பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 27, 2013

ஐ.பி.எல் இலங்கை வீரர்கள் பிரச்னை - பத்ரி சேஷாத்ரிதமிழகத்தில் இப்போது தமிழ் ஈழ அலை மோதுகிறது. யாரெல்லாம் ஈழத் தமிழர்களுக்கு எப்படியெல்லாம் ஈழத்தை வாங்கித் தந்தே தீர்வது என்ற யோசனையில் உள்ளனர். மாணவர்கள் வேறு கல்லூரிகளை விடுத்து ஈழம் பெற்றுத்தருவதில் இறங்கிவிட்டார்கள்.

பட்டினிப் போராட்டம், தெருவில் இறங்கிப் போராட்டம், இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சுக்கள்மீது சென்னையில் தாக்குதல் என்று தொடங்கி, போராட்டத்தில் அடுத்தக் கட்டமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழ்நாட்டில் ஐ.பி.எல்லில் விளையாடக்கூடாது என்று ஜெயலலிதா அறிவித்தார்.

ஒரு வாரமே இருக்க, ஐ.பி.எல் நிர்வாகம் அவசரமாகக் கூடி முடிவெடுக்கவேண்டிய கட்டாயம்.
இலங்கை வீரர்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வதா? அல்லது சென்னையில் நடைபெறப் போகும் போட்டிகளில் மட்டும் அவர்கள் விளையாடாமல் பார்த்துக்கொள்வதா? வேறு வழியின்றி இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆனால் ஜெயலலிதாவின் கோரிக்கை நியாயமானதா?

என்னைக் கேட்டால், இலங்கை அரசையும் இலங்கை மக்களையும் பிரித்துப்பார்க்கவேண்டும் என்பேன் நான்.

உலகிலேயே இதுவரை நடந்த மிகக் கொடுமையான நிகழ்வு ஹிட்லரின் ஆட்சியும் யூதப் படுகொலையும். இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் நடைபெற்ற நியூரம்பர்க் வழக்கு விசாரணை மிகத் தெளிவாக யார்மீது குற்றம் சாட்டப்படலாம் என்று முடிவெடுத்தது. நியூரம்பர்க் தவிர்த்து ஜெர்மனியிலும் பிற நாடுகளிலும் ஜெர்மானியர்கள் பலர்மீதும் நடத்தப்பட்ட வழக்குகளும் இதைத் தெளிவாகப் பின்பற்றின. ஜெர்மன் ராணுவத்தினர் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. அப்பாவிகளைக் கொன்றவர்கள், கொல்ல முடிவெடுத்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என்று தெளிவான சாட்சியம் இருப்பவர்களை மட்டும்தான் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை கொடுத்தனர்.

மாபெரும் போர்க்குற்றம் நடக்கும்போது அதற்கான காரணத்தை ஒரு நாட்டின் அனைத்து மக்கள்மீதும் வைப்பது அறத்துக்கு எதிரானது. சிங்களவர்கள் மோசமானவர்கள் என்று தொடர்ந்து தமிழகத்தில் ஒட்டப்படும் போஸ்டர்கள் இனவெறியைத் தூண்டுபவை. அபாயகரமானவை. ராஜபக்‌ஷேயைக் கடுமையாகச் சாடி அதன் காரணமாகத் தன் உயிரை இழந்த லசந்த விக்ரமசிங்கே ஒரு சிங்களவர்தான். இன்று ஜெனீவாவில் இருந்தபடி இலங்கைமீது போர்க்குற்ற விசாரணைகள் நடைபெறவேண்டும் என்று எழுதிவந்த நிமல்கா ஃபெர்னாண்டோ ஒரு சிங்களவர்தான்.

இலங்கை என்னும் அரசு குற்றவாளி என்று நாம் கருதும்போது, அந்த அரசை எதிர்ப்பது நியாயமானது, அந்த அரசைக் கண்டிப்பது நியாயமானது. இலங்கையை காமன்வெல்த்திலிருந்து விலக்குவது, இலங்கையின் அதிகாரபூர்வ விளையாட்டு அணிகளோடு விளையாடாமல் இருப்பது, இலங்கைமீது பொருளாதாரத் தடையை விதிப்பது ஆகியவை முக்கியமான ஆயுதங்கள். இவற்றின்மூலம் ஓர் அரசை அடிபணிய வைத்து, தன் குற்றத்தின்மீதான நியாயமான விசாரணையை முன்னெடுத்துச் செல்வது சரியான பார்வை.

ஆனால் இலங்கையில் உள்ள பல இனங்களில் குற்றவாளி என்று நாம் பொதுவாகக் கருதும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில்/இந்தியாவில் எச்செயலிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்பதும் அதைச் செயல்படுத்துவதும் ரேசிசம் - இனவாதம்தான். இன்று தமிழகத்தில் நாம் கேட்கும் குரல்கள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன?

* சிங்களர்கள் தி.நகரில் வந்து பொருள்களை வாங்கக்கூடாது.
* சிங்கள கிரிக்கெட் வீரர்கள் சென்னையில் கிரிக்கெட் விளையாடக் கூடாது.
* சிங்கள பௌத்தர்கள் இந்தியாவுக்கு வரக்கூடாது.

நிறவெறி (அபார்த்தீட்) உச்சத்தில் இருந்தபோது, தென் ஆப்பிரிக்காவுக்கு பிற நாடுகள் விளையாட்டு அணிகளை அனுப்ப மறுத்தன. தடையை மீறி தென் ஆப்பிரிக்கா சென்று விளையாடிய வீரர்களை அந்தந்த நாடுகள் தடை செய்தன. ஆனால் அதே நேரம், இந்த நாடுகள் எவையும் தென் ஆப்பிரிக்காவின் வெள்ளை இன வீரர்கள் தத்தம் நாடுகளுக்கு வந்து உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதைத் தடை செய்யவில்லை.

