பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 25, 2013

விஸ்வரூபம் - FIR


அன்புள்ள இட்லிவடை,

முதலில் எனக்கு FIR எழுத வாய்ப்புக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நான் கமல் ரசிகன். அதனால் கொஞ்சம் பயாஸ் இருக்கும்.

படம் ஆரம்பிக்கும் போது இளகிய மனம் படைத்தவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி நம்மைத் தயார்படுத்தியிருக்கிறார்கள். சரி ரத்தம் கொஞ்சம் அதிகமாக வரும் போல என்று சுதாகரித்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தால்...


டான்ஸ் மாஸ்டராக கமல் ஆடும் நடனம், அவர் செய்யும் முக பாவம் எல்லாம் நாம் கமலுடன் தமிழ்நாட்டில் பிறந்தோம் என்று பெருமை கொள்ள செய்கிறது. தன் மனைவி அனுப்பும் டிடெக்டிவ்வை கமல் டாபாய்க்கும் காட்சி, அதற்கு பிறகு வில்லன் கும்பலிடம் மாட்டிக்கொள்ளுவது... தொழுவதற்குக் கைக்கட்டை அவிழ்த்த பிறகு கமல் போடும் சண்டை விவரிக்க ஒரே ஒரு வார்த்தை - பிரமாதம். அதே ஷாட்டை கொஞ்சம் ஸ்லோ மோஷனில் திரும்ப காட்டும் போது நம்மை அறியாமல் கை தட்டுகிறோம். கமல் என்ற நடிகருக்கு விழும் கைத்தட்டல்

'அட கமலா இப்படி?" என்று நமக்குத் தோன்றும் சந்தேகத்தை உடனே புரிந்துக்கொண்டு ஃபிளாஷ் பேக். கதை ஆப்கானிஸ்தான், ஜிகாத், நாட்டோ.. அமெரிக்க தாக்குதல் என்று ஆங்கிலப் படத்துக்கு நிகராக எடுத்துள்ளார். ஆனால் அங்கே எல்லாம் கமல் என்ற கலைஞரின் மேதாவித்தனம் வந்து அதைக் 'கமல்'படமாக்கி நம்மை சலிப்படையச் செய்கிறது. இதற்கு பிறகு இயக்குனர் கமல் வந்துவிட்டார்...

கமலின் தோற்றம் ஹே ராம் படத்தில் ஷாருக்கான் தோற்றதை நினைவுபடுத்துகிறது. அமெரிக்கக் கருவியைப் பற்றித் தன் தோழருடன் பேசுவது குருதிபுனலை நினைவுப்படுத்துகிறது. வில்லன் தொண்டை கரகரப்பாகப் பேசுவது ஆளவந்தான் படத்தில் அவர் கேன்சர் மாமா தொண்டை சரியில்லாமல் பேசுவதை நினைவுப்படுத்துகிறது. FBIவிட தான் புத்திசாலி என்று காண்பித்துக்கொள்ளுவது வேட்டையாடு விளையாடை நினைவுப்படுத்துகிறது. ஆங்காங்கே கடவுள் பற்றி வரும் வசனங்கள் பல கமல் படங்களை நினைவுப்படுத்துகிறது.

புறா நல்ல கதாப்பாத்திரம். ஆனால் அதை வேஸ்ட் செய்துவிட்டார். அதை வைத்துக்கொண்டு நிறைய செய்திருக்கலாம்.

சரி இஸ்லாமியர்கள் பிரச்சனைக்கு வரலாம். துப்பாக்கி படத்தில் ஏதோ ஒன்று இரண்டு சீன் வந்ததற்கு பல இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்கிறார்கள் என்று பலர் சொன்னார்கள். அடிக்கடி விவாதங்களில் வரும் கவிஞர் கூட இது கண்டிக்க வேண்டிய செயல் என்றார். விஜய்யும் அவர் அப்பாவும் பயத்தினால் மன்னிப்பு கேட்டார்கள்.

ஆனால் இந்த படத்தில் முழுவதும் இஸ்லாமியர்களை வைத்து எடுத்துள்ளார். அவர்கள் பழக்க வழக்கங்கள், துப்பாக்கியுடன் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதைப் போலக் காண்பித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இப்படித்தான் இருக்கும் என்பது போலக் காண்பித்துள்ளார். தற்கொலை தாக்குதலுக்கு முன் தொழுவது, காட்டுமிராண்டிகளைப் போலத் தப்பு செய்தவர்களை தூக்கில் போடுவது என்று பல காட்சிகள். மனிதர்களின் கழுத்தை அறுப்பது, பெண்கள் முகத்தை முழுவதும் மூட வேண்டும்... தங்கள் குழந்தைகளின் ஆசைகளை மதிக்காமல் அவர்களை தீவிரவாதிகளாக ஆக்குவது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.


இதனால் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று சொல்லுவது எல்லாம் பேத்தல். ஆப்கானிஸ்தானில்தான் இப்படி நடக்கிறது என்று கமல் தெளிவாகச் சொல்லிவிட்டார். இஸ்லாமியர்கள் இந்த நிஜத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இது தான் தீவிரவாதிகளின் உண்மையான முகம்.

