பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 31, 2013

சன்டேனா இரண்டு (31-3-13) செய்திவிமர்சனம்
இந்த வாரம்.... ஒரு படம், ஒரு கடிதம்.

செய்தி # 1பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான படங்கள்தான் இன்றைய மாணவர் போராட்டம், மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது,அதிமுகவின் சட்டசபை தீர்மானம் போன்ற தொடர் நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம்.

பாலச்சந்திரனுக்கு முன்பே இது போன்ற ஒரு நம் தமிழ் நாட்டின், உலகின் கவனத்தை இலங்கையின் போர்குற்றங்கள் மீது திருப்பி இருக்கவேண்டியவர்.. இசைப்பிரியா.

மனிதர்கள், மிருக இனத்தைவிட மிகவும் கொடூரமானவர்கள் என்பது மட்டும் இந்த சேனல் 4 வெளியிட்டு இருக்கும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் வீடியோ ஆதாரத்தின் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது.

அப்போது,அந்த வீடியோவில் வெளியான ஒரு செய்தி....இசைப்ரியாவின் கோர மரணம்.ஷோபா - ஒரு அழகான,எதையாவது சாதிக்கவேண்டும் என்கிற பெண். இலங்கையில் உள்ள யாழ்ப்பணத்தில் 1982 ஆம் வருடம் பிறந்தவர். பின், அவரது குடும்பம் வன்னிக்கு குடிபெயர்ந்தது.

அங்கேயே தனது படிப்பை முடித்த அவர், இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி நிறுவனமான tamilnet என்ற நிறுவனத்தில் நிருபராகவும், செய்தி அறிவிப்பாளாராகவும் பணியில் சேர்ந்தார்.அழகிய பெயரில், இசைப்ரியா என்று தன்னை அழைத்துகொண்டார்.

2007 - ஆம் வருடம், புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து, ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆனார்.

அப்போதுதான், அவர் வாழ்வில் முதல் புயல் தாக்கியது. பிறந்து ஆறே மாதங்கள் ஆன அவர் குழந்தை குண்டு வீச்சில் பலியானது.

ஆனாலும், மனம் தளராத இசைப்ரியா, செய்தி வாசிப்பாளாராக, ஈழ தமிழ் மக்களின் மனசாட்சியாக ஒலித்தார்.

சேனல் 4 வீடியோவின் உச்ச கட்ட கொடுரம் இதுதான்...கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக கற்பழிக்கபட்டு, பிணமாக கிடந்தார் இசைப்ரியா.

ஆனால், பாலச்சந்திரனின் ஒரே படம் ஏற்படுத்திய தாக்கத்தை, ஏனோ இதற்க்கு முன்பு வெளிவந்த சேனல் 4 வீடியோ படங்கள் நம்மிடம் உண்டாக்காமல் போய்விட்டன.

காஷ்மீரில், தீவிரவாதிகள் தேடல் என்ற பெயரில் அங்கு உள்ள பெண்களிடம் நமது இந்திய ராணுவம் தகாத முறையில் நடந்து கொண்டதாக,காஷ்மீர் மாநில பெண்கள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்குவது இன்றும் வாடிக்கை.

இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையும், தமிழ் பெண்களை கற்பழித்தது என்கிறார் மட்டகளப்பை சேர்ந்த என் நண்பர் ஒருவர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு ஆதிவாசி பெண்ணை, இந்திய ராணுவ வீரர்கள் கற்பழித்துவிட, ராணுவ தலைமை அலுவலகம் முன்பு 'நிர்வாண போராட்டத்தில்' ஈடுபட்டார்கள் ஆதிவாசி பெண்கள்.

இவ்வளவு ஏன்?

வீரப்பனை தேடுகிறோம் என்று சென்ற நம் தமிழக காவல் படைகள், வாசாத்தி இன பழங்குடி இன பெண்களை சூறையாடியது நம் நினைவுக்கு வருகிறது.

இன்றும் அந்த வழக்கு நடந்து கொண்டே...இருக்கிறது.

இந்த பழங்குடி இன பெண்களை கற்பழித்த தமிழக காவலர்களை சட்டம் தூக்கில் போட்டதா?

அன்று ஆட்சியில் இருந்தவர்களை போர்குற்றவாளியாக அறிவித்தா?

அதைப்போலவே, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே அவர்களை 'போர்க்குற்றவாளி' என்று அறிவித்து, சர்வதேச சமுகத்தின் முன் அவரை நிறுத்துவது என்பதெல்லாம். சாத்தியமே இல்லாத விஷயம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இராக் பெண்களை, ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்திய அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளிடம் இதற்க்கு எப்படி தீர்வு கேட்க முடியும்??

