பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 15, 2013

பரதேசி - FIR

நல்ல புகைப்படம் எடுக்க விலை உயர்ந்த கேமரா மட்டும் இருந்தால் போதாது. அதுபோலத்தான் சினிமாவும். மாஸ் ஹீரோ, தடபுடல் செலவு... என்று மட்டும் இருந்தால் போதாது. பாலா மீண்டும் ஒரு முறை ஓட்டைக் கேமராவை வைத்து நல்ல படத்தை எடுத்துள்ளார்.

பாலா படங்கள் இப்படி தான் இருக்கும் என்று தெரிந்தாலும் அவரின் படங்களைப் பார்க்க ஆவலாகச் செல்ல வைப்பது அவரின் உண்மையான உழைப்பு. தமிழ் பட இயக்குனர்கள் டிவியில் தோன்றி அடிக்கடி சொல்லும் வித்தியாசமான கதை இவர் படங்களில் இருக்கும்.


படத்தில் யார் ஹீரோ என்று முதலில் பார்த்துவிடலாம் - வறட்சியான கிராமம், தேயிலைத் தோட்டம், மூட்டை முடிச்சுகளுடன் வரும் அந்த ஊர்க் கூட்டம். முதல் ஹீரோ.

நாஞ்சில் நாடான் வட்டார மொழியில் எழுதிய வசனம். முதலில் ஏதோ வேறு மொழி மாதிரி இருந்தாலும் பிறகு நாம் கதைக்குள் சென்றவுடன், இடைவேளையின் போது கேண்டினில் "எலேய் கொஞ்சம் காப்பி தண்ணி குடுலே" என்று கேட்க தோன்றுகிறது. நாஞ்சில் நாடானும் இந்த படத்தில் ஒரு ஹீரோ தான்.

அதர்வா நடிப்பு என்று சொல்ல முடியாது அவர் நிஜமாகவே வாழ்துள்ளார். அவர் அப்பத்தாவாக வரும் அந்த கிழவியின் நடிப்புக்கு உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தளபதி யாரும் போட்டி போட முடியாது. சிங்கிள் ஆளாக ஒரு பெரிய கிராமத்தையே பிரதிபலிக்கிறார். வடிவுக்கரசி போன்ற சினிமாக் கிழவிகளைப் போடாமல் இந்த மாதிரி நிஜ கிராமத்து மக்களைப் போட்டது பாலாவின் பிளஸ் பாயிண்ட்.

பஞ்சம் பிழைக்க தேயிலை தோட்டத்தை தஞ்சமடையும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை பார்க்கும் போது படத்தில் விஜய், அஜித் இல்லையே என்ற ஏக்கம் வர செய்கிறது. அவர்கள் இருந்தால் எல்லோருக்கும் 1930லேயே இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும். காந்தி கூட தேவைப்பட்டிருக்க மாட்டார்.

இசை ஜி.வி.பிரகாஷ். பேர் போடும் போதே யாருப்பா இசை என்று கேட்க வைக்கிறார். படத்தில் ஒரு பாடல் இளையராஜா பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது ஆனால் பாடியவரின் குரலே கிட்டதட்ட இளையராஜா மாதிரி தான் பாடியிருந்தார். இசை அடுத்த ஹீரோ.

கொத்தடிமைகள், குடிசைகள், வெள்ளைக்கார துரை என்றால் கூடவே ஏழைகள் வாழும் சூழல், வெள்ளைக்கார துரை பெண்களிடம் பாலியல் பலாத்காரம், வியாதிகள், ஒவ்வொருக்கும் ஒரு சின்ன கதை... எப்போது தப்பிபோம் என்ற ஏக்கம்... என்று எல்லாம் நமக்கு தெரிந்த காட்சிகள் தான்.... ஆனால் படத்தில் அதை எல்லாம் காட்டியிருப்பதில் உள்ள நிஜம் எல்லா கிராம மக்கள் கண்களிலும் அந்த பயத்தை உண்டு செய்துள்ளார்... இயக்குனர் பாலா என்ற படத்தின் ஹீரோ.