இதனைப் பிரித்துப் பார்க்க ஒரு nuanced approach தேவை. நீங்கள் யாரை எதிர்க்கிறீர்கள்?
தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசையா அல்லது தென் ஆப்பிரிக்க வெள்ளை மக்களையா?
நிறவெறியினால் அந்த வெள்ளை மக்கள் பயன்பட்டிருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் அனைவரும் நேரடியாக அந்தக் குற்றச் செயலுக்குக் காரணமானவர்கள் இல்லை. ஒருவேளை அவர்களில் சிலர் நிறவெறிக்கு எதிரானவர்களாகவும்கூட இருக்கலாம்.

ஹிட்லரை ஜெர்மானியர்கள் தடுத்து நிறுத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்களால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்பதைப் பிற ஐரோப்பியர்கள் புரிந்துகொண்டனர். அதனால்தான் இரண்டாம் உலகப்போருக்குப்பின் சாதாரண ஜெர்மானியரைக் குற்றவாளியாக்கித் தூக்கில் போடவில்லை.

ஆனால் நாம்தான் சிங்கள மக்களையும் இலங்கை அரசையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் குழம்புகிறோம். வெறுப்பும் வேதனையும் சேர்ந்து நம் கண்களை மறைக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக்கூடாது, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வரக்கூடாது என்ற ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் நான் அதனை ஏற்பேன். ஆனால் இலங்கையின் எவ்வினத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபடத் தடை விதிக்கப்படவேண்டும் என்று சொன்னால் அதனை நான் வன்மையாக எதிர்ப்பேன். பாகிஸ்தானுக்கும் இதே விதி பொருந்தும்.

முன்னது அரசியல்ரீதியான எதிர்ப்பு. நியாயமானது. பின்னது இனரீதியான வெறுப்பு.
நியாயமற்றது.

- பத்ரி


40 Comments:

Raju said...

Absolutely sane and balanced article amongst the cacophony.

poovannan said...

தென்னாப்ரிகா வெள்ளை இன வீரர்கள் அவர்களோடு தொடர்பில் இருந்த ,அவர்களோடு வர்த்தக உறவு ,உதவி செய்து வந்த நாடுகளில் சென்று தான் விளையாடினார்கள்
அங்கு விளையாடும் வாய்ப்பு வந்த போதும் அங்கு சென்றால் அதன் பிறகு தோழர் ரிச்சர்ட்ஸ் முகத்தில் எப்படி முழிப்பேன் என்று போத்தம் விளையாட மறுத்தது எதை காட்டுகிறது
இந்தியாவில் எந்த தென்னாப்ரிகா வீரரும் வந்து விளையாடியதில்லை.,அவர்களுக்கு அனுமதியும் கிடைத்தது இல்லை
முதலில் அவர்கள் விளையாட தேர்ந்தெடுத்த நாடும் இந்தியா தான்.அவர்களின் மீது தடையைகொண்டு வர போராடிய நாடுகளில் இந்தியா முக்கியமானது
மருத்துவ சிகிட்சையை தடை செய்வது போல விளையாட்டை எண்ணுவது சரியா
ராணுவ வீரர்கள் பயிற்சிக்கும் ,விளையாட்டு வீரர்கள் வந்து பயிற்சி ,பங்கு பெறுவதற்கும் வித்தியாசம் கிடையாது.இரு நட்பு நாடுகள் தான் ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சி பெறவோ,விளையாட்டு போட்டிகளில் சேர்ந்து பங்கு பெறவோ அனுமதி அளிக்கும்

poovannan said...

தென்னாப்ரிகா வெள்ளை இன வீரர்கள் அவர்களோடு தொடர்பில் இருந்த ,அவர்களோடு வர்த்தக உறவு ,உதவி செய்து வந்த நாடுகளில் சென்று தான் விளையாடினார்கள்
அங்கு விளையாடும் வாய்ப்பு வந்த போதும் அங்கு சென்றால் அதன் பிறகு தோழர் ரிச்சர்ட்ஸ் முகத்தில் எப்படி முழிப்பேன் என்று போத்தம் விளையாட மறுத்தது எதை காட்டுகிறது
இந்தியாவில் எந்த தென்னாப்ரிகா வீரரும் வந்து விளையாடியதில்லை.,அவர்களுக்கு அனுமதியும் கிடைத்தது இல்லை
முதலில் அவர்கள் விளையாட தேர்ந்தெடுத்த நாடும் இந்தியா தான்.அவர்களின் மீது தடையைகொண்டு வர போராடிய நாடுகளில் இந்தியா முக்கியமானது
மருத்துவ சிகிட்சையை தடை செய்வது போல விளையாட்டை எண்ணுவது சரியா
ராணுவ வீரர்கள் பயிற்சிக்கும் ,விளையாட்டு வீரர்கள் வந்து பயிற்சி ,பங்கு பெறுவதற்கும் வித்தியாசம் கிடையாது.இரு நட்பு நாடுகள் தான் ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சி பெறவோ,விளையாட்டு போட்டிகளில் சேர்ந்து பங்கு பெறவோ அனுமதி அளிக்கும்

அகலிக‌ன் said...

ஜெர்மனியின் மக்கள் குற்ற்வாளிகளாக கருத்தப்படவில்லை உண்மைதான் ஆனால் நியூரம்பர்க் வழக்கு விசாரணை ஹிட்டருக்கு எதிராய் மிகத்துள்ளியமாய் செயல்பட்டது, அந்தவழக்கின் மூலம் பாதிக்கப்பட்ட இனத்துக்கு நியாயம் கிடைப்பது உறுதி என உலகே உறிந்திருந்தது. ஒட்டுமொத்த உலகும் ஹிட்லரின் நடவடிக்கைக்கு எதிராய்த்தான் இருந்தது. ஆனால் இலங்கை பிரச்சனையில் நிலைமை வேறு. இனப்படுகொலை நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் கழிந்தும் நியாயமான விசாரணை இதுவரை இல்லை. ஜெனிவா தீர்மானமும் உப்பு சப்பில்லாததாய் போச்சு. இந்நிலையில்
ஒரு மனிதாபிமானமுள்ள அர்சு மற்றும் மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் அவர்களின் எண்ண ஓட்டம் அறிந்து செயல்பட்டிருக்கும் அரசு பாராட்டத்தக்கது.
ராஜாங்க ரீதியிலான அனுகுமுறை இதைதான் செய்யவேண்டும் அரசும் அதைத்தான் செய்திருக்கிறது.

