பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் - தப்பும் தீர்ப்பும்

கமலுக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் ஈடு செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. 30 கோடி என்று செய்திகள் சொல்லுகிறது. பணத்தைவிட பெரிய இழப்பு அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள டென்ஷன் தான்.

பாரதிராஜா, ரஜினி, அஜித் என்று பலர் குரல் கொடுத்தாலும், ஒட்டு மொத்த சினிமாக்காரர்கள் யாரும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. விஜய், சூர்யா, மற்ற இயக்குனர்கள் எல்லாம் வாய் மூடி மௌனமாக இருப்பதற்கு காரணம் நாளை அவர்கள் படங்கள் பிரச்சனை இல்லாமல் ஓட வேண்டும் என்ற கவலையும் பயமும் தான். கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற பிரச்சனைக்கு ஒரு மாநிலத்தையே எதிர்த்து ஒட்டுமொத்தமாக உண்ணாவிரதம் இருந்தவர்கள் இன்று சின்ன self made குழுக்களுக்கு பயந்துக்கொண்டு சும்மா இருப்பது வேதனை கலந்த வேடிக்கை. ரஜினி, கலைஞருடைய அறிக்கைகள் கூட ஜாக்கிரதையாக எழுதப்பட்டிருக்கிறது. பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று அறிவுரை. இதற்கு இவர்கள் பேசாமலே இருந்திருக்கலாம்.

சென்னை உயர்நீதி மன்றம் டைம் எடுத்துக்கொண்டு திங்கள் அன்று தீர்ப்பு வழங்கும் என்று சொன்னது. ஆனால் படத்தை பார்த்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்காதது பலருக்கு வியப்பாக இருந்தது. பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியுமா என்று பாருங்கள் என்று சின்ன அட்வைஸ் கொடுத்துள்ளார். நீதிமன்றம் சட்டம் என்ன சொல்லுகிறது என்று பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும் ஏன் அவ்வாறு வழங்க வில்லை என்பது கமலை பிடிக்காதவர்கள் கூட கேட்கும் கேள்வி. சின்ன குழுக்கள் செய்யும் இது போன்ற பிளாக் மெயில்களுக்கு நீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுக்க வேண்டும். அதையும் மீறி பொது மக்களுக்கு பாதிப்பு வரும் என்றால் அரசு மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் இந்த குழுக்களுக்கு இல்லை.

இரண்டு நாட்களுக்கு முன் பாரதிராஜாவையும் பார்த்து உன் குடுமபத்தை வைத்து விபச்சாரம் செய்கிறாயா ? என்றும் ஸ்ருதி ஹாசனை நோக்கி ’’நீ அப்பனுடன் படுக்க விரும்புகிறாயா?’’ என்று ஆபாசமாக பேசிய பி.ஜைனுலாபிதீன் தன் பேச்சை குரானின் வாசகங்களுடன் தன் பேச்சை ஆரம்பிக்கிறார். எல்லா இஸ்லாமிய சகோதர்களும் இதை கண்டிக்க வேண்டும். இதுவும் ஒரு வித தீவிரவாதமே. இது போன்ற செயல்களுக்கு அரசும், நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இன்று கமலுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பாக்கிறேன். வரவில்லை என்றால் கமல் தன் தரப்பு நியாயத்தை எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். 15 நாள் தடை, தீர்ப்பை தள்ளி போடுவது எல்லாம் Just buying time.

மும்பை தாக்குதலில் கசாப் மற்றும் பல தீவிரவாதிகளை நாம் 'லைவாக' பார்த்தோம். அதற்கு ஏற்பாடாத Law and Order பிரச்சனை எப்படி ஆப்கான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க வீரர்களுக்கு நடக்கும் சண்டையை காண்பிக்கும் போது ஏற்படும் ?

கமல் தப்பே செய்யவில்லை என்று சொல்ல மாட்டேன். நிறைய செய்யவில்லை என்றாலும் ஒன்றை செய்தார். அது படம் வருவதற்கு முன் அதை முஸ்லீம் தலைவர்களுக்கு போட்டு காண்பித்தது. இது ஒரு ஆபத்தான ப்recedent. இந்த பிரச்சனைக்கு அது தான் முக்கிய காரணம்

மற்றபடி இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் கொஞ்சம் ஈகோ நிறைய அரசியல்.

8 Comments:

நாகு said...

//பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று அறிவுரை. இதற்கு இவர்கள் பேசாமலே இருந்திருக்கலாம். //

//நீதிமன்றம் சட்டம் என்ன சொல்லுகிறது என்று பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும் ஏன் அவ்வாறு வழங்க வில்லை//

சரியாகச் சொன்னீர்கள்....

nagu
www.tngovernmentjobs.in

Anonymous said...

விஸ்வரூபம் படத்திற்கு தான் தமிழ்நாட்டில் புதிதாக தடைவிடித்துபோல அனைவரும் பேசுகிறார்கள், இதைற்கு முன் டாவின்சி கோடுட்கும், டம் 999 படத்திற்கும் தடை விடித்த போது அதை பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.

