பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 22, 2013

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



அஞ்சலி

14 Comments:

Gnanam Sekar said...

அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் .

Roaming Raman said...

பல இளைஞர்களின் வாழ்க்கைப் பாதையை நல்ல திசையில் திருப்பிய தியாக மனது கொண்டவர். ஒரு திரைப்படத்துக்கு ஹீரோ பெயராக இவர் பெயரையும், இவர் சொன்ன கருத்தையே தலைப்பாகவும் வைக்கப் படும் அளவுக்கு உயர்ந்த மனிதன்.

rest in peace.

kg gouthaman said...

'உன்னால் முடியும் தம்பி' என்று உணர்த்திய உன்னத மனிதர். அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன் .

Anonymous said...

may his soul rest in peace...he has given life to many depressed souls and instilled confidence and hope.

சிந்திப்பவன் said...

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக!



M.S. Udhayamurthy, founder of Makkal Sakthi Iyakkam, who had inspired the youth with his motivational essays since the 1980s, died of cardiac arrest at his residence here on Monday in Akkarai on East Coast Road near Injambakkam. He was 85 and is survived by two sons and a daughter.

Born in Vila Nagar in the present Nagapattinam district, he obtained a doctorate in chemical engineering from the United States. He later returned to India with the idea of making a difference in public life. In 1988, he started the Makkal Sakthi Iyakkam. Dr. Udhayamurthy authored 23 books, most of which spoke on personality development and self-confidence. He also authored books on business and spirituality. He undertook four ‘padayatras’ stressing the need for synchronising various rivers in the country, covering more than 2,000 km.

In 1996, members of Makkal Sakthi Iyakkam contested 11 constituencies in the Assembly elections in the State. Dr. Udhayamurthy contested from Madurai. However, none of its candidates won. Later on, he made the organisation a non-political movement. He was one of the earliest civil society activists to make a foray into public life with a view to attracting the middle class to electoral politics.

(நன்றி: ஹிந்து நாளிதழ்.)

பழனி. கந்தசாமி said...

வருந்துகிறேன்.

s suresh said...

உன்னால் முடியும் தம்பி! என்று தன்னம்பிக்கை பாதை காட்டியவர்! அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!

Visvanathan Duraiswamy said...

தன்னம்பிக்கை ஊட்டிய நல்ல உள்ளத்தின் ஆன்ம அமைதியாக உறங்க,மேலும் பல உதய மூர்த்திகள் உருவாக, ஆண்டவன் அருள் புரியட்டும்.

Visvanathan Duraiswamy said...

தன்னம்பிக்கை ஊட்டிய நல்ல உள்ளத்தின் ஆன்மா அமைதியாக உறங்கவும், மேலும் பல உதயமூர்த்திகள் உருவாகவும் ஆண்டவன் அருள் புரிவாராக!

R. J. said...

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

உன்னால் முடியும் என்று நம்பிக்கையை விளைவித்தார். அரசியல் சாக்கடை தேர்தலில் அவராலும் அது முடியவில்லை. ஏதாவது எதிர்பார்த்து அவரது புஸ்தகங்களை வாங்கும் மக்களுக்கு - அவை உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும் , அதை உங்கள் வெற்றிக்கு / பணக்காரர் ஆவதற்கு / கிடைப்பதில் சந்தோஷப் படுவதற்கு உபயோகப் படுத்திக் கொள்வது உங்கள் கையில் தான். புத்தகம் படித்தவுடன் magic எதிர்பார்க்காதீர்கள்.

-ஜெ .

Anonymous said...

அவரது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம். மக்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்க அவர் எடுத்த முயற்சிகள் பெரும் பாராட்டுக்கு உரியவை. அப்படிப்பட்ட ஒருவரை சட்டமன்றத்துக்கு அனுப்பாமல் தோற்கடித்த நம்மை எதால் அடிப்பது ?
அவருடைய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் அன்று யாரேனும் அன்பு கூர்ந்து சொல்ல முடியுமா? நன்றி
- கல்யாணராமன்

Mahendiran P said...

