பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 17, 2013

சன்டேனா இரண்டு (17-03-13) செய்திவிமர்சனம்



இந்த வாரம்.... இரண்டு சம்பவங்கள்





செய்தி # 1



சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.


அது புனே நகருக்கு சற்றுதள்ளி இருக்கும் ஒரு ஆசிரமம். ஒரு மலைஅடிவாரத்தில், ஒரு பெரும் நிலப்பரப்பை அழகான நந்தவனம்போல உருவாக்கிஇருந்தார்கள். ஆங்கங்கே சிறு, சிறு மண்டபங்கள் மொசைக் தரையுடன். தியானம் செய்வத்தற்கு ஏற்றாற்போல்.



சுமார் பத்து இளைஞர்கள் ஒரு புல்தரையில் வட்டமாக அமர்ந்துஇருக்க (நானும்தான்!), நடுவே அமர்ந்துஇருந்த ஆசிரமத்தை சேர்ந்த,சுடிதார் அணிந்து இருந்த ஒரு பெண்மணி படுசரளமான ஆங்கிலத்தில் இப்படி பேசினார்.



"நம் சுவாமிகள் நேற்றுதான் அமெரிக்காவில் இருந்து வந்தார். ஆறு மாதம் இந்தியாவிலும், ஆறு மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிலும் இருப்பார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இமயமலையில் இருந்து இருக்கிறார். அதன்பிறகு, உருவாக்கியதுதான் இந்த ஆசிரமம் " என்றார் பக்தி பரவசத்துடன் அவர்.



"சுவாமிகளால் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி உங்கள் மனதை பக்குவப்படுத்தும். மனபதட்டம் இன்றி ஒரு விளையாட்டு போல உங்கள் அலுவலக பணிகளை செய்யவைக்கும். ஒரு மழைநேரத்தில், சூடான டீ குடிப்பது போன்ற தியான பயிற்சி இது " என்று எப்படி சொன்னால் இளைஞர்களுக்கு புரியுமோ,பிடிக்குமோ அந்த மொழியில் தொடர்ந்தார் அவர்.





"இந்த பயிற்சி முகாம் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கிறது. அதுவும், உங்களுக்கு ஏற்றார்போல வார இறுதி நாட்கள் மட்டும் " என்று முடித்த அவர்."உங்களுக்கு வேறு எதாவது கேள்விகள்,சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்றார்.



நாங்கள் சில கேள்விகளை கேட்டோம்.



'மனபதட்டம் இன்றி ஒரு விளையாட்டு போல உங்கள் அலுவலக பணிகளை செய்யவைக்கும்' இந்த வாக்கியம் எங்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது.

"சுவாமிகளை இன்று நேரடியாக சந்திக்க முடியுமா "



" நீங்கள் முதலில் இந்த முகாமில் கலந்துகொள்ள வேண்டும், பயிற்சி முடிந்ததும் அதன் இரண்டாம் கட்டமாக தீட்ச்சை தரும் ப்ரோக்ராம் இருக்கிறது. சுவாமிகளே உங்களுக்கு ஆசி வழங்கி, தீட்ச்சை தருவார்"



"இந்த பயிற்சி எத்தனை கட்டங்கள். ஆசிரமத்திற்கு தொடர்ந்து வர இயலுமா"



"ஸி. இது வேலைநெருக்கடியில் சிக்கிதவிக்கும் உங்களை போன்ற இளைஞர்களுக்காகவே உருவாக்கபட்ட சிறப்பு தியானமுறை. தீட்ச்சை எடுத்து கொள்பவர்கள் மட்டுமே தொடர்ந்து இங்கு வரலாம். நீங்கள் விரும்பும்வரை தங்கவும் செய்யலாம். இங்கு நல்ல வசதிகளுடன் உள்ள ரூம்கள் உள்ளன.அங்கே பாருங்கள். அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள்.இங்கு கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்து, தியானத்தில் ஈடுபடுகிறார்கள்"



அவர் சுட்டிகாட்டியதை கண்ட, ஒரு மரத்தடியில் அமர்ந்து எங்களை பார்த்துகொண்டிருந்த அந்த அமெரிக்க தம்பதிகள் எங்களை நோக்கி புன்னகையுடன் கைஅசைத்தார்கள்.



"இந்த வாரமே நாங்கள் உங்கள் பயிற்சி முகாமுக்கு வருகிறோம்"



"நல்லது. இத்தைகைய நல்ல விஷயங்கள் எளிதில் பிறருக்கு கிடைத்துவிடாது. சுவாமிகள் இங்கு இருக்கும்போது, இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்"



"உங்கள் பெயர்களை ஆபீஸ் ரூமில் பதிவு செய்யவேண்டும். இரண்டு நாள் தியான முகாமுக்கு கட்டணம் வெறும் 5000. சுவாமிகள் தீட்ச்சை தரும் ப்ரோக்ராம் அட்டென்ட் பண்ணவிரும்புவர்களுக்கு தனியாக 5000 கட்டவேண்டும் ".



