பல வருட காலமாக காயிதே மில்லத் கல்லூரியிலும், கடந்த சில வருடங்கள் அதை விடப் பெரிய வளாகமான ஸெயிண்ட் ஜான் பள்ளியிலும் நடந்த புத்தகக் கண்காட்சி, இந்த வருடம் இன்னும் பெரிய இடமான நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு இடம் மாறியிருக்கிறது.
உள்ளே செல்ல பல நுழைவு வாயில்கள். ஒவ்வொரு வாயில் அருகிலும் டிக்கெட் கவுண்டர் என்று நல்ல வசதி. பார்க்கிங்குக்கும் நிறைய இடம். பார்க்கிங் ஏரியா தாண்டி தூரத்தில் அடுத்த கட்டடம் . அங்கே மான்களைப் பார்த்தோம். வரிசையாக எங்கோ போய்க் கொண்டிருந்தன.
எல்லா வரிசைக்கும் ரசனையாக எழுத்தாளர்கள் பெயர் வைத்திருந்தார்கள். இவர்களின் எல்லாப் புத்தகமும் படித்து அவர்கள் காட்டிய பாதையில் நடக்கிறேனோ இல்லையோ, புத்தகக் கண்காட்சியில் பல பிரபலங்களின் பாதையில் நடந்து விட்டேன். முதலில் கவிஞர் ஷெல்லி பாதையில் சென்றேன் . அதனாலோ என்னவோ முதலில் கவிஞர் திரு மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம் தென்பட்டது. அவர் தன் முன்னால் இருந்த கேமராவுக்கு சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றியும் உயிர்மையின் பங்கு பற்றியும் விவரமாக சொல்லிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு தொலைக்காட்சியில் வருவதற்கு சற்று முன்னதாகவும் லைவ்வாகவும் அந்தத் அழகான உரையைக் கேட்ட திருப்தியுடன் என் புத்தக வேட்டையைத் தொடங்கினேன்.
பல பதிப்பகங்கள் ப்ளாஸ்டிக் கவருக்குப் பதிலாக துணிப்பையில் வாங்கும் புத்தகங்களைப் போட்டுத் தருகிறார்கள். அதுவும் விகடனில் வஞ்சனையில்லாமல் பெரிய பை ( நிறைய புடவை வாங்கினால் கடையில் கொடுப்பார்களே, அது மாதிரி ) கொடுத்ததால் வாங்கின எல்லா புத்தகங்களையும் அதிலேயே போட்டுக் கொண்டு சுற்ற முடிந்தது.
இட்லிவடை வாசகியாக இருந்து கொண்டு இ.வ பரிந்துரை செய்த புத்தகம் வாங்க வேண்டாமா !! ஜாலியா தமிழ் இலக்கணம் மற்றும் நகர் வலம் வாங்கினேன்.
Zee டிவி அவர்கள் லோகோ போட்ட பலூன்களை குழந்தைகளுக்குக் கொடுக்க, ஸ்டால் அருகிலேயே சில வாண்டுகள் அதைப் பிரித்து மேல் பகுதியை மட்டும் பந்தாகத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தது படு சுவாரசியம்.
புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பும் போதே, வாங்க வேண்டிய புத்தக மற்றும் கண்டிப்பாக போக வேண்டிய ஸ்டால் லிஸ்ட் எடுத்துக்கொண்டு போவது வழக்கம். அப்போதுமே சில புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று திண்டாடி விடுவேன். இது சம்பந்தமாக புத்தகக் கண்காட்சி பொறுப்பாளர்களிடம் சில வேண்டுகோள் / எதிர்பார்ப்புகள் உள்ளன.
1 .நாம் கேட்கும் புத்தகங்கள் எந்த பதிப்பகம் வெளியீடு / எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்ற விவரம் சொல்ல , எழுதியவர் பெயர் மட்டும் தான் தெரியும் என்று சொன்னால், அவர் எழுதிய அனைத்து புத்தகங்களும் அவை எந்தெந்த பதிப்பகம் என்ற விவரம் கொடுக்க ,
ஒரு மே ஐ ஹெல்ப் யூ கவுண்டர் மாதிரி இருந்தா ல் உதவியாக இருக்கும்.
எல்லா பதிப்பகங்களும் கேட்டலாக் வைத்திருக்கிறார்கள். அவற்றை மொத்தமாக கம்ப்யூட்டரில் ஒரு கன்ஸாலிடேடட் ஃ பார்மில் வைத்துக் கொண்டு உதவினால் எவ்வளவு நன்றாக இருக்கும். நமக்கு வேண்டிய புத்தகம் ஏதோ ஒரு ஸ்டாலில் நமக்காகக் காத்திருக்க, நாம் அதைத் தேடி விட்டுக் கிடைக்கவில்லை என்று விட்டு விட, ப்ச், நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.
