பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 21, 2013

சிபிஐ

சிபிஐ சோதனை குறித்து நாங்கள் கவலையடைந்தோம் - பிரதமர்


மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்க கூடாது. சம்பந்தப்பட்ட துறை மந்திரியிடம் எனது கண்டனத்தை தெரிவித்து உள்ளேன். - ப.சி

இந்த சோதனை குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில் இத தமது கட்சிக்கு எதிரான சதி என கூறியுள்ளார் - செய்தி

சிபிஐ ரெய்ட் அரைகுறையாக நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டனர் - செய்தி

Congress President Sonia Gandhi also spoke to Mr Narayanasamy and discussed the matter. ( திட்டு விழுந்தது என்று படிக்கவும் )

இந்த சோதனை குறித்து சிபிஐ விசரணை செய்யும் என்ற செய்தி தான் இன்னும் வரலை. வந்துவிடும்...

11 Comments:

Jeyakumar said...

So, CBI is not an independent agency. Any leader or Minister can STOP its raids. What the joke is this?

Expatguru said...

முதலில் நீங்கள் தமிழன் தானா என்பதை "விசரனை" செய்ய வேண்டும்

R. J. said...

//சிபிஐ ரெய்ட் அரைகுறையாக நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டனர் - செய்தி // இந்த செய்திக்குப் பிறகும் CBI independent ஆன அமைப்பு என்று எந்தக் குழந்தையாவது சொல்லுமா? மத்திய அரசு இவ்வளவு வெளிப்படையாகவா தன் முட்டாள்தனத்தை வெளிக்காட்டும்! - ஜெ

kothandapani said...

The whole episode appears to be a well planned and enacted drama to divert the attention of the people and media from the students unrest and uprise. As expected all the media have fallen in line to highlight this issue leaving the srilankan issue to the backburner.Three cheers to our parties and their democracy......

Anonymous said...

நாடகங்கள் நல்லபடியா நமக்கு தொந்தரவு இல்லாமல் முடிந்தால் சரி.

தோழர். ஆராவமுதன்
தலைவர்
ஜெ.ஜெகன்னாதன் ரசிகர்களின் பறக்கும் படை.

Anonymous said...

ஆக, நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை காரை வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் மக்களை ஏமாற்றலாம். நாங்கள் எல்லாம் ரெய்டிற்கு அப்பாற்பட்டவர்கள். - இதுதானே திமுக + காங்கிரஸ் நாடகக் காரர்கள் சொல்ல வருவது!

போற போக்கைப் பார்த்தா, ”உலகத் தமிழர்களின் ஒரே தலைவன் பிள்ளை வீட்டில் ரெய்டில் நடத்த அந்த ஆட்களுக்கு என்ன துணிச்சல். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் 2ஜி ரகசியங்களை நாங்கள் வெளியிடுவோம்” அப்படின்னு கூடச் சொல்வாங்க போல?

நல்லா வருவீங்கடா, நல்லா வருவீங்க. 2014ல் 40ம் உமதே, கவலை வேண்டாம்.

All the world's a stage said...

http://www.youtube.com/watch?v=X2Tpzf13FIE#t=7m02s

தியாவின் பேனா said...

"நல்லா வருவீங்கடா, நல்லா வருவீங்க......"

பொருத்தமான சினிமா வசனம் இது.

நன்றி

ConverZ stupidity said...

//சிபிஐ சோதனை குறித்து நாங்கள் கவலையடைந்தோம் - பிரதமர்

வழக்கமா செய்றத செஞ்சிட்டாரு

ராமகிருஷ்ணன் said...

சரி... சரி, சட்டு புட்டுன்னு கலிஞர் டிவியை முடக்கினா சரிதான். சானியாவின் கடேசி சபதமும் முடிஞ்சமாதிரி ஆயிடும்.

Anonymous said...

please publish hummer car photo. in my life i never saw that.
then how i can be a tamilan?

before also there was a "car problem" with sabareesan ( tamil vadra ) what happened to that?