பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 01, 2013

Special 26 - விமர்சனம் - பால் ஹனுமான்

நமது மனதில் நீங்காத இடம் பிடித்த 'A Wednesday' படம் மூலம் ஏற்கனவே முத்திரை பதித்த டைரக்டர் நீரஜ் பாண்டே, அக்ஷய் குமார், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய் மற்றும் காஜல் அகர்வால் கூட்டணியில் கலக்கலாக வெளி வந்திருக்கும் படம் - இந்த Special 26.

எண்பதுகளில் போலி சி.பி.ஐ ரைடுகளினால் நாடே பரபரப்பாகியிருந்த நேரத்தில் அம்மாதிரியான ரைடு நடத்தும் ஒர் குழுவின் கதைதான் இந்த Special 26.

நிஜ சி.பி.ஐ ஆபீசர் மனோஜ் பாஜ்பாய்க்கும் டுபாக்கூர் அக்‌ஷய் டீமுக்குமான இந்த திருடன் போலீஸ் விளையாட்டுக்கு நடுவில், அக்ஷய் குமார் மற்றும் நமது காஜல் அகர்வால் இருவருக்குமிடையே ஒரு மெல்லிய காதல் கதை. உங்கள் யூகம் சரிதான் - ஒரு பஞ்சாபி ஸ்டைல் கலர்ஃபுல் கல்யாணப் பாடலும் உண்டு.

வழக்கமாக மசாலாப் படங்களில் கலக்கும் அக்ஷய் குமாருக்கு இது நிச்சயம் ஒரு வித்தியாசமான படம் தான். சவாலான இந்தக் கதாபாத்திரத்துக்காக, இயக்குனரை முழுமையாக நம்பி தன்னை ஒப்படைத்து விட்டதாக அக்ஷய் குமார் முன்னர் குறிப்பிட்டிருந்தார். இயக்குனர் நிச்சயம் அவரை ஏமாற்றவில்லை.

இந்தப் படம் நன்றாக ஓடினாலும் அல்லது ஓடாவிட்டாலும் இதில் நடித்த ஒவ்வொரு கணத்தையும் நான் மிக மிக அனுபவித்தேன் என்றும் அக்ஷய் குமார் கூறியிருந்தார். இந்தப் படத்துக்காக இயக்குனர் நீரஜ் அக்ஷய்யிடம், 'இந்தப் பாத்திரத்தை நான் உருவாக்கியது உன்னை மனதில் வைத்து மட்டுமே. ஒரு வேளை உன்னால் இந்தப் பாத்திரத்தை செய்ய முடியாவிட்டால், இந்தப் படத்தை நான் தொடரும் எண்ணம் இல்லை' என்றும் கூறினாராம். ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனர் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்ததைப் பாருக்கும்போது அந்த வாய்ப்பை இரு கைகளாலும் இறுக்கப் பற்றிக் கொண்டேன் என்றார் அக்ஷய். மேலும் இந்த வருடத்தில் நான் எடுத்த ஒரு மிகச் சிறந்த முடிவு இது என்றும் மிகுந்த நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

80-களில் நடக்கும் கதையாக இருந்தாலும், இந்த 2013-லிலும் நம்மைக் கவரும் வண்ணம் படமாக்கிய விதம் அருமை.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம் - அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஜிம்மி ஷெர்கில் போன்றோரின் பண்பட்ட நடிப்பு.

அக்ஷய் குமாரின் வித்தியாசமான நடிப்புக்காகவும், விறுவிறுப்பாக இயக்கியுள்ள நீரஜ் பாண்டேவுக்காகவும் நீங்கள் தவற விடக் கூடாத படம் இந்த Special 26.

அது சரி ஸ்பெஷல் 26 என்று ஏன் இந்த படத்துக்கு பேர் ?

8 Comments:

dr_senthil said...

He recruits 26 people to impose as CBI officers.

Navaneeth said...

IV, Manoj Bajpai explains the reason at the end of the movie. There were 27 Police officers were guarding the jewellery shop. That count includes Jimmy Shergil. Leaving him out its 26 officers. So its a "Special" heist for them. They are doing it with the help of 26 officers.

R. J. said...

So, Balhanuman is to clarify who - Dr. Senthil or Navaneeth - is correct! Whether the 26 are imposters or police officers? தமிழில் வந்தால் தெரியுமோ?- R. J.

R. J. said...

I made this following comment under Ms. Sumathi's book review. Thought it may receive some attention if it is in the latest post as well!

நான் கண்காட்சியில் வாங்கிய - SP சொக்கலிங்கம் எழுதிய 'பிரபல கொலை வழக்குகள்' - மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. முதல் 9 வழக்குகளின் விவரங்களை சுருக்கி எழுதியிருந்தாலும் பத்தாவதாக 'மர்ம சந்நியாசி'யின் வழக்கை 92 பக்கங்களில் எழுதியிருக்கிறார். வழக்கின் விவரங்களைப் படித்தால் இதுவும் மிகச் சுருக்கம் தான். இதை ஒரு நிஜ வழக்கா என்று சந்தேகம் வரும்படி அவ்வளவு சுவாரசியமான திருப்பங்களுடன் மர்ம நாவல் போலவே இருக்கிறது. புத்தக விமரிசனம் எழுத ஆவல் என்றாலும் ஜாம்பவான்கள் எழுதும் இந்த தளத்தில் எழுத கை நடுங்குகிறது. மேலும் விமரிசனம் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டவேண்டும் - மாறாக தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த்க்கூடாது என்பதும் என் எண்ணம். அனுமதித்தால் புத்தகத்திலிருந்தே சில வரிகளை மேற்கோள் காடுகிறேன். கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம். - ஜெகன்னாதன்

Anonymous said...

R.J - தயவு செய்து கொஞ்சம் வரிகளை எடுத்து உங்கள் எண்ணங்களை பதிவிடுங்கள்..

இட்லி முன்னே மாதிரி இல்ல.. கல்லு மாதிரி போய்கிட்டு இருக்கு..

Johney John said...

கடைசியாய் 26 பேர் அடங்கிய குழுவை இண்டர்வியூ செய்து நிஜ சிபிஐ ஆபீஸ்ர்களாய் தெரிந்தெடுத்து ஒரு ரைட் நடத்தி எஸ்ஸாக நினைக்கிறார்கள்

dr_senthil said...

They actually interview original CBI officers and recruit for their special heist

krishna said...

where is our Dr.Prakash & his article about Child?