பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 28, 2013

சன்டேனா இரண்டு (27-1-13) செய்திவிமர்சனம்
இந்த வாரம்....விஸ்வரூப விவகாரங்கள்.செய்தி # 1

கே..ஜவாஹிருல்லா - தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் முகமான மனித நேய மக்கள் கட்சியின் தலைவர். ராமனாதபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

எல்லாவற்றும் மேலாக இன்று எல்லா மீடியாக்களிலும் 'விஸ்வரூபம்' பேசப்படுவதற்க்கு மூலக்காரணமாக இருப்பவர். அப்படத்தின் தடைக்கல் இவர்தான்.


“விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர். இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன்.

இஸ்லாமியர்கள் கழுத்தை அறுப்பது போன்ற காட்சிகள்,தீவிரவாதிகளின் தலைவர் 'மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள்' என்று கூறுவது” என குற்றச்சாட்டுக்ளை அடுக்குகிறார் ஜவாஹிருல்லா.


"கமலின் விஸ்வரூபத்தை எதிர்ப்பதன் மூலம் நீங்கள் விளம்பரம் அடைய முயற்சி செய்கிறீர்களா?" என்ற கேள்விக்கு,

"என் முகம் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களால் அறியப்பட்டது. கமல் மூலம் பிரபலம் அடைய எனக்கு எந்த அவசியமும் இல்லை"
என்கிறார் ஜவாஹிருல்லா."விஜயகாந்தின் பல படங்களில் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அப்போது ஏன் இது போன்ற எதிர்ப்பை காட்டவில்லை." "துப்பாக்கி படத்தை எதிர்த்து ஏன்" போன்ற கேள்விகளுக்கு,"அவையெல்லாம் கமர்ஷியல் படங்கள். துப்பாக்கி பார்த்துவிட்டு, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் எங்களிடம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தயாரிப்பில் மன்னிப்பு கேட்டார்கள். நாங்கள் குறிப்பிட்ட காட்சிகளை உடனே நீக்கிவிட்டார்கள்." என்று 'புதிய விளக்கம்' அளித்து இருக்கிறார் இவர்.
ஹேராம் படத்தில் முஸ்லீம்கள் கமலின் மனைவியாக வரும் ராணி முகர்ஜியை கூட்டமாக சேர்ந்து கற்ப்பழிப்பதாக வரும் காட்சியையும் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார் ஜவாஹிருல்லா.
கமல் வேலை மெனக்கெட்டு இவருக்கு பிரிமியர் ஷோ காட்ட, அதை பார்த்துவிட்டு படத்தை பற்றி ஒரு வரியில் விமர்சனம் செய்து இருக்கிறார் ஜவா.

"படத்தில் பாடல்கள் இல்லை. காமெடிக் காட்சிகள் இல்லை.அதனால் இஸ்லாத்துக்கு எதிரான ஆவணப்படம் போல இருக்கிறது. மக்கள் பொறுமையாக இப்படத்தை உட்கார்ந்து பார்ப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது".

படத்தில் குத்து பாடல்கள் எதையாவது எதிர்பார்த்து ஜவாஹிருல்லா பெரிதும் ஏமாந்துவிட்டார் என்று தோன்றுகிறது.

"தொலைக்காட்சிப் பெட்டி சாத்தானின் பெட்டி" - இது இவர் அடிக்கடி மத பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் டயலாக். "இஸ்லாமிய மதப்படி டிவி, சினிமா பார்ப்பது போன்றவை பெரும் குற்றமாகும்" - இதுவும் இவரின் கூற்றுதான். .

இதே ஜவாஹிருல்லா, 'ஹே ராம்" படத்தில் வரும் 'அந்த மாதரி' காட்சிகளை கண்டு இருக்கிறார். கஜோல் அகர்வால ஆட்டம் போட்ட 'துப்பாக்கி' பார்த்து இருக்கிறார். 'விஸ்வரூபம்' பார்த்துவிட்டு எதிர்க்கிறார். போதாகுறைக்கு படத்தை விமர்சனம் வேறு செய்கிறார்.

இஸ்லாமிய அமைப்புகளின் தலைமைப்பொறுப்பில் இருந்துகொண்டு சினிமா பார்ப்பது, அதை விமர்சிப்பது போன்ற இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட இவர்களுக்கு இஸ்லாமிய மதப்படி என்ன தண்டனை? இவர்களுக்கு எந்த "ஜமாத்" தண்டனை தரப் போகிறது?


செய்தி # 2விஸ்வரூபம் படத்தில் வருவது போலவே ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மத உணர்வு முஸ்லீம் குழந்தைகளிடம் தீவிரமாக உருவாக காரணமாக இருப்பவை...மதரசா எனப்படும் இஸ்லாமிய கல்விக்கூடங்கள். நம்முடைய வேத பாடசாலை போன்றது எனக்கூறலாம்.


மதரஸாவின் அடிப்படை நோக்கம்....குரானின் வழிப்படி மனிதனை நெறிப்படுத்துவது, மார்க்க கல்வி மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை ஆகும். மேலே சொன்ன நாடுகளில் சில பகுதிகளில் மதரஸாக்கள் தீவிரவாதம் வளர்க்கும் பாசறைகளாக இருப்பது நாம் அறிந்ததே.


நம் இந்தியாவில் முதல்முதலாக மதரஸாக்களை கொண்டு வந்தவர்....மௌலானா அப்துல்பாரி.