2. இந்த வருடம் புதிதாக வந்த அனைத்துப் புத்தகங்கள், ( மொத்தமாக வருடம் முழுவதும் தின , வார, மாத இதழ்களில் என்று எதில் புது புத்தகம் பற்றிய விவரம் வந்திருந்தாலும் அவற்றின் தொகுப்பு). நாம் அவ்வப்போது படிக்கிற பத்திரிக்கையில் ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருப்பார்கள். எழுதி வைத்துக் கொள்ள மறந்திருப்போம். வாங்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது கண்டிப்பாக விவரம் மறந்து விடும். புத்தகக் கண்காட்சியில் புதுப் புத்தகங்கள் அனைத்துக்கும் ஒரு லிஸ்ட் வைத்துக்கொண்டிருந்தால் நன்றாக இருக்கும்.
ஒரு புத்தகம் அதன் சரியான வாசகரைச் சென்றடையத் தானே எவ்வளவோ பொருட்செலவில் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள். இவற்றையும் மனதில் வைத்து செயல்படுத்தினால் நலம்.
வழக்கம் போல் வெளியே வருவதற்கு முன்பு டிக்கெட்டில் பெயர், முகவரியை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு குலுக்கல் பெட்டியில் சேர்த்து விட்டு வந்தேன். பார்க்கலாம், இந்த தடவையாவது அதிர்ஷ்டம் அடிக்கிறதா என்று.
ஆனால், வேறு ஒரு அதிர்ஷ்டம் அடித்தது. NHM ஸ்டாலில் NHM ரீடரைப் பற்றித் தெரிந்து கொண்டு வீட்டுக்கு வந்தபின் இன்ஸ்டால் செய்தோம். அதில் திரு சாவியின் "வாஷிங்டனில் திருமணம்" மற்றும் சில புத்தகங்கள் இலவசமாக படிக்கக் கிடைக்கிறது. மேலும் அவர்கள் ஸ்டாலில் ஆழம் பிரதி வேறு இலவசமாகக் கொடுத்தார்கள். சும்மா சொல்லக் கூடாது, நல்ல வழவழன்னு தாள்கள், இப்பவே படி என்று தூண்டுகிறது.
விடுமுறை நாள் என்பதால் வீட்டிலிருந்து மதியமே கிளம்பி விட்டேன். அப்படி கிளம்பியது எவ்வளவு நல்லதாகப் போனது என்று திரும்பி வரும் போது எல்லா கவுண்டரிகளிலும் நீண்ட க்யூக்களைப் பார்த்ததும் தோன்றியது.
இதில் எனக்கு விகடனிலும் கிழக்கிலும் கிடைத்த உதவி பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
திரு மெரினாவின் நாடகங்கள் படித்திருக்கிறேன். அவரது வாழ்க்கை பற்றி மிக சுவாரசியமான புத்தகம் எப்போதோ படித்திருந்தேன். தலைப்பும் நினைவில்லை. விகடனில் கேட்கவே தயக்கம். அவ்வளவு கூட்டம் . மெதுவாக ஒர் இளைஞரிடம் விசாரித்தேன். அல்லையென்ஸில் கேளுங்கள் என்றார். எனக்கு என்னவோ விகடன் பிரசுரம் என்று நினைவு என்று இழுத்தேன். நான் மற்ற புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த நேரத்தில் எங்கிருந்தோ திரும்ப வந்து அந்தப் புத்தகத்தை என் கையில் திணித்து விட்டார்.
அதே போல் கிழக்கு பிரசுரம் அல்லாத ஒரு புத்தகம் அங்கு கிடைக்கும் என்று கேள்விப்பட்டு (அங்கும் கூட்டம்தான்) கேட்க, பொறுமையாக உள் வரிசையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். இருவருக்கும் இ.வ மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். :-)
வீடு திரும்பும்போது சரியான கால் வலி ஆனால், கை நிறைய புத்தகம், மனசு முழுக்க சந்தோஷமாய் வந்து சேர்ந்தேன்.
திரும்பி வரும் போது எல்லோருக்கும் ஜண்டு பாம் கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும் ? கால்/கை வலி - புத்தகம் படித்த பின் தலை வலி அனைத்தையும் நொடியில் போக்கிவிடும் !

