பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 06, 2013

ரீசார்ஜ் செய்யும் ஆர்ட்!

செந்தூர்பாண்டியின் ஓவியத்திறமை பற்றி எ.அ.பாலா இட்லிவடையில் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். அவரது ஓவியத்திறமையை முன்னிறுத்தி ஒரு பக்க கட்டுரை ஒன்று இந்த வார கல்கியில் வெளிவந்துள்ளது.( தனியாக கீழே கொடுத்திருக்கிறேன் )

பாண்டியின் தானியங்கி சக்கர நாற்காலியில் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அதை சீர் செய்ய கிட்டத்தட்ட ரூ.30000 தேவையிருப்பதாகவும், சக்கர நாற்காலி இல்லாத சூழலில் பாண்டி தனது கைத்தொலைபேசி ரிப்பேர் கடைக்கு சென்று வர கஷ்டப்படுவதாகவும் கேள்விப்பட்டேன். 

இட்லிவடை வாசகர்கள் தங்களால் இயன்ற உதவியை பாண்டிக்கு நேரடியாகச் செய்யலாம். மேலும் தகவலுக்கு கீழே உள்ள தொலைப்பேசியை தொடர்பு கொள்ளலாம் அல்லது பாலாவை அனுகலாம்.

நன்றி
இட்லிவடை

M.SENTHUR PANDIAN

NO,5/269 VEERAMAMUNIVAR STREET M.A NAGAR STREEET
REDHILLS CH-52
PHONE NO - 9940512774

அவரது வங்கிக்கணக்கு எண்:

M.SENTHUR PANDIAN
INDIAN BANK ACCOUNT NO -977780556
RED HILLS BRANCH


கல்கியில் வந்த கட்டுரை

ரீசார்ஜ் செய்யும் ஆர்ட்! -  கி.ச.திலீபன்
இரண்டு கால்களும் செயல்படாத, இரண்டு கைகளில் வலதுகை மணிக்கட்டுக்குக் கீழ் மட்டும் செயல்படும் மாற்றுத் திறனாளியான செந்தூரப்பாண்டியன் தமது பல திறமைகள் மூலம் நம்மை அசர வைக்கிறார். சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் வசிக்கும் செந்தூரப்பாண்டியனின் பேச்சு உத்வேகம் மிகுந்தது.
மத்தவங்க மாதிரி என்னால நடக்க முடியலையேன்னு நானும் வருத்தப்பட்டேன். அப்பப்ப என்னை நெனைச்சு நானே அழுததுண்டு. ஏதோ பத்தாம் வகுப்பு வரை ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சதால அங்க எனக்குக் கிடைச்ச ஊக்கத்தில் என் மனசு தேறிச்சு. பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வந்தப்ப எங்கப்பா என்னை ஏத்துக்க மாட்டேனுட்டார். நான் இப்படியிருக்கிறதால அவருக்கு அது அவமானமாவே இருக்காம். என்னாலேயே எங்கப்பா குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு போயிட்டார். சொந்த அப்பாவே நம்மள வெறுத்த பிறகு வேற எவன் என்ன சொன்னா என்னன்னு அன்னைக்குத்தான் முடிவு பண்ணேன். இருக்கிறதை வெச்சுக்கிட்டு சிறப்புற வாழ்றதுதான் வாழ்க்கை. நான் கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கப் போறேன்னு தெரிஞ்சப்புறம் அழுது மட்டும் என்னாகப் போவுது?
என்னைப் பார்த்தா வாடகைக்கு வீடு கொடுக்கக் கூடத் தயங்குறாங்க. எங்களுக்குன்னு ஒரு சொந்த வீட்டைக் கட்டிக் காட்டணும்ங்கிறதுதான் என் லட்சியம். செல்போன் சர்வீஸ் பண்றது, ரீசார்ஜ் பண்றதுன்னு இப்ப தினமும் 250 ரூபாய் சம்பாதிச்சுட்டு வர்றேன். ஆனா இதைவிடப் பெரிய கடையைப் போட்டு இன்னும் சம்பாதிக்கணும்ங்கிற ஒரு வெறி எனக்குள்ள இருக்கிறதாலதான் என்னால சோர்வே அடையாம வேலை செய்ய முடியுது. என்னை அப்பப்போ ரீசார்ஜ் செய்ய வைக்கிறதும் நம்பிக்கையை டவுன்லோடு பண்ண வைக்கிறதும் இந்த ஓவியங்களை வரையும் போதுதான்" என்கிறார் செந்தூரப்பாண்டியன்.
கலைக்கு எப்போதும் கவலைகளைக் கலைக்கும் தன்மை இருக்கு என்பது செந்தூரப்பாண்டியன் மூலம் நிரூபணமாகிறது.


நன்றி: கல்கி


உதவுங்கள்...

5 Comments:

enRenRum-anbudan.BALA said...

எனது மின்மடல் முகவரி:

balaji_ammu@yahoo.com

நன்றி

kg gouthaman said...

அனுப்பிட்டேன்.

enRenRum-anbudan.BALA said...

மிக்க நன்றி, கௌதமன் சார்

enRenRum-anbudan.BALA said...

கௌதமன் சார்,

தாங்கள் எவ்வளவு / எப்போது அனுப்பினீர்கள் என்று எனக்கு மின் மடலில் தெரிவிக்கவும். வரவு குறித்து கன்ஃபர்ம் செய்வதற்காகவும், கணக்கு சரி பார்க்கவும், கேட்கிறேன்.

kg gouthaman said...

மின்மடல் அனுப்பிவிட்டேன்.