பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 18, 2013

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 18-03-2013

அன்புள்ள முனி,

வாட்டிகன் நகரத்தில் வெள்ளைப் புகை வந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் இத்தாலியுடன் இந்தியாவிற்கு ஒரு புகைச்சல் வந்தது கூட சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இந்தியா-இத்தாலி இடையே இப்படியொரு 'திடீர்' சிக்கல் வேண்டும் என்றே முளைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களோடு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா கூறினால், அவர்களும் எந்த ஆவணமும் தர மாட்டார்கள். சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் விசாரணைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிடும்.

ஆனால் அம்மா முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய சம்பவம் ஒன்று நேற்று நடந்தது. தஞ்சாவூருக்கு வந்திருந்த ஆய்வு மாணவர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு ஒருவரும் இருந்தார். அவர் மீது தஞ்சையில் தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தின. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். முதலமைச்சர் இதை வளரவிடக் கூடாது. இவர்களை அடித்து விரட்டிவிட்டால் இவர்கள் நோக்கம் நிறைவேறிவிடுமா? அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று சொல்லும் இவர்கள் முன்பு அதே ஐ.நா. சபை மனித உரிமை மீறல் விஷயமாக விடுதலைப் புலிகளையும் கண்டித்த போது இவர்கள் என்ன லாலிபப் சப்பிக்கொண்டு இருந்தார்களா? அவர்கள் சிவிலியன்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்பதும், சிவிலியன்கள் தங்களிடமிருந்து தப்பித்துப் போகாமல், அவர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்பதும் கூட அந்த அறிக்கையில் வந்திருக்கிறதே!

அறிக்கை என்றாலே கலைஞர் தான் நினைவுக்கு வருகிறார். விகடனில் தற்போது கலைஞரை தாக்குவது உச்சகட்டத்துக்கு போய் உள்ளது. விகடனில் தொடர்ந்து விடுதலைபுலிகள் பற்றிய பிரச்சாரம் தொடர்ந்து வந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு பின் பெரிய அஜெண்டா ஒன்று இருப்பதாக நினைக்கிறேன். கானடா போன்ற நாடுகளில் விகடனுக்கு நல்ல விற்பனை. எல்லோருக்கும் வியாபாரம் தான் பெரிசு. சும்மா தமிழர் சப்போர்ட் எல்லாம் சும்மா ஹம்பக். இன்று கலைஞரை சந்திக்க வரும் மத்திய மந்திரிகள் கூட சும்மா வந்து போவார்கள். திமுகவிற்கு 2G வழக்கு இருக்கும் வரை காங்கிரஸை பகைத்துக்கொள்ள முடியாது. இந்த சந்திப்பு அடுத்த ஹம்பக்.

ஆனால் இந்தச் செய்தி ஹம்பக் கிடையாது. டாக்டர் கொடுக்கும் மாத்திரையை எப்போது சாப்பிட வேண்டும் என்று மறந்து போவதுண்டும். ஆனால் அமெரிக்காவில் தற்போது பேசும் மாத்திரைகள் வந்துள்ளது. காலை சாப்பிட வேண்டிய மாத்திரையை இரவு சாப்பிட்டால் "என்னை இப்போது சாப்பிட கூடாது, நான் ராத்திரி சாப்பிட வேண்டிய மாத்திரை" என்று தெளிவாகச் சொல்லுமாம். எனக்கு ஒரு டவுட் வயாக்ரா மாத்திரையைச் சாப்பிடும் போது அது என்ன சொல்லும்?

அடுத்து இன்னொரு அதிரும் செய்தி. இட்லிவடை மாதிரி பிழையுடன் எழுதுவததைத் தடுக்க ஜெர்மனி நாட்டில் ஒரு பேனா தயாரித்துள்ளார்கள். ஒருவர் எழுதும் போது எங்காவது டைப்போ, இலக்கணப் பிழை இருந்தால் பேனா உடனே எழுதுபவரின் கைவிரல்கள் உணரும்படி அதிர்வை ஏற்படுத்துமாம். ரொம்ப தப்பாக எழுதினால், நீங்கள் எழுதியது மாடர்ன் ஆர்ட் மாதிரி ஆகிவிடும்.. நம்ம மக்கள் அதையும் வால் பேப்பர் மாதிரி ஆக்கி கிழக்குப் பக்கத்தில் இருந்து புஸ்தகமாப் போட்டுவிடுவார்கள்.

