பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 03, 2013

சன்டேனா இரண்டு (3-3-13) செய்திவிமர்சனம்

இந்த வாரம்.... இருவர்.செய்தி # 1"நான் இயக்கிய படங்களில் மிகவும் மோசமான திரைப்படம் இதயக்கோவில்" என்று எழுதினார் இயக்குனர் மணிரத்னம். அவருக்கு வாழ்வளித்த இந்த படத்தை, இயக்குனராக வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மனம் நோகும்படி மணி இப்படி எழுதியதும் அவர் மீது இருந்த ஒட்டுமொத்த மதிப்பும் சினிமா ரசிகர்களிடம் சரிந்துவிட்டது என்பது கண்கூடு.இளையராஜாவின் இன்றும் நிலைத்து இருக்கும் இசைதான் 'இதயக்கோவில்' படத்தின் ஒரே நல்ல அம்சம் என்று வைத்துக்கொண்டால், மணியின் திருடா திருடாவில் ரகுமானின் இசையைத்தவிர குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை.மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட "ராவணன்" அவரது படங்களில் இதயக்கோவிலை விட மோசமான படமாக இருந்தது. அவரது மனைவி சுகாசினியின் அச்சுபிச்சு வசனங்கள் மற்றும் அவரது அலட்டல் தலையீடுகள்,ராமாயணக்காப்பி போன்றவை இந்தப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக இருந்திருக்கலாம்.ஆனால், 'ராவண' சாதனையை மணிரத்னமே முறியடித்து இருக்கிறார் சமிபத்திய "கடல்" மூலம். சுகாசினியை கழட்டிவிட்டு எழுத்தாளர் ஜெயமோகனை கரம் பிடித்தும் 'கடலில்' மணிரத்னம் மூழ்கிப்போனார்.

"முன்பெல்லாம் மணி அதிகம் பேசமாட்டார். ஆனால் அவர் படங்கள் பேசப்பட்டன. இப்போது அவர் அதிகம் பேசுகிறார். படங்கள் ஊமையாகிவிட்டன." என்றார் என் நண்பர் ஒருவர்.கடல் படம் வெளிவரும் முன்பு, படத்தின் விளம்பரங்களுக்கு அவர் செய்த அலப்பறைகள் கண்டு, இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆனார்கள்.முதலில் கதாநாயகனின் தலை முடியை மட்டுமே காட்டி, படத்தின் ஸ்டில்லை வெளியிட்டார். பின், கதாநாயகனின் முதுகு மட்டுமே தெரிய, அவர் படகில் செல்வதுபோல டிரைலர் வெளியிட்டார். வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொண்ட, மணியின் பாணியில் சொல்லப்போனால் திரைஉலகின் மிக சுருக்கமான டிரைலர் இதுதான்.பார்த்த அனைவரும் வெறுத்துபோன நிலையில், இவ்வளவு பில்டப் கொடுக்கபட்ட கதாநாயகன் கவுதம் கார்த்திக்கை 'கடல்' படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழாவில், ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தி, நமது ரசிகர்களின் எரிச்சலை மேலும் சம்பாதித்து கொண்டார் மணி."பதினாறு கோடி செலவு செய்யப்பட்டு, மூன்று கோடி ருபாய் கூட தமிழகத்தில் கடல் வசூலிக்கவில்லை, எங்களுடைய நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும்" என்று கூறி இப்படத்தின் வினியோகஸ்தர்கள், மணிரத்னம் வீட்டின் முன் முற்றுகை இட்டனர்.மணியோ "நான் இந்த படத்தை வேறு ஒரு நிறுவனத்திற்க்கு விற்று விட்டேன்" என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.மணிரத்னம் என்ற பெயரை மட்டுமே நம்பி இந்த படத்தை வாங்கி இருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள். இனிமேல் இவரை நம்புவது கடினமே.படத்தின் தோல்விக்கு இயக்குனர் பொறுப்பேற்க முடியுமா? வினியோகஸ்தர்கள், திரைஅரங்க உரிமையாளர்களின் நஷ்டததை ஈடு செய்ய சொல்வது நியாயமா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.ஆனால், இனி மணிரத்னம் படம் என்ற எதிர்பார்ப்பு இருக்காது என்று தெரிகிறது.இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு கிறிஸ்தவ அமைப்பு தொடர்ந்த் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.அதற்க்கு அவசியமே இல்லை என் பிரிய சகோதரர்களே. படம் வெளிவந்த ஒரே வாரத்தில் தொடர்ந்து ஈ ஒட்டிய காரணத்தால், திரை அரங்க உரிமையாளர்களே இப்படத்தை தடை செய்து விட்டார்கள்.மீண்டும் கிடைப்பாரா அஞ்சலி, ரோஜா படங்களை இயக்கிய 'பழைய மணிரதனம்'??.செய்தி # 2"ஆடலாம் பாஸ், சின்னதா டான்ஸ்" படத்தில் நம்ம பிரபுதேவாவுடன் கலக்கி இருப்பவர்....இந்தி பட உலகின் முண்ணனி டான்ஸ் மாஸ்டரான கணேஷ் ஆச்சாரியா.இவரை பற்றிய ஒரு முக்கிய தகவல்..இவர் ஒரு தமிழர் என்பேதே.


