பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 07, 2012

இந்தக் குளத்தில்....


எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிக்கும் விஷயம்?


அவரது அறச் சீற்றம்.

ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.

வணக்கம்; வைரமுத்து பேசுகிறேன்.

என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.

அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.

'பொன்மணி மாளிகை' பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.

'கட்டாயம் வருகிறேன்' என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே' என்று நெளிந்தாராம்.

விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?' என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.

இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.

கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?

விகடன் மேடையில் கவிஞர் வைரமுத்து


பழைய சரக்கு

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

---

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.

---

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.

---

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.

நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.

நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

---

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

---

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

---

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

---

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

---

நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

- இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.

அவர் சிங்கமாக இருக்கலாம் ஆனால் செய்தி அசிங்கம்

15 Comments:

Muthu said...

ராஜாவும் ஜே.கே.யும் நல்ல நண்பர்கள். இரண்டு நண்பர்களுக்கிடையே ஒருவருடைய வீட்டுக்குள் நடந்த அந்தரங்க நிகழ்ச்சியை தேவையே இன்றி பொதுவில் இழுத்துவிடும் இவர் சிங்கமா ? கடவுளே !!!

ராஜாவை அவமானப்படுத்துவதாக நினைத்து வக்கிரமாக, பரம ஆபாசமாக நடந்துகொண்டு அசிங்கப்பட்டு, கேவலப்பட்டு நிற்கிறார் சாகித்ய அகாடமி பரிசு 'வாங்கிய' நம்ம டாக்டர்.டாக்டர்.கவிப்பேரரசு. (ஹி..ஹி.. ஒண்ணுமில்லைங்க, அவருக்கு ரெண்டு டாக்டர் பட்டங்கள் கொடுத்திருக்காங்களாம்)

அன்புடன்
பொன்.முத்துக்குமார்.

ராமுடு said...

Pathetic.. how ego kills knowledge.. best example

Anonymous said...

மஞ்சள் கமென்ட் சூப்பர்... இட்லி வடை back to form :-)

Anonymous said...

அவரு "வைர"முத்து இல்லீங்க சார்.
வெறும் "வய்யிர"முத்து!

யகவராயினும் நாகாக்க. ராஜா அவரை ஏற்றிவிட்ட ஏணி. அது எங்கே அவருக்கு நினைவிருக்கப்போகிறது?

Anonymous said...

"டுபுக்கு!"
- 'கடிமாமணி' கோவிந்தராசனார்.

"பேரரசு" என
எனக்கு நானே
பெயர் சூட்டிக் கொண்டேன்.

அங்கே,
கோட்டையும் இல்லை
கொடியும் இல்லை!

எனவே,
மக்களும் இல்லை
மந்திரிகளும் இல்லை!

என்னுடன் பேசிக்கொள்ள
என் பேரரசில்
எவருமே இல்லை!

மனக்கோட்டையில்
மனிதர்களுக்கு இடமேது?
அவ்வாறே இருந்தாலும்,
ஒரு பேரரசனுடன் பேச,
அவர்களுக்குத் தகுதிதான் ஏது?

இறுதியில்,
எனக்கு நானே பேச ஆரம்பித்தேன்.

விடாத பேச்சு.
விளங்காத பேச்சு.

நின்றாலும் பேச்சு.
நிமிர்ந்தாலும் பேச்சு.

விழுந்தாலும் பேச்சு.
எழுந்தாலும் பேச்சு.

பேச்சு...
பேச்சு...
பேச்சு...

இப்படியே எனக்கு
மறை கழண்டு போச்சு!

அய்யகோ!
அன்றிலிருந்து நான்
ஆகிப்போனேன் "சிற்றரசு!"

BalHanuman said...

சுஜாதா பதில்கள் - பாகம் 1
? கலைஞனுக்கு அழகு அடக்கமா ? கர்வமா ?

! கலைஞனுக்கு அழகு, அவன் கலை மட்டுமே!

Unknown said...

vairamuthu vairamdhaan.illayaraja illayadhudhaan.avarai yedhukkaaga gnaninnu kooppudaraangannu yenakku theriyaliye.suththa araivekkaadu.

selva said...

The incident which vairamuthu had referred was without any names. Idlyvadai made it indecent by including ilayaraja's name. Anyway Ilayaraja deserves such a treatment.

Muthu said...

//The incident which vairamuthu had referred was without any names//

That's the worst part. If he's courageous or a "lion" as he claimed in his "intha kulathil kallerinthavarkal", he should've dared to name the musician.

Or if he's matured enough, he wouldn't and shouldn't have dragged a private matter between 2 friends unnecessarily to the public in the first place.