உத்தர பிரதேசத்தில் முதலாம ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கினார் அகிலேஷ் யாதவ். மாணவர்கள் லேப்டாப்பை ஆன் செய்த வுடன் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் சிரித்துக்கொண்டு இருக்கும் வால்ப்பேப்பர் வந்தது. அதை உடனே பல மாணவர்கள் மாற்ற முயற்சி செய்தார்கள், ஆனால் அப்படி மாற்ற முயன்ற மாணவ்ர்களின் லேப்டாப் வேலை செய்யாமல் போய்விட்டது! மாணவர்களுக்கு அரசியல் புரியாது.

ஆனால் அரசியல் புரிந்த ஒரு நபரின் பேட்டியைப் போன வாரம் படித்தேன். இருபது வருடங்களாக தீவிரமாக தி.மு.க. அரசியலில் இயங்கி வருபவரும், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வசந்தி ஸ்டான்லி பேட்டியிலிருந்து முதல் இரண்டு கேள்விகள்.

உங்களுக்குப் பிடிச்ச ஆண் கடவுள் யார்?

கிருஷ்ணன்.

நெறைய பொண்ணுகளோடு இருந்த கிருஷ்ணனா?

அப்படி ஏன் பாக்கறீங்க? அலங்காரப் பிரியனா, குறும்புக்காரனா, யுத்த தந்திரங்களைக் கையாண்டு ஒப்புக்கு யுத்தம் நடத்தி வெற்றி பெற்ற கிருஷ்ணனா பாருங்க... கலைஞருக்கு பின் அரசியல் பாடம் கற்றுத் தருபவன் கிருஷ்ணன்தான்.

கடைசி வரியை பாருங்க. கலைஞருக்கு பிறகு! இவருக்கு தெரிந்த இந்த அரசியல் கூட நம் பாராளுமன்றத்துக்கு தெரியவில்லை.

பயங்கரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சும்மா உசுப்பு ஏற்றுகிறது. அதை பெரிய விஷயமாக நாம் கண்டனம் எல்லாம் தெரிவிப்பது தேவை இல்லாத ஒன்று. தினமும் ஒருவர் தன்னுடைய ஃபேஸ் புக்கில் ஏதாவது பிதற்றிவிட்டு, அடிக்கடி டிவி சானலுக்கு சென்று விவாதம் செய்வார். அவரை எப்படிக் காமெடியாக நாம் எடுத்துக்கொள்கிறோமோ அதே போல பாகிஸ்தான் அறிக்கையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓமர் அப்துல்லா அப்சல் குருவை ‘sahib’ என்கிறார் சட்டசபையில்!. இவர் இந்தியாவில் இருக்க லாயக்கே இல்லை. இனம் இனத்தோடு தான் சேரும்!

தமிழர்கள் பற்றி இவ்வளவு கண்டனமும் ஆர்பாட்டமும் போடும் மீடியாவும், மக்களும் பாகிஸ்தான் எல்லையில் போன வாரம் உயிர்விட்ட அந்த வீரர்களுக்கு என்ன செய்தார்கள்? அதில் ஒரு தமிழரும் இருக்கிறார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாலா தன் பரதேசியில் அடித்து சொல்லித்தருவது போல அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஞாநி தன்னுடைய ஓ பக்கக் கட்டுரையில் "பாலா, நடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டு நடிகர்களைக் குச்சியாலும் கையாலும் காலாலும் அடித்திருப்பது நிச்சயம் அவருடைய மனப்பிறழ்வைக் காட்டுகிறது. அவருக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தம்மன வக்கிரங்களை ஒரு கலைஞன் கலையாக வடித்து அவற்றிலிருந்து விடுதலை பெற முயற்சிப்பது பொதுவாக நடப்பதுதான் என்றாலும் அந்த முயற்சி இதர மனிதர்களை வதைப்பதாக இருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

படம் பார்த்த போது அதில் வரும் காட்சிகளையே அவர் அப்படி நடித்து காட்டியுள்ளார் என்பது புரிகிறது. ஏதோ நடிப்பு வரலை அதனால் அடிக்கிறார் என்று நினைக்க கூடாது. இப்படி நடிக்க வேண்டுன் என்று செய்து காண்பித்துள்ளார். ஞாநி இதை ஆராய்ந்து எழுதியிருக்கலாம். பள்ளிக்கூடத்தில் சில சமயம் ஆசிரியர் கணக்கு வரவில்லை என்றால் வாத்தியார் ஒரு தட்டு தட்டுவார். முன்பு இது தப்பாகத் தெரியாது ஆனால் இப்போது அது பெரிய தப்பாகத் தெரிகிறது. அதே போல தான் இதுவும்.

