பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 13, 2013

சன்டேனா இரண்டு (13-1-13) செய்திவிமர்சனம்



சன்டேனா இரண்டு (13-1-13) செய்திவிமர்சனம்

இந்த வாரம்....இன்றைய பட்டிமன்றங்களின் நிலை மற்றும் ஜல்லிக்கட்டின் கதை.



செய்தி # 1








திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றம் ஒன்று சமிபத்தில் பார்த்தேன். நகைச்சுவை என்ற பெயரில், வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அதிமுகவை விமர்சித்துக்கொண்டிருந்தார் லியோனி.



பட்டிமன்றத்தின் அடிப்படை மரபுகளில் ஒன்று .."பட்டிமன்றத்தில் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது" என்பார் அவ்வை நடராஜன் அவர்கள்.



அவ்வை நடராஜன்,தி.ராஜகோபால்,நெல்லைக்கண்ணன் போன்றோர் மரபுப்படி பட்டிமன்றங்களை நடத்துவதற்க்கு முன்னோடிகள் என்கிறார்கள்.



ஆழமான தலைப்பு. பங்குபெற்றவர்கள் மட்டுமில்லாமல், பார்க்கவருவோரையும் ஆர்வத்தோடு ஒன்றிப்போக வைக்ககூடியதான தலைப்பு. அதை அறிவித்து நடுவராய் இருப்பவர் விளக்கி, பேச்சாளர்களை அறிமுகம் செய்யவேண்டும். இரண்டு அணிகள். அவற்றுக்கு தனித்தனியே தலைவர்கள்.


தலைவராக இருப்பவர்கள் பேச்சை முதலில் தொடங்கி, பின் மற்ற பேச்சாளர்கள் அனைவரும் வாதித்து முடித்தப்பின், இறுதியில் சில நிமிடங்களில் முத்தாய்பபாய் முடித்து, ந்டுவரை தீர்ப்பு கூற அழைக்க வேண்டும். நடுவர் அவர்கள் இருதரப்பு விவாதங்களையும் சீர்தூக்கிப்பார்த்து, நடுநிலமையோடு எது சிறந்து என தீர்ப்பு கூறவேண்டும்.


இன்றைய பட்டிமன்றங்கள் மசாலா சினிமாக்கள் போன்று ஒரு பார்முலாவை வைத்து இருக்கிறார்கள். நாலு பாட்டு, அஞ்சு ஜோக்கு இதுதான் இப்போது பட்டிமன்றங்களின் போக்கு.



சாலமன் பாப்பையா அண்ட் கோவும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை. ஒரு இடத்தில் சொன்ன மொக்கை ஜோக்கை மற்றொரு இடத்தில் சொல்லுவது. கணவன் - மனைவி கடி ஜோக்குகள், அதை கேட்டு நான்கைந்து காயந்துபோனவர்கள் சிரிப்பது, பட்டிமன்ற விவாததுக்கு நடுவே சன் டிவியில் வரும் டிவி தொடர்கள் பற்றி பேசி விளம்பரம் செய்வது என ஒரு பண்டிகை என்றால் டிவியில் பட்டிமன்றம் என்று இவர்கள் படுத்தும் தொல்லை தாங்க முடியவில்லை.


பட்டிமன்றங்களை ஒளிபரப்பு செய்யும் சேனல்களுக்கு தகுந்தார்போல பட்டிமன்றங்களை நடத்தும் அருவருப்பான நிலை தொடர்கிறது.



நான் சென்று பார்த்த ஒரு சிறப்பு பட்டிமன்றம் புதுச்சேரி நகரில். "குடும்ப அமைதிக்கு பெரிதும் துணை நிற்பது மனைவியின் அன்பா? கணவனின் ஆளுமையா? " என்பது தலைப்பு. உள்ளூரில் உள்ள மொழி ஆர்வலர்கள்,பேராசிரியர்கள் எல்லாம் இணைந்து பட்டிமன்ற மரபுகள் மாறாது நடத்தியபோது, பட்டிமன்றத்தின் சிறப்புகள் எனக்கு புரிந்தது.