செல்வா said...

பத்ரி சொல்வது சரியாகவே படுகிறது. சிங்கள இனத்தின் மீது நாம் காண்பிக்கும் இந்த வெறுப்பு நமக்கு நன்மை பயக்காது என்றே கருதுகிறேன். சரியோ தவறோ நம் நிலை முள்ளில் போட்ட சேலையாய்தான் உள்ளது. மேலும் பத்ரி சொல்வது போல் அங்கும் இன வெறிக்கு எதிரான மக்கள் இருக்கின்றார்கள் என்றே நம்பத்தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த போர் குற்றங்கள் வெளியில் வந்திருக்காது.

Silicon Sillu said...

தமிழர்களுக்கு கோபம் இலங்கை அரசின்மீதும் அதற்கு உடந்தையாக இருந்த இந்திய அரசின் மீதும் வரவேணும், சிங்கள மக்கள் மீது அல்ல. சரி தான். அதேபோல் இந்த ஐபிஎல் நோ சிங்கள ஆட்டக்காரர்கள் தடையும் தமிழக அரசு போட்டது, தமிழக மக்கள் அல்ல. தஞ்சையிலும் சென்னை ரயில் நிலையத்திலும் சிங்கள புத்த பிட்சுக்கள் தக்கப்பட்டபோது சுற்றி இருந்த நக தமிழர்கள் தடுப்பதை அந்த வீடியோவிலேயே காணலாம்

திமுக கூட்டணியை முறித்த நிலையில் அதிமுகவும் ஏதேனும் ஸ்டண்ட் அடித்தே ஆகவேண்டிய கட்டாயத்திலும், ஏதேனும் ஒரு விதத்தில் இந்த இரண்டு கட்சிகளுமே மாணவர்களை சாந்தப்படுத்தவேண்டும் என்ற கட்டாய நிலையின் அடிப்படையிலுமே, தமிழக அரசு இந்த தடையை அமல்படுத்தியிருக்கிறது.

மற்றபடி ஐபிஎல் என்பது ஒரு வியாபாரம், விளையாட்டு அல்ல. அதில் சிங்களர்கள் கலந்துகொண்டாலும் சரி விலக்கிவைக்கப்பட்டாலும் சரி எந்த பிரயோஜனமும் இல்லை. தேவையில்லாமல் அதிகப்படியான மின்சாரத்தை வீணாக்குவது அன்ற தீமையை தவிர ஐபிஎல் ஆல் எந்த நன்மையும் இல்லை

காத்தவராயன் said...

போர் உச்சத்தில் இருந்த போது முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தார். அசினுக்கு எழுந்த எதிர்ப்பில் சிறிதேனும் முரளிதரனுக்கு எதிராக எழுந்ததா? கிடையாது.

தமிழன் எந்த தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாத ஒரு வெறி இன்றைய இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி இருப்பது பச்சை அயோக்கியத்தனம்.

பிரபாகரன் தமிழர்களை கொன்றால் அது தக்காளி சட்னி.

கேவலம்.

Anonymous said...

HAATS OF FOR A BALANCED AND WELL THOUGHT ARTICLE.
IN TODAY'S EMOTIONALLY CHARGED ATMOSPHERE, BADRI AND IDLY VADAI WILL BE CHARGED AS ANTI= TAMILS. SOME BODY WILL CALL THEM 'NOOLS' AND 'PAPPANS' ASIF ALL BRAHMINS ARE ANTI TAMILS.
I HAVE WRITTEN SEVERAL TIMES BEFORE THAT I WAS IN LANKA DURING THE PEAK PERIOD AND NO SINHALA HARMED US. INSTEAD THEY HELPED ME SEVERAL TIMES.
THEIR FIGHT WAS AGAINST LTTE.
WITH ALL THE HONESTY AND TRUTH AT MY COMMAND I CAN SAY BUT FOR INDIA'S HELP LANKA WOULD HAVE NEVER WON THE WAR AGAINST LTTE.
IF AT ALL OUR PEOPLE MUST BE ANGRY THEY MUST FIGHT ALL CONGRESS MEN AND DMK MEN.
YOU CAN SEE LOT OF MUSLIMS FIGHTING AS JEHADIS IN OTHER COUNTRIES. EVEN BIN LADEN IS NOT AN AFGHAN.
PLEASE SHOW ONE TAMIL MERCENARY IN EELAM.
WE ARE ALL COWARDS. WE CAN SHOUT ONLY FROM HERE AND HARM THE TAMILS IN LANKA.IT WILL BE LIKE THE WIFE BEATING THE CHILD IN HER ANGER TOWARDS THE HUSBAND
OUR ARMY IS CHARGED OF MIS BEHAVING IN KASHMIR AND NORTH EAST KASHMIRI'S STILL ASK ARE YOU FROM INDIA. ONLY BANNING LANKAN CRICKETERS FROM PLAYING IN CHENNAI WILL FURTHER EXPOSE THAT REST OF INDIA IS NOT WITH TAMILS.
IPL IIS A MONEY SPINNER AND THEY ARE NOT SIMPLY BOTHERED.
ATLEAST IN THE CASE OF PAKISTANI PLAYERS NO TEAM HAS SELECTED THEM. THERE IS A MESSAGE TO PAKISTAN.
IN THE CASE LANKA THERE IS ONLY A NEGATIVE MESSAGE THAT REST OF INDIA IS NOT WITH THE TAMIL CAUSE.
ALL OF US WILL BECOME A LAUGHINGH STOCK BEFORE THE LANKANS.
WILL ALL DMK AND TAMIL SYMPATHISERS TAKE A VOW THAT THEY WILL NOT WATCH IN TV THE IPL MATCES SINCE LANKANS ARE IN ALL TEAMS.
IN FACT THIS WILL AFFECT THEM MORE SINCE TAMILNADU IS NO. 2(SECOND) IN TV VIEWING OF IPL.
THIS DIRECTLY WILL AFFECT TRP AND REVNUES OF IPL AND LANKAN PLAYERS WILL BE EASED OUT AUTOMATICALLY
ONCE AGAIN HATS OFF FOR A BOLD ARTICLE.