விஸ்வரூபம் படம் நன்றாக தான் இருக்கின்றது.

இஸ்லாமியர்கள் புண்படும் வகையில் படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை.

முல்லாஹ் ஓமர் தமிழ்நாட்டில்/இந்தியாவில் இருந்ததாக சொல்வதை தவிர்து இருக்கலாம்.

//இரண்டு நாட்களுக்கு முன் பாரதிராஜாவையும் பார்த்து உன் குடுமபத்தை வைத்து விபச்சாரம் செய்கிறாயா ? என்றும் ஸ்ருதி ஹாசனை நோக்கி ’’நீ அப்பனுடன் படுக்க விரும்புகிறாயா?’’ என்று ஆபாசமாக பேசிய பி.ஜைனுலாபிதீன் தன் பேச்சை குரானின் வாசகங்களுடன் தன் பேச்சை ஆரம்பிக்கிறார். எல்லா இஸ்லாமிய சகோதர்களும் இதை கண்டிக்க வேண்டும். இதுவும் ஒரு வித தீவிரவாதமே. இது போன்ற செயல்களுக்கு அரசும், நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.//மும்பை தாக்குதலில் கசாப் மற்றும் பல தீவிரவாதிகளை நாம் 'லைவாக' பார்த்தோம். அதற்கு ஏற்பாடாத Law and Order பிரச்சனை எப்படி ஆப்கான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க வீரர்களுக்கு நடக்கும் சண்டையை காண்பிக்கும் போது ஏற்படும் ? //

கமல் தப்பே செய்யவில்லை என்று சொல்ல மாட்டேன். நிறைய செய்யவில்லை என்றாலும் ஒன்றை செய்தார். அது படம் வருவதற்கு முன் அதை முஸ்லீம் தலைவர்களுக்கு போட்டு காண்பித்தது. இது ஒரு ஆபத்தான ப்recedent. இந்த பிரச்சனைக்கு அது தான் முக்கிய காரணம்

Good ones !

k.rahman said...

idly vadai, u also dont have the spine just like ur leader jayalalithaa. u have criticized rajni, karuna and all and sundry for supporting these muslim outfits. but carefully left out jaya. u r no different from the tamil actors. they are simply afraid of these outfits and you wont criticize jaya no matter what happens.
indha vaalkai vaalarathukku ...... thoo.

Anonymous said...

இது ஒரு ஆபத்தான ப்recedent
//////////////

mani ratnam started first by showing his film to bal thackerey

Muthu said...

"கமல் தப்பே செய்யவில்லை என்று சொல்ல மாட்டேன். நிறைய செய்யவில்லை என்றாலும் ஒன்றை செய்தார். அது படம் வருவதற்கு முன் அதை முஸ்லீம் தலைவர்களுக்கு போட்டு காண்பித்தது. இது ஒரு ஆபத்தான ப்recedent. இந்த பிரச்சனைக்கு அது தான் முக்கிய காரணம்"

அதே அதேதான் காரணம்.

ஒட்டுமொத்தமாக ஒரு மாநில நிர்வாகமே இதுபோன்ற அடிப்படைவாத தீவிரவாத வெறியர்களுக்கு பயந்து நடுங்கி அவர்களது காலணி துடைக்கவும் தயாராகுமா ? என்ன கேவலம் இது ?

'உன் அப்பனோடு படுக்க விரும்புகிறாயா' என்று ஒரு மகளை பார்த்தும், 'உன் குடும்பத்தை வைத்து விபசாரம் செய்வாயா' என்று நாடறிந்த ஒரு இயக்குனரை பார்த்தும், 'மிருகபுத்திரன்', 'இடுப்புக்கு கீழே செயல்பட முடியாதவன்' என்றெல்லாம் கற்பனைக்கும் எட்டாத கொடூரத்தோடு கவிஞர் மனுஷ்யபுத்திரனையும் விமர்சிக்கும் இது போன்ற சைக்கோ வெறியர்களை உள்ளே தள்ளாமல் அவர்களை கொம்பு சீவி விடும் தமிழக அரசின் செயல்தான் மிக மிக ஆபத்தானதும் பாசிச செயல்பாட்டின் உச்சமும் ஆகும்.

ஏதோ ஜெயா டி.விக்கு முதலில் தந்த சாட்டிலைட் டி.வி உரிமையை விஜய் டி.வி.க்கு மாற்றி கொடுத்துவிட்டதால் ஜெ-வுக்கு ஏற்பட்ட கோபத்தின் விளைவே தமிழக அரசின் தடை என்று சொல்கிறார்கள். இது உண்மையாயின் தனிப்பட்ட பிரச்சினையை மாநில சட்ட ஒழுங்கு மற்றும் கருத்து சுதந்தரத்திற்கெதிரான பிரச்சினையாக மாற்றிய தவறுக்காகவும் மாநில அரசு கண்டனத்துக்கு உள்ளாகவேண்டும்.