நான், மற்றும் ஒரு நண்பரை தவிர மற்ற அனைவரும் பயிற்சி முகாமுக்கு சென்றுவிட்டு, இரண்டு நாளும் 'சூப்பர் மீல்ஸ் மேன்' என்று சொன்னார்கள்.



இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்...அவர்கள் அனைவரும் ஐ. டி நிறுவன ஊழியர்கள் என்பதுதான்.



இன்றைக்கு இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஆசிரமங்களுக்கும், யோகா போன்ற சென்டர்களுக்கும் வருமானத்தை தரும் கஸ்டமர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஐ. டி. நிறுவன ஊழியர்களே.



.ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93 சதவீதம் பேருக்கு மகிழ்ச்சி இல்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹெல்த்டிராக் என்ற நிறுவனத்திற்காக பீப்பிள்ஹெல்த் என்ற ஆ‌ரோக்‌கிய நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பு, ஐ.டி. நிறுவன ஊழியர்கள் குறித்து எடுக்கப் பட்டது.



பெங்களூரை சேர்ந்த ஏழு முன்னணி ஐ.டி., நிறுவனங்களை சேர்ந்த 2106 ஊழியர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப் பட்டது.



இதன்படி, 93 சதவீத ஊழியர்கள் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது, ஊதிய உயர்வு, தூங்கும் நேரம், பயண தூரம், தாறுமாறான வேலை நேரம் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர்கள் சோகமாகவே உள்ளனர் என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது



எல்லாரும் நினைத்து கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கில் சம்பளத்துடன், பகட்டான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை.



கூலி தொழிலாளியோ, பாரத பிரதமரோ....அவரவர் தொழில்களுக்கு உரிய பிரச்சினைகளுடனும், போராட்டங்களுடன்னும்தான் மனிதர்கள் எல்லாரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.


I.T.ஊழியர்கள் I.D. இழந்தவர்களாக மாறிவருகிறார்கள் என்று தெரிவிக்கிறது பீப்பிள்ஹெல்த்.


செய்தி # 2







ஓரு புத்தகம் ஒன்றில் அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் பழைய பேட்டி ஒன்றைப் படித்தேன். அவர் தனது இயக்கத்தில் உருவான "நாடோடி மன்னன்" உருவான விதம் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தெரிவித்து இருக்கிறார்.



அதிலிருந்து, நான் ரசித்த சில கேள்வி,பதில்கள் உங்கள் பார்வைக்கு.



கேள்வி : உங்கள் பிறப்பு மற்றும் வளர்ப்பு பற்றி கூறுங்கள்.

பதில் : நான் 1917ல் இலங்கை என்னும் தமிழர்கள் வாழும் கண்டியில் பிறந்தேன். பிறந்த மூன்று வருடத்திற்குள் எனது தந்தையும் என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் நோய்வாய்ப்பட்டு அடுத்து அடுத்து இறந்து விட்டார்கள். பிறகு 1920ல் என்னையும் எனது அண்ணன் சக்ரபாணியையும் அழைத்துக் கொண்டு என் தாயாருடைய நெருங்கிய உறவினர்களின் உதவியோடு தமிழ்நாடு கும்பகோணம் வந்து உச்சிப் பிள்ளையார் கோவில் தெரு என்ற இடத்தில் குடியிருந்தோம். பிறகு, கும்பகோணத்தில் மூன்றாம் வகுப்பு, படித்து நான்காம் வகுப்பு வரை முழுமையாகப் படிக்க முடியாமல் கும்பகோணத்தில் எனது தாயாரின் உறவினர் ஒருவரின் உதவியால் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் என்னும் நாடகக் கம்பெனியில் நானும் எனது அண்ணனும் நடிகராக சேர்ந்தோம்.

என் தாயார் உடைய பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர் பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.

என்னைத் தமிழ்நாடு மக்களும், அயல் நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.



கேள்வி : "நாடோடி மன்னன்" கதை எப்படி உருவானது?

பதில் : 1937-38 ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா " படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போனேன். "இப் ஐ வெர் கிங்" (If I were king) என்ற படம் அது. ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது….அதில் ஒரு காட்சியில் நான் மன்னனானால்? என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் "நான் மன்னனானால்?…" என்று.

இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றிவிட்டது. அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக் கொண்டிருந்தவன் என்பதே பொருந்தும். நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,?அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்? என்பதே….ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே தான், நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன்.

இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் ; அவர்களும் நம்மோடிருப்பவர்கள்தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்….? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்…. மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான். ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்துவிடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்தரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றி நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல" என்ற எண்ணத்தில் வாழ்ந்து, தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில் ஈடுபடவும் தாயராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட,அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன். இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்".

‘மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன… அவைகளை தமதாக்கி கொண்டால் நாடு நலம் பெறும்’ என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் ‘நாடோடி மன்னன்’ கதை. என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி,அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்பாடுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே? அதோடு புதிய, ஆனால் தேவையான,சிலசட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடிமன்னன் " கதை.

கேள்வி : உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கின்றனரா?

பதில் : நானே இருக்கிறேனே, போதாதா?

கேள்வி : உண்மை அழிந்த பின், நிலைத்திருப்பது என்ன?

பதில் : உண்மை தான்! ஏனென்றால், அது அழிவது கிடையாது.

கேள்வி : நீங்கள் எதை நம்புவதில்லை?

பதில் : நடிகர்களுக்குக் கிடைக்கும் புகழ் நிரந்தரமானது என்பதை!

கேள்வி : எதிர்ப்புகளைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி பெற்றீர்கள்?

பதில் : என் வளர்ச்சியாலோ, எனக்குக் கிடைக்கிற ஆதரவாலோ அல்லது என்னையும் அறியாமல் நான் செய்கிற தவறுகளாலோ இன்று எனக்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லாமலேயே, பல துன்பங்களையும், துயரங் களையும் தாங்கி, பரிதாப நிலையில் வாழ்ந்தவன் நான். அதை எண்ணிப் பார்க்கும் போது, இந்தத் தாக்குதல்களும், எதிர்ப்பும் எனக்கு மிகச் சாதாரணமாக தோன்றுகிறது.



(நன்றி, இனி அடுத்த வாரம்)



-இன்பா

17 Comments:

jaisankar jaganathan said...

1. தியானத்திற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டியது இல்லை. ஓம்கார் சீப்பா சொல்லி கொடுப்பார்

2. எம்ஜிஆர் பெயரோட மேனன் வருகிறது. அவர் மலையாளி இல்லாமல் பிறகு யாராம்?

Anonymous said...

//தியானத்திற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டியது இல்லை. ஓம்கார் சீப்பா சொல்லி கொடுப்பார்//

எல்லாம் தெரிஞ்ச புலி சொல்றாருபா . கேட்டுக்குங்க.

kg gouthaman said...

இரண்டுமே நன்றாக உள்ளன. ஐ டி கம்பெனியில் பணி புரிபவர்கள், இவ்வளவு டென்ஷன் பட அவசியமே இல்லை. ஏன் படுகிறோம் என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை. அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து, அரைமணி நேரம் ஆழ்ந்து சுவாசித்தால் அது போதும்.
எம் ஜி ஆர் பேட்டி பகுதிகள், நன்றாக உள்ளன.

Chilled Beers said...

நிரபராதியான எம்.ஜி.ஆரின் தந்தை ஒரு பாலியல் வழக்கில் கேரளாவிலிருந்து நாடுகடத்தப்பட்டிருக்கிறார்.அவராக போகவில்லை. இதைபற்றி ஜெமோவின் விரிவான(பொறுமையா படிங்க) கட்டுரை http://www.jeyamohan.in/?p=972

Ram said...

"1. தியானத்திற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டியது இல்லை. ஓம்கார் சீப்பா சொல்லி கொடுப்பார்

2. எம்ஜிஆர் பெயரோட மேனன் வருகிறது. அவர் மலையாளி இல்லாமல் பிறகு யாராம்?"

Narayana endha kosu thollai....

jaisankar jaganathan said...

//எல்லாம் தெரிஞ்ச புலி சொல்றாருபா . கேட்டுக்குங்க.
//

அனானி, ஆன்மீகம் என்பது வியாபாரம் அல்ல

jaisankar jaganathan said...

எம்ஜிஆரை தமிழன் என்று சொல்லுவது பார்ப்பன சதி.
அப்படியே கருணாநிதியை தெலுங்கர் என்று சொல்லுவது பார்ப்பன சதியே

jaisankar jaganathan said...

//Narayana endha kosu thollai...//

டேய் ராம்,
உண்மைய சொன்னா தாங்க முடியலையா?

திருவானைக்காவல் பக்கிரி said...

ஜெ ஜெ எழுதுவதை எல்லாம் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரு ஒரு காமெடி பீஸ். தியானம் என்பது ஆன்மிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

sidtharth said...

/*ஐ டி கம்பெனியில் பணி புரிபவர்கள், இவ்வளவு டென்ஷன் பட அவசியமே இல்லை. ஏன் படுகிறோம் என்பதும் அவர்களுக்குப் புரியவில்*/
two words with one reason.. PEER PRESSURE !

jaisankar jaganathan said...

