பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 10, 2013

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 10-01-2013


அன்புள்ள ஸ்ரீமான் முனி அவர்களுக்கு,

"நீங்க ஏன் ஃபேஸ் புக் பக்கம் வருவதில்லை ? அங்கே நிறைய விஷயம் இருக்கு... நீங்க வந்தா நல்லா இருக்கும்" என்றார் அந்த இட்லிவடை நலம் விரும்பி.
இதை எழுதும் போது இட்லிவடை இதை பரிசீலித்து வருகிறது. ஃபேஸ் புக் மக்களுக்கு இது எச்சரிக்கை.

சரி பேஸ் புக் பக்கம் சென்று பார்த்த போது அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. டிவிட்டர், பிளாகில் அடிக்கும் அதே கும்மி தான் அங்கேயும் அடிக்கப்படுகிறது. இருந்தாலும் கண்ணா லட்டு தின்ன ஆசையா ? என்று உள் மனது கேட்கிறது.

தனது இன்று போய் நாளை வா படத்தைத்தான் சந்தானமும் ராம நாராயணனும் மோசடி செய்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற தலைப்பில் படமாக எடுத்துவிட்டனர் என இயக்குநர் கே பாக்யராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்திமழை பத்திரிக்கையில் நவம்பர் மாசம் ஒரு கட்டுரை படித்தேன். எப்படி நம்ம மக்கள் வெளிநாட்டு படங்களை காப்பி அடிக்கிறார்கள் என்று விரிவாக போட்டிருக்கிறார்கள். அதே போல கமலின் கலப்படங்கள் என்ற புத்தகத்தில் 'கமல்சார்... கமல்சார்' என்று வரிக்கு வரி போட்டுவிட்டு கமலை துவைத்து எடுத்திருக்கிறார்கள். நம்ம மக்கள் ஏன் வெளிநாட்டு படங்களையே காப்பி அடிக்கிறார்கள் ? இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை ஏன் சொந்த நாட்டிலேயே எடுக்காமல் வெளிநாட்டினரைப் தேர்ந்தெடுக்கிறார்கள் ? அதே காரணம் தான்!.

இதில் கூத்து என்ன என்றால் ராம நாராயணன், பாக்யராஜ் இருவரும் இப்ப திமுகவில் இருக்கிறார்கள். முறையாக தலைவரிடம் தான் போய் இவர்கள் முறையிடவேண்டும் ஆனால் தலைவரே இப்ப லட்டு பிரச்சனையில் இருக்கிறார். அங்கே நடப்பதும் கண்ணா லட்டு தின்ன ஆசையா ? பிரச்சனை தான்!.

2 முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.


பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னா

என்ன சிரிச்சாசா ? சரி இதைவிட பெரிய முட்டாள் நாம தான். திமுக தலைமைக்கு வேறு யாரும் வந்து விட கூடாது என்பதற்காக நடத்தும் நாடகமாகக் கூட இருக்கலாம் இந்த அண்ணன் தம்பி சண்டை!. ஆனால் நிச்சயம் இந்த பிரச்சனை ஒரு நாள் விஸ்வரூபம் எடுக்கும்.

நாளை விஸ்வரூபம் இல்லை, வலைப்பதிவில் விமர்சனம் எழுத தயாராக இருந்தவர்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட். கமலிடம் டென்ஷன், குழப்பம் இரண்டும் இருக்கிறது. இது புதிய யுத்தி என்று கமல் பேட்டியில் சொல்லியுள்ளார். கேபிள் வந்த சமயம் புது படங்களை உடனுக்கு உடன் நாம் வீடுகளில் பார்த்தோம். அதையே காசுக்கு குவாலிடியாக தர போகிறார்கள். அவ்வளவு தான். கமல் நடிப்புடன் வியாபாரியாகியிருக்கிறார். எனக்கு தெரிந்த DTH நண்பர்களிடம் போன வாரம் பேசிய போது மொத்தம் 61 பேர் Subscribe செய்திருக்கிறார்கள் என்றார். அதில் என்னுடையது ஒன்று.

கமல் இப்ப செய்ய வேண்டியது ஒன்று தான் கடவுளை நம்ப வேண்டும்!.

ஷாரூக் நடிக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் போஸ்டரில் வேட்டி சட்டையில் ஷாரூக்கும் லுங்கியில் தீபிகாவும் சூப்பராக இருக்கிறார்கள். லுங்கி பெண்களுக்கு தான் நல்லா இருக்கு என்பது படத்தை பார்த்தால் தெரிகிறது.

