பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 28, 2013

சன்டேனா இரண்டு (28-4-13) செய்திவிமர்சனம்


இந்த வாரம்..... ஒரு தனியார் பள்ளியின் உலக சாதனைகள், அரசுப்பள்ளியில் மாற்றங்கள்.

செய்தி # 1

மதிப்பெண்களை தாண்டி வேறு எதைப்பற்றியும் இன்றைய பள்ளிகள் சிந்தித்துக்கூடப் பார்ப்பதில்லை. மாணவர்களை வெறும் மனப்பாட இந்திரங்களாக உருவா​​க்குதலில் தனியார் பள்ளிகளிடையே ஒரு பெரும் போட்டியே நடைபெற்று வரும் சூழலில், புதுச்சேரியில் இயங்கிவரும் தனியார் பள்ளியான ஆச்சாரியா சிக்ஷா மந்திர் ஒரு புதிய சாதனை(களை) படைத்து இருக்கிறது.

இந்த பள்ளியின் மாணவர்கள் எலைட் நிறுவனம் நடத்திய சோதனைகளில் கலந்துகொண்டு, 154 விதமான உலக சாதனைகளை படைத்து இருக்கிறார்கள். அந்த பள்ளியில் படிக்கும் எனது நண்பர் ஒருவரின் மகன் எட்டு உலக சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஒரு பார்வையாளனாக அந்த பள்ளிக்கு சென்று, சாதனைகளை நேரில் கண்டு பிரமித்து போனேன்.பத்தாம் வகுப்பு படிக்கும் எனது நண்பரின் மகன் கே.பிரித்வியின் பதினாறு வயதிற்க்கு உட்பட்டவருக்கான சாதனைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

ஒரே அளவுள்ள பென்சில்களை இரண்டாக உடைக்கும் போட்டி. பத்து நிமிடங்களில் 400 பென்சில்களை உடைக்கவேண்டும். பிரித்வி உடைத்தது அந்த பத்து நிமிடங்களில் 617 பென்சில்கள்.

பேப்பர் ஏரோ செய்யும் போட்டி. மூன்று மணி நேரத்தில் 400 ஏரோக்கள் செய்யவேண்டும், ஆனால், இவர் செய்து முடித்தது 1076 பேப்பர் ஏரோக்கள்.

டிஷ்யு பேப்பர்களை கொண்டு தரையில் உருவம்(மொசைக்) உருவாக்குதல். கொடுக்கப்பட்டது ஆறு மணிநேரம். மூன்றரை மணி நேரத்தில் 25 ஸ்கொயர் மீட்டர் அளவில் சாதனையை நிகழ்த்திவிட்டார் பிரித்வி.

உலகிலேயே நீளமாக செப்டி பின்களை கோர்க்கும் சாதனை. மூன்று மணி நேரத்தில் 40 மீட்டர் நீளத்திற்க்கு செயினை உருவாக்கவேண்டும். 71.65 மீட்டர் நீளமுள்ள செயினை, செப்டி பின்களை கொண்டு உருவாக்கிவிட்டார் இவர்.

உலகிலேயே உப்பினை கொண்டு, தரையில் உருவம் உருவாக்கும் சாதனை. எலைட் நிறுவனத்தின் லோகோவை 16 ஸ்கொயர் மீட்டர் அளவில் உருவாக்க கொடுக்கப்பட்ட கால அளவு ஆறு மணி நேரம். சாதனையை நிகழ்த்த இந்த மாணவர் எடுத்துக்கொண்ட கால அளவு 5.15 மணி நேரம் மட்டுமே,

உலகிலேயே குறைந்த மணி நேரத்தில் அதிக ஒவியங்கள் வரையும் சாதனை (poster colours in cloth of 50cm x 35 cm). பத்து மணி நேரத்தில் 40 ஒவியங்களை வரையவேண்டும், 45 ஒவியங்களை வரைந்து அசத்திவிட்டார் பிரித்வி,

அடுத்ததாக மெழுகுவர்த்திகளை உலகிலேயே மிகப் பெரிய உருவம் உருவாக்குதல். 10.5 மணி நேரத்தில் 9 ஸ்கொயர் மீட்டர் அளவில் உருவத்தை உண்டாக்கினார் இவர்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, மூன்று நாட்களில் இந்த 7 உலக சாதனைகளை செய்து இருப்பதும் ஒரு சாதனையாக எலைட் நிறுவனத்தால் அங்கீகரிப்பட்டுள்ளது.

