....இந்த வாரம்... இரண்டு ஆவேசங்கள்.
செய்தி # 1
இந்த படத்தில் இருப்பவரின் மகள்....புதுச்சேரியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ப்ளஸ் டு படிக்கும் மாணவி. கடந்த புத்தாண்டு அன்று ஒரு மாதா கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில், ஒரு தனியார் பேருந்து மூலம் அந்த பேருந்தின் ஒட்டுனர் உட்பட மூன்று நபர்களால் மயக்கமருந்து தரப்பட்டு,கடத்தப்பட்டு,.கற்ப்பழிக்கப்பட்டு, பின் டெல்லி போல விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இற்க்கிவிடப்பட்டுவிட்டார்.
இந்த தனியார் பேருந்தின் ஒட்டுனர் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவரையும் கைது செய்து இருக்கிறார்கள் புதுவைப் போலிசார்.
டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி போல இல்லாமல், பாண்டிச்சேரி மா நிலம் தாண்டி இந்த விவகாரம் ஏனோ (அ) ஏன் பெரிதாக பேசப்படவில்லை. தமிழ்ப்பெண்தானே என்று நினைத்து விட்டார்கள் போலும்.
"டெல்லியில் ஒரு மாணவி கற்ப்பழிக்கப்பட்டதற்க்கு ஒட்டுமொத்த வடமாநிலங்களும், அரசியல்வாதிகளும் இப்படி கொந்தளிக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான தமிழ்பெண்கள் இலங்கையில் கற்ப்பழிக்கபட்டபோது இவர்கள் எங்கே போனார்கள்" என்ற ரீதியில் நாம் தமிழர் சீமான் பேசி இருப்பது அர்த்தம் உள்ளதாகவே இருக்கிறது.
இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு காரணம், பெண்கள் அணியும் உடை என்றும், வெளியில் வரும் பெண்கள் "பர்தா" போன்று உடை அணிய வேண்டும் என்று மதுரை ஆதினம் கருத்து கூற, அதற்க்கு பெண்கள் அமைப்புகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
"டெல்லி கேங் ரேப்.... 'குற்றவாளிகளை கொடுரமாக கொல்ல வேண்டும். தூக்கில் வேண்டும்." என்று நாட்டின் எதோ மூலையில் இருந்து அரசியலே அறியாமல் கூப்பாடு போடுபவர்கள்தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்கு காரணம். கார்ப்பரேட் சூழல் அதர்மம்,பணம் என மாறிவிட்டதால் பெண்களை போகப் பொருளாகவும், ஆபாசத்தை அள்ளித் தெளிக்கும் விற்பனை சரக்காகவும் மட்டுமே பார்க்கிறார்கள். இன்று சினிமாவில், சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பெண்களை காம உணர்வுகளை தூண்டும் பட்சியாக பார்க்கிறார்கள்" - என்று கூறி இருக்கிறார் சமூக சேவகர் மேதா பட்கர்.
பெண்கள் நாகரிகம் என்று தனது அழகை முன்னிறுத்தும் ஆடைகளை அணிந்து, இது போன்ற குற்றங்கள் நடக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.
“டெல்லி மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்போதும் ஏற்றுகொள்வதோ அல்லது மன்னிப்பதோ கூடாது”
-இப்படி சொன்னவர் வேறு யாரும் இல்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை,கற்ப்பழிப்பு கொலைகளை,கொடுரங்களை எல்லாம்
“விளையாட்டாக” எடுத்துக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூன்.
செய்தி # 2
"தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல" என்று முன்பு கருணாநிதி கூறியதை திரும்பவும் மாறி,மாறி கூற ஆரம்பித்து விட்டார்கள் அவரது இரண்டு வாரிசுகளும்.
"வாழ்நாள் முழுவதும் தமிழ் சமுதாய மேன்மைக்காக நான் பாடுபடுவேன். எனக்கு பின் மு.க.ஸ்டாலின் பாடுபடுவார்" என்று கருணா அறிவிக்க, "கட்சி ஒன்றும் சங்கர மடமல்ல. இதையே கருணாநிதியும் கூறி இருக்கிறார். ஸ்டாலினும் கூறி இருக்கிறார்" என்று ஆவேசமாக பதில் அளித்து இருக்கிறார் மு.க.அழகிரி.