தமிழ் நடிகர் கமல் மும்பை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்தார். மும்பை நடிகர் சென்னை எக்ஸ்பிரஸில் நடிக்கிறார். இதற்கு புக்கிங் IRTCல் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். கடவுளுக்கே டிக்கேட் கிடைக்காது.

கடவுளை நம்பாமல் நம்ம மக்கள் இன்னும் சாமியார்களை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். லேடஸ்ட் நியூஸ் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிஷ்யர்கள் 300 பேர் உடன் வர, நவீன சொகுசுக் கப்பலில் தென்கிழக்கு ஆசியக் கடலில் சுற்றி வருகிறார் நித்தியானந்தா! ஒரு லட்ச ரூபாய் கட்டணம் கொடுத்து ஒவ்வொரு சிஷ்யரும் இருபது நாட்கள் பயணம் போகிறார்கள். காலையில் யோகா, தியானம் பின்பு ஆட்டம் என்று உற்சாகமாக நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தா.

விகடன் விருதுகள் அறிவித்திருக்கிறார்கள். பல விருதுகளை வழக்கு என் 18/9க்கு தந்துள்ளார்கள். ஆண்டவா !


சேவை வரி விதிப்பால் நாட்டில் கருப்புப் பணம் அதிகரிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மற்றவர்களுக்கு சேவைவரி விதிக்கும்போது கருப்பு பணம் அதிகரிக்கும் என்பது ரஜினிக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம். இவர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்கிறார்கள் ? லெமன் சேவையா ?

இப்படிக்கு,
இட்லிவடை

கடைசி தகவல்: விஸ்வரூபம் 25 ரிலீஸ் தியேட்டரில். DTHல் எப்போது என்று தெரியாது தியேட்டரில் ரிலீஸ் செய்த பிறகு இருக்கும் என்பது என் எண்ணம் !

14 Comments:

கவின் said...

முட்டாள் ஜோக் சூப்பர் தல..

ஃபேஸ்புக் ட்விட்ட்ர் போல அல்ல!
ஃபேஸ்புக்கால் பல நல்ல செயல்கள் நடந்து வருகிறது!!

http://karuvooraan.blogspot.in/
ஆதரவு அளிக்கவும்!
நன்றி!

கவின் said...

முட்டாள் ஜோக் சூப்பர்.!

ட்விட்டர் போல ஃபேஸ்புக் அல்ல..
சில நல்ல விஷயங்கள் ஃபேஸ்புக்கில் நடந்து வருகிறது..

http://karuvooraan.blogspot.in/
ஆதரவு அளிக்கவும்!
நன்றி!

R. J. said...

அப்பாடி, இட்லி வடை யார் என்று கண்டுபிடித்து விட்டேன்! (காதைக் கொடுங்கள், ஒரு க்ளு தருகிறேன் - குட்டிக் கதை இருக்கிறதே! இன்னுமா தெரியவில்லை!). எல்லோரும் கொஞ்சம் ஜாக்கிரதையாக அம்மா பற்றி கமென்ட் போடவும்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா - பாக்கியராஜ் மட்டுமல்ல, இன்னொரு உதவி இயக்குனரும் கம்ப்ளைன் செய்திருக்கிறார்! இந்தப் படமும் விச்வரூபத்துடன் தான் ரிலிஸ் ஆகும் போல் இருக்கிறது!

நித்தி + 300 பேர் சொகுசுக் கப்பலில்! அம்மாடி! தலா ஒரு லக்ஷம் ரூபாய் - 20 நாட்கள் - சொகுசுக்கப்பலில் சாப்பாட்டுச் செலவுக்குக் கூட காணாது. அதைத் தவிர அந்தக் கப்பலில் என்னென்ன எண்டெர்டைன்மெண்டொ ! குறைந்தது 3 லக்ஷம் என்றாலும், 300 பேருக்கு 9 கோடியாச்சு! நெஞ்சு பொறுக்குதில்லையே.

நடிகர்களுக்கு சேவை வரி விதிப்பால் வரி ஏய்ப்பு / கள்ளப்பணம் அதிகமாகும் என்பது நடிகருக்கு நிச்சயமாகத் தெரிந்ததால் (நடிகர்கள் முடிவு செய்து விட்டதால்) அப்படி சொல்லியிருக்கிறார்!