இறுதியில் குடும்ப அமைதிக்கு துணை நிற்ப்பது மனைவியின் அன்பே என்று தீர்ப்பளித்தார் நடுவராய் இருந்தவர்.


இது போல, சிரிப்புக்கும் சிந்தனைக்கும் விருந்தாகும் நல்ல பட்டிமன்றங்களை கேட்கும்/பார்க்கும் ஏக்கம் இருக்கிறது. ஆனால், விருந்தளிக்கதான் இன்று ஆளில்லாமல் போய்விட்டார்கள்.



செய்தி # 2






ஜல்லிக்கட்டு பற்றிய சுவாரசியமான சில தகவல்களை படித்தேன்.ஏற்கனவே என் ஒரு பதிவில் நான் இதை பற்றி விரிவாக எழுதியும் இருக்கிறேன்.



4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது என்கிறது ஒரு குறிப்பு
.
நமது கலித்தொகை போன்ற பழந்தமிழ், சங்க இலக்கியங்களிலும் ஜல்லிக்கட்டு "ஏறு தழுவுதல்' என்று குறிப்பிட படுகின்றன. முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு கால்நடைகளை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தது. மாட்டை அடக்கிப் பெண்ணை மணப்பது என்ற இனக் குழு நிலையில் இருந்த ஏறு தழுவுதல், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அரங்க விளையாட்டாக, ஜல்லிக்கட்டாக உருப்பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இதைத் தடை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனாலும் மக்களின் உணர்வே அப்போதும் வென்றது.


""உண்மையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பாமர மக்கள் அளவுக்கு மாட்டின் மீதும், விலங்குகள் மீதும் அக்கறை செலுத்துபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். தினசரி வாழ்க்கையும் அவர்களுக்கு மாடுகளுடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது. மாட்டுக்கு நன்றி செலுத்தி மாட்டுப் பொங்கல் நடத்தும் எளிய மனிதர்கள், கவனித்துப் பார்த்தால், ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பவர்கள் பெரும்பாலும் இறப்பதில்லை. பார்வையாளர்கள்தான் இறந்து போகின்றனர். இவற்றை முறைப்படுத்தி, பார்வையாளர்களையும் மாடுபிடி வீரர்களையும் தனித்தனியாகப் பிரித்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் எந்த உயிரிழப்பும் இல்லை!

மது அருந்திட்டு மாடு பிடிக்கிறதும், மாட்டுக்கு மது கொடுக்குறதும் தப்பு'ன்னு சொல்றது நியாயம். ஆனா, ஜல்லிக்கட்டே வேண்டாம்னு சொல்றது, கலாசாரத்தையே காலால உதைக்குற மாதிரி.கோயிலுக்குப் போறதையும், மொட்டை அடிக்கிறதையும், நல்ல நேரம் பார்க்குறதையும் விட்டுடலையே! அது போலத்தான் இதுவும். 400, 500 வருஷப் பழக்கத்தை எல்லாம் பொசுக்குனு மூட்டை கட்டிட முடியாது"

- இது ஒரு தரப்பு வாதம்.

"ஒரு மாட்டை ஒருத்தன் அடக்குறதுதான் வீரம். அஞ்சறிவுள்ள மாட்டை 20,30 பேர் சேர்ந்து அமுக்குறதுல என்னங்க வீரம் இருக்கு? நாட்டுல வெட்டுக்குத்தும் வன்முறையும் ஏற்கெனவே அதிகமாகிட்டு இருக்கு. இந்த நிலையில் மாடுகிட்ட குத்துப்பட்டு இளைஞர்கள் ரத்தம் சிந்துறதையும், சாகுறதையும் கைதட்டி, விசிலடிச்சு ரசிக்கிறது, வன்முறை மன நிலையை ஊக்குவிக்காதா? "இது வீரம், பண்பாடு, பாரம்பரியம்'னு சொல்லி, வேடிக்கை பார்த்துட்டு நீங்க போயிடுவீங்க. மகனை. கணவனை, தகப்பனை இழந்து வாழ்க்கை முழுக்க நிராதரவா இருக்கிற அந்த குடும்பங்களை யாரு காப்பாத்துவா? அரசியல் கட்சிகள் எல்லாத்துக்கும் ஒரு அணி வெச்சிருக்கிறது மாதிரி, "மாடு பிடி அணி'ன்னு வெச்சு அதுல உள்ளவங்களை மாடு பிடிக்க அனுப்பட்டும். அப்ப தெரியும், அதோட வலி என்னன்னு. பழைய காலம் மாதிரி திறந்தவெளி அரங்கத்துல ஒரு மாட்டை ஒரு நேரத்துல ஒரு மனிதன் அடக்கினா, அதை ஆதரிக்கலாம். இப்போ நடக்குறது இளைஞர்களின் உயிர் குடிக்கிற விளையாட்டு. இதை ஏத்துக்க முடியாது!"