காவேரி உடன்பாட்டில் துரொகம். கச்சத் தீவை தாரை வார்த்தது. முதல்வர் பதவியில் தானே இருக்க, ஒரு மகன் துணை முதல்வர், இன்னொரு மகனும், பேரனும் மத்திய அமைச்சர்கள், மகள் ராஜ்யசபா உறுப்பினர். இவ்வளவு இருந்தும் இலங்கையில் ஒட்டுமொத்த தமிழினமும் அழியும் போது உட்கார்ந்த இடத்தில் இருந்து கடிதம் எழுதியது..
இது போல அவர் தமிழ் சமுதாய மேன்மைக்காக மேலும் மேலும் பாடுபடவேண்டும் என நாம் வாழ்த்துவோம்.
இவர்கள் கட்சி ஒன்றும் மடம் இல்லை என்பதன் அர்த்தம் என்ன?
அதாவது, கட்சியில் உள்ள செயற்க்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம், ஜன நாயக முறைப்படி ஒட்டளித்து, தங்களின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்பதே.
எப்படி தேர்வு செய்தாலும், திமுகவில் அடுத்த தலைவர் ஒன்று கருணாநிதியின் மூத்த மகன் அல்லது இளைய மகன் இருவரில் ஒருவர்தான் இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தை தவிர, கட்சியில் எத்தனை வருடங்களாக உழைத்து இருந்தாலும் வேறு ஒருவருக்கு இந்த பதவி கிடைக்கும் என்பது சாத்தியமே இல்லை.
அப்புறம் எதற்கு, கட்சி ஒன்றும் மடமல்ல என்று திரும்ப, திரும்ப கூறுகிறார்கள்?
சங்கர மடத்தில் வாரிசாக, குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களாவது வேத பாட சாலையில் படித்து இருக்க வேண்டியது அவசியம். மதுரை ஆதினத்தின் நித்தி நியமனத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கில், மதுரை ஆதினமாக சைவ சிந்தாத்தில் புலமை பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படை தகுதியே நித்திக்கு இல்லை என்பது புலப்பட்டது.
ஆனால், திமுகவில் அடுத்த தலைவராக, ஒரே ஓரு தகுதிதான் தேவை. அது உங்களுக்கே தெரியும்.
இந்த ஆவேசப் பேச்சுக்கள் எல்லாம் படிக்கும் போது ஏதோ குடும்ப சண்டையை பற்றிய நியூஸ் படிப்பது போலவே இருக்கிறது. அண்ணன் எதற்கு ஆவேசப்பட வேண்டும் ?
(நன்றி, இனி,அடுத்தவாரம்)
-இன்பா
செய்தி # 1
இந்த படத்தில் இருப்பவரின் மகள்....புதுச்சேரியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் ப்ளஸ் டு படிக்கும் மாணவி. கடந்த புத்தாண்டு அன்று ஒரு மாதா கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில், ஒரு தனியார் பேருந்து மூலம் அந்த பேருந்தின் ஒட்டுனர் உட்பட மூன்று நபர்களால் மயக்கமருந்து தரப்பட்டு,கடத்தப்பட்டு,.கற்ப்பழிக்கப்பட்டு, பின் டெல்லி போல விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இற்க்கிவிடப்பட்டுவிட்டார்.இந்த தனியார் பேருந்தின் ஒட்டுனர் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவரையும் கைது செய்து இருக்கிறார்கள் புதுவைப் போலிசார்.
டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி போல இல்லாமல், பாண்டிச்சேரி மா நிலம் தாண்டி இந்த விவகாரம் ஏனோ (அ) ஏன் பெரிதாக பேசப்படவில்லை. தமிழ்ப்பெண்தானே என்று நினைத்து விட்டார்கள் போலும்.
"டெல்லியில் ஒரு மாணவி கற்ப்பழிக்கப்பட்டதற்க்கு ஒட்டுமொத்த வடமாநிலங்களும், அரசியல்வாதிகளும் இப்படி கொந்தளிக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான தமிழ்பெண்கள் இலங்கையில் கற்ப்பழிக்கபட்டபோது இவர்கள் எங்கே போனார்கள்" என்ற ரீதியில் நாம் தமிழர் சீமான் பேசி இருப்பது அர்த்தம் உள்ளதாகவே இருக்கிறது.
இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு காரணம், பெண்கள் அணியும் உடை என்றும், வெளியில் வரும் பெண்கள் "பர்தா" போன்று உடை அணிய வேண்டும் என்று மதுரை ஆதினம் கருத்து கூற, அதற்க்கு பெண்கள் அமைப்புகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
"டெல்லி கேங் ரேப்.... 'குற்றவாளிகளை கொடுரமாக கொல்ல வேண்டும். தூக்கில் வேண்டும்." என்று நாட்டின் எதோ மூலையில் இருந்து அரசியலே அறியாமல் கூப்பாடு போடுபவர்கள்தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்கு காரணம். கார்ப்பரேட் சூழல் அதர்மம்,பணம் என மாறிவிட்டதால் பெண்களை போகப் பொருளாகவும், ஆபாசத்தை அள்ளித் தெளிக்கும் விற்பனை சரக்காகவும் மட்டுமே பார்க்கிறார்கள். இன்று சினிமாவில், சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பெண்களை காம உணர்வுகளை தூண்டும் பட்சியாக பார்க்கிறார்கள்" - என்று கூறி இருக்கிறார் சமூக சேவகர் மேதா பட்கர்.
பெண்கள் நாகரிகம் என்று தனது அழகை முன்னிறுத்தும் ஆடைகளை அணிந்து, இது போன்ற குற்றங்கள் நடக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.
“டெல்லி மாணவி மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்போதும் ஏற்றுகொள்வதோ அல்லது மன்னிப்பதோ கூடாது”
-இப்படி சொன்னவர் வேறு யாரும் இல்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை,கற்ப்பழிப்பு கொலைகளை,கொடுரங்களை எல்லாம்
“விளையாட்டாக” எடுத்துக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூன்.
செய்தி # 2
"தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல" என்று முன்பு கருணாநிதி கூறியதை திரும்பவும் மாறி,மாறி கூற ஆரம்பித்து விட்டார்கள் அவரது இரண்டு வாரிசுகளும்.
"வாழ்நாள் முழுவதும் தமிழ் சமுதாய மேன்மைக்காக நான் பாடுபடுவேன். எனக்கு பின் மு.க.ஸ்டாலின் பாடுபடுவார்" என்று கருணா அறிவிக்க, "கட்சி ஒன்றும் சங்கர மடமல்ல. இதையே கருணாநிதியும் கூறி இருக்கிறார். ஸ்டாலினும் கூறி இருக்கிறார்" என்று ஆவேசமாக பதில் அளித்து இருக்கிறார் மு.க.அழகிரி.
காவேரி உடன்பாட்டில் துரொகம். கச்சத் தீவை தாரை வார்த்தது. முதல்வர் பதவியில் தானே இருக்க, ஒரு மகன் துணை முதல்வர், இன்னொரு மகனும், பேரனும் மத்திய அமைச்சர்கள், மகள் ராஜ்யசபா உறுப்பினர். இவ்வளவு இருந்தும் இலங்கையில் ஒட்டுமொத்த தமிழினமும் அழியும் போது உட்கார்ந்த இடத்தில் இருந்து கடிதம் எழுதியது..
இது போல அவர் தமிழ் சமுதாய மேன்மைக்காக மேலும் மேலும் பாடுபடவேண்டும் என நாம் வாழ்த்துவோம்.
இவர்கள் கட்சி ஒன்றும் மடம் இல்லை என்பதன் அர்த்தம் என்ன?
அதாவது, கட்சியில் உள்ள செயற்க்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம், ஜன நாயக முறைப்படி ஒட்டளித்து, தங்களின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்பதே.
எப்படி தேர்வு செய்தாலும், திமுகவில் அடுத்த தலைவர் ஒன்று கருணாநிதியின் மூத்த மகன் அல்லது இளைய மகன் இருவரில் ஒருவர்தான் இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தை தவிர, கட்சியில் எத்தனை வருடங்களாக உழைத்து இருந்தாலும் வேறு ஒருவருக்கு இந்த பதவி கிடைக்கும் என்பது சாத்தியமே இல்லை.
