பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 02, 2013

பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை !


கடந்த ஒரு வாரமாக எல்லா பாலியல் குற்றங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அதை எல்லாம் மீடியா தோண்டி எடுத்து பிரசுரம் செய்து வருகிறது. வீதிக்கு வீதி இந்தியாவில் இது நடக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள்.

ஜெயலலிதா கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்குவதுடன் அவர்களுக்கு ரசாயான முறையில் ஆண்மை நீக்கம் ( காயடிப்பு ) செய்யப்பட வேண்டும் என்றும் நேற்று அறிக்கை விட்டுள்ளார்.

துக்ளக் கேள்வி பதிலில் சோ இந்த குற்றத்தை பற்றிய கருத்து கூறியுள்ளார்.


கே: டெல்லியில் பேருந்து ஒன்றில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் கண்டனத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறித்து...?

ப: இந்த நிகழ்ச்சி, மனிதர்கள் சில சமயங்களில் எவ்வளவு காட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள் என்பதைக் காட்டுகிற ஒரு அராஜக நிகழ்ச்சி. பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமை மிகவும் கண்டனத்திற்குரியது. பலர் கூறுகிற மாதிரி இதற்கெல்லாம் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை.

ஆனால், இந்த நிகழ்ச்சியைப் பற்றி டெலிவிஷன் சேனல்களிலும், பத்திரிகைகளிலும் வரும் செய்திகளைப் பார்த்தால், இந்தியாவில் இது மிகவும் வழக்கமாக நடக்கிற நிகழ்ச்சி போலவும், உலகில் வேறு எங்கும் இல்லாத கொடூரம் இங்கே அனுதினமும் நடப்பது போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு பிரபல பத்திரிகையில் ‘தங்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கவனித்துக் கொண்டு செல்கிற பெண்களை, கூட்டமாகச் சேர்ந்து கற்பழிப்பது என்பதை இந்திய இளைஞர்கள் ஏன் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்பது ஒரு விசாரணைக்குரியது’ - என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த மாதிரி மிருகத்தனமாக நடந்து கொள்வது இந்திய இளைஞர்களின் வழக்கம் என்பதுபோல் ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகை எழுதுகிறது என்றால், நாம் எவ்வளவு தூரம் நிதானம் தவறுகிறோம் என்பதுதான் நிரூபணமாகிறது. உலகில் சுமார் 130 நாடுகளை எடுத்துக் கொண்டால், அதில் நடக்கிற கற்பழிப்புப் பற்றிய விவரங்களைப் பார்க்கிறபோது, இந்தியாவை விடக் குறைவான அளவில் கற்பழிப்பு நடக்கிற நாடுகள் 12 தான். அதாவது 130 நாடுகளில் சுமார் 118 நாடுகளில் நம்மை விட அதிகமான அளவில் கற்பழிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ்,ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமது நாட்டில் நடந்து வரும் கற்பழிப்புச் சம்பவங்கள் மிக மிகக் குறைவு (சுமார் பதினைந்தில் ஒரு பங்கு).

இதனால் கற்பழிப்பு நியாயம் என்றோ, அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றோ நான் சொல்வதாக அர்த்தமாகி விடக் கூடாது. நடக்கிற குற்றத்தை ஒரேயடியாக மிகைப்படுத்தி, அது ஏதோ நம் நாட்டின் இன்றைய கலாசாரம் என்பது போல் சித்தரிப்பது, நமக்கு நாமே செய்து கொள்கிற அநீதி.

சில எண்ணங்கள்

சோ சொல்லுவது போல மற்ற நாடுகளை காட்டிலும் பாலியல் குற்றங்கள் நம் நாட்டில் குறைவாக இருக்கலாம். அதற்கு காரணம் அவை ஒழுங்காக பதிவு செய்யப்படுவதில்லை, அல்லது போலீஸ், மற்றும் ஊர் பெரியவ்ர்கள் அதை மூடி மறைக்கிறார்கள். பாதிக்கப்படுபவர் போலீஸுக்கு போவதில்லை என்று பல காரணங்களை இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஜெயலலிதாவின் அறிக்கையை பலர் பாராட்டியுள்ளார்கள். ஆனால் கடந்த ஒரு வாரமாக வந்த செய்திகளை பார்த்தால் அதில் குற்றம் புரிந்தவர்கள் 80% பேர் இந்த குற்றத்தில் ஈடுப்படும் போது குடிபோதையில் இருந்திருக்கிறார்கள். மரண தண்டனை, ஆண்மை நீக்கம் செய்யும் முன் பூரண மதுவிலக்கு என்று சொல்லியிருந்தால் இன்னும் பாராட்டலாம். அப்படி இல்லை என்றால் அரசே இந்த குற்றத்துக்கு துணை போகிறது என்று தான் அர்த்தம்.

11 Comments:

kothandapani said...