குறிப்பாக 1970களில் அவர் எழுதிய “எண்ணங்கள்” புத்தகம் இன்றுவரை சுமார் 5 லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ளது. நம் மனதில் உள்ள எண்ண ஓட்டங்களின்படியே நம் வாழ்வும் அமைகிறது என்ற அடிப்படைத் தத்துவத்தை அவருக்கே உரித்தான பாணியில் இந்நூலில் எழுதியிருப்பார். உங்களில் பலர் இப்புத்தகத்தைப் படித்திருப்பீர்கள். சென்னைப் பல்கலைக்கழகம் சில ஆண்டுகள் இப்புத்தகத்தை மாணவர்களுக்குப் பாடநூலாக வைத்திருந்தது.தன்னம்பிக்கை, தொழில்-முனைவு, ஆன்மீக சிந்தனைகள் என்ற மூன்று வேறுபட்ட தளங்களிலும் ஆழ்ந்த சிந்தனைகளை புத்தகங்களாக எழுதியிருப்பது அவரின் பன்முக ஈடுபாட்டை வெளிப்படுத்தும் அடையாளங்கள்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ”எண்ணங்களின் வலிமை” குறித்து அவர் பேசிய உரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கீழேயுள்ள முகவரியில் உதயமூர்த்தியின் உள்ளக்குரலையும்,உரத்த குரலையும் கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=kg0QJzYKFNI

கல்லூரிக் காலத்தில் இவரின் தன்னம்பிக்கை தரும், சமூகப் பார்வை குறித்த புதிய புரிதல்களைத் தரும் புத்தகங்கள் தந்த உள் எழுச்சியின் காரணமாக சாப்ட்வேர் துறைக்கு குட்பை சொல்லிவிட்டு 2005ல் சமூகப் பணித்தளத்திற்கு வந்தேன். இயற்கை என்னை,
என் வீட்டை அவரின் மக்கள் சக்தி இயக்கத்திற்கு அருகிலேயே இருக்குமாறு கொண்டு வந்து சேர்த்தது. 2005 முதல் 2009 வரை நான்காண்டுகள் உதயமூர்த்தி அவர்களுக்கு உதவியாளராக, காரோட்டியாக, மக்கள் சக்தி இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்ட தருணங்கள் வாழ்வில் என்றும் பசுமையான நினைவுகள்.

நல் மாணவராக, அறிவியலில் டாக்டர் பட்டம்பெற்று உயர்கல்வி கற்றவராக, தமிழகம்-அமெரிக்காவில் பேராசிரியராக, அமெரிக்காவில் தொழில் நிறுவனராக, எழுத்தாளராக, மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனராக வாழ்க்கை எனும் வட்டத்தை மிகச்சரியாக வாழ்ந்து இலட்சக்கணக்கானோரை தொழில் நிறுவனர்களாக, தன்னம்பிக்கையும் சமூக ஈடுபாடும் கொண்ட குடிமக்களாக உருவாக்கிய அவரின் உடல் நாளை சாம்பலாகப் போகிறது. சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை எழுவதுபோல், அவரின் எழுத்துகள், பேச்சுகள், இயக்கம் உருவாக்கிய வீரிய வித்துக்கள் அவர் விட்டுச்சென்ற சமூக முன்னேற்றம் என்ற தொடரோட்டத்தைத்(Relay-Race) தொடர்வார்கள்

செந்தில் ஆறுமுகம்

வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் .. said...

திரு.உதயமூர்த்தி அவர்கள் ஒரு முறை எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார்.அன்று அவர் பேசிய பேச்சு எங்களில் பலரை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அது வரை அரைத்த மாவையே கேட்டுக்கொண்டிருந்த நாங்கள், ஒரு புதிய பார்வையை உணர்ந்தோம்.
அவரது கருத்துகள் நாட்டிற்கு மிகவும் வேண்டியன.அன்னார் இழப்பு நமக்கு ஒரு பேரிழப்பு.

nandu said...

DR.MSU ஐயா அவரின் சிந்தனைகளோட மகத்துவத்த வார்த்தைகள்ல வர்ணிச்சுட முடியாது . நன்றியோடு மானசீகமாக மனதிலிறுத்தி வணங்குகிறேன்