பின்லேடன் வரும் காட்சிகள் சிரிப்பு வருகிறது. அட அவ்வளவு முட்டாளா அந்த ஆசாமி என்று!. தமிழர் ஒருவர் அங்கே இருக்கிறார் என்று நம் மனசு நம்ப மறுக்கிறது. வில்லன் மாதிரி வரும் ஒத்தைக் கண் ஆசாமி ஒரு வருஷம் தமிழ்நாட்டில் இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டார் என்று சொல்லுவது எல்லாம் நல்ல தமாஷ். ஆனால் அவர் இருந்த இடங்கள் மதுரை, கோவை, அகமதாபாத் - எல்லாம் இஸ்லாமியர்கள் குண்டு வைத்த இடம்.


FBI விசாரணையின் போது 'எங்க கடவுளுக்கு நாலு கை' என்று கமல் மனைவி பேச அதற்கு அந்த பெண் அதிகாரி 'அப்படி என்றால் எப்படி சிலுவையில் அறைவார்கள்' என்று கேட்க அதற்கு அப்படி எல்லாம் செய்ய வேண்டாம் அவரைத் தண்ணீரில் முழுகடித்துவிடலாம் என்ற பதில்... இந்தக் காட்சியை எடுக்கும் போது 95 கோடி செலவில் படம் எடுக்கிறோம் என்று அவர் நினைவில் இருந்ததா என்று தெரியவில்லை.


சொல்ல மறந்துவிட்டேன் ஆண்டரியா, நாசர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, மியூசிக் எல்லாம் நன்றாக இருக்கிறது. சொல்ல மறந்த இன்னொன்று. இது ஒரு த்ரில்லர் படம். ஆமென்.என்னுடைய மார்க் 6.5/10

(இட்லிவடை வேண்டும் என்றால் கூடவோ குறைத்தோ போட்டுக்கொள்ளலாம்)

நன்றி
இப்படிக்கு
ஒரு கமல் ரசிகன்
UK


விஜயின் அப்பா தன் மகன் அடுத்த படத்தில் இஸ்லாமியராக நடிப்பார் என்று வாக்கு கொடுத்தார். கமல் விஸ்வரூபம் பார்ட்-2வில் இஸ்லாமியாராக நடிக்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வேண்டும் !20 Comments:

E said...

இட்லி ! 'நொந்திரன்' படத்துக்கெல்லாம் 8.5 மார்க். இதுக்கு வெறும் 6.5 தானா ?? டூ மச் !

R. J. said...

//.. என்று கேட்க அதற்கு அப்படி எல்லாம் செய்ய வேண்டாம் அவரைத் தண்ணீரில் முழுகடித்துவிடலாம் என்ற பதில்... இந்தக் காட்சியை எடுக்கும் போது..// கமல் தன தசாவதாரத்தின் முதல் காட்சியை நினைவு கூறுகிறார். அதனால் இது புதிய விஷயமில்லை.

//கமல் விஸ்வரூபம் பார்ட்-2வில் இஸ்லாமியாராக நடிக்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வேண்டும் !// போதாது, இனி இஸ்லாமியர் கேரக்டர் என் படத்தில் வராது என்று வாக்குக் கொடுக்க வேண்டும். அப்பாவும் தங்களை ஒதுக்கி வைத்து அவமானப் படுத்திவிட்டார் என்று குரல் கிளம்பலாம்.

ஜட்ஜ் வெங்கட்ராமன் இந்த விமரிசனத்தைப் படித்துவிட்டு நாளை படம் பார்ப்பாரா!

-ஜெ .

ராமுடு said...

Totally agree

Anonymous said...

Nassam....

Sundar said...

//நான் கமல் ரசிகன். அதனால் கொஞ்சம் பயாஸ் இருக்கும்.//
இப்படி சொல்லிவிட்டு வெறும் 6.5 குடுத்து இருப்பது, மற்றும், படத்தில் உள்ள சிறப்புகளை குறைவாகவும், குறைகளை மிகுதியாகவும் கூறியதை பார்க்கும்பொழுது உங்கள் விமர்சனத்தை நம்ப முடியவில்லை. நான் இட்லி வடையில் இதுவரை வாசித்ததில் எனக்கு அதிருப்தி அளித்த முதல் பதிவு.

Sundar said...

//நான் கமல் ரசிகன். அதனால் கொஞ்சம் பயாஸ் இருக்கும்.//
இப்படி சொல்லிவிட்டு வெறும் 6.5 குடுத்து இருப்பது, மற்றும், படத்தில் உள்ள சிறப்புகளை குறைவாகவும், குறைகளை மிகுதியாகவும் கூறியதை பார்க்கும்பொழுது உங்கள் விமர்சனத்தை நம்ப முடியவில்லை. நான் இட்லி வடையில் இதுவரை வாசித்ததில் எனக்கு அதிருப்தி அளித்த முதல் பதிவு.

Anonymous said...

only movies like Thuppaki can cross beyond 8, movies like viswaroopam, mattran always underscores in idly vadai.