மதுவிலக்கு என்ற மாயைக்கு நீங்களும் இறை ஆகிவிடீர்களா ... மதுவிலக்கு இருந்த காலத்தை ஒரு சந்ததியே பார்த்து இருக்காது. எங்கும் எப்போதும் கள்ள சாராயம் .. எப்படி, போலீஸ் இருந்தாலும் கொலை கொள்ளையை தடுக்க முடியாதோ அப்படிதான் கள்ளச்சரயமும். தங்கள் ஜாதிகாரர்கள் குல தொழிலாக செய்து வளமாக வாழ முடியவில்லையே என்று இன்று மதுவிலக்குக்காக ஊர் ஊரக போராட்டம் செய்யும் அரசியல் தலைகளும் உண்டு ,மதுதான் கற்பழிப்புக்கு கரணம் என்றால் குஜராத்தில் கற்பழிப்பு நடைபெறுவதே இல்லையா. உண்மையான காரணத்தை ஆராய வேண்டும் , காப்பு அடிப்பது ஒரு நல்ல யோசனை.தூக்கு என்றால் மனித நேயர்கள் கொதித்து எழுவார்கள். புனித என்ற மாணவி கற்பழிப்பில் ஈடு பட்டவன் ஏற்கனேவே எது போன்ற வழிக்கில் ஜாமீன் பெற்று வந்துள்ளவன் . கற்பழிப்பு வழக்குகள் 6 மாததுற்க்குள் முடிக்கவேண்டும் அது வரை ஜாமீன் இல்லை போன்ற சட்ட திருத்தங்கள் தேவை.டெல்லி மாணவியின் வழக்கில் ஈடுபட்ட கயவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களை பயப்பட வைக்க வேண்டும் .வழக்கம் போல மீடியாக்கள் ஒரு 10 நாளுக்கு ஊதி பெரிதாக்கிவிட்டு அடுத்த மேட்டருக்கு தாவாமல் இருப்பார்களா பார்போம்.

R. J. said...

//இந்தியாவில் இது மிகவும் வழக்கமாக நடக்கிற நிகழ்ச்சி போலவும்..// என்னைப் பொருத்தவரை இது இந்தியாவில் வழக்கமாக நடைபெறும் அக்கிரமம் தான். அதனாலேயே ஊடகங்கள் இந்த குற்றங்களை பெரியதாகப் போடாமல் 7-ம், 8-ம் பக்கத்தில் ஒரு காலத்தில் சிறிய செய்தியாகப் போடுவார்கள். எப்போதாவது தலைப்பு செய்தி, இப்போது டெல்லி கேஸ் மாதிரி. இந்த 4 நாளாக மட்டும் எத்தனை எத்தனை கற்பழிப்பு நியூஸ். நிச்சயம் இது விழிக்க வேண்டிய நேரம் தான். ஆனாலும் இந்த டிவி மீடியாக்கள் இந்த செய்தியை 15 நாட்களுக்கு பர பரப்பாக்கி டெல்லி மக்களும் குளிரை பெரிது படுத்தாது பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தது அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் கற்பழித்தது போல் கொடுமை. knee jerk decisions எடுத்து மத்திய அரசும் மாநில அரசுகளும் மற்ற பிரச்சனைகளை மறக்கடிக்க முயல்கின்றனர். இருக்கும் சட்டங்களை இது வரை போலீசும் கோர்ட்டுகளும் சரியாகப் பயன் படுத்தவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இந்த டெல்லி கேசில் இன்று 1000 பக்க சார்ஜ் ஷீட் தாக்கல் செய்யப் போகிறார்கள். This beats me . ஏன் இவ்வளவு பக்கங்கள்? இதை குற்றவாளிகள், வக்கீல்கள், ஜட்ஜ் எல்லோரும் படித்து விவாதங்கள் முடிந்து என்று தீர்ப்பு வரும்? குற்றவாளிகளுக்கும் வக்கீல்கள் உண்டு. இந்த சார்ஜ் ஷீட்டை ஹிந்தியில் வேண்டும், மொழி பெயர்ப்பு சரியில்லை என்று இழுத்தடிக்க சசிகலா போன்றவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதன் இடையில் ஜட்ஜ் பயந்து recuse செய்யலாம், அடுத்த ஜட்ஜ் மீண்டும் அடியைப் பிடிடா பாரத பட்டா என்று முதலிலிருந்து ஆரம்பிக்கலாம், அந்த ஜட்ஜும் ரிடையர் ஆகலாம், குற்றவாளிகள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகலாம், இன்னும் என்னென்னவோ நடக்கலாம். இவை எல்லாம் சரி செய்யப் பட்டால் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை சிக்கிரம் தரப்பட்டால், பாதிக்கப் பட்டவர் ஆத்மா சாந்தி அடையும்; அவர் சுற்றங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும்.

இப்போது மத்திய அரசு கொண்டு வரப்போகும் fast courts ஏன் கற்பழிப்புக் கேஸ்களுக்கு மட்டும் என்று புரியவில்லை! ஊழல், ஏமாற்றல், கொலை, கொள்ளை என்று மற்ற குற்றங்கள் எல்லாம் தண்டிக்கப் பட 20, 30 வருஷங்கள் ஆனால் பரவாயில்லையா? எல்லாம் நாற்றமடிக்கும் அரசியல்.

-R . J .

Kadavul said...

I read Cho's comment in thuglak .. Wat he says makes sense ..! He is absolutely correct.

