பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 10, 2013

சன்டேனா இரண்டு (10-3-13) செய்திவிமர்சனம்



இந்த வாரம்.... ஓதுக்கப்பட்ட ஒதுவார்கள், தாழ்த்தப்ட்ட பக்தர்கள்.



செய்தி # 1





சிவராத்திரி என்றாலே என் நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோயில்தான். தற்சமயம் இந்த கோயில் நிர்வாகம் அரசு நிர்வகிக்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறி இருப்பது நீங்கள் அறிந்ததே.



ஆனால்,சமிபத்தில் நான் இந்த கோயிலுக்கு சென்றபோது, அது இன்னும் தீட்சதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றும், அரசு நிர்வாகம் என்பது பெயரளவில் மட்டுமே என்றும் புரிந்தது. தங்களின் எதிர்காலத்தை நினைத்து தீட்சதர்கள் பயந்துபோய் விட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு தொட்டதெற்க்கெல்லாம் வசூல் வேட்டை, கீழ சன்னதியில் தங்களுக்கென்று தனியாக ஒரு பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு என்று செட்டில் ஆகும் முயற்சிகள் தெரிகின்றன,



நான் இங்கு எழுதவந்தது தீட்சதர்களை பற்றி இல்லை.



சைவத்தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் ஒதுவார்களை பற்றி.
ஒரு ஆய்வில் படித்த,மேலும் ஓரு ஒதுவாரிடம் இருந்து அறிந்தகொண்டவை இங்கே.



உலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் மிகவும் தொன்மையான சமயம் சைவ சமயம். சைவ சமயத்துக்கு அடிப்படையான நூல் பன்னிரு திருமுறைகள்.




இப் பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தவர்கள் 27 அருளாளர்கள். அவர்கள் 4,286 பாடல்களை அருளியுள்ளனர். தமிழகம் செய்த தவப்பயனால் கிடைத்தவை பன்னிரு திருமுறைகள். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேந்தனார் உள்பட இருபத்தேழு அடியார்களால் அருளிச் செய்யப்பட்டவை.


"எனதுரை தனதுரையாக' என சம்பந்தர் கூறுவதால், திருமுறைகள் யாவும் இறைவன் வாக்காகும். கல்லா மாந்தரையும் வன்னெஞ்சரையும் கசிவிக்க வல்லவை.


"மெய்யன்போடு காதலாகிக் கசிந்து ஓதுபவர்கட்கு' இம்மைச் செல்வங்கள், மறுமைப் பயன்கள், வீடுபேறு ஆகிய நலன்களையும் செம்மையாக அளிக்க வல்லவை.


பல லட்சம் பாடல்களில் செல்லுக்கும், மண்ணுக்கும் உணவானவை போக 796 பதிகங்கள்தான் எஞ்சியிருக்கின்றன. சைவ சமய நூல்களில் பன்னிரு திருமுறைகள் "தோத்திரங்கள்' என்றும், பதிநான்கு மெய்கண்ட நூல்கள் "சாத்திரங்கள்' என்றும் வழங்கப்படுகின்றன.


தோத்திரங்கள் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. சாத்திரங்கள் அறிவை அடிப்படையாகக் கொண்டவை என வரலாறு கூறுகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டது தமிழ். ஆனால், தமிழ்ப் பண்ணிசை பாடும் ஓதுவாமூர்த்திகளின் நிலை பரிதாபத்துக்குரியது.


பித்தா பிறைசூடி பெருமானே என தமிழ்ப் பாடல் பிறந்த ஊர்களில் ஓதுவாமூர்த்திகளின் எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் குறைந்து வருகிறது.



நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஓதுவாமூர்த்திகள் உலகோர் யாவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழப் பாடுகிறார்கள். பண்ணாங்கம், சுத்தாங்கம், சரிதம், முகவுரை, தாளம் இவை அனைத்தும் முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் தமிழ் இசையைப் பரப்பியவர்கள் ஓதுவாமூர்த்திகள்.


ஊர்தோறும் சென்று அங்குள்ள திருக்கோயில்களில் தேவார, திருமுறைகளைப் பாடி, சமயத் தொண்டு செய்து தமிழ் வேதத்தின் அற்புதங்களை உலகறியச் செய்தவர்கள்.


திருத்தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்று கூறுகிறோம். ஆனால், அப்பாடலாகிய தமிழிசைக்கு உரிய பண்ணிசை பாட ஓதுவாமூர்த்திகள் இல்லை. அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையினரால் எவ்விதப் பலன்களும் கிடைக்கவில்லை.