யாராவது வந்து காப்பாத்த மாட்டார்களா என்ற உணர்வு நமக்கு வந்துவிடுகிறது ஆனால் வருவதற்குள் படம் முடிந்துவிடுகிறது. நல்ல வேளை படம் முடிந்தது என்று நினைக்க தோன்றுவது தான் பாலாவின் வெற்றி.

குறை என்றால் - படத்தில் வரும் ஹீரோயின்(வேதிகா) முகத்தில் கருப்பு அடித்துக் காண்பித்தது; ஆரம்பத்தில் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் கடுப்பாக இருக்கிறது. அதே போல ஆரம்ப காட்சிகளில் அதர்வா சின்னதம்பி பிரபு மாதிரி செய்வது எல்லாம் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கடைசியாக அந்த டாக்டர் ஆடும் அந்தக் கூத்துப் பாடலை தயவு செய்து எடுத்துவிடுங்கள் பாலா. அதைப் பார்த்தால் எங்களுக்கு சோகம் இன்னும் அதிகமாகிறது !

கொசுறு:
கிறிஸ்தவ டாக்டர் வந்து தாழ்த்தப்பட்ட மக்களை கிறுஸ்துவ மதத்துக்கு மாற்றுவது பற்றி இணையத்தில் விவாதம் நடக்க போகிறது.

அலக்ஸ் பாண்டியன் போன்ற காவியங்கள் வரும் தமிழகத்தில் இந்த மாதிரியும் படம் வருவது தமிழ் நாட்டின் சாபக்கேடு. :-)

இட்லிவடை மார்க் 8.5/10


சுதந்திரத்துக்கு பின் இந்த மாதிரி கொத்தடிமைகள் இன்னும் நம் நாட்டில் இருக்கிறார்கள். அரசியல் கட்சி தொண்டர்களாக

26 Comments:

jaisankar jaganathan said...

அருமை. சீக்கிரம் இந்த படம் பார்க்கிறேன்

பொன்.முத்துக்குமார் said...

அட்டகாசம் போங்க. கடைசி வரியும் மஞ்சள் கமெண்ட்-ம் தூள்.

கானகம் said...

மிகச்சரியான விமர்சனம். பாலாவின் இன்னொரு அற்புதமான படம். கடைசியில் அதர்வா பாடும் பாடலும், அவரின் மணைவி குழந்தையோடு வந்ததும் அவர் அழும் அழுகையும் பேசும் வரிகளும்... அற்புதம்

கானகம் said...

மிகச்சரியான விமர்சனம். பாலாவின் இன்னொரு அற்புதமான படம். கடைசியில் அதர்வா பாடும் பாடலும், அவரின் மணைவி குழந்தையோடு வந்ததும் அவர் அழும் அழுகையும் பேசும் வரிகளும்... அற்புதம்

நிலவன்பன் said...

(மஞ்சள் கமெண்டில்)கூடவே மதவெறியர்களும்!

லெமூரியன்... said...

எண்ணம் போன்ற வாழ்க்கை என்பார்கள்...மேட்டுகுடியான இட்லிவடைக்கு கட்சி தொண்டர்கள் கொத்தடிமைகளாக தெரியலாம்...

என்னை போன்ற கீழ்சாதிக் காரனுக்குத்தான் தெரியும் இன்னும் இன்றும் என் மக்கள் கொத்தடிமைகளாகத்தான் இருக்கிறார்கள் என்பது....

எந்த மதம் குறைந்த பட்ச மரியாதையும் மனிதத்தொடும் பார்க்குமோ அந்த மதத்தை தழுவுவதில் தவறொன்றும் இல்ல..இதில் விவாதிக்க என்ன இருக்கிறது....

இந்தியாவில் உள்ள மொத்த தலித்துகளும் மதம் மாறினால்
இந்து மதம் சிறுபான்மை கோட்டாவிற்கு கீழ் வந்து விடும்..!

dr_senthil said...

பிறவி படைப்பாளி பாலா...அவர் அடித்ததால் பார்க்கமாட்டேன் என்று கூறியவர்கள் எல்லாம் வருத்த படவேண்டியவர்கள்.. யாருலே அதர்வ ? இனி அவனுக்க காட்டுல மழைதான்... நாஞ்சில் நாடானுக்க வசனம் தென் தமிழக வட்டார மொழிவழக்கு அழகு.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=jHhQsgN5cdY

hope you guys saw this video, how bala handles people in shooting.