கணேஷ் ஆச்சாரியாவின் ஒரிஜினல் பெயர் சிவாஜி கணேசன்.


"நடிகர் திலகம் பிறந்த அதே ஊரில் பிறந்ததால், அவர் பெயரையே வைத்து விட்டனர் என் பெற்றோர்கள் " என்கிறார் இந்த சிவாஜிகணேசன்.

கணேஷ் ஆச்சாரியா இவரே வைத்து கொண்ட பெயர்.. சிறு வயதில் பெற்றோர்கள் இவரை மும்பை அழைத்து சென்று விட்டனர். 12 வயதில் அங்கு ஜூனியர் ஆர்‌டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினர் ஆனார். பின்னர் 14 ஆவது வயதில் டான்ஸ்சர் அசோசியேஷன் உறுப்பினர். தனது 17 ஆவது வயதில் நடன உதவியாளர்.


இன்று பாலிவுட்டில் தவிர்க்க முடியாத, நம்பர் ஒன் டான்ஸ் மாஸ்டர் நம்ம சிவாஜிகணேசன்தான்.

டான்ஸ் மாஸ்டர் ஆக 1992 ஆம் வருடம் வெளிவந்த ஆணம் தொடங்கி, சமீபத்திய பெரும் வெற்றி படங்கள் ஆன ஆமிர்கான் நடித்த ரங்க் தே பசந்தி, ஷாருக் நடித்த சக் தே இந்தியா மற்றும் கார்ஸ் 4 ஆகைய அனைத்தும் இவருக்கு புகழ் தேடி தந்தன.

சுமார் 120 படங்களில் நடன இயக்குநராகவும், பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.

நடனம் என்பதை தாண்டி திரை பட இயக்குநராகவும் சாதித்து இருக்கிறார் கணேஷ். ஜுஹி சவலா நடித்த சுவாமி (Swami (2007)) என்ற இந்தி படம்தான் இவரது முதல் படம். "என் வீட்டில், எனது தந்தைக்கும், தாய்க்கும் உள்ள உறவையே முதல் படத்தின் கதையாக அமைத்தேன் " என்று குறிப்பிடுகிறார்.


இவரது இரண்டாவது படம் Money Hai Toh Honey Hai (2008).

அஜய் தேவுகன் நடித்து, உலகம் எங்கும் கவனம் பெற்ற "ஒம்காரா" படத்தில் நடனம் அமைத்தமைக்கு 2006 ஆண்டின் சிறந்த நடன இயக்குநருக்கான ஃப்லிம் ஃபேர் விருது பெற்றவர் கணேஷ்.

"இந்த விருது பெற்றது குறித்து நான் எதுவும் உணர வில்லை. காரணம், இந்த வெற்றிக்கு ஆதாரணமான என் தந்தை உயிரோடு இல்லை. மேலும், என் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் பெற நான் வருடங்கள் பல காத்து இருந்தேன் " என்று தெரிவித்தார்.

"கடந்த 19 வருடங்களாக இந்தியில் கோவிந்தா,ஷாருக்கான், ஹிரித்திக் ரோஷன் ஆகிய அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குநராக பணி புரிந்து இருக்கிறேன். " என்றார் இவர்.


தமிழில் "அழகாய் இருக்கிறாய். பயமாய் இருக்கிறது "படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். அசல்,கொக்கி போன்ற படங்களின் நடன அமைப்பும் இவர்தான்.


நன்றாக டான்ஸ் ஆட, ஒல்லியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை என நிருபித்தவர் (சிவாஜி)கணேசன் ஆச்சாரியா.(நன்றி, இனி அடுத்த வாரம்)-இன்பா

23 Comments:

Anand said...

news #1 is Interesting

news # 2 is very Interesting

jaisankar jaganathan said...