திருவிழாக் காலங்களில் திருக்கோயில்களில் தமிழ்ப் பண்ணிசை பாட வாய்ப்பளிக்க வேண்டும். அறநிலையத்துறையில் உள்ள சில அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளால் திருமுறைகளின் அருமை, பெருமை அறியாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓதுவாமூர்த்திகளே கோயில்களை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற அதிக வருவாய் உள்ள கோயில்களில்கூட ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலை தொடர்கிறது.


சென்னை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட 16 இடங்களில் உள்ள அரசு இசைப் பள்ளிகளில் தேவார இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, அரசு பல லட்சம் செலவு செய்கிறது. ஆனால், மாணவர்கள் தேவார இசைப் பயிற்சிக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.



நிலைமை இப்படியிருக்க, ஒவ்வொரு கோயில்களுக்கும் தகுந்தவாறு தமிழ்ப் பண்ணிசை ஓதுவார்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் ஓய்வுபெற்றால் மாதம் ரூ.750 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதுவும், ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே இந்த ஓய்வூதியம். அவர்களில், பலருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதில்லை.


அனைவரும் மண்ணில் நன்கு வாழ்வதற்காக தமிழ்ப் பண்ணிசை பாடியவர்களின் நிலை வேதனையாக உள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் ஓதுவாமூர்த்திகளே இல்லாத நிலை ஏற்படும். இது தமிழுக்கு நேரும் இழுக்கல்லவா? இந்நிலை வருவதற்கு முன் அரசு கண் விழிக்க வேண்டும்.


ஓதுவாமூர்த்திகள் இல்லாத திருக்கோயில்களில் ஓதுவார்களைக் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். காலநிலை கருதி போதிய ஊதியம் வழங்க வேண்டும்.



தமிழ், தமிழ் என கூக்குரலிட்டால் போதாது. கோயில்களில் தமிழில் வழிபாடு நிகழ்த்த ஓதுவாமூர்த்திகள் வேண்டாமா? இதற்கு உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், பிறகு சம்ஸ்கிருதம் தானே கோலோச்சும். இதை நாம் உணர வேண்டாமா?



தமிழுக்காகத் தொடர்ந்து வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஓதுவாமூர்த்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்ற பின் ரூ.3 ஆயிரமாவது ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணி செய்தால் மட்டுமே ஓய்வூதியம் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, பணிசெய்த ஓதுவார்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


திருவிழாக் காலங்களில் தமிழ்ப் பண்ணிசை வாணர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். தேவாரப் பாடசாலையில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பயிற்சி பெற்றவுடன் கோயில்களில் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும்.



இவற்றையெல்லாம் உடனடியாகச் செய்யும்பட்சத்தில் தமிழைப் பரப்பும் ஓதுவாமூர்த்திகளின் எதிர்காலம் சிறக்கும், தமிழும் வளரும்.



இப்படி சொல்கிறது ஆய்வுக்கட்டுரை.


தமிழை காக்கும் ஓதுவார்களுக்கு நிரந்திர பணி வழங்க நம்ம அறநிலையதுறை உடனே நடவடிக்கை எடுக்கணும். இல்லையென்றால் அடுத்த தலைமுறைக்கு தேவாரம், திருவாசகம் என்றால் என்னவென்று தெரியாமல் போய்விடும்.



செய்தி # 2





எவிடன்ஸ் என்னும் அரசுசாரா நிறுவனம் கோவில்களில் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வரும் உரிமைகள் குறித்து புள்ளி விவரம் ஒன்றை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டது. அந்த புள்ளிவிவரம் இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும்,இந்த கணிணி யுகத்திலும் தொடர்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது..



85 ஊராட்சிகளில் உள்ள 69 கோயில்களில் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 72 கோயில்களின் சன்னிதானமும் 56 கோயில்களில் அர்ச்சனையும் மறுக்கப்படுகின்றன. 54 கோயில்களின் தேர்கள் தலித் பகுதிகளில் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.



52 கோயில்களில் பரிவட்டம் மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகள் வடம் தொடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 64 கோயில்களில் தலித்துகள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பால்குடம் எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்ற சடங்குகளின்போது 60 கோயில்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.



பாதிரியார்கள், பூசாரிகளால் பாகுபாடு காட்டப்படும் கோயில்கள் 65 என்கிறது அப்புள்ளிவிவரம்.



இது போன்ற சாதிய பாகுபாடுகள் நமது இந்து கோவில்களில் மட்டும் அல்ல, கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் இருக்கின்றன என்பதும் உண்மை.



'தலித்' என்று ஒரு வரியில் சொன்னாலும், பள்ளர்,பறையர் என்று சாதிய வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியிலும் இருக்கின்றன.இத்தைகைய வேறுபாடுகளை களைவதற்கு பதில், ஒவ்வொரு பிரிவும் ஒரு 'தலைவருடன்' , தங்களுக்குள்ளாகவே மேலும் பிளந்து இருக்கிறார்கள்.