Anonymous said...

y pakistan players not participate in IPL? common tell me.. tell me the answer mr.Idiot...

Ashok said...

Well, what we are doing right now is (hopefully) temporary. We have to pressurize Sri Lankan govt to co-operate for the international probe, and stop the atrocities. The Sri Lankan govt is still in denial mode. So the steps taken by TN govt are correct. Rajapakshe is not going to play IPL. We all know that.

jaisankar jaganathan said...

காத்தவராயா அடக்கி வாசி,

காஷ்மீர்ல பாப்பானுங்க சாவும்போது எழுந்த மீடியாவுக்கும் இப்போ கூவுற மீடியாவுக்கும் வித்தியாசம் இருக்கே. அத கவனி

Ram said...

Narayana endha kosu...
"காத்தவராயா அடக்கி வாசி,

காஷ்மீர்ல பாப்பானுங்க சாவும்போது எழுந்த மீடியாவுக்கும் இப்போ கூவுற மீடியாவுக்கும் வித்தியாசம் இருக்கே. அத கவனி"

Rajesh kumar said...

senseless ... does your points apply to pakistan players in IPL? india denied playing with pakistan for 26/11 attacks..

dr_senthil said...

Still couldn't comprehend when Pakistan players are absent in IPL why not SL players.. Killing indian fishermen/Ethnic tamilians doesn't constitute Terrorism?

சிவ.சரவணக்குமார் said...

''தமிழினத்தலைவர் '' [ அப்படி ஒரு பதவி இருக்கா என்ன? ]பதவிக்கான போட்டியில் ஜெ வும் கருணா நிதியும் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் காமெடி சகிக்கவில்லை.......மெல்ல மெல்ல தமிழர்களை ஒரு பாசிசக்கூட்டமாக்கும் முயற்சி சத்தமில்லாமல் நடந்து வருகிறது......இவர்கள் ஒரு பக்கம் என்றால் , எங்கே கல்லூரிகளை திறந்து விடுவார்களோ, படிக்க வேண்டி இருக்குமே என்ற கவலையில் போராட்டத்தை ''முன்னெடுக்கும் '' மக்கு மாணவர்கள் ஒரு பக்கம்......கொஞ்சம் கூட மாணவர்களின் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாமல் வியாபார நோக்கத்தோடு அவர்களை தூண்டிவிடும் புதிய தலைமுறை போன்ற மீடியாக்கள் ஒரு புறம்.......எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் அங்கு சென்று அழுது அதை ஈழத்தமிழருக்கான உயிர்த்தியாகமாக மாற்றும் வைகோ போன்ற அரசியல் வியாதிகள் ஒரு பக்கம்......ஹ்.ம்...ம்....ம்.....

மாணவர்கள் ஒரு முறை தனக்காக போராடத்திரண்ட போது, சுய நலத்துக்காக அவர்களை பயன்படுத்தாமல் , '' போ.....போ...போய் படிக்கிற வழியப்பாரு '' என்று விரட்டிய காமராஜரைப்போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்டதலைவர்கள் இனிமேல் நமக்கு வாய்க்கவே மாட்டார்களா?

சிவ.சரவணக்குமார் said...

''தமிழினத்தலைவர் '' [ அப்படி ஒரு பதவி இருக்கா என்ன? ]பதவிக்கான போட்டியில் ஜெ வும் கருணா நிதியும் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் காமெடி சகிக்கவில்லை.......மெல்ல மெல்ல தமிழர்களை ஒரு பாசிசக்கூட்டமாக்கும் முயற்சி சத்தமில்லாமல் நடந்து வருகிறது......இவர்கள் ஒரு பக்கம் என்றால் , எங்கே கல்லூரிகளை திறந்து விடுவார்களோ, படிக்க வேண்டி இருக்குமே என்ற கவலையில் போராட்டத்தை ''முன்னெடுக்கும் '' மக்கு மாணவர்கள் ஒரு பக்கம்......கொஞ்சம் கூட மாணவர்களின் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாமல் வியாபார நோக்கத்தோடு அவர்களை தூண்டிவிடும் புதிய தலைமுறை போன்ற மீடியாக்கள் ஒரு புறம்.......எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் அங்கு சென்று அழுது அதை ஈழத்தமிழருக்கான உயிர்த்தியாகமாக மாற்றும் வைகோ போன்ற அரசியல் வியாதிகள் ஒரு பக்கம்......ஹ்.ம்...ம்....ம்.....

மாணவர்கள் ஒரு முறை தனக்காக போராடத்திரண்ட போது, சுய நலத்துக்காக அவர்களை பயன்படுத்தாமல் , '' போ.....போ...போய் படிக்கிற வழியப்பாரு '' என்று விரட்டிய காமராஜரைப்போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்டதலைவர்கள் இனிமேல் நமக்கு வாய்க்கவே மாட்டார்களா?

ஜீவ கரிகாலன் said...

very poisonous article...

many so called intellectuals try to convince the injustice like the way you wrote

சுழியம் said...


1960கள் வரை இங்கிலாந்து நாட்டின் சில கடைகளில் யூதருக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை போர்ட் தொங்கிக்கொண்டுதான் இருந்தது.

உலகப் போரின் முடிவில் நாட்ஸிக்களுக்கு எதிரான விசாரணை தோற்ற நாட்டின் மேல் வெற்றி பெற்ற நாடுகள் நடத்திய விசாரணை. இனவாதத்திற்கு எதிரான விசாரணை இல்லை.