I can't say it "bias", I would say author doesn't understand the art of acting, conceptual story, etc.

Anonymous said...

தலிபான் காட்சிகளை இன்னமும் "Hollywood" ல் கூட இப்படி எடுக்கவில்லை,அருமை. "பிராமண மாமிகள் சோரம் போகிறார்கள் என்று சுஜாதா 1980 களில் தமிழ் சினிமா பற்றி எழுதியதை கமல் இன்னமும் மறக்காததை பார்த்தபோது "உன்கெல்லாம் இதுவும் தேவை ,இன்னமும் தேவை என்று தோன்றியது" , "எளியோரை வளியோர்.. "

வழக்கம் போல் நல்ல கதையை கெடுக்கும், கமலின் பல்துறை வித்தக நம்பிக்கை

கடைசியாக ஒரு திருக்குறள் " இடிப்பாரை இல்லா ஏமாறா மன்னன், தன்னை கெடுப்பார் இலனும் கெடும் " :)

Bala
Texas

Sridharan said...

Kamal has the knack of antogonising every section of the society...he wants to show himself as a 'rationalist' and also ridicules the 'brahmins' in every conceivable way..still the majority of his fans are from the same community...he should now realise the opposition to him is also from the angle that certain sections of the society still consider him as a brahmin not withstanding his asserions to the contrary. If 'J' comes to his rescue (even if it is fully justified) then immly our 'Kalaignar' would say it is due to the 'same blood' 'same inam' etc etc...Under the circumstances it is really commendable that people like Rajni Ajit and Bharatiraja have come out in support...Where is Sarat, Radha Ravi, Vijay (his father) , Sodalamuthu (Diamond Kavignar) etc ...Now is the time for Kamal to know his true enemies and his friends...

Anonymous said...

Wait for judgement day

வெங்கி said...

லெட்டர் பேடு இஸ்லாமிய கட்சிகளுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள இது ஒரு சிறந்த பிரச்சினை. மேலும் விஜயகாந்த் தன படங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளை பந்தாடிய போது மூடிக்கொண்டிருந்த இவர்கள்...இப்போது ஏன் ஜிம்புகிறார்கள் என்று தெரியவில்லை...மேலும் தலிபான்கள் முஸ்லிம் இல்லை என்று வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும்..இந்திய முஸ்லிம் தான் உலக முஸ்லிம் நாடுகளில் கேவலமாக நடத்த படுகிறார்கள் என்று ஒப்புக் கொள்ளட்டும்... 2 வாரத்துக்கு முன், இந்திய ஜவான்கள் பாகிஸ்தானிய முஸ்லிம் ஜவ்வன்களால் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட போது??

kg gouthaman said...

//இதுக்கு வெறும் 6.5 தானா ?? டூ மச் !//
6.5 டூ மச் என்கிறார். மார்க்கைக் குறையுங்கப்பா.

Anonymous said...

worstpostfromidlivadai

Anonymous said...

//அதற்கு பிறகு அவரை தொழுவதற்கு கை கட்டை அவிழ்த்த பிறகு கமல் போடும் அவிழ்த்த பிறகு கமல் போடும் சண்டை விவரிக்க ஒரே ஒரு வார்த்தை - பிரமாதம். //

this is copied from sherlock holmes. after anbe sivam all of his productions are utter failure.
dasavatharam was a partial disaster. viswaroopam is a complete disaster apart from creating problems among religions. my north indian friends are making fun of this idiot.best he can do is make his movies only in tamil and not in hindi. no one misses him or wants him in hindi. its high time for this grandpa to call it a day.

அது ஒரு கனாக் காலம் said...

yo dubbukku... Nalla vimarsanam !!!!!( i haven't yet seen it !!)

அது ஒரு கனாக் காலம் said...

yo dubbukku ..nalla vimarsanam. ( I haven't yet seen it )

அது ஒரு கனாக் காலம் said...

yo dubbukku nalla vimarsanam ( But I haven't yet seen it)

Aru said...

Finished watching the movie...When the story is about afgan vs america, what else to show other than guns & bombs...If people are disappointed with the movie concept, first let them be disappointed for what happens in Afgan and protest for it...Coming to the movie, it was engrossing and 6.5 will be a low score...I would rate 7.5 for a technically sound movie...

Shankari said...

?????


தொழுவதற்குக் கைக்கட்டை அவிழ்த்த பிறகு கமல் போடும் சண்டை விவரிக்க ஒரே ஒரு வார்த்தை - பிரமாதம். அதற்கு பிறகு அவரை தொழுவதற்கு கை கட்டை அவிழ்த்த பிறகு கமல் போடும் அவிழ்த்த பிறகு கமல் போடும் சண்டை விவரிக்க ஒரே ஒரு வார்த்தை - பிரமாதம். அதே ஷாட்டை கொஞ்சம் ஸ்லோ மோஷனில் திரும்ப காட்டும் போது நம்மை அறியாமல் கை தட்டுகிறோம்.

Anonymous said...

The reviewer try to show his methavithanm.. not Kamal