செய்தி # 2"எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே" எக்காலத்துக்கும், இலங்கை போன்ற எந்த நாட்டுக்கும் பொதுவான தத்துவம் இது.

குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு அருமையான தொடர் எழுதி, இட்லிவடை மூலம் நல்ல காரியம் செய்து வரும் டாக்டர்.ப்ரகாஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். பெற்றோரை போன்று ஒரு நல்ல மனிதனை வளர்ப்பதில் அவனது ஆசிரியருக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது.

தனது மகனின் பள்ளித்தலைமையாசிரியருக்கு ஒரு தந்தை எழுதிய கடிதம் உலக அளவில் கவனம் பெற்றது.

அந்த தந்தை....அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள்.

ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார் திரு.ஆபிரகாம் லிங்கம். ஒரு சிற்றிதழில் நான் படித்த அந்தக்கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே.மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,

ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.

அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கம்.

ஒரு கொசுறு செய்தி: சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், பல தனியார் பள்ளிகள் தங்களின் மாணவர்களுக்கு நொட்ஸ் கொடுத்து தேர்வுமையத்தில் உதவி(!?) புரிந்து பெரும் கல்விச்சேவை செய்து இருக்கிறார்கள்.

(நன்றி, இனி, அடுத்தவாரம்)-இன்பா

18 Comments:

R. J. said...

ஆப்ரஹாம் லிங்கனை ஈஸ்டர் அன்று 109-ஆவது 'லிங்கம்' ஆக்கி சைவர் ஆக்கிவிட்டீர்களே!

அந்த புகழ் பெற்ற 'ஆசிரியருக்குக் கடிதம்' ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு காப்பி கொடுக்கப்பட்டு அதை அவனை சத்தம் போட்டு வாசிக்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பெரிய அளவில் டிஸ்ப்ளே செய்யப் பட்டு, ஒவ்வொரு ஆசிரியரும் அதை தெளிவாய்ப் புரிந்துகொண்டால் வரும் காலம் சிறக்கும். இல்லையேல் எல்லாப் பள்ளியும் மாணவர்களுக்கு தேர்வின் போது கேள்வித்தாளுடன் பதில்களையும் கொடுக்கவேண்டும். பள்ளியிலிருந்து வெளிவந்ததும் எல்லோரும் அரசியல் மற்ற கொள்ளை அடிக்கும் வியாபாரிகளாக ஆக வசதியாக இருக்கும்.

-ஜெ.

Anonymous said...

A LOT OF PROOF AND ARTICLES ARE THERE TO PROVE THAT LINCOLN NEVER WROTE SUCH A LETTER TO HIS SON'S TEACHER.
HOWEVER THE THOUGHTS EXPRESSED ARE NOBLE AND LAUDABLE.
THIS REMARK IS ONLY TO PUT IDLY VADAI READERS IN THE CORRECT PERSPECTIVE.

THE ALLEGATION THAT IPKF RAPED TAMIL GIRLS IN VANNI IS A MYTH SPREAD BY LTTE TO ENSURE THEIR WITHDRAWAL.
EVEN TODAY ONE CAN SEE THE SCHOOLS AND HOSPITALS BUILT BY IPKF TAMIL AREAS.
MANY OF THE SENIOR OFFICERS OF IPKF WERE THOSE WHO TRAINED LTTE IN INDIA.
SO INTIALLY THEY WERE KIND TO LTTE.
PRABHAKARAN HIMSELF HAS ACKNOWLEDGED THIS.
IN FACT IPKF SUFFERED THE MAXIMUMIN LANKA.
SINHALAS ACCUSED IT OF PRO-LTTE.TAMILNADU POLITICIANS ACCUCED IT OF KILLING TAMILS.LTTE WAS SPREADING STORIES TO DAMAGE THEIR NAME.
AT A LATER DATE, INAN OPEN INTERVIEW, ANTON BALASINGHAM, THE ADVISOR TO LTTE ,ADMITTED THAT MANY ALLEGATIONS AGAINST IPKF WERE NOT TRUE AND WERE PART OF A STRATEGY.
THE CLACCIC ONE WAS RAPING OF DHANU'S(KILLER OF RAJIV GANDHI) SISTER.
THERE WERE LOT OF STORIES WHICH WERE NEVER PROVED.
RECENTLY IN KASHMIR ALSO AMUSLIM GIRL WAS ACCUSED OF DYING BY RAPE BY INDIAN ARMY.
REPEATED MEDICAL EXAMS BY MUSLIM DOCTORS PROVED THERE WAS NO RAPE AT ALL AND SHE HAD COMMITTED SUICIDE.
ONLY HINDU CARRIED THIS NEWS ITEM AND THAT TOO IN THE BACK PAGES.
I AM NOT SUPPORTING THE INDIAN ARMY. IAM ONLY TELLING THE OTER SIDE WHICH NEVER GETS PROMINENCE.
IN THE CASE OF IPKF IT WAS. MR.DIXIT WHO WAS THEN HIGH COMMISSINER WHO MADE MANY OF THE WRONG DECISIONS.
INFACT THE SERVICES OF IPKF WAS WELCOMED BY TAMILS PARTICULARLY IN THE EAST. THEY WERE PREVENTED BY LTTE FROM SAYING IT.
LATER MANY IN LTTE REGRETTED THIS SINCE IT ANTAGONISED INDIA.
I AM ONLY TELLING FROM MY PERSONAL EXPERIENCES AT LANKA.ATLEAST THEIR VERSION MUST BE RECORDED.

