பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 26, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 8

விளையாட்டுக்களின் உதவியுடன் குழந்தைகளின் பல்வேறு திறன்களை மேம்படுத்துவது எப்படி என்று பார்த்து வருகிறோம்.காக்னிடிவ் டெவெலப்மெண்ட் எனப்படும் சிந்தனை மேம்பாட்டுத் திறனை எப்படி வளர்ப்பது என்று இப்போது பார்க்கலாம்.


குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப் போல மூளை வளர்ச்சியை நாம் அறிய முடியாது;ஆனால், அவர்கள் புதிதாக என்னென்ன விஷயங்கள் செய்கிறார்கள் என்று அறிய முடியும்.


Piaget என்கிற குழந்தை உளவியல் அறிஞர், குழந்தையின் காக்னிடிவ் வளர்ச்சியை நான்கு பருவங்களாகப் பிரிக்கிறார்.
First cognitive development stage: Sensory motor period (0-24 months)
Second cognitive development stage: The preoperational period (2-7 years)
Third cognitive development stage: (Concrete operations (7-12 years)
Fourth cognitive development stage:Formal operations (12 years plus)


சிந்தனை மேம்பாட்டுத் திறன் என்பது, புலன்களை அறிதல்,(sensory exploration) செயல் விளைவை அறிதல்,(cause and effect) கருவிகளை உபயோகித்தல், (using tools) பொருள்களின் இயக்கம் ,(object performance) அளவு, வடிவம் மற்றும் வெளி அறிதல்,(size, shape and space)குறியீடுகளை உபயோகித்தல்,(using symbols) கணிதக் கருத்தாக்கம்,(math concepts)மற்றும் காலம் பற்றிய புரிதல் (concept of time) போன்றவைகளை உள்ளடக்கியது.


இந்த வகையான காக்னிடிவ் விளையாட்டுக்கள், பாவனை செய்தல் (imitation)ஆர்வ உந்துதல், (curiosity) வகைப்படுத்துதல்(classification) என்கிற மூன்று முக்கியமான சிந்தனைத் திறன்களை மேம்படுத்துகிறது,
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பிளாஸ்டிக் பாட்டிலில் சோப்புக் கரைசலுடன், வண்ண வண்ண சிறு சிறு மணிகள், பாசிகள் போன்றவற்றைப் போட்டு, பாட்டிலைக் குலுக்கினால் அதனுள் ஏற்படும் நகர்வுகள், சோப்புக் குமிழிகள் தோன்றுதலைக் காட்டலாம். இதன் மூலம், குழந்தைகள்,செயல் விளைவுத் தத்துவத்தைப் புரிந்து கொள்கின்றன.மேலும், இது அவர்களின் புலன்களையும் கவர்ந்து அவர்களை மகிழ்விக்கிறது. பொம்மையின் சிறு பகுதி மட்டும் தெரியுமாறு வைத்திருந்து விட்டு, பொம்மை எங்கே என்று கேளுங்கள். குழந்தை, பொம்மையைச் சுட்டிக் காட்டுகையில், கை தட்டி, பாராட்டுக்களைத் தெரிவியுங்கள். ஒரு பொருளின் முழுமைத்தன்மைக்கும், அதன் பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பை குழந்தை உணர முடிகிறது.


குழந்தையின் கண்களை உங்கள் கைகளால் மூடி, பின் கைகளை எடுத்து சிரிக்கவும்.உங்கள் முகத்தை புத்தகத்தின் பின்னோ, செய்தித் தாளின் பின்னோ, மறைத்துக் கொண்டு, திடீரென்று தோன்றவும். பொம்மையைக் காட்டி, பின் அதை மறைத்து, பின் பொம்மை எங்கே என்று கேட்கவும். மெலிதான துணியில் பொம்மையை சுற்றி, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கவும்.சிறிய அட்டைப் பெட்டிக்குள் பொம்மையைப் போட்டு, பொம்மை எங்கே என்று கேளுங்கள்.இவ்விதமான விளையாட்டுகளால், குழந்தைக்கு, ”பொருள்கள் மறைக்கப்பட்டாலும், கண்களில் படாவிட்டாலும், அவைகள் இருக்கின்றன” அவற்றின் நிலைப்புத் தன்மை பற்றிய ஒரு புரிதல் ஏற்படுகிறது.


ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, பல்வேறு வடிவத்துடன் கூடிய ஸ்ட்ரா போன்ற பிளாஸ்டிக் குழாய்களைக் கொடுக்கவும். அவைகளை எவ்வாறு ஒன்றினுள் ஒன்றை நுழைக்க முயல்கிறது என்று பாருங்கள். ஷீ அட்டைப் பெட்டி மேலே வெவ்வேறு வடிவங்களில் சதுரம், செவ்வகம், முக்கோணம் என்று துளைகளைப் போட்டு, குழந்தையை, அதனதன் வடிவ மூடியை அது சரியாகப் பொருத்துகிறதா என்று பார்க்கவும்.இது போன்ற விளையாட்டுக்கள் அளவு, வெளிக்கு இடையே உள்ள தொடர்பை குழந்தைகள் கற்க உதவும்.