-இது ஒரு இன்னொரு தரப்பு வாதம்

ஜல்லிகட்டு - ஒரு கோணத்தில் பார்த்தால் மிருகவதை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் இன்றும் தொடரும் ஒரே பழந்தமிழர் வீர விளையாட்டு.



விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



வாசக நண்வர்களுக்கும், இட்லிவடைக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



(நன்றி, இனி,அடுத்தவாரம்)



-இன்பா

10 Comments:

kothandapani said...

முதல் செய்தியில் டிவி பட்டிமன்றங்களின் அவல நிலையை சொல்லி விட்டு, அடுத்த செய்தியில் இந்த அல்லகைகளுக்கு அருமையான தலைப்பை கொடுத்திட்டியே இன்பா ........இன்றைய ஜல்லிக்கட்டு விளையாட்டால் பாதிக்கபடுவது ....... மாடே ..... மனிதனே........
"ஜல்லிகட்டு - ஒரு கோணத்தில் பார்த்தால் மிருகவதை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் இன்றும் தொடரும் ஒரே பழந்தமிழர் வீர விளையாட்டு"
சாலமன் பாப்பையாவிற்கு அல்வா போன்ற தீர்ப்பையும் தந்து உள்ளீர்கள்..

சண்முகா said...

பொங்கல் வாழ்த்துகள்.
இரண்டு செய்திகளும் அருமையான கருத்துகளுடன் சிந்திக்க வைக்கின்றன.
ஒரு சிறிய கோரிக்கை.. தமிழில் வெளியிடும்போது ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்து பிழையில்லாமல் வெளியிட்டால் நன்றாக இருக்கும். உதாரணத்திற்கு "... போன்றோர் மரபுப்படி பட்டிமன்றங்களை நடத்துவதற்க்கு முன்னோடிகள் " என்ற இடத்தில் நடத்துவதற்க்கு என்ற வார்த்தையில் க் என்ற மெய் ற் எழுத்தின் அருகே வராது. ஒன்றிற்கு மேற்பட்ட வல்லின ஒற்றுகள் சேர்ந்து வராது என்பது தமிழ் இலக்கணம். மேலும் ஒரு உதாரணம் "....அமைதிக்கு துணை நிற்ப்பது". வேறு சில பிழைகளும் உள்ளன ஆனால் அவை தமிழில் தட்டச்சு செய்வதால் வருபவையாதலால் ( சமிபத்தில், முத்தாய்பபாய், ந்டுவரை )குறிப்பிடவில்லை. இது தவிர பல இடங்களில் சந்திப்பிழையும் உள்ளது (முடித்தப்பின் - ப் வராது). இவற்றையும் சரிபார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும். தங்களின் நல்ல செய்திகள் நல்ல விதமாக மக்களுக்குக் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இதைக் கூறுகிறேன். வேறு நோக்கம் எதுவுமில்லை.

Anonymous said...

//வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அதிமுகவை விமர்சித்துக்கொண்டிருந்தார் லியோனி//

லியோனி அதிமுகவை விமரிசிச்சா ஏன் எரியுது ? அவரோட கருத்து சுதந்திரம் அது. உங்க சோ குட தான் அதிமுகவை விமரிசிகறதே இல்லை. எப்ப பாத்தாலும் வெட்கம இல்லாமா அதிமுக ஜால்ராவா இருக்கார்.