Anonymous said...

//எந்த மதம் குறைந்த பட்ச மரியாதையும் மனிதத்தொடும் பார்க்குமோ அந்த மதத்தை தழுவுவதில் தவறொன்றும் இல்ல..இதில் விவாதிக்க என்ன இருக்கிறது....
//

சரிதான். சர்தான். கிறித்துவ தலித், கிறுக்குவ நாடார், ஆர்சி, பரோட்டா ஸ்டேண்ட், பொந்த கொஸ்தே என்று எங்களை பேதம் பார்த்து அங்கேயும் பிரித்துத் தான்னய்யா வைத்திருக்கிறார்கள்.

மதம் மாறியும் கொடுமை மாறவில்லை. தொடுகை தீண்டல் தொடரத்தான் செய்கிறது.

பூனை கண்ணை மூடிக்கிச்சுன்னா ஏலே கிச்சான்தானோ?

இதுல ஏது குறைந்த பட்ச மருவாதை? ஓ கர்த்தரே, இவர்கள் இன்னபேசுவதென்று அறியாமல் பேசுகிறார்கள். இவர்களை மன்னியும்.

பாலாவுக்கே ஸ்தோத்திரம். தோத்திரம்.

- விராமதியான்

Venkat said...

Sir, apart from the subject, acting, dialogue, are the story and screenplay tight and interesting ?

Anonymous said...

பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல்

நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி,

தேயிலைதோட்டங்களில் புதையுண்டு போன மனிதர்களின் வாழ்க்கையை அதன் சகல அவலங்களுடன், கண்ணீருடன் நிஜமாக சித்தரிப்பு செய்திருப்பதே இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்

சாளுர் என்ற எளிய, சிறிய கிராமம், அந்த கிராம வாழ்க்கைக்குள் தான் எத்தனை விதமான மனிதர்கள், உணர்ச்சிகள், ஒட்டுபொறுக்கி எனும் ராசா கதாபாத்திரமாக அதர்வா வாழ்ந்திருக்கிறார், அடிபட்டு கால் நரம்பு துண்டிக்கபட்டு, எல்லாவற்றையும் இழந்து குழந்தையுடன் வெறுமை தோய்ந்த கண்களுடன் அவர் திரும்பி பார்க்கும் ஒரு பார்வை போதும் அவருக்குத் தான் இந்த ஆண்டின் தேசிய விருது என்பதற்கு, அதர்வா உங்கள் சினிமா வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொண்டீர்கள்,

வாழ்க்கைக்கு உண்மையாக உள்ள கலை எப்படி இருக்கும் என்பதற்கு பரதேசி ஒரு உதாரணம், டேனியலின் எரியும்பனிக்காடு நாவலின் உந்துதலில் உருவாக்கபட்டிருக்கும் இப்படம் உலகத்தரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது,

சாலூர் என்ற சிறிய கிராமத்தில் துவங்கி பச்சைமலையின் மொட்டை பாறை ஒன்றில் கைவிடப்பட்டவனாக உட்கார்ந்து கொண்டு நியாயமாரே என்று அலறும் அதர்வாவின் குரல் இதுவரையான வணிகரீதியான தமிழ்சினிமாவின் மனசாட்சியைக் கேள்விக்கு உள்ளாக கூடியது,

அதர்வாவின் ஆகச்சிறந்த நடிப்பு , தன்ஷிகா, வேதிகா இருவரின் உணர்ச்சிமயமான தேர்ந்த நடிப்பு, கங்காணியாக வரும் ஜெரி, ராசாவின் பாட்டி, கிராமத்து குடிகார கதாபாத்திரமாக நடித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் என்று அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள், சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கிராமத்து திருமண நிகழ்வு, கங்காணி ஊர் மக்களை நைச்சியம் பேசி அழைத்துப்போவது, 48 நாட்கள் நடந்து செல்லும் மக்களின் வழித்துயரம், கங்காணி தனது கல்லாபெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு கணக்கு முடிக்கும் காட்சி, விஷக்காய்ச்சலில் கொத்து கொத்தாக செத்துவிழும் மனிதர்கள் என்று இதுவரை தமிழ்சினிமா பார்த்தறியாத காட்சிகள் படத்தை வலிமையுள்ளதாக்குகின்றன, மனதை துவளச்செய்கின்றன

முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் தனியான ஒரு நிறம், பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் தனி நிறம் என்று அந்த வாழ்வின் யதார்த்தத்தை தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்புறச்செய்திருக்கிறார் செழியன், அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டிற்குரியது, கேமிரா எளிய மக்களின் கூடவே நகர்ந்து பார்வையாளனை இன்னொரு உலகிற்கு அழைத்துப் போகிறது, கிஷோரின் நேர்த்தியான படத்தொகுப்பு, ஜிவிபிரகாஷின் சிறந்த பின்னணி இசை, இரண்டும் படத்திற்கு தனிப்பெரும் பலம்,

இயக்குனர் பாலா பஞ்சம் பிழைக்கப் போய் அகதியான மக்களின் வாழ்க்கையில் புதையுண்டு கிடந்த உண்மையான, துணிச்சலுடன், அசாத்தியமான கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார்

பச்சைமலைக்கு மட்டுமில்லை, இலங்கைக்கும் தேயிலை தோட்டவேலைக்கு தென்தமிழக மக்கள் சென்றார்கள், இது போல சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்து இன்று அநாதரவான நிலையில் அகதிகளாக அலைகிறார்கள் என்ற சமகால உண்மை படத்தை மேலும் வலியுடையதாக்குகிறது

கிரேட் வொர்க் .பாலா சார்

தமிழ்சினிமாவின் பெருமைக்குரிய நாயகர் நீங்கள்

dr_senthil said...

மதம் மாறினால் போதுமா மனசும் மாறனும்.. தலித்து சமூகத்திலும் சமூகதின்குள்ளும் தீண்டாமை இருக்கத்தானே செய்கிறது அவர்கள் அவர்களுக்கும் கீழ் உள்ள இனத்தவரை அணைத்து செல்கின்றனரா?

சிவ.சரவணக்குமார் said...

//இந்தியாவில் உள்ள மொத்த தலித்துகளும் மதம் மாறினால்
இந்து மதம் சிறுபான்மை கோட்டாவிற்கு கீழ் வந்து விடும்..!//


@லெமூரியன்.......


உங்க அஜெண்டாவ இப்படியா வெளிப்படையா போட்டு உடைக்கிறது? இதெல்லாம் சத்தமில்லாம செய்யவேண்டிய காரியம் வேய்.....பாதருக்கு தெரிஞ்சா கோவிச்சுக்கிறப்போறாரு.......

Anonymous said...

@Lemorian....Are you kidding?...What religion do British follow?..Have you forgotten what they did to us?Have you forgotten how they treated our fore fathers...?
- kekuravan kenayanna keppayila nei vadiyuma?....

kanavuthirutan said...

மிகச்சிறப்பான விமர்சனம்... நன்றி இட்லி வடை..

லெமூரியன்... said...

\\ கிறித்துவ தலித், கிறுக்குவ நாடார், ஆர்சி, பரோட்டா ஸ்டேண்ட், பொந்த கொஸ்தே என்று எங்களை பேதம் பார்த்து அங்கேயும் பிரித்துத் தான்னய்யா வைத்திருக்கிறார்கள்.

மதம் மாறியும் கொடுமை மாறவில்லை. தொடுகை தீண்டல் தொடரத்தான் செய்கிறது.

பூனை கண்ணை மூடிக்கிச்சுன்னா ஏலே கிச்சான்தானோ?

இதுல ஏது குறைந்த பட்ச மருவாதை? ஓ கர்த்தரே, இவர்கள் இன்னபேசுவதென்று அறியாமல் பேசுகிறார்கள். இவர்களை மன்னியும்.

பாலாவுக்கே ஸ்தோத்திரம். தோத்திரம்.