இது போன்றே மற்ற 147 உலக சாதனைகளும் இந்தப்பள்ளியில் கடந்தவாரம் நடந்தேறி உள்ளன.

"முழுக்க முழுக்க உப்பினை கொண்டு உருவம் உருவாக்கும் போது மகனின் நக்கண்களில் இருந்து ரத்தமே வந்துவிட்டது" என்றார் என் நண்பர்.

பதிவின் படத்தில் இருப்பது அவர் குடும்பமே. மாணவர் பிரித்தியுடன் கைகுலுக்குபவர் அரவிந்தன், அந்தப்பள்ளியின் இயக்குனர்.

எதற்காக இவ்வாறு விலாவரியாக எழுதினேன் என்றால், இதை பார்த்தாவது மற்றப்பள்ளிகள், படிப்பு படிப்பு என்று மாணவர்களை எந்திரங்களாக்காமல், அவர்களின் விளையாட்டு,கலை போன்ற திறமைகளுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்பதற்க்காகத்தான். பெற்றோர்களுக்கும் சேர்த்து இது பொருந்தும்.

செய்தி # 2"பொதி சுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா?"

- இது ஒரு பாடல் வரி.

மாணவர்கள் கல்வி கற்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருவதாக பின்வரும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் திரு.பொன்.குமார்.

பொன்.குமார், ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராகப் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) பணிபுரிந்தவர்.

காலந் தோறும் கல்விமுறை என்பது மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் முன்பாகக் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் சொல்லக்கூடியவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வுகளில் முறைபிறழாமல் எழுதுவது என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இத்தகைய படைப்பூக்கமற்ற கல்விமுறையை மாற்றும் முயற்சிதான் செயல்வழிக்கற்றல் முறை.

தொடக்கக் கட்டச் சுணக்கத்தைக் கடந்து தற்போது நம் கல்விமுறையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த முறை.

வசீலி கெம்லன்ஸ்கியின் ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்னும் ரஷ்யப் புத்தகம் குறிப்பிடுவதைப் போல் குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் ஒரு கல்விமுறையாகக் கல்விச் செயல்பாடுகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன.


பள்ளிக்கு வந்தவுடன் வானவில் செயல்பாடு என அழைக்கப்படும் ஓர் அட்டையை எடுத்துவந்து ஒன்றாகக் கூடி அதிலுள்ள பாடல்களைப் பாடத் தொடங்குகின்றனர் மாணவர்கள். கற்றல் இப்படித்தான் ஒரு கொண்டாட்டமாகத் தொடங்குகிறது. பிறகு அவர்களுக்குரிய குழுவில் அமர்கின்றனர். ஒவ்வொரு குழுவுக்கு முரிய பாடங்கள் அட்டைகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அவரவர் தேவைக்கேற்றபடி பாடங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர்.

பழைய கல்விமுறையில் ஆசிரியர் தன் திட்டப்படி ஒரு பாடத்தை நடத்தத் தொடங்குவார். மாறுபட்ட ஏற்றத் தாழ்வான கற்கும் திறன்களைக் கொண்ட அனைத்துக் குழந்தைகளும் அந்தப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருப்பர். கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும்போது ஆசிரியரும் மேம்பட்ட கற்றல் திறன் கொண்ட குழந்தைகளும் அடுத்த பாடத்துக்கு நகர்ந்து சென்றிருப்பர். செயல்வழிக்கற்றல் முறை இதிலிருந்து முற்றாக வேறுபட்டது. மேம்பட்ட கற்றல் திறன்கொண்ட குழந்தைகள் அடுத்த பாடத்தைக் (அதாவது அட்டையை) கற்கத் தொடங்குவர்.

மெதுவாகக் கற்பவர்கள் பதற்றமின்றி, தமக்கான பாடங்களைக் கற்பர். ஆசிரியர்கள் இவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். முன்னர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதும், ஆசிரியர் அடுத்த பாடத்துக்குச் சென்றுவிடுவார். இப்போது கற்பிக்கும் முறை கற்றல் திறனில் குழந்தைகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைச் சமன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. குறைவான கற்றல் திறன் கொண்ட மாணவனுக்காக ஆசிரியர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்பதே இதன் பொருள்.

முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் ஒரே குழுவாக உட்காரவைக்கப்படுகிறார்கள். இதேபோல்தான் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களும். இது அவர்களுக்குள் தோழமையுணர்வையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்கிறது.

