பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 15, 2013

துக்ளக் 43ஆம் ஆண்டு விழா ஆடியோ


அன்பான வாசகர்களுக்கு,
Coveritlive.com மூலம் துக்ளக் ஆண்டு விழாவை நேரடி அப்டேட் செய்ய முடிவு செய்தேன். ஆனால் ஓசியில் சில பிரச்சனைகள் இருப்பது பிறகு தான் தெரிந்தது. 100 பேர் வந்த பிறகு பணம் கட்ட சொல்லிவிட்டது. அதனால் பலருக்கு நான் போட்ட அப்டேட் தெரியவில்லை என்று தெரிகிறது. அரங்கில் இருந்துக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த முறை ஏனோ அவ்வளவு சுவாரஸியமாக இல்லை. துக்ளகில் பணிபுரிபவர்களை அறிமுகம் செய்தது ஏதோ செய்ய வேண்டுமே என்று செய்தது போல இருந்தது. ஆரம்பத்தில் சோ அவர்கள் ஸ்வெட்டர், குல்லா எல்லாம் போட்டுக்கொண்டு வந்தது கலகலப்பாக இருந்தது!

இந்த முறை பெரிசாக ஒன்றும் இல்லை. துக்ளக் ஏன் நமது எம்.ஜி.ஆர் போல செயல்படுகிறது என்ற கேள்விக்கு சோ தன்னுடைய விளக்கத்தை தந்தார். நிச்சயம் திமுக தமிழ்நாட்டில் தலையெடுக்க கூடாது என்று அழுத்தமாக சொன்னார்.

கலைஞர்/அழகிரி திமுக சங்கர மடம் இல்லை என்று சொன்னது சரி தான். மன்மோகன், சிதம்பரம் பற்றி நிறைய ஜோக். FDI, மாயவதி, சோனியாவின் மருமகன், மீடியாவின் தாக்கம்... என்று பல விஷயங்களை தொட்டார்.

என் பக்கம் இருந்தவர் என் வழி தனி வழி அது உருப்படாத வழி என்று ரஜினியை டார்கெட் செய்து கத்திக்கொண்டு இருந்தார். சோ கொஞ்சம் டென்ஷனாகி பேசுவதாக இருந்தால் இங்கே வந்து பேசவும். இது 'அந்த' மாதிரி மீட்டிங் இல்லை என்றார் கடுப்பாகி.

சுமார் ஒரு மணி நேர ஆடியோ கீழே கொடுத்திருக்கிறேன். கடைசி 30 நிமிடம் சரியாக வரவில்லை. அதை இன்னும் இரண்டு நாளில் ஏற்பாடு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். இந்த ஆடியோவிலேயே சில பகுதிகள் நடுவில் விடுபட்டு ஒரு continuity இல்லாமல் இருக்கும். மன்னித்துவிடுங்கள்.

அன்புடன்,
இட்லிவடை


டவுன்லோட் செய்ய இங்கே


13 Comments:

Roaming Raman said...

மிகப் பெரிய சுவாரஸ்யம் இல்லை என்பது நிஜம்தான் என்றாலும்,வழக்கமான சூட்டுக்கு குறைவு இல்லை!! ஆரம்பத்திலேயே ஞாபகமறதி குறித்து, மதலை அடித்த கமென்ட் பற்றி பேசினார்.. நிஜமாகவே மறதிதான் போல இருக்கு!! நிகழ்ச்சி முடிவில் எப்போதும், "எனக்கு உங்களை மாதிரி வாசகர்கள் கிடைத்திருப்பது அதிருஷ்டம்.என்னால் உங்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் உங்களுக்கு கடைசி வரை நேர்மையாக இருப்பேன்" என்று முடிப்பது வழக்கம். நேற்று மறந்து விட்டார் போல!!

Anonymous said...

Thanks a lot IV. I always attend thuglak function every year. Iam not in india this year. But im happy that you.have posted the audio. I'm eagerly waiting for next part....thanks again.

dondu(#11168674346665545885) said...