jaisankar jaganathan said...

இசைப்ப்ரியாவின் முடிவு மனத்தை கலஙக் செய்கிறது

sivakumar said...

probably idly vadai woke up on isai priya matter now only.
most of the protesters have shared and grieved about this several times.

Recent public protest on Sinhalese govt atrocities are becoz of indian govt inaction on several issues. it is not just balachandran's phot.
In my observation north media/papers and media run by tamil bhramins here started toning down their rajapakshe support after balachandran's photo.

N Senthil Kumar said...

மனித உரிமை மீறல் என்பது இலங்கையில் மட்டும் இல்லை. நமது இந்தியாவிலும் இந்த மாதிரி மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டு இருப்பது தனி ஈழத்துக்கு ஆதரவாக போராடும் எத்தனை தமிழனுக்கு தெரியும்?. நமது இந்தியாவில் மலிந்து கிடக்கும் சாதி பாகுபாடு, தொழில் பாகுபாடு மற்றும் பெண்களின் உரிமை மறுத்தல் கூட மனித உரிமை மீறல் தான்.

Ravi said...

IV Vathachi Judgement came a year before ?

தமிழ் முரசன் said...

பாப்பான்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் பேசுறான்கள். நல்லவன் மாதிரியே பேசி நாசம் பண்ணுவது. தினமணியில் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எழுதிய சமஸின் ப்ளாக் இது. தமிழ் உணர்வாளர்கள் இந்தப் பக்கத்துக்குச் சென்று நான்கு முறை காறித் துப்புங்கள்.
http://writersamas.blogspot.in/2013/03/blog-post_22.html

kothandapani said...

லிங்கன் கூறிய அனைத்தும் பொன்மொழிகள் . ஆனால் இதை கணக்கு ஆசிரியரா அல்லது சரித்திர ஆசிரியரா யார் போதிப்பது. எந்த syllabus ல் இது வருகின்றது. ஒன்பதாவது மாணவன்
கண்டிப்பாக இருந்ததற்காக ஒரு அப்பாவி ஆசிரியரை கொள்கின்ற கலிகாலம் இது. அவனது பெற்றோர் அவனை ஒதுக்கி விட்டனரா அல்லது விரைவாக அவனுக்கு தண்டனை வழங்கி
மற்ற ஆசிரியர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தா இந்த சமுதாயம். உழைப்பில்லாமல் 5 டாலர் சம்பாதிப்பவன் சமுதாயத்தால் ஒதுக்கபடுவுதை விடுங்கள் ..போற்றபடுகின்றான் இன்று. சமுதாயத்தின் அங்கமே மாணவர்களும் ஆசிரியர்களும் .. நாம் லிங்கனாக மாற தயார் ஆனால்
மாணவர்களும் மாறுவார்கள் . தப்பெல்லாம் நாம் வைத்து கொண்டு நமது பிள்ளைகளை ஒழுக்க சீலனாக ஆசிரியர்கள் மாற்ற வேண்டும் என்று எதிர் பார்த்தால் ,அவர்களுக்கு மந்திர கோல் தான் தர வேண்டும்.

R. J. said...

I read Saras'blog and thank Thamiz Murasan for giving the link. I find that blog is written from the heart and not casually. I expect that each one of us can have our own opinion and there is nothing wrong in it. But reading and commenting others with a biased and closed mind is not advisable. Particularly those bring in 'Paarppaanism' in the comments make me wonder whether they really care to read and understand others' opinions before responding. And kindly use decent language. - R. J.