கிராமப்புற தலித் மக்களுக்கு அரசு தரும் பல்வேறு சலுகைகளையும், இடஒதுக்கிடு போன்ற வாய்ப்புகளையும் பற்றி, அவர்களுக்கே முழுமையாய் தெரியவில்லை என்பதும், அதற்க்கான வாய்ப்புகள் பற்றி மருந்துக்கு கூட தெரியவைக்காமல், அந்த மக்களை வெறும் 'வாக்கு வங்கி'களாக முன்னேற்றுவதில் பெரும்வெற்றி கண்டிருக்கிறார்கள் நமது அரசியல் தலைவர்கள் அனைவரும். தங்களை தலித் மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியவாதிகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல என்று நினைக்கிறேன்.



(நன்றி, இனி, அடுத்தவாரம்)



-இன்பா

11 Comments:

Anonymous said...

அனைவரும் மண்ணில் நன்கு வாழ்வதற்காக தமிழ்ப் பண்ணிசை பாடியவர்களின் நிலை வேதனையாக உள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் ஓதுவாமூர்த்திகளே இல்லாத நிலை ஏற்படும். இது தமிழுக்கு நேரும் இழுக்கல்லவா? இந்நிலை வருவதற்கு முன் அரசு கண் விழிக்க வேண்டும்.

jaisankar jaganathan said...

ரத்தம் கொதிக்கிறது. தமிழ் தமிழ் என்று மேடையில் முழங்கும் கருணாநிதி ஏன் இதை சரிபண்ண வில்லை.

ஜெயலலிதாவுக்கு தோழியைப்பற்றி கவலைப்படவே நேரம் இல்லை.

மக்கள் மதம் மாறுவதைப்பற்றி ஏன் இந்த கவலை இவர்களுக்கு? பண்ணுவதெல்லாம் தவறு. இதில் மதமாற்றம் தவறு என்று வேறு சொல்லுகிறார்கள்

Gnanam Sekar said...

நல்ல பதிவு , தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா

Sivayanama Thirumurai said...

Correctly said about Othuvars. Rajaraja cholan has fought and got this Thirumurai, it is our duty to pass this to our next generation. All of us should do our part on this. We need to teach our children thevaaram and thirumurai.

Anonymous said...

Very good article. Thank you.


அசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் said...

இது மட்டும் அல்ல. வைஷ்நாவக் கோவில்களில் நாலாயிர திவ்யப் பிரபந்த கோஷ்டி இருந்தது.இப்போது ஒவ்வொரு ஊரிலும் ( திவ்ய தேசங்கள் உட்பட ), இந்த பிரபந்தக் குழு இல்லை. திராவிட வேதம் சொல்ல ஆள் இல்லை. உற்சவங்களில் நான்கைந்து ஓய்வு பெற்ற, வயதான பெரியவர்கள் தங்களுக்குத் தெரிந்த அளவில் இந்த பாசுரங்களைப் பாடுகிறார்கள். தமிழ் வளர்த்த் ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாட ஆள் இல்லை.

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

Anonymous said...

\\எதிர்காலத்தை நினைத்து தீட்சதர்கள் பயந்துபோய் விட்டார்களோ என்று நினைக்கும் அளவுக்கு தொட்டதெற்க்கெல்லாம் வசூல் வேட்டை, கீழ சன்னதியில் தங்களுக்கென்று தனியாக ஒரு பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு என்று செட்டில் ஆகும் முயற்சிகள் தெரிகின்றன,\\

Dont spread false information in the common forum.

Do you have any proof on this?

The information from the temple is almost nil.

The temple properties under the control of govt for the past 50 years...

It comes under the local village panjayath.

Only the temple comes under the administration of Deetchithars..

What else they could do other than getting 'dakchana' from the devotees?

Do you know the amount required to clean such a big temple?

Your article shows your lack of knowledge

Anonymous said...

Why nobody commented about the second news. I am a dalit. I cant enter into the temple which is located in my father's own village. I afraid whether it will change in the next generation or not.
evvalavu padithavargalaga irunthalum jaathi paarpathillai ena velipadaiyaga sonnalum avargal ulmanathil dalit arunthathiyar makkaludan [sama anthasthil irunthalum] ondrupol palaguvathillai enbathu en anubavam. Maatru karuthu unda?
En magan ella thaguthigalum irnthum naalai avanudaiya saga nanbargal munnal oru padi keelanavanaga karuthapaduvan endra ennam oru ammavaga eppadipatta vethanaiyai adaigirathu enbathai jathi veriyargal arivargala?
Latchathil oruthi
Ananthi

jaisankar jaganathan said...

Ananthi உங்களின் கஷ்டம் புரிகிறது. எல்லொரும் அர்ச்சகர் ஆகும்போது இதுவும் நிறைவேறும் என்று நினைக்கிறேன்