சோ மற்றும் வாசகர்கள் தவிர வேறு யாராவது பேசினார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ConverZ stupidity said...

JAI JAWAN. Vande Mataram to our soldiers and martyrs. Let's pay our salutes and respects to our brave hearts on this Army Day (Jan 15).
Bring back our brothers head brave hearts. JAI HIND

கூத்தூர் ஸ்ரீராம் said...

ஆடியோ தொகுப்பிற்கு மிக்க நன்றி. மத்திய அரசும், தமிழக காங்கிரஸ் அமைச்சர்களும் திமுக-வின் நிர்பந்தத்தினால், நாடாளுமன்ற தேர்தல் வரை , தமிழகத்தை இருளில் தொடர்ந்து மூழ்கடிக்கும் வஞ்சக செயலை, பாமரரும் உணரும் வண்ணம் தக்க ஆதாரங்களுடன் எடுத்து கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சிந்திப்பவன் said...

உங்கள் முயற்சிக்கும்,பதிவிற்கும் நன்றி.நீங்கள் இவ்வளவு சிரமபட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.பேசாமல் போன வருஷமோ அல்லது அதற்கு முந்தய வருஷத்து ஆடியோ பைலை போட்டு விட்டிருக்கலாம்.சோ கடந்த பல ஆண்டுகளாக பேசியதையே தான் பேசி வருகிறார்.இன்று நாட்டில் என்ன பிரச்சினை என்பது அனைவர்க்கும் தெரியும் அதற்கு தீர்வு என்ன என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.மேலும் சோ ,ஜெயாவை மிகவும் புகழ்வார்.அது வியப்பையும் வேதனையும் தரும் விஷயம்.
In short Cho has become quite old and obsolete.

Silicon Sillu said...

சரியான சொம்புகூட்டமா இருக்கும் போல இருக்கே. பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் சும்மா வந்துநின்னாலே, எதும் பண்ணாம இருந்தாலும் ஒரு கூட்டம் சிரிக்கிறது தமிழ் காமெடி ரசனை அந்தளவு தரங்கெட்டு போய்விட்டது. சோவின் நடுநிலைகூட அப்படித்தான் ஆகிவிட்டது.

அப்ப, முதல்வராக்குங்கள் மூன்றேமாதத்தில் மின்சாரம். இப்ப, பிரதமராக்குங்கள் பாய்ந்துவரும் பவர்.அடுத்தென்ன அமெரிக்க அதிபரா?!? இந்த 1வருஷத்தில் மின்பிரச்சனைக்கு என்ன கிழிக்கப்பட்டது என்றகேள்விக்கு ச்சொட்டைச்சோவிடம் பதிலில்லை. ஆனா வக்கணையா ஜால்ராமட்டும் அடி!

தனியார் மின்சார சட்டத்தை கொண்டுவந்து எண்டோர்ஸ் பண்ணி விட்டது இரண்டு ஆட்சிகளின் தவறுமே
மத்திய அரசு தரவில்லை, திமுகவும் தரவிடாமல் பார்த்துக்கொள்கிறது,
கூடங்குளத்தை கூட பிரச்சனையாக வைத்துக்கொள்ள மத்திய அரசும் திமுகவும் காரணம்
இத்தனை நாளில் மக்கள் மின் தேவை கன்னாபின்னாவென எகிறிவிட்டது
Transmission&Distribution Losses, மின் திருட்டு இதெல்லாம் தடுக்க முடியவில்லை
புதிய மின் திட்டங்களுக்கும் போதிய நிதி இல்லை
காற்றாலை மின்சாரம் எப்போதும் நம்பி இருக்கும்படி இல்லை


இதுபோக இன்னும் பல பிரச்சனைகள் உள்ளது. இவற்றை எல்லாம் மானில அரசு ஒரே நாளில் தீர்த்துவிட முடியாதுதான். அரசின் கஷ்டங்களை ஏற்றுக்கொள்கிறோம். மின் கட்டணம் கூட சரி ஒழியட்டும். ஆனால் மாற்றுமின்சாரம் ஊக்குவிக்க இந்த அரசு என்ன பிடுங்கியது?!? குஜராத்தை பார்த்து கற்றுகொள்ள எதுவுமே இல்லையா?!?