இரண்டு வருடக் குழந்தைக்கு,தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களின் வடிவத்தையும், பழங்கள் காய்கறிகளின் வடிவத்தையும் பற்றிக் கூறவும். உணவு உண்ணுகையில் முன்பிருந்த வடிவம் எப்படி மாறுகிறது என்பதையும் சொல்லவும்.
இரண்டு வெவ்வேறு வகை பொம்மைகள் செட்களை ஒன்றாகக் கலந்து வைக்கவும். உம்: விலங்கு பொம்மைகள் & வாகன பொம்மைகள். இரண்டு வகைகளையும் தனித் தனியே பிரித்து, வெவ்வேறு பெட்டிக்குள் போடச் சொல்லவும்.இதன் மூலம், ஒரே மாதிரி, வெவ்வேறாக இருக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதுடன், பொருள்களின் பண்புகளைப் பற்றியும் அவர்கள் கற்க முடிகிறது.

காலையில் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டு அவர்களை பதில் சொல்ல வைப்பது,
வானம் மஞ்சளாக இருக்கிறது-சரியா தவறா? என்று கேட்டு பதில் பெறுவது,
ரைம்ஸ்களின் முதல் பாதியை மட்டும் சொல்லி, இரண்டாவது பாதியை அவர்களையே சொல்ல வைப்பது
(உ.ம்) அம்மா இங்கே __________
ஆசை முத்தம்_____________
குழந்தையின் கண்களை மூடிக் கொண்டு, பழங்கள் காய்கறிகள், பருப்பு வகைகளை அவர்கள் கைகளால் உணரச் செய்து கண்டறியச் செய்தல்
Puzzle toys எனப்படும் புதிர் பொம்மைகளை, குழந்தைகளின் வயதுக்கேற்ப வாங்கிக் கொடுத்து, அவர்களை அந்தப் புதிர்களை விடுவிக்கச் செய்யலாம்.

நினைவிருக்கட்டும்- காக்னிடிவ் திறனை நீங்கள் வளர்க்க முனைகையில், குழந்தையின் சிந்திக்கும் திறனைத் தான் மேம்படுத்துகிறீர்கள். பொருள்களை நினைவு கூற அல்ல. நம் நோக்கம்- நிறைய செய்திகளை குழந்தைக்கு வழங்குவது அல்ல- இருக்கும் செய்திகளை எப்படிப் பகுப்பாய்வது,ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துவது, அதன் மூலம் ஒரு முடிவுக்கு வருவது என்பதேயாகும். எனவே, காக்னிடிவ் திற மேம்பாட்டுக்கு, நீங்கள் தெரிவு செய்யும் விளையாட்டுக்கள் (What and why? So what? Is it good? Putting information together) மேற்கண்டவைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.


பெரும்பாலான காக்னிடிவ் திறன்கள், மொழித் திறன்களுடனே இணையாக வளர்கின்றன. இன்னும் சரியாகப் பேச்சு வராத மூன்று வயதுக்கு உட்பட்ட பருவத்திலேயே குழந்தைகள் காரண காரியத்தை அறிய முற்படுகின்றன.இதைத் தூண்டுவதற்கு, பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் கேட்கும் கேள்விகள் துணை புரிகின்றன. இதை நாம் மறந்து விடாமல் இருக்க, who/what/where/when/why/ என்று நினைவில் கொள்ளவும்.


இரண்டு மூன்று வயதிலேயே இவ்வகை காக்னிடிவ் விளையாட்டுக்களை விளையாடிய குழந்தை, ஐந்து வயதிலேயே, அந்த வயதொத்த குழந்தைகளை விட நல்ல புத்திசாலியாக வளர்ந்து வருவது நிரூபணமாகி உள்ளது
இன்னும் ஒன்று.All problems are opportunities. எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக புதிர்களை விடுவிக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களது சிந்திக்கும் திறன் அதிகரிக்கிறது.பொதுவாக,குழந்தைகள் ஞாபகத் திறன் மூலமாகவும், திரும்பத் திரும்ப நிகழும் அன்றாட நிகழ்வுகளின் மூலமும் (routine)நிறையக் கற்றுக் கொள்கின்றன. வழக்கத்திற்கு மாறாக நிகழும் எந்த ஒரு நிகழ்வும், குழந்தைக்குள் கேள்விகளை எழுப்பி, சிந்திக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. உம்: கரண்ட் கட் ஆகுதல்- ஏன் விளக்கு அணைந்து விட்டது? அதன் பின் என்ன செய்வோம்? என்று கேள்விகளை எழுப்பலாம்.