சிவ.சரவணக்குமார் said...

// இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையும், தமிழ் பெண்களை கற்பழித்தது என்கிறார் மட்டகளப்பை சேர்ந்த என் நண்பர் ஒருவர்.//

ரொம்ப நாளா இந்த பிரச்சாரம் ஓடிக்கிட்டு இருக்கு.......ஆனால் உண்மையல்ல......

இந்திய ராணுவம் கற்பழிப்பில் ஈடுபட்டதாக கூறுவதெல்லாம் புலிகளின் '' கெப்பல்ஸ் '' [அது கோயபல்ஸ் அல்ல ] பிரச்சாரம் .......உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை....இந்திய அமைதிப்படையை வெளியேற்ற புலிகள் கையாண்ட தந்திரம் அது....... .இது போன்ற அவதூறு பிரச்சாரம் செய்வதில் புலிகள் நிபுணர்கள்......

அது மட்டுமல்ல ....பிரேமதாசாவின் தோள்மீது கைபோட்டுக்கொண்டு , நாங்களும் சிங்களர்களும் சகோதரர்கள் , எங்கள் பிரச்சினையை நாங்களே பேசித்தீர்த்துக்கொள்வோம்....இந்திய நாய்கள் வெளியேறவேண்டும் என்று கொக்கரித்தவர்கள் புலிகள்....


தேசவிரோதிகளும் ,அவர்களின் பிரச்சாரத்தை அப்ப‌டியே நம்பும் தற்குறிகளும் எப்படி வேண்டுமானாலும் கதை கட்டட்டும்.........இட்லி வடை இது போன்ற அவதூறுகளை தவிர்க்க வேண்டும்......

jaisankar jaganathan said...

சிவ. சரவணகுமார்.
இந்திய ராணுவம் ஏன் புலிகளை மட்டும் எதிர்த்து சண்டை போட்டது?

Sandron Nadar said...

ஜெய்சங்கர் ஜெகன்நாதன் அவர்களே.............

//இந்திய ராணுவம் ஏன் புலிகளை மட்டும் எதிர்த்து சண்டை போட்டது?//

புலிகள்தான் [அடிமுட்டாள்தனமாக ] இந்திய ராணுவத்தை தாக்கினார்கள்...தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்ததற்கான பலனை [சற்று காலதாமதமாகவேனும் ] அடைந்தார்கள்..........

Sandron Nadar said...

ஜெய்சங்கர் ஜெகன்நாதன் அவர்களே.............

//இந்திய ராணுவம் ஏன் புலிகளை மட்டும் எதிர்த்து சண்டை போட்டது?//

புலிகள்தான் [அடிமுட்டாள்தனமாக ] இந்திய ராணுவத்தை தாக்கினார்கள்...தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்ததற்கான பலனை [சற்று காலதாமதமாகவேனும் ] அடைந்தார்கள்..........

Anonymous said...