அப்புறம் எதற்கு, கட்சி ஒன்றும் மடமல்ல என்று திரும்ப, திரும்ப கூறுகிறார்கள்?
சங்கர மடத்தில் வாரிசாக, குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களாவது வேத பாட சாலையில் படித்து இருக்க வேண்டியது அவசியம். மதுரை ஆதினத்தின் நித்தி நியமனத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கில், மதுரை ஆதினமாக சைவ சிந்தாத்தில் புலமை பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படை தகுதியே நித்திக்கு இல்லை என்பது புலப்பட்டது.
ஆனால், திமுகவில் அடுத்த தலைவராக, ஒரே ஓரு தகுதிதான் தேவை. அது உங்களுக்கே தெரியும்.
இந்த ஆவேசப் பேச்சுக்கள் எல்லாம் படிக்கும் போது ஏதோ குடும்ப சண்டையை பற்றிய நியூஸ் படிப்பது போலவே இருக்கிறது. அண்ணன் எதற்கு ஆவேசப்பட வேண்டும் ?
(நன்றி, இனி,அடுத்தவாரம்)
-இன்பா

நன்றி: தினமணி

15 Comments:
# 1- என்று எல்லா தமிழ் பத்திரிகையிலும் தமிழக மீனவர் கொல்லப்படும்போது "இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர் கொலை" என்று தலைப்பு வருகிறதோ அன்று தான் ஒட்டுமொத்த கவனம் நம் பக்கம் திரும்பும்.. தினமலரும் தினத்தந்தியும் இதை ஏன் முயற்சி செய்யவில்லை ? அரசியல் ?தமிழ்நாடு இந்தியாவினுள் தான் இருக்கிறது என்பதை நாமும் மதிய அரசும் உணரவேண்டுமானால் இனி தமிழக மீனவர் என்ற சொல்லாடல் களைந்து இந்திய மீனவர் என்ற பரந்த சொல் உருவாகவேண்டும்
# 2- தி மு க, மடம் அல்ல அது ஒரு கார்ப்பரைட் கொள்ளை நிறுவனம்.. இதில் ஏதும் மாற்று கருத்து அவர்களுக்குள்ளேயே இருக்க முடியாது.. யார் தலைமை ஏற்றால் அதிகம் கொள்ளை அடிக்க முடியும் என்ற ஒரே கொள்கையை வைத்தே யார் தலைவர் என தீர்மானிக்கப்படும்...தம்பி தந்தையின் அருகில் இருப்பதால் சூதுவாது தெரியும், அண்ணன் தள்ளி இருப்பதால் எடுப்பார் கைபிள்ளை ஆகும் வாய்ப்பு அதிகம்..
செய்தி # 1
பெண்கள் நாகரிகம் என்று தனது அழகை முன்னிறுத்தும் ஆடைகளை அணிந்து,........ இது போன்ற கருத்துக்கள் பிரச்சினையை திசை திருப்பவைகள் . +2 படிக்கும் மாணவி அப்படி என்ன அழகை கட்டும் ஆடை அணிந்து சென்று இருப்பார். ஈழ பெண்களுக்காக கர்ஜிக்கும் தமிழர்கள் பாண்டி பெண்ணுக்காக
மௌனியாக இருப்பது வருந்த தக்கதே.சட்டங்களை கடுமையாக ஆக்கா விட்டால் இது தொடர்க தையாகதான் இருக்கும். இப்போதோ கல்லா கட்ட நீதிமான்கள் தயராக இருப்பார்கள்.
செய்தி # 2
திமுகாவில் மட்டும்தான் வாரிசு அரசியலா . அதிமுகாவில் ஜெயா என்ன அரசியல் விழுபுண் கள் பெற்றா தலைமை ஏற்றார் .அவரால்தான் அதிமுக இன்று வரை இருகின்றது என்பது வேறு விஷயம். கம்யூனிஸ்ட் பிஜேபி தவிர அணைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல்தான். இது ஏதோ திமுகவில் மட்டும் நடப்பது போல் காட்டி இருப்பது கண்டிக்க தக்கது.