//திருவானைக்காவல் பக்கிரி said...
ஜெ ஜெ எழுதுவதை எல்லாம் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரு ஒரு காமெடி பீஸ். தியானம் என்பது ஆன்மிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.//

ஐயா திருவானைக்காவல் பக்கிரி, நானும் திருவானைக்காவல் தான். முடிந்தால் தியானத்திற்கும் ஆன்மீகத்துக்கும் 6 வி்த்தியாசம் சொல்லும்

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

///Anonymous said...
//தியானத்திற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டியது இல்லை. ஓம்கார் சீப்பா சொல்லி கொடுப்பார்//

எல்லாம் தெரிஞ்ச புலி சொல்றாருபா . கேட்டுக்குங்க//////

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்...

1. புலிக்கு எப்படி தியானம் பற்றி தெரியும்... அது கடிச்சுருக்கு குதறியிருக்கு....!!!!

2. ஓம்கார், மாருதி கார்.... தெலுங்கு கார்.... இப்படி எந்த கார் வேணும்னாலும் சொல்லி கொடுக்கலாம்...

3. எம்.ஜி.ஆர்... நம்.ஜி.ஆர்... ஆகி எத்தனையோ காலமாச்சு.. ஆமா தமிழனா இருந்தாத்தான் தலையில தூக்கி வைச்சு கொண்டாடணுமா... ஏன் ???!!!! மலையாளியா இருந்தா ஒத்துக்க மாட்டோமா..... இதெல்லாம் வர்ணாசிரம வெட்டி பேச்சு........... யாதும் ஊரே... யாவரும் கேளீர்ன்னு பேசிப் பழகுங்க....

4. நம்மாளு.... kg gouthaman said... சொல்ற மாதிரி மூலையில உக்காந்து மூச்ச உடுங்க.......

5. அப்புறம் நாராயண இந்த நெஜ கொசு தொல்லைக்கு ஏதாவது வழி இருக்கா... நொச்சியெல்லாம் சரிப்படலயே....

6. திருவன்னைகாவல்.... ஜெமோவின் ஆன்மீக அரிவில் டவுட்டு ஏற்பட்ட உமக்கு இந்தா தண்டனை... விஷ்ணுபுரத்த 2 தடவ வாசிச்சு... (ஹைய்யோ அம்மாடி.....) 1 தடவ அத புரிய முயற்சி செய்யுங்க ( நான் வரல இந்த வெளாட்டுக்கு)

Anonymous said...

jaisankar jaganathan sir. you deserve all this. may be even more.

You have become the Mickey Mouse now, same like your profile picture.

Please do not comment about any religions ( like the anti muslim comment you made which was removed by IV) or about people.

The best is do not post comment at all.

jaisankar jaganathan said...

//Anonymous said...
jaisankar jaganathan sir. you deserve all this. may be even more.

You have become the Mickey Mouse now, same like your profile picture.

Please do not comment about any religions ( like the anti muslim comment you made which was removed by IV) or about people.

The best is do not post comment at all.//

அண்ணே அனானி,
உம்ம வேலைய பாரும்

Anonymous said...

ஞாயிறு இரவு 11-30 மணிக்கு டிடி பொதிகை சேனலில் ஒரு சீரியல் காட்டினார்கள். பகுதி - 2 என்று காட்டினார்கள். பெயரைத் தவற விட்டுவிட்டேன். ஜானகி என்ற பெண்ணைப் பற்றிய கதை. அவர் காந்தியவாதியாக, இலட்சியவாதியாக இருக்கிறார். பல சோதனைகளை எதிர் கொள்கிறார். நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தது.

ஜானகியாக வந்தவர் ஆன்ட்ரியா ஜெரிமியா! உதவி இயக்கம் ரோகிணி. 'எ டெலி சீரியல் பை ரேவதி அன் க்ரூ' என்று போட்டார்கள்.

கூகுளில் எவ்வளவு முன்றும் இந்தத் தொடரின் பெயர், என்றைக்கு அடுத்த பகுதி என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. யாராவது தெரிந்தவர்கள் தெரிவிக்க முடியுமா? நன்றி.

சரவணன்

Anand said...

MGR interview is really good one and different one too

Anonymous said...

ஐயையோ ந்னு அத்தனை ஊழல் அரசியல்வாதிகளும், கருப்பு பண முதலைகளும் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு புலம்புகிறார்கள். All cyprus Banks insolvant ஆகிறது. போட்டிருந்த ஊழல் பணம் அத்தனையும் ஸ்வாஹா அல்லது பெரும்பாலான பணம் போய் விடும்.
சாகட்டும். http://finance.yahoo.com/blogs/daily-ticker/why-cyprus-bail-bigger-deal-think-141844402.html

இதைப் பற்றி இ.வ. விலாவரியாக எழுதுவாரா?