jaisankar jaganathan said...
சிவ. சரவணகுமார்.
இந்திய ராணுவம் ஏன் புலிகளை மட்டும் எதிர்த்து சண்டை போட்டது?
ALL READY ADEQUATE REPLY HAS BEEN GIVEN.
STILL I FEEL IDLY VADAI READERS MUST HAVE THE FACTS.
IPKF WENT TO JAFFNA INJULY/AUGUST87.
ITS FIRST DUTY WAS TO VOLUNTARILY ACCEPT THE SURRENDER OF ARMS BY MILITANTS.THOUGH THE OTHER GROUPS LIKE EPRLF SURRENDERED ARMS LTTE DID MOT DO FULLY. THEY RETAINED MANY OF THE SOPHISTICATED ARMS SAYING IT WAS FOR SELF DEFENCE.
IPKF DID NOT INSIST.
INFACT A LOT OF GOOD WORK WAS DONE BY IPKF AND PEOPLE OF JAFFNA AND OTHER MILITANT GROUPS STARTED APPRECIATINGIPKF.
TO OVERCOME THIS LTTE ENGINEERED THELEEPAN'S HUNGER STRIKE AND ALLOWED HIM TO DIE ON LAST WEEK OF SEPTEMBER87.
IT WAS A VERY CALCULATED MOVE BY LTTE AND THE ENTIRE JAFFNA BECAME ANTI IPKF.
EVEN AT THIS STAGE ,WHEN WARNED OF LTTE ATTACK, MOST OF THE IPKF GENERALS LAUHED IT AWAY SAYING THEY ARE OUR BOYS, WE HAVE TRAINED THEM.
THE FIGHT BETWEEN LTTE AND IPKF STARTED ON 9TH OCTOBER.
SO PLEASE UNDESTAND THAT IPKF DID NOT FIGHT LTTE TO BEGIN WITH.
IT WAS LTTE WHO STARTED.
WHEN CHILDREN AND WOMEN STARTED KILLING IPKF SOLDIERS BY INVITING THEM INTO HOUSES IPKF FELT BETRAYED.
SOLDIERS OF IPKF HAVE BEEN SHOT AT POINT BLANK RANGE AFTER BEING INVITED INTO HOUSES.
LTTE USED EVEN HOSPITALS AND LIBRARIES AS COVER.
IT TOOK TIME FOR IPKF TO UNDRESTAND AND DIGEST LTTES ACTIONS.
LTTE GOT ALL THE WEAPONS FOR FIGHTING IPKF FROM LANKAN ARMY. THIS ADMITTED BY LTTE THEMSELVES.
THEY CALLED THEIR FIGHT WITH SINHALAS AS FIGHT AMONG BROTHERS AND WANTED IPKF TO GET OUT. PRABHAKARAN HIMSELF MADE THIS STATEMENT.
EVEN ON THE DAY OF FINAL WITHDRAWAL MORE THAN 19 IPKF MEN DIED BY A BOMB PLACED INSIDE A TV SET GIVEN AS A GIFT TO ONE OF THE OFFICERS .
EVENTS AFTER EVENTS CAN BE TOLD ON THE CRUELTY AND BETRAYAL FACED BY IPKF.
BUT THERE WERE NOTAKERS. IPKF SUFFERED FROMLTTE.TAMIL PRESS AND SIHALAPRESS.
THERE IS A STATEMENT THAT IN A WAR THE FIST CASUALITY IS TRUTH.
LIKE THAT THE SUFFERINGS OF IPKF HAVE DIED AT THE HANDS OF A PARTISAN MEDIAIN TAMILNADU.
ANYWAY TRUTH PREVAILED IN 2008/2009 WHEN THE SAME PEOPLE WANTED INDIAS MILITARY INTERVENTION.
THAT IS THEY WANTED IPKF BACK.
NEUTRAL OBSERVERS EVEN TODAY SAY HAD IPKF STAYED FOR FEW MORE MONTHS TAMILS WOULD HAVE GOT HONOUR AND DIGNITY.
INDIAN ARMY LOST MORE THAN 1600MEN DURING IPKF OPERATIONS.
THELARGEST .
LET US SALUTE THOSE BRAVE MEN VICTIMS OF BETRAYAL
I WISH IDLY VADAI THROUGH ONE OF ITS STAR WRITERS MUST WRITE ON IPKF IN TAMIL.
I WILL HELP IF NEEDED.

RAJAM said...

சேருமிடம் தீர்மாநிக்கபடாத கால்வாய் நீர் போல இந்த இளைநற் களின் சக்தி வீணாகி போய்விடும்.இலங்கை சகோதரர்களின் உடனடி தேவை என்ன என்று புரிந்து கொண்டு போராட வேண்டி கேட்டுகொள் கிறோமே.

Anonymous said...

inba
nanba
try to learn how to write column. you keep doing the same damn mistake every week.you keep saying things like balayia says in thillaana moganambal. enaku oru soda kadai karai theriyum. my friend in vanni says rajapakshe raped all girls. Damn. don't throw things man. I AM NOT/NEVER will be SUPPORTING RAJA PAKSHE or his Ogre abode. but you write column, make sure you get your facts right. If not please write column about cinema kisu kisu. best fit for you. Well I wrote this

Anonymous said...

inba
nanba
try to learn how to write column. you keep doing the same damn mistake every week.you keep saying things like balayia says in thillaana moganambal. enaku oru soda kadai karai theriyum. my friend in vanni says rajapakshe raped all girls. Damn. don't throw things man. I AM NOT/NEVER will be SUPPORTING RAJA PAKSHE or his Ogre abode. but you write column, make sure you get your facts right. If not please write column about cinema kisu kisu. best fit for you. Well I wrote this

Anonymous said...

inba
nanba
try to learn how to write column. you keep doing the same damn mistake every week.you keep saying things like balayia says in thillaana moganambal. enaku oru soda kadai karai theriyum. my friend in vanni says rajapakshe raped all girls. Damn. don't throw things man. I AM NOT/NEVER will be SUPPORTING RAJA PAKSHE or his Ogre abode. but you write column, make sure you get your facts right. If not please write column about cinema kisu kisu. best fit for you. Well I wrote this Anonymous, well let IV reveal his ID, then I will. Avangalae neertha sollu, Naan neerutharene