-ஜெ .

jaisankar jaganathan said...

//http://karuvooraan.blogspot.in/
ஆதரவு அளிக்கவும்!//

ஆதரவு கொடுக்க நீ என்ன 16 வயசு பிகரா?

Anonymous said...

/*கடைசி தகவல்: விஸ்வரூபம் 25 ரிலீஸ் தியேட்டரில். DTHல் எப்போது என்று தெரியாது தியேட்டரில் ரிலீஸ் செய்த பிறகு இருக்கும் என்பது என் எண்ணம் !*/

சரி 'நெட்'ல எப்போ ரிலீஸ் ?

குரோம்பேட்டை குறும்பன் said...

//தனது இன்று போய் நாளை வா படத்தைத்தான் சந்தானமும் ராம நாராயணனும் மோசடி செய்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற தலைப்பில் படமாக எடுத்துவிட்டனர் என இயக்குநர் கே பாக்யராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார். //

பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படம் வெளிவந்தபோது - பிரபல இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள், தன்னுடைய கற்பகம் படத்தின் கதையை பாக்கியராஜ் காப்பியடித்து மு மு எடுத்ததாக வழக்கு தொடுத்தார். 'இன்று போய் நாளை வா' படத்தின் மூலக் கதை ஆசிரியர் தமிழ் தெரியாதவர் போலிருக்கு. இல்லையேல் அவரும் அப்பவே வழக்குத் தொடர்ந்திருப்பார். அந்தக் காலத்தில் பாக்கியா இதழுக்கு அனுப்பப்பட்ட பல கதைகள் பாக்கியராஜ் படங்களில் உபயோகப்படுத்தப் பட்டன என்று கூட அரசல் புரசல்கள் வெளியான ஞாபகம். அத்திப் பழத்தைப் புட்டால், அத்தனையும்? ......

Anonymous said...

Blog situkku aadharavu alichu ennaiyaa aagapoguthu???

Madhavan Srinivasagopalan said...

// IRTC //

இதென்ன புத்ஸா இர்க்கு..

ஹரன்பிரசன்னா said...

நான் இட்லிவடை ப்ளாக் படிப்பதில்லை. ஒழுங்காக ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ்ஸில் போட்டால் படிப்பேன்.

jaisankar jaganathan said...

இப்போ எப்படி படிச்சீங்க ஹரன் பிரசன்னா அவர்களே

dr_senthil said...

அவங்க சேவை வரி கட்டவேண்டாம் நாம தியேட்டர் போய் பார்க்க வேண்டாம் # இவனுங்க படத்தை திருட்டு சிடில பாக்றதே டைம் வேஸ்ட்
Now all these buggers will vouch for DMK and campaign at the top of their voices in next elections...

Anonymous said...

//jaisankar jaganathan said...//

அண்ணாச்சி முட்டாள் ஜோக்குக்கு இப்படி செயல் வடிவமா ஆயிட்டியளே

இட்லி வடையே இட்லி வடையை படிக்க முடியுமா...........

இட்லி வடை ! இந்தமாதிரி முட்டாள் ஜோக்கு எல்லாம் இனிப் போடப்பிடாது அம்புலி மாமா படிக்கிற மாதிரி இருக்கு

Anonymous said...

முனி, எனக்கு ஒரு ட்வுட். அதன்பா சந்தேகம். இன்னிக்கு ஹிண்டு விலே ஒரு நியூச் படிச்சஏன். 5 போலீச்கார்ங்களை சச்பெண்ட் பண்ணதை பற்றின கோர்ட் கேஸ்.
இதைப்படி:
The DIG of Police Villupuram Range suspended R. Srinivasan, R.Ramanathan. R.Dhanasekaran, R.Bakthavatsalam and Karthikeyan.....

இப்ப என் கேள்வி இன்னான்னா: இவங்க 4 பேருக்குமுன்னால அல்லாருக்கும் 'R' இனிஷியல் இருக்குதே, அது RAPE-ஐக் குறிக்கிறதா? -- புரியாதவன்

crazypaja said...

சொகுசுக்கப்பலில் நித்தி???ஆச்சர்யமான செய்தி.

மானமே கப்பலில் ஏறியாச்சு...பிறகென்ன? போகட்டும் விடுங்கள். மேலும் இவர் போன்றவர்கள் நாட்டுக்கு வெளியில் இருப்பது இந்தியாவுக்கு நல்லதுதானே?