R. J. said...

ஜல்லிக்கட்டில் மரணம் அடைந்தால் அம்மாவின் பெயரில் உடனே ஒரு லக்ஷம் ரூபாய் அறிவிக்கப்படும். இதற்கென்றே ஒரு செக்ரடரி போட்டு எங்கெல்லாம் அரசைக் குறை கூற வாய்ப்பு இருக்கும் இறப்புச்செய்திகளைப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். உயிரின் விலை ஒரு லக்ஷம். (வேண்டும் என்றே ரிஸ்க் எடுப்பவர்களை என்ன சொல்வது?)

பட்டி மன்றங்கள் கெக்கே பிக்கே ஜோக்குகளுக்காகவே என்று டிவி சேனல்கள் முடிவெடுத்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. சினிமாவை விட முடியாததால் இவற்றிலும் சில பல பாடல் வரிகள் பாடப்படும். இவை போழுதுபோக்கிற்காகவே, சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

-ஜெ.

Anonymous said...

பட்டி மன்றத்தை, இப்போதெல்லாம் வெட்டிமன்றமாக்கி விட்டார்கள். பாப்யையாவின் கைங்கரியம்!
மு மு இஸ்மாயிலோடு அதன் கௌரவம் போய்விட்டது.
-மணா

Ravi said...

I saw Dindugal I Leoni patimandram today. All speakers and Leoni was bashing current TN ADMK govt and was praising previous DMK govt. Disgusting.

One speaker told ".. Did Raja Raja Chozlan study B.E to construct the temple..", this is like once Karunandhi telling, " Did Rama was a engineer"..

Patimandram is a vetti mandram now, bad..

Anonymous said...

அவரோட கருத்து சுதந்திரம் அது-யாருப்பா அது -அதுக்கு திமுக பொதுகூட்டத்தில் பேசணும்.பட்டி மன்ற மரபை கெடுக்க கூடாது

Anonymous said...

அது பாலமன் ஆப்பய்யாவோ ,வம்புக்கள் பேயானியோ...நடிகர் பேட்டியோ...எத்தனை நிகழ்ச்சிகள் பார்த்தாலும் நினைவில் நிற்பது நண்டு மார்க் லுங்கியோ ,ஆரோக்யா பாலோ..இல்லை, ராம்ராஜ் வேட்டியோதான்...முழுக்க பார்த்துவிட்டு மூக்கால் ஏன் அழவேண்டும்?

குரோம்பேட்டை குறும்பன் said...

திண்டுக்கல் லியோனி பட்டிமண்டபம் நடந்தது கலைஞர் டி வி இல். அவர்கள் அ தி மு க அரசுக்கு ஆதரவாக ஏதேனும் சொல்லிவிடுவார்களா என்ன? திண்டுக்கல் லியோனியின் பட்டிமண்டப பீக் பீரியட் சினிமாப் பாடல்களில் சிறந்தது பழைய பாடல்களா அல்லது புதிய பாடல்களா என்ற பத்தாண்டுகளுக்கு முந்தைய பட்டிமன்றம். அதிலும் அவர் நடுவர் அல்ல என்று நினைக்கின்றேன். விஜய் டி வி பட்டிமண்டப பேச்சுகளில் பாதி கெட்டார்; இப்போ கலைஞர் டி வி இல் முழுவதும் கெட்டுவிட்டார். பேச்சு பேசும் பொழுது இந்து மத கிண்டல்களையும் தாராளமாக செய்வார், லியோனி.

சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர், ராஜா ஆகியோர் பங்கு பெறும் பட்டிமண்டப நிகழ்ச்சிகள் அன்றும், இன்றும், என்றும் சுவையாக உள்ளன. குறை எதுவும் கூற முடியாது.

Anonymous said...

கணம் கோர்ட்டார் கொரட்டூர் குறும்பன் ஐயா..அவர்களே!...குறை சொல்ல ஒன்னும் இல்லைதாங்க ...... தரம் இல்லை என்பது தாங்கய்யா நாங்க சொல்றது.......துனுக்கு ஜோக்குகள் அரட்டைகள் என்ற தலைப்பு வச்சுக்கிட்டா பிரச்சனை இல்லைங்கய்யா...