மணிரத்தினம் ஒரு காலாவதி ஆன சொம்பு.

ஹிந்தி தெரியாது எனக்கு. அதனால் கனேஷ் ஆச்சாரியா பத்தி ஒன்னும் தெரியாது

ஸ்ரீராம். said...

ஒவ்வொருத்தருக்கும் ஒரு 'பீக் டைம்' உண்டு. மணிக்கு அது முடிந்து விட்டது என்று தோன்றுகிறது!

R. J. said...

//படத்தின் தோல்விக்கு இயக்குனர் பொறுப்பேற்க முடியுமா? வினியோகஸ்தர்கள், திரைஅரங்க உரிமையாளர்களின் நஷ்டததை ஈடு செய்ய சொல்வது நியாயமா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.//

இதில் நேர்மை இல்லை. படத்தின் வெற்றிக்கு எல்லோரும் உரிமை கொண்டாடுவார்கள், தோல்விக்கு இயக்குனர் மட்டுமே காரணம். தைரியமாகச் சொல்லலாம். ஆனால் விநியோகஸ்தர்கள் நஷ்டத்துக்கு அவர் பதில் சொல்ல வேண்டுமா என்றால், அவசியமில்லை என்பதே பதில். படத்தைப் பார்த்துத்தான் விநியோகஸ்தர்கள் வாங்குகிறார்கள். கடந்த படமான ராவணன் தோல்விக்குப் பின்னும் படம் வாங்கி இருக்கிறார்கள். எல்லோரும் வேண்டாம் என்றிருந்தால் மணியே வெளியிட்டிருக்கலாம் - கமல் செய்தது போல. யாரோ கேட்டது போல், 150 ரூபாய் டிக்கெட் வாங்கிய ரசிகன் படம் நன்றாயில்லை என்று பாதியில் போனால் தியேட்டர் காரர் பணம் வாபஸ் செய்வாரா? இந்த வியாபாரமே ஒரு சூதாட்டம் தான். வருஷத்தில் 100க்கு 4, 5 படம் தான் தேறுகிறது. அதில் புதியவர்கள் படம் ஓடும்போது விநியோகஸ்தர்கள் பணம் பண்ணுகிறார்கள், இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ கொஞ்சம் போட்டுக் கொடுப்பார்களா? தயாரிப்பாளர் என்ன தான் கதை கேட்டு படம் எடுத்தாலும் ரிஸ்க் எடுக்கிறார், விநியோகஸ்தர்கள் படம் பார்த்துவிட்டு வியாபாரம் செய்வதால் நஷ்டத்துக்கு அவர்களே பொறுப்பு. - ஜெ .

Dhas said...

"சன்டேனா இரண்டு (24-02-13) செய்திவிமர்சனம்"...

Date : 03-03-2013... Cut Copy Paste - is also a difficult job. Well understood!

ConverZ stupidity said...

சார் இட்லி சொல்லாம இருக்க முடியலை,வர வர கண்டதை கிறுக்கி அதை மஞ்சள் கமெண்ட் ல போடுறத சஹிக்க முடியல

அசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் said...

மணிரத்னம் ஏதோ குழப்பத்தில் இருக்கிறார் போலே. கடல், ராவணன் கடைசி வரை என்ன கதை என்றே புரியவில்லை. ராமாயண உல்டா என்றால் அது எதற்கு ? தளபதி - மகாபாரதக் கதை.இருவர் தமிழ் நாட்டுக் கதை ( ஓரளவு சொல்லும்படியாக இருந்தது ). கன்னத்தில் முத்தமிட்டால் சற்று வித்தியாசமான கதை. தேவலாம்.ஆனால் கடல் ? கடலுக்குள் மூழ்கித்தான் தேட வேண்டும் போலே ..

Anonymous said...

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு. அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கோடி வன்னியர்களில் ஒருவரான டாக்டர் அன்புமணியை தமிழக முதல்வர் பதவிக்கு அனுப்பிட வேண்டும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கூறினார்.

--
என்ன கொடுமை சார் இது

Anonymous said...

//jaisankar jaganathan said...
மணிரத்தினம் ஒரு காலாவதி ஆன சொம்பு.//

jaisankar jaganathan இன்னும் பெரிய சொம்பு .

jaisankar jaganathan said...

அனானி, முடிஞ்சா நிஜ பேருல வா. பாத்துக்கலாம்

மொக்கச்சாமி said...