இங்கே வெற்றி பெற்ற அரசின்மேல் ஆதிக்கம் செலுத்த விரும்பும் மத அமைப்புக்களும் அரசுகளும் நடத்தும் நாடகங்களின் ஒரு பகுதிதான் விசாரணை கோரிக்கை.

Anonymous said...

சரிதான். இதேபோலவே கவிஞர்கள், பாடகர்கள், இயக்குனர்கள், கலைஞர்கள் போன்றோரையும் அரசையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பாகிஸ்நானிய இசைக்கலைஞர்கள் மும்பையில் பாதவிடாமல் சிவசேனா தடுத்ததுபோல நாம் நடந்துகொள்ளக் கூடாது. நாம், ஒன்று ஈழத்தில் என்ன நடந்தாலும் கண்டுகோள்ளாமல் மானாட மயிலாட பார்க்கிறோம், அல்லது தவறான வாதங்களை எழுப்பி, தமிழர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறோம்.

சரவணன்

Ravi said...

Kathavarayan, my salutes to your superb comment.

சாதாரண கிராமத்தான் said...

Badri,
Players and government are not that different. We can exclude very essential services like medical and related support but not cricket. By not allowing their players we are giving pressure to their government. Saying all this, BCCI is not a government body. The cricket team it has is not representing India. Considering this there is no need to play IPL at all. Its waste of money, time and energy.

thirunageswaram said...

பத்ரிக்கு சிங்களர்கள் ஆட்டம் பார்க்க வேண்டுமென்றால் அங்கு போய் பார்க்க வேண்டும். அதற்காக அவர்களூக்கு ஆதரவாக இருப்பது நியாயமல்ல.

பெருவாரியான சிங்களர்களால் (இந்த வீரர்களையும் சேர்த்துத்தான்) ஆதரவு அளிக்கபட்டுத்தான் ராஜபக்சே ஜனாதிபதி ஆனார். தமிழ் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தை ஏன் இந்த கிரிக்கெட் வீரரகள் விமர்சனம் செய்யவில்லை?

ராஜ பக்சே ஆதரவு வீரர்கள் தடை செய்ய பட்டது சரிதான்.

Anonymous said...

நான் எவ்வளவுதான் என் மனதை தேற்றிக்கொண்டு பிராமணர்கள் பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்க நிணைத்தாலும்.. உங்க பார்ப்பார விஷம் விடவே மாட்டெங்குது.. (நல்ல பிம்பம் ஆனந்தவிகடன் ஈழப்பிரச்சினையில் கொடுக்கும் கவனம்) நான் எதிர்ப்பார்த்துகிட்டு இருந்தேன் இந்த தயிர் வடையும்.. பத்ரியும் என்னோட சாம்பார் வாய திறக்காம இருக்காங்களேன்னு யோசிச்சேன்.. கரெக்ட்டா வந்தீட்டிங்களே.

Anonymous said...

பெருவாரியான சிங்களர்களால் (இந்த வீரர்களையும் சேர்த்துத்தான்) ஆதரவு அளிக்கபட்டுத்தான் ராஜபக்சே ஜனாதிபதி ஆனார்.
this statement is not politically and factually correct.IN THE ELECTION BETWEEN RAJAPAKSHE AND RANIL WICKRAMASINGHE PRABAKARAN TOLD ALLTAMILS NOT TO VOTE KNOWING FULLY WELL THAT TAMILS WILL VOTE FOR RANIL. THEY LOVED HIM. NOT A SINGLE TAMIL VOTE WAS CAST. LTTE ENSURED THAT. HENCE RAJAPAKSHE WON BY A VERY THIN MARGIN BASED ON SOUTHERN LANKA VOTES.
EVEN TODAY MANY LANKAN INTELLUCTUALS AND ASECTION OF THE PRESS DO NOT LIKE HIM.
PRABAKARAN THOUGHT IT WILL BE EASIER TO NEGOTIATE WITH RAJAPAKSHE AND MADE HIM WIN
INITIALLY RAJAPAKSHE WAS MELLOWED AND HE INVITED LTTE FOR TALKS MORE THAN ONCE.
A READING OF LANKAN HISTORY OF THAT TIME WILL PRVE THE TRUTH.
THERE ARE SEVERAL REASONS FOR LTTES DEFEAT.
THE MAIN REASONS ARE KAUNA,SUNAMI, THE LONG CEASE FIRE FROM 2002,AND TACTICAL HELP OF GOVT OF INDIA.
BUT FOR INDIAS SUPPORT RAJAPAKSHE WOULD NOT HAVE EVEN STARTED THE WAR.
WHETHER INDIA'S STAND IS CORRECT OR NOT IS ANOTHER ISSUE.
RAJAPAKSE IS ENJOYING THE CREDIT FOR WINNING THE WAR JUST BECAUSE HE WAS PRESIDENT AT THAT TIME.
ONLY ONE MORE POINT. AFTER 2009 (FLUSHING OUT LTTE AND KILLING PRABAKARAN) THREE IPLS WITH LANKAN PLAYERS AND THAT TOO IN CHENNAI SUPER KINGS HAVE BEEN PLAYED.
WHY THE THEN RULING PARTY ,PRESENT CALLER FOR BANNING KEPT QIIET.
IS IT NOT DRAMA AND DISHONESTY?

Anonymous said...

ஐயோ பார்ப்பனரே ..நிற வெறி வேறு ..இனபடு கொலை வேறு.....ஐரோப்பவில் இன்னமும் நிற வெறி உண்டு...போலந்து , செக் நாடுகளுக்கு சென்று பாரும்...

ஹிட்லர் தனி ஆளாக எல்லோரையும் கொல்லவில்லை.,,,அவர் ஆயிரமாயிரம் ஜெர்மானியர் பிரதிநிதி....ராஜா பக்சே ஹிட்லரை போல....
Any leader can only reflect the view of his people....Every sinhala thinks every tamil is a tiger (based on my german friends interaction in srilanka with many sinhalese)..

Raja pakse only did what majority sinhalese wanted..

பார்ப்பானுக்கு என்னக்கிமே பொது நலம் கிடையாது

The Caste Watcher said...