It has become a fad these days in telling that our culture is not good !

dr_senthil said...

அரசியல்வாதிகள் நாட்டை கற்பழிப்பு செய்துவருகின்றனர் அவர்களுக்கு யார் காயடிப்பது?

நாகு said...

இத்தகைய குற்றம் புரிதலுக்கு தூண்டுகோலாக பல்வேறு காரணிகள் இருக்கின்ற, குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்லக்கூடாது, வேண்டுமானால் இவற்றில் ஏதாவது ஒரு காரணி சற்று கூடுதல் பெற்று இருக்கக் கூடும் (உதாரணம் போதை). ஆட்சியாளர்கள் சற்று ​கெடுபிடி காட்டினாலே காவல்துறையினர் சரியாக வேலை செய்வார்கள். அந்த ஒருதுறையினர் ஒழுங்காக, நியாயமாக, நேர்மையாக, சரியான நேரத்தில் வேலையினை செய்து ​முடித்தல் போன்ற செயல்பாடுகளை செய்ய ஆரம்பித்தாலே தவறு செய்பவர்கள் பயப்படுவார்கள். ​சீர்செய்ய வேண்டியது முதலில் காவல் துறையைத்தான்.

​www.tngovernmentjobs.in

Anonymous said...

/// அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ்,ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமது நாட்டில் நடந்து வரும் கற்பழிப்புச் சம்பவங்கள் மிக மிகக் குறைவு (சுமார் பதினைந்தில் ஒரு பங்கு). ///

இதற்கு ஆதாரம்?

சரவணன்

R. J. said...

I found a way to send comments in Tamil after lot of efforts and thanks to a well-wisher. For those interested, when you want to comment, open a new tab and go to You can type in English with Tamil phonetics. If you type 'idli vadai' you will see 'இட்லி வடை '. You can also see some 6 options to choose from. After completing your comments, copy and paste in the comment box of the blog site. It is simple.

Another request, please do not type all letters in Capital, it is difficult to read.

-R. J.

Anonymous said...

இங்கு அமெரிக்காவில் என்னுடன் பணிபுரியும் அமெரிக்கர்கள் இந்த நிகழ்வினால் அன்னிய முதலீடு ம்ற்றும் சுற்றுலா வருமானமும் இந்தியாவுக்கு குறைய வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் இழந்த நற்பெயரை காப்பாற்றிக்கொள்ளலாம்

Anonymous said...

//இங்கு அமெரிக்காவில் என்னுடன் பணிபுரியும் அமெரிக்கர்கள் இந்த நிகழ்வினால் அன்னிய முதலீடு ம்ற்றும் சுற்றுலா வருமானமும் இந்தியாவுக்கு குறைய வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் இழந்த நற்பெயரை காப்பாற்றிக்கொள்ளலாம்//

என்னது போண்டா மணி அமெரிக்காவில வேலை செய்கிறாரா ?

AshIQ said...

முதலில் பாலியல் ரீதியான மற்றும் நாகரீகம் சார்ந்த விஷயங்களில் மேலை நாடுகளுடன் ஓப்பிடுவதே தவறு.
இந்த விஷய்ங்களில் மேலை நாடு அல்ல நமக்கு அளவுகோல்.
அங்கே விரும்பியவர்களிடமெல்லாம் செக்ஸ் வைத்து கொள்ளுதல் என்பது மிகவும் சகஜமான விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது...அதே விஷயம் இங்கேயும் வந்துவிட்டால், அந்த நாடுகளை விட இங்கே அது குறைவாகத்தான் இருக்கிறது என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம் என சொல்கிறாரா சோ என்பவர்.
முதலில் இந்த அவலங்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டிய அவசியம் என்ன வந்ததுன்றேன். பாலியல் குற்றங்களில் என்ன போட்டியா நடந்து கொண்டு இருக்கிறது??
அதாவது...சோ வுடைய பிரச்சனை என்னவென்றால்....
எல்லாரும் சொன்னதை நாமும் சொல்லாமல் கொஞ்சம் எதாவது வித்தியாசமாக உளறிவச்சாதான் நம்மீது ஒரு கவணம் வரும் என்று நோக்கில் சொன்னதுதான் அது. அந்த வகையில் அவர் எதிர்பார்த்தது நடந்தும் விட்டது. இதையேதான் கமல்ஹாசனும் சொன்னார்.
கற்பழிக்கிறவன் என் தம்பி, கற்பிழந்தவள் என் தங்கச்சி, அவங்களை தூக்குல போடகூடாது அப்படி இப்படினு..(அட..ச்சீ.. நாசமா போறவங்களா?)
நட்புடன்
நான்

Anonymous said...

I can't believe people like 'SO' are saying this in public...They are worring that rape cases are being given too much importance in news rather than worrying that it is actually happening..What else we women have to go through to get your attention on this matter. These people talk only rape is sexual assault. Women are outraged because we feel like enough is enough. Women are being humiliated, teased and molested every where. For God's sake please don't say something and bring down the intensity of this protest. Put your own daughter, sister and grand daughter in that position and think before blurt out some stuff like this.. and please please please educate your sons how to treat women with respect...