பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 23, 2013

காங்கிரஸ் படா தோஸ்து - அழகிரி பேட்டி

ராஜினாமா கடிதத்தை தனியாக கொடுத்தது தொடர்பாக யூகங்கள் வருகின்றன. ஆனால் எனது அமைச்சகம் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்கவே பிரதமரை சந்தித்து பேசினேன். கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டில் சி.பி.ஐ., சோதனை நடத்தியதாக தகவல் வந்தது. சி.பி.ஐ., அதிகாரிகள் வந்து சென்ற பிறகு தான், சோதனை குறித்து தெரிய வந்தது. என்னிடம் வெளிநாட்டு சொகுசு கார்கள் எதுவும் என்னிடம் இல்லை. சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தங்களது கடமையை செய்துள்ளனர். இதை நான் பிரச்னையாக்க விரும்பவில்லை.

காங்கிரசில் எனக்கு நண்பர்கள் அதிகம் உள்ளனர். எனவே அவர்கள் உறவை நான் துண்டிக்க முடியாது, இந்த உறவை யாராலும் தடுக்க முடியாது
திமுக(அழகிரி), திமுக(ஸ்டாலின்) கட்சி சீக்கிரம் உதயம் ஆகும் என்று நினைக்கிறேன்

7 Comments:

jaisankar jaganathan said...

//காங்கிரசில் எனக்கு நண்பர்கள் அதிகம் உள்ளனர். எனவே அவர்கள் உறவை நான் துண்டிக்க முடியாது, இந்த உறவை யாராலும் தடுக்க முடியாது
//

ஜெயிலுக்கு போக மச்சான் தயாராக இல்லை போல

R. J. said...

அழகிரிக்கு தி மு க வைவிட காங்கிரசில் அதிக நண்பர்கள் என்பதில் எனக்கு டவுட்டே இல்லை. - ஜெ.

Anonymous said...

எங்கள் தலைவர் திரு மிக்கி மௌஸ் அண்ணன் jaisankar jaganathan வாழ்க.
நீங்கள் இல்லலையேல் எங்களுக்கு ஏது காமெடி .

ஆராவமுதன்
தலைவர்.
ஜெ.ஜெகன்னாதன் பறக்கும்படை

jaisankar jaganathan said...

ஆறாவது அமுதரே
என் பெயர் ஜெய்சங்கர். ஜெ

Anonymous said...

அண்ணா கலக்குறேள், தினசரி ஒரு பின்னூட்டம்,புது லோகோ, புதுசா பறக்கும் படை வேற!.............
கலக்குறேள் ஜெ.ஜெ.கல்குறேள்

அபிநவ் பிந்த்ரா

Erode Nagaraj... said...

என்னது? இன்னொரு அதிமுகவா? :)

keyven said...

அழகிரி... பழையபடி கிரி கிரி வேலைய ஆரம்பிக்கிற மாதிரி தெரியுது. பெருசுக்கு இனிமே மகா குடைச்சல் தான்.