தொடக்கக் கல்வியின் இன் னொரு முக்கிய அம்சம் கணிதம் கற்பிக்கும் முறைகள். ஒவ்வோர் அரசுப் பள்ளிக்கும் ஒரு கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கணிதப் பயிற்சிப் பெற்றுவருகின்றனர். முக்கோணம், செவ்வகம், சதுரம், மணிச்சட்டங்கள், ஒன்று, பத்து, நூறு இலக்கங்கள் எளியமுறையில் இதில் போதிக்கப்படுகிறது. இத்தகைய உப கரணப் பெட்டிகள் தனியார் மழலையர் பள்ளிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்க வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம் முதலான கலைச் செயல்பாடுகள் பாட அட்டையிலேயே இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் வில் இசைத்துப் பாடுகின்றனர். பொம்மலாட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களது நினைவாற்றலை, ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுகிறது. குறுந்தகடுகள் மூலம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் நடைமுறை பல பள்ளிகளில் இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதில் பல அரசுப் பள்ளிகள் பின்பற்றி வரும் நவீன அணுகுமுறை அந்த மொழியின் பயன்பாடுகளை விரிந்த அளவில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்றாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடியும்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (Simplified Active Learning Method) அறிமுகப்படுத்தப்பட்டு அது ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையிலும் ஒன்பதாம் வகுப்பில் (Active Learning Method) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தைப் படிக்கும்போது அதிலுள்ள கடினமான வார்த்தைகளை இனங்கண்டு உரிய அர்த்தத்துடன் முதலில் ஒரு பக்கத்தில் எழுதுகின்றனர். அதைத் தொடர்ந்து படம் வரைகின்றனர். கடின வார்த்தைகள், கடினப் பகுதிகளையும் சேர்த்துப் படங்களாக வரைகின்றனர். பிறகு இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் தொகுத்து மூன்றாம் பக்கத்தில் எழுதுகின்றனர். இறுதியாக மதிப்பிடுதல் என்று வினா விடை பகுதியாக எழுதுகின்றனர்.

இதன் வாயிலாக மாணவர்கள் ஒரு பாடத்தை நான்கு வழிகளில் கற்கின்றனர். இதனால் அவர்கள் மனத்தில் சிறப்பான கருத்துகளும் கடின வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் பதிவதுடன் இது பின்னாளில் அவர்களுக்கு நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. மேலும் கணிதப் பாடத்திற்கு ஜிமிநிணிஸி முறை என்னும் வகையில் கணிதம் எளிமையாகக் கற்பிக்கப்படுகிறது. இதுவும் கணிதச் செயல்பாடு கற்பிக்கும் முறையில் ஒரு புதிய முயற்சி.

மாறி வரும் சூழலுக்கேற்பத் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்குக் கணிப்பொறிகளும் மடிக் கணினிகளும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகவும் தொடக்கக் கல்வித் துறை மூலமாகவும் வழங்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படுகிறது. கணினி வழிக் கல்வி மையங்கள் (Computer Aided Learning) பெரும்பான்மையான பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தொலைதூர மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும்-உதாரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாணவர்களையும் - கணிப்பொறிக் கல்வி எட்டியுள்ளது. இது தொடக்கக் கல்வித் துறையில் மிகப் பெரிய சாதனை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், தளவாடச் சாமான்கள் தேவையான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 900 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டம்.

தற்போது ஆர்வம் மிகுந்த குழந்தைகளும் செயலாற்றத் துடிக்கும் ஆசிரியர்களும் சமூக நலமிக்க அலுவலர்களும் நவீன ஆலோசனை தரும் வட்டார வளமையர்களும் அதிகரித்துள்ளனர். பொதுக்கல்வி சார்ந்து நிலவிவரும் அவநம்பிக்கைகளை இந்தப் போக்கு மதிப்பிழக்கச் செய்துவருகிறது எனலாம்.

இது போன்று கல்வி முறையில் பின்பற்ற வேண்டிய பலவேறு புதிய உத்திகளை முன்மொழிகிறார் இந்தக் கடடுரையில் திரு.பொன்.குமார்.

மாற்றம் வருமா????(நன்றி, இனி, அடுத்தவாரம்)

-இன்பா

14 Comments:

பழனி. கந்தசாமி said...

சந்தோஷமாக இருக்கிறது.

