பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 08, 2012

இது கேலிக்கூத்து

சில சமீபத்திய நிகழ்வுகள் நமது ஜனநாயகத்தை எவ்வளவு கேலிக் கூத்தாக அடித்துக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். அந்நிய நேரடி முதலீடு, இது தேசத்திற்கு நன்மையா தீமையா என்ற விவாதங்கள் ஒருபுறமிருக்க, இது நமது அரசியல்வாதிகளின் நம்பகத்தன்மையை மிகவும் தெளிவாகத் தோலுரித்துவிட்டது. அந்நிய நேரடி முதலீடு குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்று, வாக்கெடுப்பும் அரங்கேறியது, கூடவே கேலிக்கூத்தும். அந்நிய நேரடி முதலீட்டில் உடன்பாடில்லாத கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுதான் அந்த கேலிக்கூத்து!உத்திரப் பிரதேசத்தின் இருபெரும் ஊழல் கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும், அந்நிய நேரடி முதலீட்டைக் கடுமையாக எதிர்த்த கட்சிகள். மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி, இரு கட்சிகளுமே இத்திட்டத்திற்கெதிராகத்தான் பேசினார்கள். இன்னொரு கட்சி, ஸாக்ஷாத் நமது தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம். இக்கட்சியின், தலைவரின் திடீர் நிலைபாடுகள் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இக்கட்சியும் அந்நிய நேரடி முதலீட்டைக் கடுமையாக எதிர்த்தது. இவ்வாக்கெடுப்பில் இரு அவைகளிலுமோ, அல்லது ஏதேனும் ஒரு அவையிலோ, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிடில், அரசு கவிழும் நிலையோ அல்லது அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலையோ தோன்றக் கூடும்.அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் தமது முடிவைத் தெரிவிப்பதாகத் தெரிவித்திருந்தது; மாயாவதியும் அவ்வாறே தெரிவித்திருந்தார். கருணாநிதி அவர்கள் வழக்கம்போல் சஸ்பென்ஸ் அது, இது என்றார், முடிவாக அவர் அரசை ஆதரிக்கப்போவதாகத் தெரிவித்து, அதற்குக் கூறிய விளக்கம் அவர் பாணியிலான விசித்திரமான ஒன்று. “வாக்கெடுப்பில் தோற்று, மதவாத சக்திகள் ஆட்சியைப் பிடித்து, பாபர் மசூதி இடிப்பு, கரசேவை போன்ற அசம்பாவிதங்கள் மறுபடியும் நிகழாமல் தடுக்கவே, இதில் உடன்பாடில்லையாகிலும், அரசைக் காப்பாற்ற ஓட்டுப் போடப் போவதாக நீட்டி முழக்கினார்; தவிர தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் அந்நிய நேரடி முதலீட்டிற்கெதிரான நிலைபாட்டிலுள்ளதால், தமிழ்நாட்டில் எப்படியும் இத்திட்டம் செயல்படுத்தப்படாது, என்றும் தன்னுடைய தன்னிலை விளக்கத்திற்கு சமாதானமும் அளித்தார்.விவாதம் நடைபெற்று, மக்களவையில் வாக்கெடுப்பின்போது, இதனை எதிர்ப்பதாகக் கூறிய சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் வெளிநடப்பு செய்து, வாக்கெடுப்பைப் புறக்கணிக்க, திமுக ஆதரவாக வாக்களிக்க, பாஜக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியது. ராஜ்யசபையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், ராஜ்யசபை வாக்கெடுப்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு மாயாவதியும், திமுகவும் ஆதரவாக ஓட்டளிக்க, இங்கும் சமாஜ்வாதி வெளிநடப்பு செய்து, வாக்கெடுப்பைத் வெற்றிகரமாகத் தோல்வியுறச் செய்தன.மறுபடியும், அந்நிய நேரடி முதலீடு தேசத்திற்கும், விவசாயிகளுக்கும் நன்மை விளைவிக்குமா என்பது ஒருபுறமிருக்க, சில அரசியல்கட்சிகள் எவ்வாறு தங்கள் சுயலாபத்திற்காக தங்களுக்கு வாக்களித்தவர்களைப் பரிகசிக்கிறார்கள் என்பதே இங்கு விஷயமாகிறது. இங்கு குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்னவென்றால், திட்டதைக் கடுமையாக எதிர்த்து, வாக்களிப்பைப் புறக்கணித்தோ அல்லது ஆதரவாக வாக்களித்த மூன்று கட்சிகளுக்குமே பலவிதங்களில் காங்கிரஸின் தயவு மிகவும் அவசியம், காரணம் ஊழல் புகார்களில் சிக்கி சிபிஐ விசாரணைகளின் கீழ் இம்மூன்று கட்சிகளுமே இருக்கின்றன.மாயாவதியின் தாஜ் வணிக வளாக வழக்கு, திமுகவின் ப்ரசித்தி பெற்ற 2G ஊழல், முலாயம் மீது இதென்று சொல்லவொணாது, சொத்துக்குவிப்பு, அது இதென்று சிலபல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. திமுகவின், கனிமொழி, ராசா மற்றும் தயாநிதி மாறனின் முறைகேடாக தொலைபேசி எக்ஸேஞ்ச் அமைத்த வழக்குகள் என மும்முனைத் தாக்குதல். இவையெல்லாம்தான் அரசை ஆதரிக்கக் காரணம் என வெளிப்படையாக இவர்கள் சொல்ல வேண்டிய தேவையில்லை, இவைகளே காரணம்! கழகத்திற்கு ராசாவைப் பற்றிய கவலை இல்லையாகிலும், கனிமொழி மற்றும் மாறனை முன்னிட்டு அரசை ஆதரித்தே ஆக வேண்டிய கட்டாயம், அதிலும் மாறனின் முறைகேடான தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் விவகாரத்தில் சிபிஐ கொஞ்சம் மும்முரமாகவே இருப்பதாகத் தெரிகிறது.முன்பு ப்ரதிபா பாட்டிலை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் மாயாவதியின் தாஜ் வணிக வளாக வழக்கில் காட்டிய சலுகையால், மாயாவதி ப்ரதிபா பாட்டீலுக்கு ஆதரவளித்தார். அதனை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். மேலும், பாராளுமன்றத்தில் எந்தக் கூட்டணி ஆட்சியமைக்கவும், உத்திரப் பிரதேசக் கட்சிகளின் ஆதரவு நிச்சயம் தேவை. அதற்காக ஜனநாயகத்தையும், அதனை நம்பியுள்ள மக்களையும் முட்டாள்களாக்க இக்கட்சிகள் புறப்பட்டுள்ளன. இந்த அரசியல்வாதிகளின் பிடியிலுள்ள இத்தேசம் உருப்படும் என நாமும் கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