மக்களாகவே சில முயற்சிகளை முன்னெடுத்து வெற்றி கண்டிருக்கிறார்கள்

200குழந்தைகள் கணினி லேப் கொண்ட பள்ளி முழுக்க சூரிய மின்சாரத்தில்! -> http://thangamtrust.blogspot.in/2012/11/blog-post.html

சூரியசக்தி + காற்றாலை + பயோ கேஸ்!
முதலீடு ஒரே தடவை... லாபமோ, ஆண்டுக் கணக்கில்! -> http://thangamtrust.blogspot.in/2012/11/blog-post.html

இதுபோன்ற முயற்சிகள் மக்களே மேர்கொள்ளும்போது, இதை அரசு மானியத்தில் செய்யலாம் அல்லது இதுபோன்ற திட்டங்களை ஊக்குவிக்கலாம்! இவை எல்லாம் பயன்பாடு அதிகமானால் மின் துறை, IOC இவை எல்லாம் கொஞ்சம் அடி கூட வாங்கும் ஆனால் மக்களின் நலன் தானே முக்கியம்?!

ஆனால் அரசு கிஞ்சித்தும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த முறையில் மின்சாரம் கேஸ் தயாரிப்பது நிச்சயம் டொமஸ்டிக், வீட்டு உபயோக அளவிலும், சிறிய நிறுவனங்கள் பள்ளிகள் நடத்த மட்டுமே பயன்படும். இதனால் கட்டாயம் இன்று மின்சாரமில்லாமல் மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளை திறக்கவைக்க முடியாதுதான். ஆனால் இதை கூட செய்யாமல் போக்குகாட்டிவருகிறது இந்த அரசு.

பிளாஸ்டிக் சாலைகள் போட்டால் ரோடு நன்றாக இருக்கும் ஆனால் காண்ட்ராக்டர்கள் காசுகொடுத்து தடுத்துவிட்டார்கள். மணல்கொள்ளை, மதுரை கிரானைட் திருட்டு எல்லாம் கனஜோராக நடக்கிறது. சும்மா ஒப்புக்கு சிலரை கைது செய்கிறது
ஆனால் இவையெல்லாம் விட்டுவிடுங்கள் மின் பிரச்சனையில் அரசு ஒரு டேஷும் கிழிக்கவில்லை. அதைப்பற்றி வாய் திறக்க இவருக்கு முடியாது. ஜெவுக்கு ஜால்ரா அடிக்க மட்டுமே வாய் வரும்

திமுகவை விட சிலபல விஷயங்களில் பெட்டராக இருந்துவிட்டால் மட்டுமே போதும் என்ற தப்பான yardstickஐ யே நம்பி காலத்தை ஓட்டிவருகிறது அதிமுக. அதுவும் மின் பிரச்சனையில் திமுகவை விட பல மோசம்.

Anonymous said...

its a pity that such an amazing person like cho has become a mouthpiece for jayalalitha during the twilight of his career.

i hope that he gets back his self respect and become the smart sensible journalist that he was before.

dondu(#11168674346665545885) said...

துக்ளக் மீட்டிங்கின் வீடியோ பார்க்கக் கிடைத்ததில் அது பற்றி பதிவு போட்டுள்ளேன், பர்க்க: http://dondu.blogspot.com/2013/01/42.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ramamani Keeran said...

Thanks for sharing the audio. Please upload the remaining part.

Ramamani Keeran said...

Thanks for sharing the audio. Please upload the remaining part.

Anonymous said...

On Pongal day (14.01.2013), there was heavy power cut in all over tamil nadu. But the grid frequency was maintained above 50.50 most of the time particularly at night hours and tamil nadu state did not pick up the surplus power generated from central power stations and their generation was reduced to avoid grid collapse.Then how can you blame central govt or DMK for power cut?. Idly vadai please investigate the above incident and get clarification from TNEB.

Anonymous said...

Thambi...tea innum varala....pl upload remaining part