சில செய்திகளுக்கு விஸ்வரூபம் (படம். நாவல் அல்ல) போல அதிக கவனம் கிடைக்கிறது. ஆனால் சில செய்திகளை யாருமே கண்டுகொள்வதில்லை. தில்லி மருத்துவக் கல்லூரி பாலியல் கொலையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராம்சிங் தற்கொலைக்கு அடுத்த வாரம் ஒரு பெண் அதே சிறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மீடியா அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை!.

அதே போல பாரதிய ஜனதா மீதும் மக்களுக்கு அதிருப்தி உள்ளது என்று அத்வானி ஒத்துக்கொண்ட செய்தி பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் "எனக்கு இப்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. நான் திருமணம் செய்து கொண்டு இருந்தால், குழந்தைகள் இருக்கும். அதனால் மற்ற கட்சித் தலைவர்களைப் போல நானும் எனது குழந்தைகளை எனது பதவிக்குக் கொண்டுவர விரும்பும் நிலைக்குத் தள்ளப்படுவேன்" என்று ராகுல் சொன்னதை எல்லோரும் பெரிய நியூஸாக போட்டார்கள்!.

இன்று மாலை முதல் ஜாதிகள் எதுவும் தமிழ்நாட்டில் இருக்காது. பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் கோவைக்கு சென்று ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பேச போகிறார்கள். கோவையில் பிரபலம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பா !

இப்படிக்கு அன்புடன்,
இட்லிவடை

14 Comments:

jaisankar jaganathan said...

1. இத்தாலியை மிரட்டும் இந்தியா இலங்கைக்கு பயப்படுதே
2. அட்லீஸ்ட் இலங்கை புத்த பிட்சுவை உதைக்கும் அளவுக்காவது தமிழனுக்கு சொரனை இருக்கிறதே
3. திமுகவிற்கு 2G வழக்கு இருக்கும் வரை காங்கிரஸை பகைத்துக்கொள்ள முடியாது. இது என்னவோ உண்மைதான்
4. கலைஞருக்கு பின் அரசியல் பாடம் கற்றுத் தருபவன் கிருஷ்ணன்தான். ஒன்னும் சொல்ல முடியல
5. //எனக்கு இப்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. நான் திருமணம் செய்து கொண்டு இருந்தால், குழந்தைகள் இருக்கும். அதனால் மற்ற கட்சித் தலைவர்களைப் போல நானும் எனது குழந்தைகளை எனது பதவிக்குக் கொண்டுவர விரும்பும் நிலைக்குத் தள்ளப்படுவேன்//

இந்த ஆளுக்கு கல்யாணம் ஆனா என்ன? ஆவாட்டி என்ன?

Venkatramanan Vasan said...

// இட்லிவடை மாதிரி பிழையுடன் எழுதுவததைத் தடுக்க ஜெர்மனி நாட்டில் ஒரு பேனா தயாரித்துள்ளார்கள். ஒருவர் எழுதும் போது எங்காவது டைப்போ, இலக்கணப் பிழை இருந்தால் பேனா உடனே எழுதுபவரின் கைவிரல்கள் உணரும்படி அதிர்வை ஏற்படுத்துமாம். //

உத்தர பிரதேசத்தில் முதலா ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு :)

அன்புடன்
வெங்கட்ரமணன்

Anonymous said...

jaisankar jaganathan,உன்ன யாரு அய்யா blogai படிக்க சொன்னது. இவரு கமெண்ட் வேற போடுவாறு.....அறிவு களஞ்கியம்.
உன்ன மாதிரி நட்டு கேசுக்குதானே நடிகை படம் போட்டிக்கு.

சிவ.சரவணக்குமார் said...

//2. அட்லீஸ்ட் இலங்கை புத்த பிட்சுவை உதைக்கும் அளவுக்காவது தமிழனுக்கு சொரனை இருக்கிறதே//

அபத்தத்தின் உச்சம்.....இங்கு சிங்களனை உதைப்பவன் பதிலடி வாங்கப்போவதில்லை......இலங்கையில் வாழும் அப்பாவித்தமிழனும் , அவனிடம் வியாபாரம் செய்யச்செல்லும் நம் ஊர் தமிழனும்தான் அடி வாங்கப்போகிறான்...... த‌னியா சிக்குறவனை பல பேர் சேர்ந்துஅடிக்கிறது பெரிய வீரமா?

பொன்.முத்துக்குமார் said...

என்னதான் புத்த பிக்குகள் அங்கே ஆட்சி மீது பெரும் செல்வாக்கு செலுத்துவதாக கேள்விப்பட்டு மனம் குமுறினாலும், அவர்கள் இங்கே தாக்கப்படுவது வன்மையான கண்டனத்துக்கு உரியதே.