BalajiS said...

Stupid article!
kids should not be pressurised to create world records.
This is nothing but Super Singer Syndrome.

Tomorrow somebody will want their kid to become Gayle by hitting 25 sixes in T20 at the age of 10?


What is the use of these world records at tender age just for the pleasure/fame of the parents.

Removing parents pressure on academics of children is good.
At the same time putting pressure on their hobbies/extra curricular activities is even more dangerous.

Objective should be : Every child should learn a fine art and have a good hobby that requires physical effort.

No children should be evaluated/compared till they reach a certain age I would suggest 16.

Children should learn a art atleast 10 years before bringing them to stage / showcasing them to the world. Till them leave alone.

Anonymous said...

செய்தி # 1: This is not a record. This is utter waste of time and effort.

Education and co curricular activities should go hand in hand.

But these junk that are classified as records in this post are not worth talking about.

சிந்திப்பவன் said...

செயதி 1
பவானி ஜமக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்தனம்.இது கொடுத்த எரிச்சலில் நான் செய்தி 2 ஐ படிக்கவில்லை.

Prabhu said...

crappy article.
You're replacing the pressure from academics and with that of extra curricular activities.

What's the writer's intention?
Pls' do not publish such half-baked articles

Anonymous said...

ஜெய் ஜெயசங்கர் கோஷ்டீங்களா குழந்தைத் தனமா எழுதுவதில் உங்களுக்கும் ஒரு போட்டி இருக்கிறது கண்டு கொள்வீர்- இன்பா தான் அது.

இதெல்லாம் சாதனையா ? அய்யோ! அய்யோ! குழந்தை நகக் கண்ணில் ரத்தம் வர காரனமாயிருந்த பள்ளியையும் அந்த ரெக்கார்ட் கம்பெனியையும் சட்டத்தின் முன் நிறுத்தனும்.

இன்பா,பச்சக் கொழந்தை கண்ணு நீ .....அண்ணாகிட்ட சொல்லி குச்சி ரொட்டியும் குருவி மிட்டாயும் வாங்கி சாப்பிடு

சாத்தப்பன்

Anand said...

Nice Post

//Removing parents pressure on academics of children is good.
At the same time putting pressure on their hobbies/extra curricular activities is even more dangerous.
//

this is also well said.

Anonymous said...

நான் ஒரு மணிநேரத்துல 200 இட்லி சாப்பிடுவேன் .
அடுத்த ஒரு மணிநேரத்துல 500 ஏப்பம் விடுவேன்.

சாதனை மா சாதனை !

Sunder said...

I went to the school website and saw this this freaking list of records. These are Maniacs.

Anonymous said...

Intercombase - Technology translation Document any of more than 140 languages. IT Translation, Chemical Translation, Industrial Translation - first class affordable.

Turkish Translation: [url=http://www.intercombase.com]Manual[/url]

R. J. said...

I have always wondered if the so called 'records' are worthy of applauding or aping - that too by children. - R. J.

kothandapani said...

உலக சாதனைகள் அற்புதம். ஆமா இந்த சாதனைகளை ஒரு ஆடு மேய்க்கும் பையனிடம் கொடுத்தால் கூட செய்து முடிதுவிடுவனே. இந்த சாதனைகளை செய்ய அறிவுத்திறனோ
ஆற்றலோ வேண்டியதில்லை. வெறும் speed இருந்தால் போதும். நமது பாடமுறையில்
கண்டிப்பாக மாற்றம் தேவைதான். அதற்காக ஒரு பத்தாம் வகுப்பு மாணவனை அவன்
அறிவை பயன் படுத்தாமலே சாதனைகளை செய்ய சொல்வதும் , அதை போற்றி புகழ்வதும் எதிர் மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

Anonymous said...

News-1

It is a scam by www.eliteworldrecords.org. Sometime back there was another scam for making Madurai Temple as one of the 7 wonders (Even dinamalar promoted it).

R. J. said...

I have already commented which is in line with the majority of the comments here. Now, I feel very sorry for the boy and other children who have taken great efforts to 'achieve' these 'feats' without realising these are useless but for some claps by those present at that time. Parents and elders should guide their children towards some meaningful and purposeful exercise even if it is meant for relaxation from the routine. I saw once a 'Guinness record' where a person 'opens a door - goes to other side - closes it - opens again - comes this side' - some 500 times. Can no one see the foolishness in it? Please keep children away from these stupidity. - R. J.