எதிர்காலத்தில் திமுகவுக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். ஆனால் சங்கர மடத்துக்கு ஒரு தலித் வர முடியுமா? சும்மா சாமி கும்பிடுவதற்க்கு மட்டுமாவது
இன்று கலைஞர் ஸ்டாலின் வந்தால் என்ன தப்பு என்றும் வாய்ப்புக் கிடைத்த்தால் ( ! ) ஸ்டாலின் பெயரை முன் மொழிவேன் என்றும் சொல்லி அழகிரிக்கு ஆப்பு அடித்து விட்டார்.
பெண்கள் உடை அணிவது பற்றி : சாதாரணமாக டீசென்ட் ஆக அணியும் போதே அக்கிரமம் நடக்கிறது. எதற்கு வீணாக உடம்பை எடுத்துக் காட்டி தன் வசத்தில் இல்லாத ஆணின் மிருக இச்சையை தூண்ட வேண்டும் என்பது தான் பெரும்பாலோரின் கேள்வி.
-ஜெ .
பகுத்தறிவு பங்களா (அறிவாலயம்) உள்ளார, வெங்கலக் கடையில யானை புகுந்தது போல ஒரே சத்தமாம்...
மருதையில விடற சவுண்டு இங்கே சென்னையில பலமா கேக்குதாம்...
தலீவர்ர்ர்ர்ர்ர் ரெம்ப கலக்கமாக கீறாருபா....
"பெண்கள் நாகரிகம் என்று தனது அழகை முன்னிறுத்தும் ஆடைகளை அணிந்து, இது போன்ற குற்றங்கள் நடக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து."
ஒவ்வொருமுறையும் பெண்களூக்கு எதிராக அரங்கேற்றப்படும் அநீதிகளுக்கெல்லாம் பெண்களையே காறனம் காட்டி அவர்களாஇ என்னும் அதிகமான குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவதையே வழக்கமாக கொண்டிருப்போரின் வக்கரபுத்திக்கு
எதிராயும் ஒரு சட்டம் இயற்றப்ப்டவேண்டு.
ஐயா, தலீத்ன்னு இல்லே அய்யர் பிரிவைத் தவிர மத்த பார்பனர்களே வர முடியாது என்பதே உண்மை.
"பெண்கள் நாகரிகம் என்று தனது அழகை முன்னிறுத்தும் ஆடைகளை அணிந்து" இது உண்மைகள் தானா? என்பதை இட்லிவடையார் யோசிக்க வேண்டும். அப்படியே இது உண்மை என்று வாதிடுவதாக இருந்தால் மூன்று வயது குழந்தை எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதையும் கொஞ்சம் அறிவுறுத்துங்கள். எத்தனையோ ஆண்கள் மனநலம் குன்றியவர்கள் என சிலர் ஆடை இல்லாமல் நடை பாதையில் படுத்திருப்பதை பார்க்கிறோம் ஆனால் எந்த பெண்ணும் அப்படி அவர் இருந்ததால் எனக்கு புத்தி கெட்டு போனது என்று சொல்வது இல்லை. இது போன்ற செயல்களுக்கு காரணம் அந்த மனித உருவில் அலையும் மிருகங்கள் என்று தயவு செய்து ஒத்து கொள்ளுங்கள்.
- ஆனந்தி செல்வா

இலங்கையில் நடந்த இன அழிவு கண்டிப்பாக வருந்தத்தக்கது. ஆனால் அதை எப்படி உள் நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு எதிராக ஒப்பிட முடியும்?
இரண்டுக்கும் முக்கியமான வேறுபாடு இலங்கையில் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்தவர்கள் இந்தியப்பிரஜைகள் அல்லர். இந்தியாவின் எந்தச் சட்டத்தினாலும் தண்டிக்க இயலாது.
ஆனால் டெல்லி மற்றும் பாண்டி சம்பவங்கள் இந்தியச் சட்டத்திற்குட்பட்டவர்கள்.
இரண்டாவது இலங்கையில் இரு வேறு இனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. (நடந்தது உள்நாட்டுப் போர் என்றாலும் அது போர் முனை.) ஆனால் முழு அமைதி நிலவும் ஒரு இடத்தில் முழு அமைதிக் காலத்தில் நடப்பது மக்களைச் சீற்றம் கொள்ள வைப்பதில் என்ன தவறு?
