பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 08, 2013

எனக்கு இட்லி ரொம்ப பிடிக்கும் - ஹன்சிகா

வட மாநிலங்களில் இருந்து, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வரும் நடிகைகளுக்கு, பெரும் தலைவலியாக இருப்பது, உணவு விவகாரம் தான். வட மாநிலங்களில், சப்பாத்தி சாப்பிட்டு பழக்கமான நடிகைகள், இங்கு வந்ததும்,இட்லியையும்,தோசையையும் சாப்பிட வேண்டியிருக்கும். பெரும்பாலான நடிகைகளுக்கு, இட்லி, தோசையின் சுவை, ஒத்து வருவது இல்லை. ஆனால், கோடம்பாக்கம், பப்ளிமாஸ், ஹன்சிகாவுக்கு இந்த பிரச்னையே இல்லை. ஹன்சிகா, இட்லி பிரியை. சுவையான சட்னி வகையறாக்களுடன், மல்லிகைப் பூ போன்ற இட்லிகளை, சுடச் சுட, பரிமாறினால்,ஒரு சில நிமிடங்களிலேயே, ஏகப்பட்ட இட்லிகளை காலி செய்து விடுவாராம்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "சின்ன வயதில் இருந்தே, இட்லி என்றால், எனக்கு கொள்ளை பிரியம். என் தோழிகள் கூட, கிண்டலடிப்பர். என் தாயாரும், "நீ, தமிழ் நாட்டில் பிறந்திருக்க வேண்டிய பெண் என்பார். எனக்கும், இட்லிக்கும் உள்ள தொடர்பு, இப்போது ஏற்பட்டதல்ல, அது, என், பள்ளி பருவ காலத்திலேயே ஏற்பட்டது என்கிறார், ஹன்சிகா.
( தகவல் உதவி: தினமலர் )
வடை பிடித்த நடிகைகள் யாராவது இருக்கிறார்களா என்று தேட வேண்டும்.

9 Comments:

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

நல்லா கேளுங்க சார்.......

தெளிவா கேளுங்க சார்....

ஒரு வேளை இட்லிவடை ப்ளாக் ஸ்பாட் பிடிக்கும்ன்னு சொல்லியிருக்க போறாங்க...

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

//// ஹன்சிகா, இட்லி பிரியை. சுவையான சட்னி வகையறாக்களுடன், மல்லிகைப் பூ போன்ற இட்லிகளை, சுடச் சுட, பரிமாறினால்,ஒரு சில நிமிடங்களிலேயே, ஏகப்பட்ட இட்லிகளை காலி செய்து விடுவாராம்./////////

எவ்வளவு இட்லி எனும் கணக்கு சொன்னால் இன்னும் தன்யனாவேன்....

நாட்டிற்கு தேவையான நல்ல தகவல்களை அள்லித் தருவதில் வல்லவரான இட்லிவடையே... உங்களை போல... ரெண்டு பேர்... வேண்டாம் வேண்டாம் நீர் ஒருவரே போதும்..........

இருந்தால்....... நாறி... சாரி............ நாடு உருப்படும்...

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

குஷ்புவுக்கு இட்லி கொடுத்த தமிழர் கூட்டம் ஹன்சிகாவுக்கு என்ன கொடுப்பார்களோ...........

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

/// "சின்ன வயதில் இருந்தே, இட்லி என்றால், எனக்கு கொள்ளை பிரியம். என் தோழிகள் கூட, கிண்டலடிப்பர். என் தா/////////////////

யோவ்.............. என்னத்தான் சொல்றா... என்னத்தான் சொல்றான்னு ஜொள் விட்டுட்டு போட்ட போஸ்டிங் மாதிரியே இருக்குது........

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே...

காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே...

வடை said...

எனக்கு ஹன்சிகா ரொம்பப் பிடிக்கும்.

santha said...

இவ்வளவு மொக்கையா ஒரு போஸ்ட் போட்டு ஏன் நேரத்தை வீணடிக்கிரீர்கள் ?

it is just waste of time for the publisher and reader.

jaisankar jaganathan said...

இட்லிவடை,
இட்லிவாங்கி கொடுத்து ஹன்சிகாவை கரக்ட் பண்ணுவது எப்படின்னு ஒரு புக் போடுங்க

சுபத்ரா said...

Very good information :-)

VSK said...

Much needed info of the hour. Keep up your service.