மேற்கத்திய கல்வி முறைகளுக்கு எதிராக இஸ்லாமிய மதரசாக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் இஸ்லாமிய அறிஞர் மௌலானா அப்துல்பாரி.


மௌலானா அப்துல்பாரி, காந்தி அவர்களின் சிறந்த நண்பர். நூறுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை உருது மொழியில் எழுதியவர்.. கிலாபத் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். காந்தியுடன் இணைந்து இந்து, முஸ்லிம் ஒற்றுமை குறித்து பிரச்சாரம் செய்தவர்.


இந்து - முஸ்லிம் உறவுகள் குறித்து காந்திஜி எழுதிய கடிதங்கள் மூன்று வருடங்களுக்கு முன்னால் லண்டன் நகரில் ஏலம் விடப்பட்டன. இந்த கடிதங்களை ஏலம் எடுத்தவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த சர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோர்.மௌலானா அப்துல்பாரிக்குக் காந்தி இந்தியிலும், உருது மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் ஜெயிலில் இருந்த போது எழுதிய கடிதங்களும் இதில் அடங்கும்.


இந்து - முஸ்லிம் கலவரங்களுக்கு எதிராக, காந்திஜி நவகாளி யாத்திரையை மேற்கொண்ட போது, காலில் செருப்பு அணிவதை தவிர்த்தார்.


அதற்க்கு அவர் சொன்ன விளக்கம்,”நாம் கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது மாதாகோவிலுக்கோ செல்லுமுன் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு நுழைகிறோம். அதாவது புனித இடங்களில் நாம் செருப்பு அணிவதில்லை.

நானோ தரித்திர நாராயணர்களைப் பார்க்கச் செல்கிறேன். அவர்களுடை உற்றார் உறவினர்கள் சூரையாடப்பட்டனர். அவர்களுடைய குழந்தைகள், மனைவிமார்கள் கொலை செய்யப்பட்டனர். மானத்தைக்காப்பாற்றிக்கொள்ள போதிய ஆடையும் அவர்களிடத்தில் இல்லை. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கத்தான் இந்த மண்ணில் நடந்து போக இருக்கிறேன். எனவே என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு இது புனித யாத்திரையாகும். அப்படியிருக்க இந்த யாத்திரையில் நான் எப்படிக் காலணியை அணிய முடியும்?”
என்று கூறினார் காந்தி.


அண்டை நாடுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும், எத்தனை பயங்கரவாதிகளை காஷ்மீர் வழியாக அனுப்பினாலும், பரந்துப்பட்ட நமது இந்தியாவை மத/இன ரீதியாக துண்டாடி விடலாம் என்று யார் நினைத்தாலும் அது கானல் நீரே. அதற்கு காரணம்...காந்திஜி அவர்களின் கட்டமைப்பு.


கமல்ஹாசன் தனது "ஹே ராம்" படத்தில் அடி நாதமாக சொல்லி இருப்பதும் இந்த கருத்தைதான்.(நன்றி, இனி, அடுத்தவாரம்)-இன்பா

இந்த வாரம் ஒரு நாள் டிலே. மன்னிக்கவும்.

7 Comments:

jaisankar jaganathan said...

படத்தை படமா பாருங்க நண்பர்களே

Anonymous said...

விஷ ரூபம் படம் வசூலில் பப்படம்.

கடவுள்

Anonymous said...

movie is utter flop

your hype goes in vain INBA

viswaroopam becomes 'puss'waroopam

ஜெகன்னாதன் said...

//"கமலின் விஸ்வரூபத்தை எதிர்ப்பதன் மூலம் நீங்கள் விளம்பரம் அடைய முயற்சி செய்கிறீர்களா?" என்ற கேள்வி..// இது அபத்தமான கேள்வி. தேவைஇல்லாததும். ஆனால்,மனித நேயம் கட்சித் தலைவருக்கு அதுஇல்லை என்றே நினைக்கிறேன். இது மத வெறிதான். ஆனால் அரசியல் வாதிகள் (பா. ஜ. க. தவிர) அப்படி வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.

படம் நிறைய இடங்களில் வெளிவந்து விமரிசனங்களும் வந்து விட்டன. திருட்டு டிவிடிக்களும் வந்து விட்டன. இனி தமிழ் நாட்டில் வந்தாலும் வராவிட்டாலும் ஒன்று தான்.கமலுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், டிடிஹெச் சேன்னல்களுக்கும், ரசிகர்களுக்கும் நஷ்டம் தான்.

இதிலிருந்து கம்ல் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

-ஜெ.

R. J. said...

Even after seeing the film himself, the Judge doesn't want to pass the orders. He wants to discuss with others - lawyers of both the sides (who have already taken sides and hence the case has come up) before giving his verdict! What to expect? I don't think Kamal is going to get a fair judgment if it is a compromise. - R. J.

dr_senthil said...

மதம் நம்மை வழிநடத்த வேண்டும்.. நாம் மதத்தை வழி நடத்த கூடாது!!

Anonymous said...

விஸ்வரூபம் படத்தில் வருவது போலவே ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மத உணர்வு முஸ்லீம் குழந்தைகளிடம் தீவிரமாக உருவாக காரணமாக இருப்பவை...மதரசா எனப்படும் இஸ்லாமிய கல்விக்கூடங்கள். நம்முடைய வேத பாடசாலை போன்றது எனக்கூறலாம்.

***vedapadasalai is for brahmins...not for all hindus...MADARASAS IS FOR ALL MUSLIMS....sorry to interpret INBA....MURALI

( if you guys are offended by my comments....muslims??? let i leave this to you... THINK ABOUT IT...)