பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 03, 2013

அப்புசாமி சீதாப்பாட்டி கார்ட்டூன் ! - சுமதி


சென்ற வாரம் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது தோழி வீட்டுக்குச் சென்றிருந்தேன். நான் போயிருந்த நேரம், என் தோழியின் மகளுக்கு, ஏழெட்டு வயதிருக்கும், பாட்டி கதை சொல்லிக் கொண்டு இருந்தார். கதையில் மூர் மார்க்கெட் எல்லாம் வரவே, ஆச்சரியத்துடன் கவனித்தேன். பார்த்தால் அப்புசாமி கதை ஒன்றை மிக சுவாரசியாகவும் சந்தோஷமாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். குழந்தையும் "மால் ஃபார் ஓல்ட் புக்ஸ் !?, சீதாப்பாட்டி ரீட்ஸ் இங்கிலிஷ் புக்" என்றெல்லாம் கேள்வி கேட்டு இன்வால்வ் ஆகியிருந்தது.

பாட்டிக்கு ரொம்ப சந்தோஷமாகி, தான் வைத்திருந்த பழைய பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்து அதில் வந்த அப்புசாமி சீதாப்பாட்டி படங்களைக் காட்டி விவரித்து கொண்டிருந்தார். அதை பேத்தி தானும் கண் இமைக்காமல் கேட்டுக் கொண்டுருந்தாள்.

பிறகு நான் என் தோழியுடன் பேசி விட்டு, வீடு திரும்ப மின்சார ரயில் பிடித்து அமர்ந்து பயணிக்கும் போது 
குழந்தைகளுக்கு அனிமேடட் காரக்டர்கள் எவ்வளவோ இருக்கின்றன. டோரா, பென்டன், பால் ஹனுமான், சோட்டா பீம்,......அது போல் அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளை அனிமேஷனில் கொண்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுவும் ஓவியர் ஜெ. யின் கைவண்ணத்திலேயே.... என்று நினைத்துக்கொண்டேன்.

ஜாக்கி சான் மற்றும் ஆங்கிலப் படங்களுக்கும் மிருகங்களுக்கும் மிக அழகாய் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்கள் நம் அப்புசாமிக்கும் சீதாப்பாட்டிக்கும் பொருத்தமாய் குரல் கொடுக்க மாட்டார்களா என்ன..?

குழந்தைகள் இமை கொட்டாமல் கார்ட்டூன் சேனல்களை ரசிப்பதை கவனிக்கிறோம். எங்கள் உறவினர் குழந்தை இடையில் விளம்பரம் வந்தால், என் சேனல் எங்கே என்று அழவே ஆரம்பித்து விடுவாள். புத்தகங்கள் படிப்பது குறைந்து வருவதைக் கண்டு வருத்தப்படுகிறோம்.

ஹாரி பாட்டர், மிஸ்டர் பீன் பார்த்து ரசிக்கும் நமக்கு, நம்மூர் தாத்தா பாட்டியைப் பார்க்கக் கசக்குமா..?

.அதுவும் அப்புசாமி ப்யூட்டி பார்லருக்கு அவ்வை ஷண்முகியாய் சென்று மணப்பெண்ணுக்கு (கோர) அலங்காரம் செய்யும் கதை, வித்தைக்காரனிடம் அகப்பட்டுக் கொண்டு நடு ரோட்டில் அழுக்கு கம்பளிக்குள் பதில் சொல்லும் கதை போன்ற பல கதைகள் எல்லாம் பார்க்கவும் நன்றாக இருக்கும்.இளவரசி இடீலி சிரிக்கும் அழகு, அதனால் நேரும் விபரீதங்கள் எல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அல்லவா. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். அந்த சிரிப்புக்கு உத்தரவாதம் தருபவை அப்புசாமி கதைகள்.

இதை, அனிமேட் செய்தால், குழந்தைகளும் என்ஜாய் செய்யும். அப்புசாமி சீதாப்பாட்டியை அடுத்த தலைமுறைக்கு கடத்த இதை விட சிறந்த வழி உண்டா? புது வருடத்தில் யாரேனும் முனைவார்களா??

நடக்கும் என்ற எண்ணத்துடன் எனது ஸ்டேஷனில் இறங்கினேன்.

சுமதி

வெளிநாட்டு ஆசாமிகள் யாராவது செய்தால் அதற்கு நம்ம மக்கள் நல்லா டப்பிங் தருவார்கள்.

9 Comments:

இராஜராஜேஸ்வரி said...

அப்புசாமி சீதாப்பாட்டி கதைகளை அனிமேஷனில் கொண்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுவும் ஓவியர் ஜெ. யின் கைவண்ணத்திலேயே.... என்று நினைத்துக்கொண்டேன்.


நினைத்தாலே சிரிக்கும் ..!

ராஜப்பா said...

மிக அருமையான எண்ணம். யாராவது இதை பண்ணினால், நாம் பெற்ற மகிழ்ச்சியை நம் சந்ததியினரும் பெறுவார்கள். எதிர்பார்ப்போம்.

dr_senthil said...

Good Idea..

s suresh said...

நல்ல எண்ணம்! பூனைக்கு யாராவது மணி கட்டுவார்களா?

R. J. said...

A good thought to mull over by animators / producers. - R. J.

கார்த்தி said...

நல்ல முயற்சி..

நாயன்மார்கள், ஆழ்வார்களின் வரலாற்றை அனிமேஷன் வடிவில் இயக்க அடியேன் ஆர்வமாக இருக்கிறேன். தயாரிக்கதான் நிதி வசதியில்லை. :(:(..
karthik.karthee@gmail.com

R. J. said...

//நாயன்மார்கள், ஆழ்வார்களின் வரலாற்றை அனிமேஷன் வடிவில் இயக்க அடியேன் ஆர்வமாக இருக்கிறேன். தயாரிக்கதான் நிதி வசதியில்லை. :(:(..
karthik.karthee@gmail.com//

I suggest Mr. Karthik to approach TTD (Tirumala Tiruppathi Devasthaanam), TN CMO and Hindu Religious Administration / ministry and Cartoon channels whch exhibit such animated stories - preferably with a pilot episode. You will have to prove your competency and seriousness about your interest.

கார்த்தி said...

R.J,

தகவல்களுக்கு மிக்க நன்றி!! நிச்சயம் முயற்சி செய்கிறேன்..

kannan said...

http://www.tamiltorrents.net/forums/946664-post1.html

there are 2 parts, it is good..