That makes him look so pathetic and sympathetic. Should a good lyric writer stoop down to the level of a third rate gossip writer akin to the ones in Dinamalar Vaaramalar ? Oh god.

// Idlyvadai made it indecent by including ilayaraja's name. //

There's no indecency here. Thinking it indecent is in your myopic view. Every Thamizhan who's familiar about the Thamizh film industry knows very well that Ilaiyaraja is the only musician who is not in good terms with Viramuthu.

We don't need Ramanujam to find out two plus two equals four.

// Anyway Ilayaraja deserves such a treatment. //

Fire can't be stained Selva.

Anonymous said...

I agree with Selva. The name was not mentioned there, it was Idlivadai who made it asingam. The funniest part is l even Ilayarajah's die hard fans could figure it was him. AnthaLavukku irukku Ilayrajah'vin latchanam. Anyway I am glad this was posted. I have no respect for Ilayarajah as a person and this post of Idlivadai has further endorsed it. Thanks Idlivadai. I recently read Raasa's answer for a question regarding 'poets'. It was a general question about poets. Adhukku ayyaa remba upset aagi kaNNaa pinnaannu kavippaerararasa manasula vechchuttu uLaRi kotti asingamaanathu paththiyum konjam paesuna nallaa irukkum. Ilayarajah as a person is below third grade - Period !

siva.saravanakumar said...

செல்வா மற்றும் அநாமதேய அறிவுக்கொழுந்துக்கு......


ராஜாவும் ஜெயகாந்தனும் நல்ல நண்பர்கள் என்பது தெரியுமா? ஜே. கே பற்றி சா.கந்த‌சாமி எடுத்த டாக்குமென்டரிக்கு ராஜ நிதி உதவி செய்தது தெரியுமா?................ஒருவேளை ஜே. கே அப்படி நடந்து கொண்டிருந்தால் அது அறச்சீற்றம் அல்ல.........அநாகரீகம்.....

சென்ற ஆட்சியில் கருணாநிதி சகாயத்தால் தென் தமிழகம் முழுவதும் சொத்துக்களை வாங்கிக்குவித்த , கிரானைட் கொள்ளையன் வய்யிற முத்து போன்றவர்களுக்கெல்லாம் விளக்குப்பிடிப்பது கேவலம்.....

R. J. said...

/இசை ஞானியே!..// //‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று..//

Even after this can some one say that Vairamuthu didn't name Ilayraja?

The fact is Vairamuthu does feel for the termination of friendship with Ilayaraja but doesn't disrespect him, rather he is grateful to him for all the help rendered by him. It is Ilayaraja's fault because of his bloated ego. Let him a 'maestro' and also a human being with a heart and treat others with some 'real' respect.

Actually, JK taking back the invitation is the indecent behaviour. This does not project him as a lion. It is silly. Ilayaraja might have visited JK's home to bless the couple and he could have told JK accordingly. One can be friends with two people while those two need not be friends to each other. (English sariyaayirukkaa anony!)

-R. J.


Anonymous said...

இளையராஜா என்ற தனிமனிதனுக்கு காம,கோப, குரோதங்கள் இருக்கலாம். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. இளையராஜா என் தலைமுறையின் மேதை. அவரை வாழ்த்துவேன். வணங்குவேன்.

ஆம்; ஜெயகாந்தனைப் போலவே அறிவிலிகளை, அவரை நோக்கிக்க் கல்லெறியும் அரைகுறை மூடர்களை, அகங்காரத்துடன் எதிர்கொள்கிற இளையராஜாவை நான் ஆராதிக்கிறேன்.

இளையராஜாவின் இசை என் காதுகளில் ஒலிக்காத நான் எனக்கு இறந்த நாளே!

Anonymous said...

//‘மேடையிலே பேசறதானா அவரை மாதிரி பேசணும்…ஒரு எடத்திலே கவிதையா இருக்கும். இன்னொரு எடத்திலே நகைச்சுவையா கொட்டும்… அப்ப பெரியபெரிய ஆட்கள்லாம் இருந்தாங்க…அப்பதான் ஜெயகாந்தன்கிட்ட பழக்கம். சிங்கம்ல? எழுத்தாளனோட நிமிர்வ அவர்ட்ட பாக்கணும்.ஜெயகாந்தனை சமீபத்திலே பாத்தீங்களா?’

‘இல்லை. அவரையும் பாக்கணும்’ என்றேன்

http://www.jeyamohan.in/?p=32153

http://www.jeyamohan.in/?p=48

Anonymous said...

Please include the latest this week Vikatan Medai response from VM for a question on retaliation