- யதிராஜன் 

பேசாம நான் காபி குடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்திருக்கலாம்.

3 Comments:

kothandapani said...

FDI கூத்தில் main film விட்டு விட்டு news reel பற்றி மட்டுமே எல்லோரையும் பேச வைத்ததே காங்கிரஸின் வெற்றி. எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டி கழித்து
பார்த்தால் லாபம் கிடைக்கும் என்றால் அதற்கு எற்றவாறு விளக்கம் அளிப்பது வாடிக்கை ஆகி விட்டது .தெற்கு வடக்கு என்ற வேற்றுமை எல்லாம் இதில்
கிடையாது. யதிராஜன் போன்றவர்கள் ஒரு கட்டுரை எழுதி சந்தோஷ பட்டு கொள்ளலாம் . அல்லது ஆதங்க பட்டு கொள்ளலாம். அந்நிய நேரடி முதலீட்டால்
நமக்கு கிடைக்க போவது நன்மையா தீமையா என்று நேர்மையான அலசல் ஒன்று நமக்கு தேவை. இட்லிவடை அதற்க்கு ஒரு ஏற்பாடு பண்ணலாமே. இப்படிதான் அணு ஒப்பந்திதின் போது எல்லாரும் குதித்தார்கள் . பவர் கொட்டும் என்ற காங்கிரசும் இந்தியா அழிந்தது என்று எதிர் கட்சிகளும் கூப்பா டு போட்டன
இரண்டுமே நடக்கல்லை. (மாறன் மீது சிபியை மும்முரமாக இருக்குதாம் ... உங்க காமெடிக்கெல்லாம் அளவே இல்லையா )

R. J. said...

//பேசாம நான் காபி குடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்திருக்கலாம்.// Annikku vayiththu vali, athanaala virundhukkup pOkavillai; innikku pasi, athanaale hotelukkup pOrEn - enRu kuuda sollivittu pOyirukkalaam!

What I don't understand is that why did the parties (DMK, BSP. RJD etc.) have to support the government directly or indirectly when they really (I believe so!) oppose the FDI in retail. This is a single issue. If it had failed to muster support, the particular action will not pass through; doesn't mean the Govt. will fall. Assume that the govt. fails, resigns on moral ground (highly imaginary!), can the BHP take over immediately? They have to face the elections and so the other parties. If Congress includes the FDI in retail in its manifesto and wins again with a majority, no one can pull it down.

Another question, if BJP romps home after next elections in 2014, can the new govt. repeal the FDI? (like ADMK undoing all the previous DMK govt's projects?)

-R. J.

dr_senthil said...

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றாலும் உள்ளே உள்ளவை பண நாயகத்தின் முதலைகள் என்பதால்..அப்சல் குரு, அடுத்த முறை டார்கெட் தவற கூடாது அவ்வளோதான்..