The caste angle of the comments is spectacularly awesome. That they seek comfort in numbers is actually no different from what they are condemning does not seem to bother them at all.

In all this what worries me is the state of education in Tamil Nadu. Why aren't these grown people, I assume mostly men, unable to distinguish argument from argumentation.

keyven said...

காசு இல்லாதை ஏழை இலங்கை தமிழர்களும் கூட ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நோர்வே போன்ற நாடுகளுக்கே செல்ல விரும்புகிறார்கள். இங்கே உள்ள தமிழன் தான் இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறான். அனைத்தும் அரசியல் ஆதாயம் தேடவே ஒழிய, எந்த உதவி நோக்கமும் இல்லை. இந்த குழம்பிய குட்டையில் இப்போது மாணவர்களும்.
மொத்தத்தில்,
சுயநலவாதிகள் = இலங்கை தமிழர்கள், அரசியல் வாதிகள்.
எமார்ந்தவர்கள் = தமிழ் நாட்டு மக்கள், மாணவர்கள்.
சாமத்திய சாலிகள் = வட இந்தியர்கள்.

cho visiri said...


//Anonymous said......
பார்ப்பானுக்கு என்னக்கிமே பொது நலம் கிடையாது//

Have you read Silappathikaram? What does it say about the so called Paarppan ?

Have you read TirukkuraL ? Why does it call all pious men are AndhaNan (Parpaan, in your language)?

Do you know Agasthiar ? And his contribution to Tamil IlakkaNam?

Do you know Vi Ko SuriyanarayaNa Sasstrigal (yes, the one and only Paridi Mal Kalaignar) ?

Do you know Bharatiyar?

Do you know Sujata, our contemporarian ?

Do you know Vu Ve Swaminatha Iyer and his contribution to Tamil?

What do you know ? What is your age? Why don't you educate yourself before rushing to pass comments ?

Why do you see caste in anything and everything ? When are you going to see the issue instead of who said it?

Show me a single leader (other than Vai Ko), who works solely for the welfare of the people? Go and ask him about the people of the caste you are ridiculing.


cho visiri said...

//Anonymous said......
பார்ப்பானுக்கு என்னக்கிமே பொது நலம் கிடையாது//

Have you read Silappathikaram? What does it say about the so called Paarppan ?

Have you read TirukkuraL ? Why does it call all pious men are AndhaNan (Parpaan, in your language)?

Do you know Agasthiar ? And his contribution to Tamil IlakkaNam?

Do you know Vi Ko SuriyanarayaNa Sasstrigal (yes, the one and only Paridi Mal Kalaignar) ?

Do you know Bharatiyar?

Do you know Sujata, our contemporarian ?

Do you know Vu Ve Swaminatha Iyer and his contribution to Tamil?

What do you know ? What is your age? Why don't you educate yourself before rushing to pass comments ?

Why do you see caste in anything and everything ? When are you going to see the issue instead of who said it?

Show me a single leader (other than Vai Ko), who works solely for the welfare of the people? Go and ask him about the people of the caste you are ridiculing.

சி.தவநெறிச்செல்வன் said...

பத்ரி சொல்வது சரி என்பது போன்று தோன்றினாலும், 5 ஆண்டுகள் ஆகியும் நமக்கு ஒரு நியாயமும் கிடைக்கவில்லை, அது இலங்கையிடம் இருந்து மட்டும் அல்ல நமது இந்தியாவிடமும் இருந்தும்தான், அப்படி பட்ட நிலை ஒரு அனாதை போன்ற நிலைக்கு இன்றைய தமிழினம் ஆகிக்கொண்டிருக்கிறது 600 க்கும் அதிகமான மீனவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது, அப்படி இருந்தும் ஒரு பாதுகாப்பு முறையும் வெளியாக இல்லை, இந்த கையறு நிலையில் உலகின் கவனத்தை ஈர்ப்பதை விட இந்தியாவின் கவனத்தை ஈர்ப்பதே பெரிய பாடாக இருக்கிறது. இதில் என்ன போராட்ட முறையை பின்பற்றி தொலைவது.

jaisankar jaganathan said...

cho visiri,
திருவள்ளுவர் சொன்ன அந்தணன் என்பவர் எந்த ஜாதியை சார்ந்தாலும் எல்லா உயிருக்கும் நன்மை செய்கிறவர்.
உங்களைப்போல அல்ல

Saravanan said...

இது தவறான கட்டுரை. தயவு செய்து இதை போன்று எழுதாதீர்கள்.

அரசியல்ரீதியான எதிர்ப்பு இந்தியாவிடமிருந்து கிடைக்கவில்லை என்பதால் தான் இந்த அனைத்து போராட்டமும்.

ஏன் பாகிஸ்தான் வீரர்கள் ஐபில் விளையாடவில்லை?

ஏன் தமிழக மீனவர்கள் துன்புறுவதை இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை?

ஏன் ஈழப்போரின் போது இந்தியா இலங்கைக்கு உதவியது?

பங்களாதேஷ் அகதிகளால் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வாங்கி தந்த இந்தியா, ஏன் இலங்கை அகதிகளை கண்டுகொள்ளவில்லை?

பாகிஸ்தானுக்கு இலவச மின்சாரம், தமிழ்நாட்டுக்கு மின் பற்றாக்குறை?

தமிழ்நாட்டு பிரச்சனையை ஏன் இந்திய பிரச்சனையாக இந்தியா ஏற்க மறுக்கிறது?

தயவு செய்து இம்மாதிர் கட்டுரை எழுதாமல் நீர் சும்மா இருந்தால் மிக்க நல்லது!

SIV said...

சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல சிங்கள அரசுதான் எதிரானது என்று நீங்கள் கூறுவதை விட அங்கு அவர்களுடன் வாழும் தமிழ் மக்கள் கூறினால் ஏற்றுக் கொள்ளலாம்.

Not Racist said...

சி.தவநெறிச்செல்வன்,

1. தமிழனம் அழிந்து கொண்டு இருப்பதற்கும் 40,000 தமிழர்கள் மாண்டதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.