நன்றி: தினமணி

13 Comments:
இ.வ. சிபாரிசு செய்ததில் 2 பத்தகங்கள் மற்றும் ஆ.வி. ஸ்டாலில் ஓசிப் பை - வேறு என்னென்ன(ஏதாவது) புத்தகம் வாங்கியிருந்தால் அவற்றையும் இங்கு எழுதி இனி கண்காட்சிக்குப் போகப் போகிறவர்களுக்கு உதவியிருக்கலாமே! மத்தியானமே போய்விட்டு, கேண்டீன் பக்கம் போகாமல் வந்துவிட்டீர்களா, என்ன! - ஜெ .
உங்களுக்கு இந்தக் கண்காட்சியில தமிழ் பாண்ட் கிடைத்த மாதிரி “ஜெ”-க்கு சமீபத்தில தமிழ் பாண்ட் கிடைத்துவிட்டது.
ஜெ... புது வீடு ....புது காரு.....புது எழுத்துரு... கலக்கறே!
celebrating pongal using idly vadai in masthead seems different
Super.. arumai. There is no better feeling than a brand new book in our hands and the promise it provides.

நானும் மெரினாவின் வாழ்க்கையைப் பற்றிய தொடரைப் படித்திருக்கிறேன். ஜாலியாக போகும் தொடர் கடைசியில் அவரது தந்தை (அண்ணா என்றே அழைப்பார்கள்) உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிடுவதை விவரித்திப்பார்...சரி, என்ன தலைப்பு இந்த புத்தகத்திற்கு? அதைச் சொல்லவே இல்லையே?!
சிவா கிருஷ்ணமூர்த்தி

ஃபேஸ் புக் ஸ்டால் எங்க இருக்கு?
-கொடும்பாவி
@ Essex Siva - I think that book is called "Chinna Vayathinile". I ve read it too.
இம்முறை டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். நுழைவுச் சீட்டின் இணைப்பில் பெயர் முகவரி எழுதி பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு உண்டாம். //வழக்கம் போல் வெளியே வருவதற்கு முன்பு டிக்கெட்டில் பெயர், முகவரியை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு குலுக்கல் பெட்டியில் சேர்த்து விட்டு வந்தேன். பார்க்கலாம், இந்த தடவையாவது அதிர்ஷ்டம் அடிக்கிறதா என்று.//
சென்றமுறை இதே மாதிரி எழுதிப் போட்டிருந்தேன். பல மாதங்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் புத்தகக் கண் காட்சியில் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது. மனைவியுடன் வந்து பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். மனைவியுடன் வந்தால் மட்டுமே அனுமதியாம்.அது ஒரு விதமான ஏமாற்று வேலை என்று தெரிந்து விட்டது. அதனால் போகவில்லை.
//வழக்கம் போல் வெளியே வருவதற்கு முன்பு டிக்கெட்டில் பெயர், முகவரியை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு குலுக்கல் பெட்டியில் சேர்த்து விட்டு வந்தேன். பார்க்கலாம், இந்த தடவையாவது அதிர்ஷ்டம் அடிக்கிறதா என்று.//
from another blog----
இம்முறை டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். நுழைவுச் சீட்டின் இணைப்பில் பெயர் முகவரி எழுதி பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு உண்டாம். சென்றமுறை இதே மாதிரி எழுதிப் போட்டிருந்தேன். பல மாதங்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் புத்தகக் கண் காட்சியில் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது. மனைவியுடன் வந்து பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். மனைவியுடன் வந்தால் மட்டுமே அனுமதியாம்.அது ஒரு விதமான ஏமாற்று வேலை என்று தெரிந்து விட்டது. அதனால் போகவில்லை.
நிறைய ஸ்டால்கள் இருந்ததால் கண்காட்சி கண்ணைக் கட்டும் காட்சியாகி விட்டது. பல்வேறு அரங்கங்களில் கிழக்கு பதிப்பகம் மற்றும் விகடன் பிரசுரம் புத்தகங்களை காண முடிந்தது.
நான் சனி , ஞாயிறு இரண்டு நாட்களும் வந்தேன். இரண்டு சனி, ஞாயிறுகள் இருப்பதுமாதிரி தேதிகளை அமைத்திருக்கலாம். மற்றும் சென்னை புத்தகக் கண்காட்சியை வருடத்திற்கு இரண்டாக அமைத்து ஒன்று தென் சென்னையிலும் (YMCA / அடையார்) மற்றொன்று வடசென்னையிலுமென (St.George /அண்ணாநகர் ) அமைத்தால் இன்னும் நிறைய மக்களை கூட்ட நெரிசலின்றி வரவழைக்க முடியும்.
அ. சரவணன்
நல்ல விமர்சனம்..
நன்றி
www.padugai.com
Post a Comment