- விராமதியான்//


நண்பர் விராமதியான் அவர்களுக்கு - நீங்கள் மேல குறிப்பிட்டுள்ள அத்துனை இனங்களும் கல்வியின் அவசியத்தை புரிய வைத்து அன்று அவர்கள் இருந்த இடத்திலிருந்து இன்று ஒரு படி மேலே ஏற்றி விட்டதில் கிறஸ்தவ மிஷனரி பங்கு ஏராளம்...

கோவில் குள்ளே வர கூடாதுன்னு சொன்னப்போ ஒரே தேவாலயத்தில் சமமாக அனைவரையும் பாவித்தன கிருத்துவம்(இப்போது நிலை வேறாக இருக்கலாம்)

லெமூரியன்... said...

\\
உங்க அஜெண்டாவ இப்படியா வெளிப்படையா போட்டு உடைக்கிறது? இதெல்லாம் சத்தமில்லாம செய்யவேண்டிய காரியம் வேய்.....பாதருக்கு தெரிஞ்சா கோவிச்சுக்கிறப்போறாரு.......//


மன்னிக்கணும் திரு சிவ . சரவணகுமார் ...

அந்த அஜெண்டா என்னுடையது இல்லை ...அது the god father dr.ambedkar னுடையது

Anonymous said...

ஏலேய்.... லெமூரீயா.....

விவதபாரதி கேட்டால் மனதிற்கு அமைதி கிடைக்குமாம். இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்சேவை -2 கேட்டாலும் மன அமைதி உறுதி. கூகிள் பண்ணினால் லிங்க் கிடைக்குமப்பா.

உடம்பைப் பார்த்துக்கோ அதிக குழப்பம் ஆவாது

cho visiri said...

//இந்தியாவில் உள்ள மொத்த தலித்துகளும் மதம் மாறினால்
இந்து மதம் சிறுபான்மை கோட்டாவிற்கு கீழ் வந்து விடும்..!//

For those who are not initiated...
Please see ITAT (what is this????)-Income Tax Appellate Tribunal Pune has held that the Hinduism is not a Religion. It is a way of life.

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

மதம் குறித்தும் சாதி குறித்தும் ஒரு கருத்து............

1. ஹிந்து மதம் தவிர வேறு எந்த மதமும்.... சாதி பேசுவதிலை..

பிரியட்...
பிரியட்...
பிரியட்....

2. கிறிஸ்த்தவ தலித்....????? ஆம், இந்திய அரசியல் சட்டத்தில் சாதி இருக்கிறது. ரிசர்வேஷன் இன்னும் இருக்கிறது... அதனால் தான் இப்படி சில பிரிவுக்கள் இருக்கிறது... ஆனால் மதத்தில் இல்லை...

3. ஒரு முஸ்லீம்... ஒரு கிறிஸ்த்தவ தேவாலயத்தில் யார்... எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்.... தடையில்லை....

4. கிறிஸ்த்தவ வழிபாட்டு தலத்தில் நுழைய யாருக்கும் அனுமதி தேவையில்லை.... எவருக்கும் தடையுமில்லை....

5. சட்டைய கழற்றிட்டு, வேட்டி கட்டினாத்தான் உள்ள விடுவேன் என்றோ...

ஜனாதிபதி ஆனாலும் உள்ள வரக் கூடாது.... என சொல்லவோ..... இந்து மதம் மட்டுமே சொல்லும்....

இந்த வர்ணாசிரம வன் கொடுமையை சரியான விதத்தில் புரிந்து... அதை களைய வேண்டும்....

அன்புடன்;

Anonymous said...

// ஒரு முஸ்லீம்... ஒரு கிறிஸ்த்தவ தேவாலயத்தில் யார்... எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்.... தடையில்லை....//

சவுதியில் உள்ள அவர்களின் புனித தளத்திற்கக்கு ஒரு தபா போய் வாருங்களேன். முடியுமா பார்க்கலாம்

Anonymous said...