குழந்தைகளின் காக்னிடிவ் திறன்களை மேம்படுத்த, சில எளிய வழிமுறைகள்
• அனுதினமும், குழந்தைகள் அவர்களின் தினசரி நிகழ்வுகளில் இருந்து நிறைய விஷயத்தைக் கற்றுக் கொள்கின்றன.அவர்களது கற்றல், அவர்களது நேர வசதிப் படியே நிகழ்கிறது; நமது நேர வசதிப்படி அல்ல. எனவே, குழந்தையின் கற்றல் நேரத்தில் மிகச் சரியாக நாம் அவர்களுடனே இருந்து அவர்களை நெறிப் படுத்த வேண்டும்.

• எல்லா விதிமுறைகளையும், செயல் முறைகளையும் நூறு சதவீதம் விளக்கி விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்காமல், சில எளிய சிக்கலான தருணங்களில், சின்னச் சின்ன இடர்ப்பாடுகளில், சரியான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் என்ன விதத்தில் அதை எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள் என்று பாருங்கள்.

• குழந்தைகளை பாதிக்காத சிறிய தவறுகளை செய்ய அனுமதியுங்கள்;அதிலிருந்து அவர்கள் நிறையக் கற்றுக் கொள்வர்.சில சமயங்களில் அவர்களது உள்ளுணர்வின் படி அவர்கள் செய்யும் சில செயல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
• சில அன்றாட நடவடிக்கைகளை முதலில் இருந்து கடைசி வரை ஒரு முழுசெயலாகக் கற்பிக்கவும்.

உம்: கடைக்குப் புறப்படுவது, கடையில் சாமான்கள் வாங்குவது, வீட்டுக்கு வந்து சாமான்களை அதனதன் இடத்தில் வைப்பது.

உணவுக்கான பொருள்களை எடுத்து வைப்பது, உணவு தயாரிப்பது, அதை உட்கொள்வது இது சற்று அதிக நேரமெடுத்தாலும், குழந்தைகள் இதில் கற்றுக் கொள்வது அதிகம்.
• ஏதாவது ஒன்று சரியில்லை என்றால், அதை அவர்களிடம் என்ன? என்று கேட்டு, அவர்களையே யூகிக்கச் சொல்லவும். உம்: நாம தூங்கப் போகலாமா? தூங்குறதுக்கு என்ன செய்யணும்? மெத்தை, தலையணை எல்லாம் போடணும்

• எல்லா சந்தர்ப்பங்களிலும், “அடுத்து என்ன? நீ என்ன செய்வாய்? நமக்கு இன்னும் என்ன வேணும்?” என்று கேள்விகளைக் கேட்கவும். மூன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைகள் தாங்கள் சிந்திப்பதை வாய் விட்டுச் சொல்லும் பழக்கமுடையவை. நம்முடைய கேள்விகளினால் வரும் அவர்களது பதிலைக் கொண்டு அவர்களின் மூளை எப்படி சிந்திக்கிறது என்று நாம் அறிந்து கொண்டு, அதற்கேற்ப மாதிரி அவர்களை சரியான கோணத்தில் சிந்திக்க வைக்க, வழிகாட்ட முடியும்.
குழந்தையின் காக்னிடிவ் டெவலப்மெண்ட் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?

ஆரோக்கியமான குழந்தையின் நடவடிக்கைகள் பற்றி நாம் அறிந்து, நம் குழந்தை அதன் வயதிற்கேற்ப சிந்திக்கும் திறன், செயல்படும் திறனுடன் விளங்குகிறதா அல்லது, அதே வயதுடைய மற்றக் குழந்தைகளை விட பின் தங்கியுள்ளதா என ஒப்பு நோக்கி அறியலாம்.

குழந்தையின் காக்னிடிவ் வளர்ச்சி பற்றி அறிந்து கொண்டால், அதற்கேற்ற வகையில் அவர்களுக்கான விளையாட்டுகளையும், பொம்மைகளையும் நாம் தெரிவு செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

குழந்தை செய்யும் செயல்களின் காரணத்தை நாம் அறிந்து கொள்வதன் மூலம் இது, இன்ன காரணத்தால் இப்படி செய்கிறான் என்கிற தெளிவு நமக்குக் கிடைப்பதோடு, தேவையற்ற பயமும் நீங்குகிறது.

டாக்டர் பிரகாஷ்.
www.rprakash.in

அடிக்கடி கண்ணாமூச்சி விளையாடிய குழந்தைகள் தான் பின்னாளில், அனானி கமெண்ட்களாகப் போட்டுத் தள்ளுகிறார்களா? ;)

2 Comments:

dr_senthil said...

Sir, Can u comply all the episode writing as part PDF files? Can have printout and use or gift many? Please consider and do the needful.

குமரன் said...


குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி அளிப்பதுபற்றி சமஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதுபோல கொஞ்சம் விரிவாக எழுதினால், நன்றாக இருக்கும்.

உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? - சமஸ்
http://writersamas.blogspot.in/2013/02/blog-post.html