில் - கட்டிடம்,புது பத்தகங்கள் வாங்கியாச்சா?)
பால் விலை ,பஸ் கட்டண உயர்வு மின்சார கட்டண உயர்வு,
மின்வெட்டு ,புது மின்சார நிலையங்கள் எத்தனை கட்டினீர்கள்? எவ்வளவு முதலீடு?
எப்போது மின்வெட்டு முழுமையாக நீங்கும்?
எப்போது தினசரி திருட்டு கொலை களவு நகை திருட்டு முடிவுக்கு வரும்
அரசு ஆதரவு போராட்டங்கள் ( இலங்கை, விஸ்வரூபம் முதலான ) இன்னமும் உண்டா?முடிந்ததா?
தமிழக மந்திரிகள் யார் யார், அவர்களுக்கு என்ன இலாக்கா? எந்த மாணவனாலும் சொல்ல முடியுமா
அரிசி முதலான அணைத்து பொருட்களும்கடும் விலைவாசி உயர்வு? அல்லது
தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு ரூபாய் இட்லி தரப்படுமா?
இவைகளில் ஏதேனும் ஒன்று கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் கடுமையாக விமர்சிக்கும் பத்திரிகை மற்றும் மீடியாக்கள் அமைதி காக்கும் மர்மம் என்ன?

Munish said...

Perfect copy paste... This year is Vijaya... hope last year was nandana...

Intha polapuku...

பெண்மணிகளுக்கு இந்த நந்தன ஆண்டில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.

Anonymous said...

என்னுடைய ராசிக்கு நாலு ராசி தள்ளி பலன் பார்த்தாலும் சரியாக உள்ளதே, அது எப்படி?