ஒருவர் இறந்த பிறகு புதைபதர்க்கு குட உங்கள் சர்ச்சில் பாலிடிக்ஸ் உள்ளது சிலருக்கு அவர்கள் செல்லும் சர்ச்சில் இடம் கிடைபதில்லை . பல சிபாரிசுகள் இருந்தால் தான் இடம் கிடைகிறது இது நண்பனின் தந்தை இறந்த பொது நான் நேரில் கண்ட உண்மைகள் யார் மனதையும் புண்படுத்த நான் இதை கூற வில்லை நான் விரும்பும் விஷயம் ஒன்று தான் எல்லா மதத்திலும் நல்லவையும் உள்ளது மூட நம்பிக்கையும் உள்ளது இதில் உன் மதம் சிறந்தது ஏன் மதம் சிறந்தது என்று விவாதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை .

கிறிஸ்துவ மதமும் முஸ்லிம் மதமும் இந்தியாவில் பண்டைய ஆட்சியாரால் நமது மக்கள் மிது திணிகபட்டது ஆனால் இன்று நாம் சகோதர்களாக இருக்கிறோம் இன்றைய காலத்தில் இந்த சகோதரத்துவம் தான் முக்கியம் எந்த காரணத்தை கொண்டும் நாம் இதை விட்டு விட கூடாது . ஏன் என்றால் இனிமேல் நம்மால் சரித்திரத்தை இனிமேல் மாற்ற முடியாது எல்லோரும் இந்த நிதர்சனமான உண்மையை உணர வேண்டும் .

- Balaji

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

ஜூப்பரு..............

அண்ணா நீ.....அனானி...

சவுதியில் உள்ள அவர்களின் புனித தளத்திற்கக்கு ஒரு தபா போய் வாருங்களேன். முடியுமா பார்க்கலாம்

மிக சரி.... முஸ்லீமானால் மெக்கா மெதினா உள்ளே போகலாம்....

இன்றும் மசூதிகள்... பிற மதத்தவரை உள் அனுமதிப்பதில்லை......

எல்லோரையும் வாங்கோ என சொல்வது.... குருத்வாரா.. கிறிஸ்த்தவம்....

அப்புறம்....

மேல் மருவத்தூர்......... எந்த கேட்டகிரியில் வரும்... அனானி....


எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

Anonymous said...
// ஒரு முஸ்லீம்... ஒரு கிறிஸ்த்தவ தேவாலயத்தில் யார்... எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்.... தடையில்லை....//சவுதியில் உள்ள அவர்களின் புனித தளத்திற்கக்கு ஒரு தபா போய் வாருங்களேன். முடியுமா பார்க்கலாம்

அர்ச்சகர் யார் வேண்டுமானாலும் ஆகலாம்...

நல்லா வாசிங்க அன்னானி அண்ணே...


hayyram said...

//சுதந்திரத்துக்கு பின் இந்த மாதிரி கொத்தடிமைகள் இன்னும் நம் நாட்டில் இருக்கிறார்கள். அரசியல் கட்சி தொண்டர்களாக/// ஏன், ஐடி, பிபிஓ அடிமைகளாக என்றும் சொல்லலாம்.

dr_senthil said...

பாலாவை மனசிக்கல் உள்ளவராக சொல்லும் தமிழ் சமூக ஆர்வலர்கள் தத்தம் மனைவியிடம் வரதட்சனை வாங்காதவரகவோ, லஞ்சம் கொடுக்க வாங்காதவரகவோ, ட்ராபிக் சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தபின் சாலை கடக்காதவரகவோ, வரிபணத்தை ஏமாற்றாமல் கட்டுபவரகவோ குறைந்தபட்ச நேர்மையுடன் இருப்பது நலம் .நடிப்பு வரவில்லை என்று அடிக்கவில்லை.. எப்படி நடிக்க வேண்டும் என்றுதான் நடித்து காட்டியுள்ளார் என்பது பாலாவை வெறுக்காதவர்கள் அறிவர் மற்றவர்களுக்கு அலெக்ஸ் பாண்டியன், சுறா போன்ற காவியங்கள் தான் ஏற்றது நீங்கள் வெறுக்க வெறுக்க அவர் மேலும் உன்னத நிலையை அடைவது நிச்சயம் .. படத்தில் உள்ள ஒரே குறை இளையராஜா இல்லையென்பதுதான்.. ராஜா இந்தபடத்தை எங்கே கொண்டு சென்று இருப்பார் என்பது ராஜாவை அறிந்தவர் உணருவார்கள்