டெல்லி பாண்டி சம்பவங்களுக்குள்ளும் வேறுபாடு இல்லாமல் இல்லை. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின் குரூரம் மட்டுமின்றி அதிகார மையத்தின் மூக்கருகில் நடந்ததால் நாட்டின் மொத்த பாதுகாப்பு அமைப்புகளின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்குகிறது என்பதால் கூடுதல் கொந்தளிப்பு. அதற்கு ஊடகங்களின் ஆதரவும் முனைப்பும் கூடுதல் காரணங்கள்.
மற்ற படி டெல்லியோ பாண்டியோ இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களோ இலங்கையோ அமெரிக்காவோ ஆப்பிரிக்காவோ எங்கு நடப்பினும் பெண்ணுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் தலைகுனிவு. நாகரிகம் என்பது உடைகளிலும் வெளித்தோற்றத்திலும் மட்டும் தான் நிலவுகிறது என்று பொருள்.
பெண்ணின் உடை தான் காரணம் என்றால் ஐந்து வயது நிரம்பாத குழந்தைகள் வன்முறைக்குள்ளாவது ஏன்? (ஆனால் பாதுகாப்பு இல்லை என்று தற்போது நிரூபணமாகி விட்டதால் பெண்கள் இரவில் தனியே வெளியில் செல்வதை இயன்ற வரை குறைத்துக் கொள்வதே நல்லது என்பது எனது கருத்து. பணிச் சூழல் காரணமாக செல்ல வேண்டி இருந்தால் மட்டும் செல்லலாம். அப்போது அந்தப் பெண்ணின் அலுவலகம் பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். இதுவே பாலியல் தொல்லைகளுக்குத் தற்காலிகத் தீர்வு. பெண் ஆணின் உடைமையாக அன்றி, ஆணின் இனமானம், வீரம், புண்ணாக்கு இத்யாதிகளின் இலக்காக இன்றி என்றைக்கு சக உயிரினமாக மதிக்கப்படுவாளோ அன்று தான் பெண் குலத்தின் தீராத துயருக்கு நிரந்தரத் தீர்வு உண்டாகும்.
"பெண்கள் நாகரிகம் என்று தனது அழகை முன்னிறுத்தும் ஆடைகளை அணிந்து, இது போன்ற குற்றங்கள் நடக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து."
Dear Idlyvadai, I didn't expect this from you. Not in the least. This is like telling people who didn't wear bulletproof vests were the main reason for them getting killed during the attack. How can this be any of girl's fault? I am sorry, I regularly read your blog but I can't agree with this.
~Suren
Can anyone apart from a telugu speaking community or mudaliar community become the real leader of DMK or DK???Can A Raja ever aspire to become the chief of DMK(the real power- not dummy post like MMS)Before worrying about Sankara Madam, start worrying about DK and DMK madam and the Madams(ammanigal) inside.
@@Jaishankar Jagannathan and Anonymous, எந்த மடத்திலும் மடத்தை உருவாக்கியவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியர்கள் அல்லது அவர்கள் சமூகத்தைச சேர்ந்தவர்கள் மட்டுமே தலைமைப் பதவியை பெற முடியும். மதுரை ஆதீனமாகட்டும் அல்லது தர்மபுரம் ஆதீனமாகட்டும், இந்த ஒரு விதிமுறைதான். இதில் சங்கர மடத்தை மற்றும் குறை கூறுவது வேடிக்கையாக இருக்கிறது !! சங்கர மடம் & தலித் என்று வாய் கிழியப் பேசுபவர்கள் மற்ற மடங்கள் மற்றும் ஆதீனங்கள் & தலித் பற்றி மூச்சு விடக் கூட மறுப்பது ஏன் ?
- கல்யாணராமன் சு.
"பெண்கள் நாகரிகம் என்று தனது அழகை முன்னிறுத்தும் ஆடைகளை அணிந்து" Shame on you, I.V.
Did not expect that 'பெண்கள் நாகரிகம் என்று தனது அழகை முன்னிறுத்தும் ஆடைகளை அணிந்து" comment from you. Shame on you, I.V.
Post a Comment