2. உயிர் சேதம் என்பதை நமது இனத்தின் கண்களால் பார்ப்பது மனித நேயதிர்க்கு நாம் அற்றும் பெரும் அவமானம். சுடான் மற்றும் காங்கோ வில் மாண்டவர்கள் நமது இறக்குதிர்க்கு அருகதை அட்ட்ரவர்களா?

Anonymous said...

THIS IS THE THIRD TIME I AM WRITING SINCE PEOPPLE ARE STILL GIVING IT A CASTE COLOUR WITHOUT UNDERSTANDING THE REAL ISSUE

.காசு இல்லாதை ஏழை இலங்கை தமிழர்களும் கூட ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, நோர்வே போன்ற நாடுகளுக்கே செல்ல விரும்புகிறார்கள். இங்கே உள்ள தமிழன் தான் இவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறான். அனைத்தும் அரசியல் ஆதாயம் தேடவே ஒழிய, எந்த உதவி நோக்கமும் இல்லை. இந்த குழம்பிய குட்டையில் இப்போது மாணவர்களும்.
மொத்தத்தில்,
சுயநலவாதிகள் = இலங்கை தமிழர்கள், அரசியல் VATHIGAL.
THIS IS 100% TRUE. EVEN IF A EELAM IS GIVEN MOST OF THEM WILL NOT RETURN.
CANADA AND AUSTRALIA HAVE GOT MORE LANKANS THAN JAFFNA.
THERE ARE AGENCIES TO GET THEM CITIZENSHIP.
IF THEY WANT TO RETURN WHY THEY MUST BECOME CITIZENS.
THEY WILL BE ALLOWED AS REFUGEES/CIITIZENS ONLY IF THE WAR CONTINUES.
ALREADY MANY EUROPEAN COUNTRIES ARE NOT ADMITTING LANKAN TAMILS AS REFUGEES SINCE THE WAR IS OVER
THERE ARE HILL TAMILS AND TAMIL SPEAKING MUSLIMS ABOUT WHOM NONE OF US ARE BOTHERED.
HALF OF COLOMBO IS RICH TAMILS.
LANKAN GOVT KNOWS THAT INDIAN GOVT. WILL ALWAYS SIDE THEM.
IT WAS SASTHRI WHO TOOK BACK SOMANY TAMILS.
TILL THE KASHMIR ISSUE IS ALIVE WE ARE ON A WEAK WICKET.
WILL WE WLL KEEP QUIET IF PAKISTAN PARLIAMENT PASSES A RESOLUTION FOR AN INDEPENDANT KASHMIR
IT IS NO USE BLAMING THE PAST OR CALLING EACH OTHER NAMES,
WHAT THE LANKAN TAMILS REQUIRE IS A DIGNIFIED AND SAFE LIVING.
LET US DO SOMETHING ABOUT IT.
IN OUR OWN COUNTRY NEIGHBOURING STATES ARE IGNORINNG SUPREME COURT VERDICTS AND MAKE US SUFFER.
IF CENTRE THINGS IT CAN GIVE US SOME POWER AND REDUCE THE POWER CUT. THEY ARE NOT DOING SINCE IT WILL MEAN LOSS OF VOTES.
WHEN THEY ARE NOT BOTHERED EVEN ABOUT TAMILNADU TAMILS HOW THEY WILL BOTHER ABOUT LANKAN TAMILS
NO SANE LANKAN GOVT. WILL GIVE EELAM. EVERY ONE KNOWS THAT.
PEOPLE ARE MAKING EELAM AN ISSUE FOR POLITICAL AND SELFISH INTERESTS.
LET US ALL WORK FOR DIGNIFIED EXISTENCE OF TAMILS WITH EQUAL RIGHTS.
THIS IS POSSIBLE IF ALL PARTIES COME TOGRTHER AND PRESSURISE CENTRE.

Anonymous said...

//Do you know Sujata, our contemporarian ?

Do you know Vu Ve Swaminatha Iyer and his contribution to Tamil?

What do you know ? What is your age? Why don't you educate yourself before rushing to pass comments ? //

கதை , கவிதை, பரதநாட்டியம் ஆடுவது எல்லாம் சமுக தொண்டு அல்ல....சக மனிதனுக்கு தீமை செய்யாமல் தூண்டாமல் இருப்பதே பெரிய சமூக நலம்...

திருக்குறள் சொல்லும் அந்தணன் நிச்சயம் இன்றைய பார்ப்பன் இல்லை....நல்லவனா இருக்க கேட்டது செய்யாமல் இருந்தால் போதும்..
பிறர் நலம் சார்ந்த போராட்டங்களை கொச்சை படுத்தாதீர்....தமிழ் நாட்டு பார்ப்பன் என்னைக்குமே தன்னை தமிழன் என காட்டி கொண்டது இல்லை....சராசரி தமிழர் உணர்வுகளை பிரதிபலிப்பதுமில்லை......ஸ்ரீலங்கா சென்று பார்த்து விட்டு வாருங்கள்..

jaisankar jaganathan said...

//தமிழ் நாட்டு பார்ப்பன் என்னைக்குமே தன்னை தமிழன் என காட்டி கொண்டது இல்லை//

இலங்கையில் தமிழனுக்கு இடஒதுக்கீடு குடுத்த மாதிரி இங்கேயும் பார்பனனுக்கு கொடுக்கனும்

-/சுடலை மாடன்/- said...

//என்னைக் கேட்டால், இலங்கை அரசையும் இலங்கை மக்களையும் பிரித்துப்பார்க்கவேண்டும் என்பேன் நான்.//
//சிங்களவர்கள் மோசமானவர்கள் என்று தொடர்ந்து தமிழகத்தில் ஒட்டப்படும் போஸ்டர்கள் இனவெறியைத் தூண்டுபவை.//
//ஆனால் இலங்கையில் உள்ள பல இனங்களில் குற்றவாளி என்று நாம் பொதுவாகக் கருதும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில்/இந்தியாவில் எச்செயலிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்பதும் அதைச் செயல்படுத்துவதும் ரேசிசம் - இனவாதம்தான்.//
//முன்னது அரசியல்ரீதியான எதிர்ப்பு. நியாயமானது. பின்னது இனரீதியான வெறுப்பு.//

இங்கே, பத்ரியின் வாசகங்கள் எல்லாம் படிப்பதற்கு nuanced approach-ஆகத்தான் தெரிகிறது!