அவர்கள் மட்டுமல்ல, சுற்றுலா பயணிகளாக இலங்கை குடிமக்கள் தமிழகம் வந்தாலும் அவர்கள் தாக்கப்படக்கூடாது.

அங்கே தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதற்கு காரணம் குடிமக்கள் அல்ல. அரசும் (குறிப்பாக ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் பொன்சேகா கூட்டணியினரின் வன்மம்) ராணுவமும். அவர்கள் மேல் உள்ள கோபத்தை இங்கே வரும் சாமானிய சுற்றுலாப்பயணிகள் மேல் காட்டுவது மடத்தனம். நமது எதிர்ப்பு அரசின்மேல் - அரசின் அடக்குமுறை மேல் - அரசு தனது பழிவாங்கும் வெறியால் விளைவித்த போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்கும் முகமாக மட்டுமே; சாதாரண இலங்கை குடிமக்கள் மேல் அல்ல என்பதை தெளிவாக தெரிவிக்க நமக்கு கிடைத்த வாய்ப்பு இது. அபத்தமாக எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்.

sidtharth said...

மருத்துவ சிகிச்சைக்காக வருகிற வயசான பாட்டிம்மா-லாம் "சுற்றுலா பயணி" இல்ல போல !! ( அதுக்காக இதை நான் இந்த வன்முறையை ஆதரிப்பவனும் இல்லை )

jaisankar jaganathan said...

//jaisankar jaganathan,உன்ன யாரு அய்யா blogai படிக்க சொன்னது. இவரு கமெண்ட் வேற போடுவாறு.....அறிவு களஞ்கியம்.
//

யோவ் நிஜ பேருல வாய்யா

Anonymous said...

//யோவ் நிஜ பேருல வாய்யா//

அட போய்யா மிக்கி மௌஸ் .

Anonymous said...

//யோவ் நிஜ பேருல வாய்யா //

என்னப்பா இப்படியா அழறது... எவ்வளவு ஆனாலும் அப்படியே ஸ்டிராங்க இருக்கனும்...... இப்படி அழுகிறியே நீயெல்லாம் ”மர” தமிழனா ?

கவிஞர். ஞானபாரதி (நெசப் பேருதான்)

jaisankar jaganathan said...

அனானி,
ஏன்பா என்னை இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிற. நான் என்ன பண்ணுனேன். உனக்கு போரடிச்சா மாதிரி எனக்கு ஆபீசுல போரடிக்குது. அதனால கமெண்ட் போடுறேன்

Anonymous said...

THE COMMENT ABOUT VIKATAN AND THEIR HAVING A PERSONAL AGENDA IN SUPPORTING LANKAN TAMILS IS BIASED AND UNCHARITABLE.
THE CANADIAN LANKAN POPULATION COMPARED TO EUROPE IS SMALL.
VIKATAN SUPPORTS LANKAN TAMIL CAUSE FOR A LONG TIME'
THEY WERE ONE OF THE FEW TO INTERVIEW PRABHAKARAN.
THEY WERE THE FIRST TO CRITISISE KARUNANIDHI ON HIS ONE HOUR FAST.
THEIR WRITINS HAVE ALWAYS SUPPORTED LTTE THOUGH IDONT PERSONALLY AGREE. THEIR CIRCULATION AND ADVERTISEMENT REVENUE IS TOO HIGH TO THINK ECONOMICALLY IN SUPPORTING LANKAN TAMILS.
THEY HAD THE COURAGE TO ACCUSE KAUNANIDHI OF PLAYING DRAMAS IN LANKAN ISSUE EVEN WHEN HE WAS IN POWER.
HENCE IT NOT CORRECT OR FAIR TO SAY THAT VIKATAN HAS A PERSONALAGENDAA IN SUPPORTING TAMILS.

Anonymous said...

setha paampu pulikalai ethanai murai thaan adipeerkal??? inayee soli soli ceylon goverment ai kaapatalama???

Anonymous said...

pulikal payankara vaathikal, but ceylon is a gouverment mind it idly vadai?

Senthil said...

Idly Vadai..i am really hurt by seeing your comment on LTTE..

They used common people as human shields..This is stupidity to the core...even now people who lived in the de-facto government are saying that..they lived peacefully under them & LTTE asked them to move to GOSL areas to take care of themself...but people stayed back afraid of the government..
If bloggers like you start giving these false propoganda..i dont know what we are upto...

Regarding Vikatan...they are truthful as always