//Anonymous said...
//jaisankar jaganathan said...
மணிரத்தினம் ஒரு காலாவதி ஆன சொம்பு.//

jaisankar jaganathan இன்னும் பெரிய சொம்பு .//

கமெண்ட் போட்ட அனானி..பெரிய்ய நசுங்கின சொம்போ ?? ஈயம் பூசணுமா?

jaisankar jaganathan said...

ரொம்ப நன்றி
மொக்க சாமி. கடல் படத்துக்கு சப்போட்டா? தமிழனுக்கு வித்தவுட்டா?

மணிரத்தினம் சைத்தான், கடவுள்னு போகும்போதே நினைச்சேன். எல்லாம் நம்ம காசுக்கு பிடிச்ச கேடுன்னு

SathyaRam said...

Not sure what you have got against Mani. May be you have also taken an 'area' for distribution.

A man who gave great movies can afford to make mistakes. nothing wrong in that. And possibly understanding Kadal was beyond common man.

No director in Tamil Cinema has created this much expectation and no director has taken romance of multiple generations so well (Mouna Ragam,Idhayathai Thirudadhe,Dil Se,Alaipayuthe, Ayudha Ezhuthu....). For this alone Mani has no competition

சீனு said...

அட! 'ஓரம் போ நைனா' டான்ஸர் இவர் தானா? ரொம்ப நாள 'யார் இது?'னு யோசிச்சிருக்கேன்ன்...

மொக்கச்சாமி said...

ஜெய்சங்கர் ஜகன்னாதரே.,
நான் கடல் படத்தை நடு கடல்லேயே போட்டு ரொம்ப நாளாச்சு...

மணிரத்தினத்துக்கு மூளை மழுங்கி ரொம்ப வருசமாயிட்டுது...பேசாம வீட்டில படம் பார்த்துட்டு ஒக்காரலாம்..எவனோட பணத்திலேயோ படம் எடுத்து, ஊர் பாவத்தை கொட்டிக்கிறதை அவாயிட் பண்ணலாம்...

பி.கு: எனக்கு மணிரத்தினத்தை பிடிக்காது...ரொம்ப திமிர் பிடிச்ச ஆள்ன்னு சினி நண்பர்கள் சொல்லுவார்கள்...

keyven said...

// SathyaRam said...
Not sure what you have got against Mani. May be you have also taken an 'area' for distribution.

A man who gave great movies can afford to make mistakes. nothing wrong in that. And possibly understanding Kadal was beyond common man.


அப்படின்னா, மணிரத்தினம் படம் பார்க்க எங்களுக்கு அருகதை இல்லியா? நீங்க என்ன எர்ரகட்டா இல்ல கீல்பாக்கத்திலே இருந்து வந்து பார்த்து படத்தை புரிஞ்சி கிட்டீங்களா என்ன ஒரு வில்லத்தனம்.

Anonymous said...

Jaisombu Jaganathan, nerla vandha ennatha paarpe.
Pona dadavai our Anti Muslim comment adichu..thapichutailla nee.

Elango said...

mani rathname is great director. Every one have up and down in their career. He will come out of that and give hit film.

P.S: Thiruda Thiruda is produced by manirathnam banner which directed by Vasanth(i guess).

மோடுமுட்டி கவிஞர் said...

//Anonymous said...
Jaisombu Jaganathan, nerla vandha ennatha paarpe.
Pona dadavai our Anti Muslim comment adichu..thapichutailla nee.//

அட அல்பை பக்கி அனானி.. நானே தேவலாம் போலிருக்கே? அடங்கு கொஞ்சம்....

jaisankar jaganathan said...

//Pona dadavai our Anti Muslim comment adichu..thapichutailla nee//

ஐதராபாத்துல அமைதி மார்க்கம் பூந்து விளையாடலையா?

kannan said...

Mani done a big mistake of using Jeymohan as script writer.
Jeymo is only a copy-cat.

people shows gate to Mani and jeymo.

kannan
qatar

Anonymous said...

Wow we should learn how to write column from this guy. In what way Mani Ratnam opinion is wrong ??. He said according to him, HIS worst is IK. Now two things
1. How is it related to Ilayaraja music. Mani said nothing about music. Now you\we keep Ilayaraja in high regards. that's great. you want to write about Mani, then stick to what he said, and make comment about what he said. Don't add your lame thoughts.
2.if distributors are buying the movie based on name then they are gambling. no crying in gambling.
Since you said when we can see movies like Anjali. well I think Alex Pandian is the best movie for you

Anonymous said...

// SathyaRam said...

. And possibly understanding Kadal was beyond common man.//

எலே...யாரிந்த கூதறப்பய...