ஆனால் போன ஆண்டு இனவெறி-இனப்படுகொலை பற்றி பத்ரியின் nuanced approach-ஐப் பார்ப்போமா?

// பாஜக ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோதி பிரதமரானால், அதை நான் விரும்புவேனா என்று கேட்டார். பொருளாதார அரசியல் முக்கியமா, கலாசார அரசியல் முக்கியமா என்று வினவினார். எனக்கு பொருளாதார அரசியல்தான் முதன்மை. கலாசார அரசியல் அடுத்ததுதான். பெரும்பான்மைக் குழுவில் ஓர் அங்கம் வகிக்கும் காரணத்தால் நான் அப்படி நினைக்கக்கூடும். ஒரு முஸ்லிம் எப்படி நரேந்திர மோதியைப் பார்ப்பார் என்று நான் சொல்ல முடியாது. பாஜக தொண்டர்கள்போல, மோதி ஒரு அப்பழுக்கற்ற தெய்வம் என்று நான் சொல்லமாட்டேன். கோத்ரா விவகாரம் அவர்மீதான நீங்காப் பழி. அப்படிப் பார்த்தால் பாஜக கட்சியின் வாஜ்பாயி முதற்கொண்டு அனைவர்மீதும் ஏதோ ஒருவிதத்தில் மதவாதம் என்ற குற்றக்கறை படிந்தே உள்ளது. பாஜகவால் மதவாதத்தைத் தாண்டி வெளியே வருவதும் முடியாத காரியம் என்றே தோன்றுகிறது. அந்த மதவாதம் வன்முறையைத் தூண்டாமல் இருக்குமா என்பதுதான் கேள்வியே.
இந்தியாவில் இப்போது நடைமுறையில் இருக்கும் கூட்டணி ஆட்சி முறை, பாஜகவின் கலாசாரக் காவலர்களைக் கட்டுப்படுத்தி வைத்து, சீரிய பொருளாதாரத் திட்டங்களுக்கு மட்டும் துணை போகும் என்றே இந்தக் கட்டத்தில் நான் நம்ப விரும்புகிறேன். நரேந்திர மோதி குஜராத்தில் செயல்படுத்தியிருக்கும் பல பொருளாதாரத் திட்டங்கள் தொலைநோக்கு கொண்டவையாக உள்ளன. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது அவரைத் தலைவராகக் கொண்ட ஓர் ஆட்சியை ஆதரிப்பதாக உள்ளேன்.//


அதாவது இசுலாமிய-தமிழ் இனப்படுகொலைகளும், அவற்றுக்கெதிராக எழும்பும் அல்லது முன்வைக்கப்படும் இனவாத கோரிக்கைகளும் சமமாகப் பார்க்கப்படவேண்டுமாம்! ஆனால் பொருளாதார மேம்பாடு என்று வரும்பொழுது இனப்படுகொலைகள் ஓகேவாம்!

இதில் பத்ரியின் இன்னொரு புத்திசாலித்தனமான சொற்பயன்பாட்டையும் நாம் பார்க்கலாம். அதாவது தமிழர்கள் சிங்களர்களைத் தமிழ்நாட்டில் விளையாட விடக்கூடாது என்று பேச்சளவில் குரல் எழுப்புவதைக்கண்டு ”இனவெறியைத் தூண்டுபவை”, ”ரேசிசம் – இனவாதம்”, ”இனரீதியான வெறுப்பு” என்று எழுதிக் கொதித்துப்போய்விட்டார். ஆனால் நூற்றுக்கணக்கான இசுலாமியர்களைக் கொன்ற மோடியின் படுகொலை அரசியல் ”கலாசார அரசிய”லாம்!

சும்மா சொல்லக்கூடாது! பத்ரி உணர்ச்சிவயப்படாமல் அறிவுப்பூர்வமாகத்தான் ஆராய்கிறார்.
நடுநிலையாகவும் பேசுகிறார், ஏனென்றால், “மோதி ஒரு அப்பழுக்கற்ற தெய்வம் என்று நான் சொல்லமாட்டேன். கோத்ரா விவகாரம் அவர்மீதான நீங்காப் பழி”, ”இலங்கை அரசு இனவாத அரசு”, ”இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக்கூடாது, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வரக்கூடாது என்ற ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் நான் அதனை ஏற்பேன்” என்றெல்லாம் ஒப்புக்காகச் சேர்த்தே எழுதிவிடுகிறாரே! அவர் நடுநிலையாளர்தான்!

நன்றி – சொ. சங்கரபாண்டி

Anonymous said...

/என்னைக் கேட்டால், இலங்கை அரசையும் இலங்கை மக்களையும் பிரித்துப்பார்க்கவேண்டும் என்பேன் நான்.//
//சிங்களவர்கள் மோசமானவர்கள் என்று தொடர்ந்து தமிழகத்தில் ஒட்டப்படும் போஸ்டர்கள் இனவெறியைத் தூண்டுபவை.//
//ஆனால் இலங்கையில் உள்ள பல இனங்களில் குற்றவாளி என்று நாம் பொதுவாகக் கருதும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில்/இந்தியாவில் எச்செயலிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்பதும் அதைச் செயல்படுத்துவதும் ரேசிசம் - இனவாதம்தான்.//
//முன்னது அரசியல்ரீதியான எதிர்ப்பு. நியாயமானது. பின்னது இனரீதியான வெறுப்பு.//

Anonymous said...

In such case, Rajapakshe didnt target only LTTE. HE targetted entire civilian tamils and continued his genocide.
if rajapakshe had targetted only LTTE , then what you say is okay.. but what happened was a genocide and we had no choice then doing this