பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 01, 2012

மணிரத்தினம் Vs கோவைத் தம்பி

பென்குவின் பதிப்பகம்,மணிரத்னத்திடம் எடுத்திருக்கும் நீண்ட பேட்டியை தொகுத்து 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

அதில்,'முதல் தோல்வி?’ என்ற கேள்விக்கு," தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன் படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப் படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.

நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின் கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’ படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு காப்பாற்றியது.

குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது 'பியாஷா’ குருதத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான் 'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது. மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!” என்று மணி ரத்னம் குறிப்பிட்டுள்ளார்.

கோவைத் தம்பி குமுதத்தில் மணியை...


ராமர், சீதை, ராவணன் என்ற கதாபாத்திரம் வைத்து படம் எடுக்கமால் கமல், மணி, முக்தா, கோவை படம் எடுத்தால் சுவாரஸியமாக இருக்கும் போல இருக்கு!
8 Comments:

R. J. said...

Kamal - Muktha; now, Mani - Kovai Thambi; who next?

-R. J.

cho visiri said...

It is a fact that Mother Land Pictures and Kovai Thambi were household names in early eithties when ManiRatnam was nowere around the corner.
One can understand the grievances of KLovai Thambi.
You cannot expect decency from certain quarters. So, let Mohterland's son digest this episode.

May be it is money precious stone and not 'good precious stone".

In any case, truth will prevail oneday and let us, the public at large, wait till then.

cho visiri said...

It is a fact that Mother Land Pictures and Kovai Thambi were household names in early eithties when ManiRatnam was nowere around the corner.
One can understand the grievances of KLovai Thambi.
You cannot expect decency from certain quarters. So, let Mohterland's son digest this episode.

May be it is money precious stone and not 'good precious stone".

In any case, truth will prevail oneday and let us, the public at large, wait till then.

Anonymous said...

இந்த மறுப்புகளை வைத்து ஒரு புத்தகத்தை தொகுத்து விடலாம், முன்னுரை எழுத எஸ்.ராமகிருஷ்ணன்/சாரு நிவேதிதா/ஜெயமோகனை அணுகலாம் :).

BalHanuman said...

>>ராமர், சீதை, ராவணன் என்ற கதாபாத்திரம் வைத்து படம் எடுக்கமால் கமல், மணி, முக்தா, கோவை படம் எடுத்தால் சுவாரஸியமாக இருக்கும் போல இருக்கு!

பத்த வச்சுட்டியே பரட்டே...

மஞ்சள் கமென்ட் சூப்பர்....

kothandapani said...

இது ஆறிப்போன இட்லி ஊசிப்போன வடை .....

ஜெயக்குமார் said...

இளையராஜா இசை என்ற ஒரு வஸ்து மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு இந்தச் சண்டையே வந்திருக்காது. படம் வந்ததும், போனதும் தெரியாமல் போயிருக்கும். இளையராஜாவால் மட்டுமே காப்பாற்றப்பட்ட படம் இதயகோவில்

Shankari said...

Don't understand why people talk about past and hurt other's feelings!!
It happens not only in Tamil industry sometime back Latha Mangeshkar claimed that singer Mohammed Rafi had apologised to her in writing. Later his son Shahid Rafi has refuted her, saying he might even take legal action.
To say Y/N the singer is no more!!